Thursday, June 30, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 213 – 217

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 208-212தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

213. GLAND- உமிழ்நீர்க் கோளம்

கீழ்த்தாடை என்பு, மேல்தாடை என்பு இவற்றில் உமிழ்நீர்க் கோளங்கள் ஒவ்வொன்றிலும் மும்மூன்றாக அணைந்திருக்கின்றன.

நூல்   :           சரீரவியவசேத சாத்திரம் என்னும் அங்க விபாக சுகரண வாதம் (1906) பாகம் 15

நூலாசிரியர்                     டி. ஆர். மகாதேவ பண்டிதர்

214. தத்தம் –           கொடுக்கப்பட்ட பொருள்

215. சூதிகாகாரம்            –           பிள்ளை பெறும் வீடு

216. திகுதிகு           –           சுடுகடு

நூல்   :           சிரீ பாகவத தசமசுகந்த கீர்த்தனை (1907)

நூலாசிரியர்                     அனந்த பாரதி சுவாமிகள்

217. மீமாம்சை – ஆராய்ச்சி

பூர்வ மீமாம்சை தருமமீமாம்சை யெனவும், உத்தரமீமாம்சை பிரம மீமாம்சை யெனவும் சொல்லப்படும். எதில் தருமத்தின் மீமாம்சை இருக்கிறதோ அது தரும மீமாம்சையாம். எதில் பிரமத்தின் மீமாம்சை யிருக்கிறதோ அது பிரமமீமாம்சையாம். மீமாம்சை – ஆராய்ச்சி

நூல்   :           வேதாந்த சூளாமணி மூலமும் உரையும் (1908) சிறப்புப் பாயிரம், பக்கம் – 17

விரிவுரை   :           பிறைசை அருணாசல சுவாமிகள் (திருத்துருத்தி, இந்திரபீடம் – கரபாத்திர சுவாமிகள் ஆதீனம்)

குறிப்புரை: கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாசிகல் காகஇசுகூல்தமிழ்ப் பண்டிதர்)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, June 28, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 208-212

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 203-207தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

208. புருசார்த்தம்    –   தக்க நலம்

209. பரிசுத்த (இசு)தானம் –   தூய நிலம்

210. துர்கதி –   பொல்லா நெறி

நூல்   :           பகவத்(து) கீதை வெண்பா (1906)

நூலாசிரியர்                     வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர்

211. Cultivators         :           பயிரிடுகிறவர்கள்

212. Sea Custom                   கடல்வரி

இதழ் :           விவகாரி (1906), புத்தகம் இலக்கம் 1

இதழாசிரியர்                   ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, June 26, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 203-207

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 197-202 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

203. மத்தியசுதன்   –    நடுவோன்

204. (இ)லாபம்  –    பேறு

205. துர்கதி –   பொல்லா நெறி

206. கர்மபந்தம்    –    வினைக்கட்டு

207. (இ)லாப நட்டம் –   பேறு இழவு

நூல்   :           பகவத்(து) கீதை வெண்பா (1906)

நூலாசிரியர்                     வாதிகேசரி சிரீ அழகிய மணவாள சீயர்

பதிப்பாளர்                        சே. கே. பாலசுப்பிரமணியம்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, June 22, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 178- 196

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 169 – 177 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

178. பாரகாவியம் – பெருநூல்

நூல்   :           திருவிளையாடற் புராண மூலமும் அரும்பதக் குறிப்புரையும் (1905)

குறிப்புரை :           முத்தமிழ் இரத்னாகரம் ம. தி. பானுகவி வல்லி – ப. தெய்வநாயக முதலியார் சென்னை சிந்தாதிரிப் பேட்டை ஆங்கிலோ வருணகுலரி இசுகூல் தமிழ்ப் பண்டிதர்

179. புலித்தோலாசனம் -        வேங்கையதள்

180. சோமவாரம்  -        மதிநாள்

181. சரசுவதி        -        வெள்ளைச் செழுமலர்ந்திரு

182. வியாக்கிரபாதன்  -        புலிக்காலோன்

183. ஆவிநாயகன்          -        உயிர்த்தலைவன்

184. மேடம்            -        தகர் (சித்திரை)

185. மகரம்  -        சுறவு (தை)

186. கடகம்  -        அலவன் (ஆடி)

187. தேவதச்சன்  -        கம்மியப் புலவன்

188. சூரிய வம்சம்           -        பரிதிமரபு

189. வெளிமார்க்கம்       -        புறத்துறை

190. சூரிய காந்தக்கல்  -        எளியிறைக்குங்கல்

191. சந்திர காந்தக்கல் -        நீரிறைக்குங்கல்

192. இந்திரிய வழி          -        புலநெறி

193. சதுக்கம்          -        நாற்சந்தி

194. உத்தரீயம்     -        மேற்போர்வை

195. கசுதூரி          -        காசறை

196. அபிப்பிராயம்         -        உட்கோள்

நூல்   :           பரஞ்சோதி முனிவர் திருவிளையாடற் புராணம் (1905). அரும்பதக் குறிப்புரை முத்தமிழ் இரத்தினாகரம் ம. தி. பானுகவி வல்லி – ப. தெய்வநாயக முதலியார்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, June 20, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 169 – 177

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம் 161 – 168 தொடர்ச்சி)

  1. யோகநித்திரை – அறிதுயில்
    அறிதுயில் எல்லாவற்றையு மறியா நின்றே துயிலல். இதில் அறிதலும் துயிறலும் ஒருங்கு நிகழ்தலான் இது துணைவினையெனப்படும். இதனை யோக நித்திரையென்பர் வடநூலார்,

நூல் : குசேலோபாக்கியாநம் மூலமும் உரையும் (1904) பக்கம் : 55

  1. ஆசி – வாழ்த்து
    ஆசி – ஆசிசு என்னும் வடசொல்லின் விகாரம். வாழ்த்து என்பது பொருள்.
    மேற்படி நூல் : பக்கம் -285
    உரையாசிரியர் : வித்துவான் – காஞ்சிபுரம் இராமசாமி நாயுடு
  2. (ட்)செரம் – மழித்தல்
    முகத்திடை நீண்டவுரோமம், நீண்ட முகரோமம் (தாடி மீசை முதலாயின) நீண்ட என்றதனால், வபநமில்லாமை விளங்குகின்றது. வபநம் – மழித்தல் ((ட்)செரம்)
    நூல் : குசேலோபாத்தியாநம் மூலமும் உரையும்
  3. இராசநீதி – கோவியல்
    ஓவியத் தொழில்வல் லாருக்
    ⁠கொண்பொருள் வெறுப்ப வீசி
    நாவியற் கருமென் கூந்தல்
    ⁠நங்கைமா ரெழுதி வைத்த
    பூவியற் படமாங் காங்குப்
    ⁠பொலிவது காணுந் தோறும்
    கோவியற் கண்ண னென்றுட்
    ⁠கொண்டுபின் தெளிவ னம்மா.
  4. வியல் – பெருமை, கோவியல் – அரசியல் (இராச நீதி)

நூல் : குசேலோபாக்கியாநம் (1904) பக்கம் : 388
நூலாசிரியர் : பெங்களூர் வல்லூர் தேவராச பிள்ளை

  1. (இ)லெளகிகம் — உலகிதம்
  2. சம்பிரத வாழ்க்கை — மாய வாழ்க்கை
  3. சேமத்திரவியம் — வைப்பு
  4. பாவ வார்த்தை — மறவுரை

நூல் : அறநெறிச் சாரம் (1905)
நூலாசிரியர் : முனைப்பாடியார்
பதிப்பாசிரியர் : தி. செல்வக்கேசவ முதலியார், எம்.ஏ., (சென்னைப் பச்சையப்பன் கல்லூரித் தமிழ்த்துறைத் தலைவர்)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, June 18, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 161 – 168

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம்  151-160  தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

161. ஆதாரம்          —        பற்றுக்கோடு

162. கர்வம்  —        பெருமிதம்

163. தாட்சண்ணியம்     —        கண்ணோட்டம்

164. அருத்த சாத்திரம்   —        பொருணூல்

165. தருமசாத்திரம்        —        அறநூல்

166. பத க    —        பெருங்கொடி

167. பகுதி    —        முதனிலை

168. பூரண விசுவாசம்   —        தலையளி

நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் : கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாசிகல் ஐசுகூல் தமிழ்ப் பண்டிதர்).

பேராசிரியர்   டாக்டர் தெ.பொ.மீ. அவர்களின் ஆசிரியர்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Thursday, June 16, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 151 – 160

 அகரமுதல

(தமிழ்ச்சொல்லாக்கம்  141-150  தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

151. தரித்திரன்     —        வறியன்

152. நிந்தை            —        வசை

153. சுரோத்திரம் —        செவி

154. சட்சு     —        கண்

155. சிங்குவை      —        நாக்கு

156. புருசார்த்தங்களைக்

கூறும் சாத்திரங்கள்     —        உறுதி நூல்கள்

157. அவமானம்    —        இளிவரவு

158. விரோதம்       —        மாறுபாடு

159. பராக்கிரமம் —        ஆண்மை

160. முனிவர்          —        அறவோர்

நூல்   :           திருக்குறள் மூலமும் பரிமேலழக ருரையும் (1904). தெளிபொருள் விளக்கமும் கருத்துரையும் குறிப்புரையும் : கோ. வடிவேலு செட்டியார் (சென்னை இந்து தியலாசிகல் ஐசுகூல் தமிழ்ப் பண்டிதர்).

பேராசிரியர்         :           டாக்டர் தெ.பொ.மீ. அவர்களின் ஆசிரியர்

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச் சொல்லாக்கம்