Sunday, February 27, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 868 – 875 இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 855 – 867 இன் தொடர்ச்சி)



868. தேராய்வு உளவியல்

Experimental Psychology

869. தேராய்வுச் சூலியல்

Experimental Embryology

870. தேராய்வுவளைசலியல்

Experimental ecology

871. தேர்தலியல்

Psephology – தேர்தல் புள்ளியியல், தேர்தலியல், கருத்துக் கணிப்பியல், வாக்களிப்பியல் எனப்படுகிறது.

Psephos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கூழாங்கல். அப்போது கூழாங்கல்லைப் பயன்படுத்தித் தேர்தல் நடத்தியதால் இச்சொல் உருவானது. (அதுபோல் சிறிய பந்து என்னும் பொருள் கொண்ட ballotte என்னும் பிரெஞ்சு சொல்லில் இருந்துதான் ballot உருவானது.)

வாக்களிப்பது குறித்த இயல் என்னும் பொருள் வருவதால் வாக்களிப்பியல் என்கின்றனர். வாக்களிப்பது தேர்ந்தெடுப் பதற்குத்தானே? தேர்தலில் தானே வாக்களிக்கிறோம்மேற்குறித்த சொற்கள் யாவும் தேர்தலை அடிப்படையாகக் கொண்டவை. எனவே, சுருக்கமான தேர்தலியல் – Psephology இங்கே குறிக்கப்பட்டுள்ளது.

Psephology

872. தேவதை இயல்

காண்க :- அணங்கியல் –  Fairyology

Angelology

873. தேவாலயவியல்

ecclesia என்னும் இலத்தீன் சொல்லிற்கும் ekklēsia என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் தேவாலயம் எனப் பொருள். எனவே, தேவாலயம் குறித்த இயல் தேவாலவியல் ஆனது.

Ecclesiology

874. தேனீ இயல் 

apis என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் தேனீ mélitta என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருளும் தேனீ. எனவே, தேனீ குறித்த இயல் தேனீயியல் ஆனது.

Apiology / Melittology / Apicology / Apidology

875. தேனீஇன வியல்

humenóptero என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு மெல்லிய தோல் என்றும் இறக்கை என்றும் பொருள்கள். தேனீ, குளவி முதலான இன வகைகளை இங்கே குறிக்கிறது. எனவே, தேனீ இனவியல் எனப்படுகிறது.

Hymenopterology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Saturday, February 26, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 855 – 867 இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  850 – 854 இன் தொடர்ச்சி)
855. துருக்கியியல்Turkology
856. துருவார்ப்பியல்Uredinology / Urenology
857. துறைமுகப் பொறியியல்Harbor Engineering
858. தூசியியல் koniology  – துகளியல்தூசுயிர்த் தொடர்பியல்,  தூசி யியல். Konía என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தூசி. எனவே, நாம் சுருக்கமான தூசியியல் – koniology என்பதையே பயன்படுத்தலாம்.Koniology / Coniology
859. தூய இலக்கிய இயல்  hiero- என்னும் பழங்கிரேக்கச் சொல் தூய நிலையையும் அதன் வழித் தூய பொருள்களையும் குறிக்கிறது. தூய பொருள்கள் குறித்த இலக்கியம் திருநிலை இலக்கிய இயல் என முதலில் குறிப்பிட்டிருந்தேன். சுருக்கமாகக் குறிப்பிட இப்பொழுது தூய இலக்கிய இயல்   எனலாம்.Heirology
860. தூய கணிதவியல்Pure mathematics
861. துப்புரவு நுட்பியல்Cleaner Technology
862. தூய பொருளியல்PureEconomics
863. மாசில் நிலக்கரி நுட்பியல்Clean Coal Technology
864. போர்வை யியல்   துரின்(Turin) அல்லது தூரின் இத்தாலியின் வடமேற்குப் பகுதியில் உள்ள வியமாந்தின் தலைநகரம் ஆகும். இந்நகரில் பாதுகாக்கப்படும் நார்மடி(இலினன்), வணக்கம் செலுத்தப்படுகின்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அடக்கத் துணித் துண்டு ஆகும். இதனை உடற்போர்வை, சவப்போர்வை, புனிதப்போர்வை எனப் பலவகையாகக் கூறுகின்றனர். இத்துணியில் பதிந்திருக்கின்ற மனிதனின் உருவச்சாயல் சிலுவையில் அறையுண்டு இறந்து, துணியால் பொதிந்து கல்லறையில் அடக்கம் செய்யப்பட்ட இயேசுவின் உருச்சாயலாக இருக்கலாம் என்று பலர் கருதுகின்றனர். அறிவியலார், இறையியலார், வரலாற்றாளர், ஆய்வாளர் போன்ற பலதுறை வல்லுநர்கள் நடுவே இதன் காலம், உண்மைத்தன்மை முதலியன குறித்து மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இதை ஆராயும் துறையே தூரின் நகரப் போர்வையியல். இவ்வாறுதான் முதலில் பிறர்போல் குறித்திருந்தேன். எனினும் சுருக்கமாகப் போர்வையியல் என இப்போது குறித்துள்ளேன். Sindon என்னும் இலத்தீன் சொல்லின் பொருள்கள் நார்மடி, போர்வை,  நார்மடிப் போர்வை.Sindonology
865. தூள்மாழை இயல்Powder Metallurgy
866. தெள்ளுப்பூச்சி யியல் பழங்கிரேக்கத்தில் síphōn என்றால் குழல் என்றும் ápteros இறக்கை யற்றவை என்றும் பொருள்கள். Siphonaptera என்பது தெள்ளுப்பூச்சியைக் குறிக்கிறது. Siphonapterology
867. தேநீரியல்   தேயிலையைக் குறிக்கும் சப்பான், சீன எழுத்தான சா என்பதன் மறு ஆக்கமே Tsio என்பது. தேயிலை நீர் >தேநீர்      Tsiology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Thursday, February 24, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 850 – 854 – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  835  – 849  இன் தொடர்ச்சி)

850. துண்ட நகர்வியல்

Plate Tectonics என்பது கண்டத்தட்டு நகர்வியல், தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்பு, புவித்தட்டு நகர்வியல், புவித்தட்டுக் கட்டுமானவியல் எனப் பலவகையாகக் கூறப் படுகின்றது.

பழங்கிரேக்கத்தில் tecton என்றால் கட்டுமானம் எனப் பொருள். Plate என்பது இங்கே புவித்தட்டை / புவியின் கண்டத் தட்டைக் குறிப்பிடுகிறது. எனவே, கட்டுமானம் அல்லது கட்டமைப்பு நீங்கலாகப் பிற பொருள்கள் யாவும் சரியே. ஆனால், வெவ்வேறு கலைச்சொற்களைப் பயன்படுத்துவது குழப்பத்தைத் தருகின்றது. எனவே, ஒரே கலைச்சொல்லையே நிலையாகப் பயன்படுத்த வேண்டும். கண்டத்தட்டு என்பது நிலப்பகுதியின் துண்டுதான். எனவே, அதனைச் சுருக்கமாகத் துண்டம் எனலாம்.  எனவே, அதுகுறித்த அறிவியல் Plate tectonics – துண்டநகர்வு எனலாம்.

 நிலப்பெயர்ச்சி குறித்துச் சங்கக்காலத்தில் பாடல்கள் உள்ளன.

நிலம்பெயரினு நின்சொற் பெயரல்

                       (இரும்பிடர்த் தலையார், புறநானூறு 3 :14.)

நிலம் திறம் பெயரும் காலை ஆயினும்

கிளந்த சொல் நீ பொய்ப்பு அறியலையே

                               (கபிலர், பதிற்றுப்பத்து. 63 : 6 – 7)

நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்

செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென

அறம் பாடிற்றே ஆயிழை கணவ

                       (ஆலத்தூர் கிழார், புறநானூறு. 34 : 5 – 7

அம்ம வாழி, தோழி!-காதலர்

நிலம் புடைபெயர்வதாயினும், கூறிய

சொல் புடைபெயர்தலோ இலரே;

(மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார், நற்றிணை. 289 : 1 – 3)

கண்டப்பெயர்ச்சி என்பது ஒரு காலத்தில் ஒரே நிலப்பரப்பாக இருந்த புவிப்பரப்பு பல துண்டுகளாகி நகர்வதையே குறிக்கிறது. எனவே துண்ட நகர்வு எனக் குறித்துள்ளேன்.

நில நடுக்கம் தொடர்பான ஆராய்ச்சித் துறையான உலகளாவிய நகர்வியல்/ இளம் உலகிய நகர்வியல்/ புது உலகளாவிய பாறை அமைப்பியல் (New Global Tectonics) என்று தனியாகக் கூறாது அதனையும் இத் துண்ட நகர்வியலில் சேர்த்து விடலாம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

Plate tectonics

 

 

 

851. துணைக் காலவியல்

Parachronology – அடுக்கமைப்புக் காலக் கணிப்பியல், காலக் கண்ணாடி யியல்,  புவிக்கால வரிசையியல்  எனப்படுகின்றது.

Chronology காலயியல் என்கிறோம். Para  மேலே, அப்பால், அருகில், உடன்; முழுவதும், இயல்பு அல்லாத (அசாதாரண), தவறான, ஒத்த, இணை, துணை என்னும் பொருள்களை உடைய முன்னொட்டுச் சொல். எனவே,

துணைக்காலவியல் Parachronology எனலாம்.

Parachronology

852. துதிப்பாவியல் மூலச்சொல்லான hymnus என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் húmnos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருளும் (சமயம் சார்ந்த) போற்றிப்பாடல்கள்/வாழ்த்துப்பாடல்கள் ஆகும். கடவுளைத் துதிக்கும் பாடல்கள் சுருக்கமாகத் துதிப்பா எனப்பட்டது.

 

Hymnology 

853. தும்பியியல்       

odoús என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் பற்கள். கீழ்த்தாடையில் பற்கள் உடைய தட்டான் (dragonfly), ஊசித் தட்டான் (Damselfly) ஆகியவற்றை Odonata குறிப்பிடுகிறது. பொதுவாகத் தும்பிகள் குறித்த இயல் என்னும் பொருளில் தும்பியியல் எனப்பட்டது. 

Odonatology

854. துயிலியல்

Hypho  என்பது வலைபோல் என்னும் பொருளிலான ஒட்டுச் சொல்லாகும். Hyphology   என்பது வலைநிலைப் பொருளை வேதியியலில் குறிக்கிறது. எனினும் தவறுதலாக Hypnology எனக் கருதி  Hyphology – துயிலியல் அல்லது தூக்க இயல் என்று சில அகராதிகளில் குறிப்பிடப்படுகின்றன.

Hypnology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Monday, February 21, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 835 – 849 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  820 –  834 இன் தொடர்ச்சி)

 

835.  திண்ம ஏரண நுட்பியல்

 

Solid Logic Technology

836. திபேத்தியல்

Tibetology

837. திமிங்கில இயல்

cetus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் திமிங்கிலம்.

Cetology

838. திராட்சை வளர்ப்பியல்

திராட்சை தொடர்பானவற்றைக் குறிக்கும் பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து உருவான oeno சொல் eno என மாறியுள்ளது.

Enology

839. திராவிடவியல்

Dravidology

840. திருமறைக் குறியீட்டியல்

மூலச்சொல்லான typus என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குறியீடு. இங்கே திரு மறைகளின் குறியீடுகளை ஆராய்வதைக் குறிக்கிறது. எனவே, திருமறைக் குறியீட்டியல் எனப்பட்டது. வேதம் என்றால் பொதுச் சொல்லாகக் கருதாமல் ஆரிய வேதமாக எண்ணுவர் என்பதாலும் மறை என்று மட்டும் குறிப்பிட்டால் பொருள் குழப்பம் வரும் என்பதாலும் திருமறை எனக் குறித்துள்ளேன்.

Typology2

841. திருமனையியல்

naós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் கோயில். திருச்சபைகளையும் தூய கட்டடங்களையும் ஆய்வு செய்யும் இயல். எனவே, பொதுவாகத் திருமனையியல் எனக் குறிக்கப்பட்டுள்ளது.

Naology

842. திரேசியல்

 

திரேசு என்பது தென்கிழக்கு ஐரோப்பாவில் கிரீசு, பல்கேரியா, துருக்கி இடையே பிரிக்கப்பட்டு அமைந்த வரலாற்றுச் சிறப்பு மிக்கப் புவியியல் பகுதி. இதனையும் இங்கு வாழும் திரேசு பழங்குடியினரையும் பற்றிய இயல் திரேசியல்.

Thracology

843. திரைப்படவியல் 

Cinimatography / Cinematology / Filmology

844. தீ வளைசலியல்

Fire Ecology

845. தீவிரப் பொருளியல்

Radical Economics

846. தீவினையியல்

ponērós என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் துயரமானது. துயரம்தரும் தீவினைகளைப் பற்றிய இயல் என்பதால் தீவினையியல் எனப்பட்டது.

Ponerology

847. துகள் இயங்கியல்

Particle Dynamics

848.  துகள் இயற்பியல்

Particle Physics

849. துகள் விசையியல்

Particle Mechanics

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Sunday, February 20, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 820 – 834 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  803 – 819 இன் தொடர்ச்சி)

 

820. தாவரமருந்தியல்

 Ethnopharmacology என்பதன் நேர் பொருள் தாவரமருந்தியல்  என்பதுதான். ஆனால், இத்துறை பெரும்பான்மை தாவரங் களுக்கும் சிறுபான்மை விலங்கு களுக்குமான மருந்து குறித்த இயல். எனவேதான் தாவர மருந்தியல் எனப்படுகிறது.

 

Ethnopharmacology

821. தாவரவியல்

Botany

822. தாழ் ஆற்றல் இயற்பியல்

Low energy physics

823. தாழ் ஓசையியல்

கீழ் ஓசையியல் என்றும் கூறுவர். அதனினும் தாழ் ஓசையியல் என்பது ஏற்றதாக இருக்கிறது.

Infrasonics- அகச்சிவப்பு என்றும் பொருள் உண்டு. இந்த இடத்தில் பொருந்தாது.

Infrasonics

824. தாழ் நுட்ப எந்திரன்   

Low Technology Robot

825. தாழ் மட்ட நுட்பியல்

 low level of technology

826. தாழ் வெப்ப இயற்பியல்           

Low Temperature Physics

827. தானியங்கிப் பொறியியல்

Automotive engineering

828. தான்மை உளவியல்

காண்க : தான்மை – Ego

Ego psychology

829. தான்மை யியல்

Ego – என்பதற்கு அகந்தை, அகம், நான், ஆணவம், நான்மை, சுயம், வீம்பு, தன்முனைப்பு, தன்னைப்பற்றிக் கொண்டிருக்கும் எண்ணம், நானுணர்வு, பெருமை, திமிர் பிடித்த எனப் பலவாறாகச் சொல்லப்பட்டாலும் வேறு பொருள் கொண்டனவாக உள்ளன. சுயம் தமிழில்லை. நான்மை என்பது நான் என்னும் சொல்லை உணர்த்தாமல் நான்மணிக்கடிகை போல் நான்கு என்னும் சொற் பொருளையே முன்னிருத்து கின்றது.

 தினமணி சொல் தேடல் பகுதி(21)இல் என்.ஆர். சத்தியமூர்த்தி, மன்ற வாணன் ஆகியோர் குறிப் பிட்டுள்ளதாகவும் தன் கருத்தும் இதுதான் என்றும் முனைவர் தெ.ஞானசுந்தரம்  தான்மை எனக் குறிப்பிட்டிருப்பார். தான் என்னும் முனைப்பான எண்ணமாக இருந்தாலும் அகந்தையாக இருந்தாலும் தான்மை என்பதே சரியான சொல் என்பதால் கையாளப்பட்டுள்ளது.

Egology

830. திணைத் தாவர இயல்

Floristics

831. திணைப்படவியல்

Mapology

832. திணையியல்

Topology 1

833. திண்பொருள் இயங்கியல்

Rigid Body Dynamics

 

834. திண்ட நோயியல்

disque என்னும் பிரெஞ்சுச் சொல்லில் இருந்து disc உருவானது. இலத்தீன் சொல்லான discus என்பதில் இருந்துதான் பிரெஞ்சுச் சொல் உருவானது.

Disc/Dish/Disk  என்பன வற்றைப் பெரும்பாலும் வட்டு என்றும் சிறுபான்மை தட்டு என்றும் குறிக்கின்றனர்.

வட்டு என்பது சூதாட்ட வட்டுக்கருவி, எறிந்து விளையாடும் வட்டு, கருப்பட்டிக் கட்டி, நீர் எறி கருவி, பாண்டி ஆட்டத்தில் பயன்படும் நெல்லி வட்டு, கண்ட சருக்கரை, கத்தரி வகை, வட்டில், சிறு துணி, வட்டமான பொருள், திரட்சியான பொருள் எனப் பலவற்றைக் குறிக்கும். இங்கே முதுகெலும் பிடையே உள்ள முள்ளெலும்புகளைக் குறிக்கும்.

எனினும் முள்ளெலும்பினை இவ்வாறு கூறுவது சரியான புரிதலைத் தராது. வடிவ அடிப்படையில் ஒத்துள்ள முள்ளெலும்பு என்பதைப் பொதுச்சொல்லாகப் பயன்படுத்துவதால் வேறு சொல்லைக் குறிப்பிட வேண்டியுள்ளது. முதுகெலும்புகள் இடையே திண்டு போல் பயன்படுவதால் அதன் அடிப்படையில் திண்டம் எனலாம்.

Disc Pathology

(தொடரும்) 

 இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000