Monday, January 31, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 536 – 543 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  528 – 535  இன் தொடர்ச்சி)

536. வாயுவியல்

Aerology –  வளி மண்டல இயல், காற்றியல், மண்புழை யியல், வளிமண்டல ஆய்வு நூல், வளிமண்டலவியல், வளி மண்டலயியல், காற்று மண்டல ஆய்வியல் எனப்படுகிறது.

சில அகராதிகளில் மண் புழையியல் எனக் குறித்துள்ளனர். புழை என்றால் துளை எனப் பொருள். நான் பார்த்த எந்த ஒரு நூலிலும் மண்புழையியல் என்பதற்கான விளக்கம் இல்லை. இருப்பினும் அதைத் தனிப்பொருளாகக் குறித்துள்ளேன். பிற யாவும் சரியே. aero என்பதை வாயு என நாம் ஏற்றுள்ளதால் சுருக்கமாக

வாயு இயல் / வாயுவியல் – aerology எனலாம்.

ánemos என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் வாயு.

எனவே, Anemology என்றாலும் வாயுவியல் என்றுதான் பொருள்.

 Aerology(1)/ Anemology

537. வாயு நிலையியல்

வாயு அழுத்தவியல், காற்றழுத்தவியல்,  வளிம மிதவையியல் என்பனவற்றைவிட  வாயு நிலையியல் என்பது பொருத்தமாக இருக்கும்.

Aerostatics 

538. கானக நுண்ணுயிரியல்

Forest Microbiology

539. கானக வளைசலியல்

Forest Ecology

540. கானகப் பூச்சியியல்

Forest Entomology

541. கானகப் பொருளியல்

Forest Economics

542. கானகப் பொறியியல்

Forest Engineering

543. கிரெமிலின் இயல்

கிரெமிலின் (Kremlin) என்ற உருசியச் சொல் கோட்டை அல்லது கொத்தளம் எனக் குறிக்கும். உருசியாவின் நாடாளு மன்றம் அமைந்துள்ள மாசுகோ  கிரெமிலின் என்பதைக்   கிரெமிலின் என்று தான் பெரும்பாலும் குறிப்பிடு கின்றனர். இந்தக் கோட்டையில் உருசிய அதிபர் மாளிகை அமைந்துள்ளது. எனவே, உருசிய அரசியலின் குறியீடாகக்  கிரெமிலின் உள்ளது. எனவே, கிரெமிலினியல் என்பது உருசிய அரசியல் குறித்ததே. சோவியத்தியல் என்பதும் இது போன்றதே. எனினும் சோவி யத்து ஒன்றியம் பிரிந்தபின் சோவியத்தியல் என்பது சோவி யத்து ஒன்றியம் அமைவதற்கு முன்பிருந்த பொதுவுடைமை அரசுகள் குறித்ததாக உள்ளது.

Kremlinology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்
 வகைமைச் சொற்கள் 3000

Sunday, January 30, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 528 – 535 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


 


(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  510 – 527 இன் தொடர்ச்சி)

528. காய்ச்சல் இயல்

pyretic என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காய்ச்சல்.

Pyretology

529. கால நிரலியல்

 பழங்கிரேக்கத்தில் chrono என்றால் காலம், காலத்துடன் தொடர்புடையது எனப் பொருள்கள். நிகழ்வுகள் நிகழ்ந்த கால வரிசையை நிரல்படக் கூறும் அறிவியல். எனவே, கால நிரலியல் எனலாம்.

Chronology

530. காலத் தீங்கியல்

Catachronobiology

531. காலநிலை நோயியல்

Climatopathology

532. காலவரிசை மருந்தியல்

Chronopharmacology

533. கால வுயிரியல்

Chronobiology

534. கால்நடை நச்சூட்டவியல்           

Veterinary Toxicology

535. பூஞ்சையியல்/ பூசணவியல்/ காளானியல்

Mycology – கவகவியல், காளானியல், பூசணவியல், பூசண இயல், பூஞ்சை இயல், நோயியல், பங்கசியல் எனப்படுகிறது.  fungus என்பதை ஒலி பெயர்ப்பாகப் பங்கசியல் என்று கூறியுள்ளனர். ஆதலின் இதைப் பயன்படுத்த வேண்டா. நோயியல் என்பது பொதுவான நோய்கள்பற்றிய இயல். எனவே, அதுவும் ஏற்ற சொல்லல்ல.

கவகவியல் என்பதன் விளக்கம் தெரியவில்லை. தமிழ் அகராதிகளில் இச்சொல் இடம் பெறவில்லை. எனினும் ஐரோப்பிய அகராதியில் கவகம் – fungus எனப்பொருள் தரப்பட்டுள்ளது. எனவே, இதனடிப்படையில் இங்கே கவகம் தரப்பட்டிருக்கலாம்.

புறநானூற்றுப் பாடல் 393 சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனை

நல்லிறையனார் பாடியது. இதில் எட்டாம் அடியாகச் சில பதிப்புகளிலும் இணையப் பக்கங்களிலும்

“……………….. கவகம் எல்லாம் ஒருபால் பட்டென”

என வந்துள்ளது. உரைவேந்தர் ஒளவை சு.துரைசாமி அவர்களின் புறநானூற்று உரையில்

“உலக மெல்லா மொருபாற் பட்டென”

வந்துள்ளது. கவகம் என வரும் நூல்களில் அதற்கான உரை வழங்கப்படவில்லை. எனவே, முன்சொல் விடுபட்ட இவ்வடியில் கவகம் தவறுதலாக இடம் பெற்றிருக்கலாம்.  எனினும் நன்கறிந்த பூஞ்சை முதலான சொற்கள் இருக்கையில் இதனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம் என இங்கே குறிக்கவில்லை.

fungus எனப்படுவதே இங்கே குறிப்பிடும் காளான். ஆனால் உண்ணத்தகும்  mushroom எனத் தவறாகப் புரிந்து கொள்ளலாம். பிற எல்லாம் ஒத்த பொருள் உடையன. இவற்றுள் பூசணவியல் ஏற்கப்பெற்று இங்கே குறிக்கப் பெற்றுள்ளது. 

Mycology /Ethnomycology / Mycetology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Saturday, January 29, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 510 – 527 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல






(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  498 – 509 இன் தொடர்ச்சி)

510. கனிம இயல்

Metallogeny / Mineralogy

511. கனிம உறவியல்         

Paragenetic Mineralogy

512. கனிம வேதியியல்

Inorganic Chemistry

513. கனிமப் பொருளியல்

Mineral Economics

514. கனி யியல் 

Carpology

515. கன்னிமை இயல்

Parthenology

516. காட்சிக் குமுகவியல்

Visual Sociology

517. காந்த ஒலியியல்

Magneto acoustics

518. காந்த ஒளியியல்

Magnetooptics

519. காந்த நிலையியல்

Magnetostatics

520. காந்தநீர்ம இயங்கியல்

Magneto hydrodynamics

521. காந்தமின்ம இயங்கியல்

Magnetoplasmadynamics

522. காந்த வாயு இயங்கியல்

Magneto aerodynamics

523. காந்தப்பாய்ம இயங்கியல்

Magnetofluid Dynamics

524. காந்த விசையியல்

Magnetomechanics

525. காந்தவியல்

Magnetics

526. காப்பீட்டுக் கணக்கியல்

Actuarial mathematics

527. காயவியல்

விபத்துக் காயவியல்; காய அறுவை மருத்துவவியல், ஏதக்காயவியல், புண்ணறுவை யியல்,  தாக்கியல் எனப் படுகிறது. தாக்கியல் பொருந்த வில்லை.

Trauma என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் காயம். எனவே, சுருக்கமாகக் காய இயல் >காயவியல் –  Traumatology இங்கே பயன்படுத்தப்பட்டுள்ளது.

Traumatology/ Tramatology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 498 – 509 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  491 – 497 இன் தொடர்ச்சி)
498. கருப்ப இயல் káruon என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கருப்பம் . இதனை மரபுத்திரியியல் என இ.த.க.க.அகராதி, கால்நடை அறிவியல் துறை அகராதியில் இருந்து எடுத்துக் கூறுகிறது.  கருவியல் – embryology என்பதன் மறுசொல்லாகக் கருதலாம்.Karyology/Caryology
499. கலங்கரைவிளக்க இயல்Pharmacology(2)
500. கலைச்சொல்லியல்Terminology
501. கல்வி உளவியல்Educationa lPsychology
502. கல்வி நுட்பியல்Educational Technology
503. கல்விக் குமுகவியல்  Educational Sociology
504. கழிமுக வளைசலியல்Estuarine Ecology
505. கழுத்தியல்Trachelology
506. களப் பறவையியல்Field Ornithology
507. களை உயிரியல்Weed Biology
508. கற்பாசி யியல்Lichenology
509. கற்பிப்பியல்   Patrology – கிறித்துவத் தேவாலயத் தந்தையர்களின் கற்பிப்பு, உரை, எழுத்துகள் தொடர்பான இயல். எனவே, இதனைக் கற்பிப்பு இயல் > கற்பிப்பியல் – Patrology எனலாம். காண்க: ஆசானியல் -Pedagogy  Patrology

(தொடரும்)  இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000
                      

Friday, January 28, 2022

 அகரமுதல

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 491 – 497 : இலக்குவனார் திருவள்ளுவன்



(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  470 – 490 இன் தொடர்ச்சி)

491. அணுப் பொருள் உளவியல்

கருப் பொருள் உளவியல் என்கின்றனர். கருப் பொருள் என்பது அணுக் கருவைக் குறிக்கிறது. இலக்கியக் கருப்பொருளுடன் குழப்பம் நேரக் கூடாது என்பதற்காக அணுப் பொருள் உளவியல்  எனக் குறித்துள்ளேன். 

Atomistic Psychology

492. கருஊன இயல்

493. பிறவிக்கோளாறு ஆய்வு, கருஊன இயல்,   இயல்பிறழ் கருவியல்  எனப்படுகிறது.

சுருக்கமான கருஊன இயல் – Teratology (2) இங்கே தரப்பட்டுள்ளது.

சில அகராதிகளில் Terratology எனவும் இடம் பெற்றுள்ளது. எனினும் பெரும்பாலான விளக்கங்களில் இச்சொல் இடம் பெறவில்லை. பிறழ் கருவியல் என்னும் பொருளே உள்ளதால், தட்டச்சுப்பிழையாக இருக்கலாம்.

Teratology (2)

494. கருவளர்இயல்

Perinatology

495. கருவாயியல்

vulva  பெண்குறியின் துவாரம், பெண்குறி, அல்குல், கருவாய், குய்யம், புணர்புழை, யோனிமடி, வல்வம், யோனி,  யோனித் துவாரம் எனப்படுகிறது.

இவற்றுள்  யோனி என்பது நோனி என்னும் தமிழ்ச் சொல்லில் இருந்து திரிந்த சொல்.

 அல்குல் என்பது பெண்குறியைக் குறிப்பதாகத் தவறாக விளக்கப்படுகிறது. இடைக்குக் கீழே சிறுத்துச் செல்லும் பெண்குறிக்கு மேற்பட்ட பகுதி. எனவே, பொருந்தாது. “அல்குல்: சங்க இலக்கியப் பாக்களில் இச்சொல் இடுப்பைத் தான் குறித்தது. பிற்காலத்தில் தோன்றிய புலவர்களோ வேறு பொருளில் வழங்கிவிட்டனர். வேறு பொருள் இன்னது என்பது தமிழ் அகராதியைக் கொண்டேனும் இராமாயணம் திருவிளையாடல் புராணம் திருக்கோவையார் முதலியவற்றை நோக்கியேனும் அறிந்து கொள்வீர்களாக!” என்பார் பேரா.முனைவர் சி.இலக்குவனார்(மாமூலனார் பாடல்கள் / சங்க இலக்கியச் சொல்லோவியங்கள்).

குய்யம் என்பது மறைவாக உள்ள துளை என்னும் பொருளில் அமைந்த தமிழ்ச்சொல். புணர் புழை என்பது நேரடியாகச் சொல்லும் சொல்லாக இருப்பதால் பயன்படுத்துவதில் சிக்கல் வரலாம். கருவாய் என்பதுதான் இடக்கரடக்கலாக அமைகிறது. எனவே, கருவாய் என்பதன் அடிப்படையில்

 கருவாயியல் –  Vulvology

 எனக் குறிக்கப்பட்டுள்ளது.

Vulvology

496. கருவிக் கட்டுப்பாட்டியல்

Knobology

497. சூலியல்

Embryology கருவியல், கருவளரியல், கருவளர்வியல், கருவியல்,  கரு வளர்ச்சியியல், கருவியல் நூல், முளையவியல், சிசு வளரியல், முளயியல், மூலவுருவியல் எனப்படுகிறது.

முளையியல் என்பதுதான் முளயியல் எனத் தட்டச்சு ஆகியிருக்கலாம். சிசு தமிழ்ச்சொல்லல்ல.

embryon என்றால் கிரேக்கத்தில் பிறக்காத, கரு எனப் பொருள்கள்.

Cyesiology – சூல் ஆய்வு, கருத்தரித்தல் ஆய்வு, கருத் தங்கல் ஆய்வு, சினையாய்வு, சினைக்கால ஆய்வு, சினைப் பருவ ஆய்வு எனப்படுகின்றது.

cyesis என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு பேறு, கருப்பம், சூல் எனப் பொருள்கள்.

fetus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கருப்பிண்டம்.

முச்சொற்களும் ஒரு பொருள் குறித்தனவே.

சுருக்கமாகச்

சூலியல் – Cyesiology எனலாம்.

Embryology/ Cyesiology / Fetology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000