(வெருளி நோய்கள் 296 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

  1. இதயச் சீர் நோக்கி வெருளி – X!mzophobia
    இதயச் சீர் நோக்கி(heart monitor)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் இதயச் சீர் நோக்கி வெருளி.
    இதயத்தின் மின் செயல்பாட்டை அளவிடும் ஆய்வுக்கருவியாகிய இதய மின்வரைவியே ECG அல்லது EKG என அழைக்கப்படுகிறது. C என்பதற்கு மாற்றாகச் செருமானிய மொழியில் K பயன்படுத்தப்படுகிறது.
    ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள், மாரடைப்பு, பிற இயல்பற்ற நிலைகள் முதலான பல்வேறு இதய நிலைகளைக் கண்டறிய உதவும் கருவி சரியாகச் செயற்படாமல் தவறாகக் காட்டுகிறதோ என்ற பேரச்சம் கொள்கின்றனர்.
    .
    00
  2. இதள் வெருளி – Hydrargyophobia
    இதள்(பாதரச) மருந்துகளின் மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் இதள் வெருளி.
    இதள் நச்சினால் தசை தளர்வு, கை, கால்களில் அரிப்புத்தன்மை, தோல் தடிப்புகள், மயக்கம், பேசுவதில் இடர்ப்பாடு, கேட்பதில் சிக்கல், பார்வைக் கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. எனவே, இதள்மருந்து மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
    இதளை(பாதரசத்தை) விரைவு வெருளி(quick silver) என்றும் அழைக்கின்றனர்.
    “hydrargyros,” என்னும் கிரேக்கச் சொல்லின் இலத்தீன் வடிவமே “hydrargyrum” என்பது. இதன் பொருள் நீர்மவெள்ளி/திரவ வெருளி. திரளுதன் என்பதன் அடிப்படையிலான திரவம் தமிழ்ச்சொல்லே.

00

  1. இந்தியன் வெருளி – Indophobia
    இந்தியர்கள் அல்லது தெற்கு ஆரியர்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் இந்தியர் வெருளி.
    வெளிநாடுகள் பலவற்றில் இந்தியர்களுக்கு எதிராகப் பேரச்சம் உள்ளது. எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால் 2010இல் ஆத்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக 152 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இவற்றுள் 23 இனவெறி அடிப்படையிலானவை.
    இந்தியர்களின் திறமை, குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்தல் போன்றவற்றால் பொறாமை கொண்டும் தங்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகக் கவலை கொண்டும் பேரச்சம் கொள்கினறனர். சில இடங்களில் இந்தியர்கள் சிலரின் அடாவடிச் செயல்களும் இதற்குக் காரணமாக அமைகின்றன.
    00
  2. இப்பி வெருளி – Ostraconophobia
    இப்பி(சிப்பி) மீதான அளவுகடந்த பேரச்சம் இப்பி வெருளி.
    கிரேக்கச் சொல்லான ளstrakon என்பது இப்பி/சிப்பி முதலிய வல்லோட்டு உயிரியைக் குறிக்கிறது. இதனை மட்டி மீன் என்றும் சொல்கின்றனர்.

(தொடரும்)