Monday, May 30, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 111- 117

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்  106-110  தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

111. Room – சிற்றில்

அறை – அடி, சொல், சிற்றில் (Room), திரை, பாறை, மறை, மலையுச்சி.

நூல்   :           தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 2

நூலாசிரியர்         :           பு: த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீசு காலேசு தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்றவர்)

112. விசாலாட்சி – அழகிய கண்ணையுடையவள்

நூல்   :           தமிழ் வித்தியார்த்தி விளக்கம் (1894) முதற் பாகம், பக், 78

நூலாசிரியர்         :           பு. த. செய்யப்ப முதலியார் (சென்னை சென்ட் மேரீசு காலேசு தமிழ்ப் பண்டிதர்) (தமிழ்நாட்டில் பயிற்சிமொழி தமிழாகத்தான் இருக்கவேண்டும் என்றவர்)

113. Phaeton :           புரவி வண்டி (புரவி – குதிரை)

114. மோட்சம்    :           நல்வீடு

115. நிகேதனம் :           வீடு

நூல்   :           சிரீ பத்மநாப சுவாமி சந்திரகலாசைமாலை (1894) பக்கங்கள் : 7, 11, 16.

நூலாசிரியர்         :           அபிநவ காளமேகம் அநந்த கிருட்டிணையங்கார் (சிரீ வானமாமலை மடம், ஆசுதான வித்துவான்)

116. மருபூமி – பாலை நிலம்

அதனிடத்தில் (பிரமத்தினிடத்தில்) மருபூமியில் (பாலை நிலத்தில்) சலம், கிளிஞ்சலில் வெள்ளி, கட்டையிற் புருசன், படிகத்தில் வண்ணம் முதலியவைபோல் சிவப்பு, வெளுப்பு, கறுப்பு இந்தக் குணமயமானதும் ஏறக்குறைவன்றி ஒவ்வொன்றும் சமமாயிருக்கிற குணசுரூப மானதும் வாக்குக் கெட்டாததுமாகிய (என்றால், மித்தையானதுமாகிய) மூலப் பிரகிருதி யிருந்தது.

நூல்   :           மாயாவாத சண்ட மாருதம் (1895)பக்கம் – 137.

நூலாசிரியர்         :           ஓர் இந்து

117. பைண்டிங் – கட்டடம்

அநேக வருடங்களாய்ப் பாடசாலைகளிற் கற்கப்பட்டு வருகின்ற மகாலிங்க ஐயர் இலக்கணச் சுருக்கமானது, பலரால் பலவித மச்சிடப்பட்டு, எழுத்து சொன் முதலிய பிழைகளுடன் கூடி நிற்பதைக் கண்டு, தக்க பண்டிதர்களைக் கொண்டு பரிசோதித்து, நந்தேயபாசைகளின் அட்சரங்களிற்கு மிகவுஞ் சிறந்த எசு.பி. சி.கே. என்னும் யந்திர சாலையிற் பதிப்பித்ததுடன், ஒவோரியலின் கடையிலிலும் அவ்வவ் வியலையெட்டிய பரீட்சை வினாக்களுங் கூட்டியுளோம். குசிலிக்கடைப் பதிப்பிற்கும் இதற்கும் விலையில் வேற்றுமை சிறிதேயாயினும், காகிதம், அச்சு, திருத்தம், கட்டட முதலியவைகளில் மிகவும் சிறந்ததாயிருக்குமென் றறிவிக்க  நாடுகின்றோம்.

– இப்படிக்கு,

அரங்கநாத முதலியார் அண்ட் கம்பனி

சென்னை மே ௴ 1உ. 1-5-1896

நூல்   :           மழவை, மகாலிங்க ஐயர் இயற்றிய இலக்கணச் சுருக்கம்

(1861) பக்கம் – 1,

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, May 29, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1701-1706 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1696 – 1700 இன் தொடர்ச்சி)

1701. வாய் நோயியல் – Oral Pathology / Stomatology

stóma என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வாய்.

1702. வாய், முகத்தாடைநோயியல் – Oral & maxillofacial pathology

1703. வாய்க் கதிரியல் – Oral radiology

1704. வார்ப்பக நுட்பியல் – Foundry technology

1705. வார்ப்பகப் பொறியியல் – Foundry Engineering

1706. வாலில்லாக் குரங்கியல் – Pithecology
píthēkos என்னும் பழங் கிரேக்கச் சொல்லின் பொருள் வாலில்லாக் குரங்கு.
சிலர் மனிதக் குரங்கியல் என்று கூறுகின்றனர். பேச்சு வழக்கில் உள்ளவாறு சொல்வதை விட வாலில்லாக் குரங்கியல் என்பதுதான் சரியாக இருக்கும்.

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Saturday, May 28, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 106- 110

 அகரமுதல


(தமிழ்ச்சொல்லாக்கம்  101-105 தொடர்ச்சி)

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித்தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

106. Photo – புகைப்படம்

வெகு நேர்த்தியான அமைப்பு! அற்புதமான வேலை!

பார்க்கப் பார்க்க பரமானந்தத்தைத் தரும்!

தங்க வண்ணமான சாயையுள்ளது!!

சிதம்பரம் நடராசர் கோயிலின் புகைப்படம்.

சிற்சபை, கனகசபை, நிருத்தசபை, முக்குறுணிப் பிள்ளையார் கோயில், தில்லை கோவிந்தராசர் ந்நிதி முதலியனவும் இரண்டு கோபுரங்களுமடங்கியது.

இதழ் பிரம்மவித்தியா (1-12-1891)

107. பாரசூட் – பெருங்குடை

இந்தியாவெங்கும் பிரசித்தி பெற்ற சுபென்சர் நமது சென்னைபுரிக்கு வந்து, மும்முறை ஆகாய யாத்திரை செய்தார். இவர் ஆகாயத்தில்  ஏறும்போது புகைக்கூட்டின் துணையினாலேறி வரும்போது அதைவிட்டு அதனோடு சேர்ந்தாற்போல் மாட்டியிருந்த பாரசூட் என்னும் பெருங்குடையைப் பிடித்து தன் கீழே தொங்கிக்கொண்டு தமக்குச் சிறிதாயினும் அபாயமில்லாதபடி சேமமாக வந்திறங்கினார். ‘

இதழ் : சநாநந்தினி (1891) மார்ச்சு புத்த 1 இல. 3. பக்கம் : 53.

ஆசிரியர் : அன்பில் எசு. வெங்கடாசாரியார்

108.மரணப்ரயாணம் – கடை வழி

கடை வழி – முடிவாகிய பிரயாணம். (மரணப்ரயாணம்), உலகத்தாரே பொருள் முதலிய யாவும் நீங்களிறக்கும்போது கூட வராதன ஆதலால், குமரவேளை வாழ்த்தி, எளியோர்க்கு உதவி செய்யுங்கள் என்பது கருத்து.

நூல் : கந்தரலங்காரம் மூலமும் உரையும் (1892) பக்கம் – 10.

பதவுரை : வித்யாவிநோதிநி பத்ராதிபர்

109. (இ)ராவுத்தன் – குதிரை வீரன்

(இ)ராவுத்தன் – திசைச்சொல், பொருள் – குதிரை வீரன் என்பது.

நூல் : கந்தரலங்காரம் மூலமும் உரையும் (1892); பக். – 22

பதவுரை : வித்யா விநோதிநி பத்ராதியர்

110. மோட்சம் – தனிவீடு

மேற்படி நூல் : (1892) பாடல் 45. பக்கம் -28.

(இச்சொல்லாக்கம் அடிக்குறிப்பில் தரப்பட்டுள்ளது)

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, May 27, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1696 – 1700 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல


(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1691 – 1695 இன் தொடர்ச்சி)

1696. வாந்தியியல்
Eméō> emeto என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் வாந்தி எடுத்தல். 
Emetology 
1697. வாயு
Aero  வாயு, வான், காற்று, வான, வானூர்தி, விமான என்னும் பொருள்களில் பயன்படுத்துகிறது. காற்று என்பதையும் காற்று வழங்கும் வானத்தையும் வானத்தில் பறக்கும் வானூர்தி யையும் இடத்திற்கேற்பப் பயன்படுத்தலாம். வாயு என்பதும் தமிழ்ச்சொல்லே. வாய் என்றால் நிறைதல் என்றும் பொருள். எங்கும் நிறைந்துள்ளதால் காற்று என்பதற்கு வாயு என்றும் பெயர் வந்தது. Air – காற்று என்றும் Aero – வாயு என்றும் வகைப்படுத்திக் கொள்ளலாம். ஒரே பொருள்தான் என்றாலும் தனித்தனிப் பயன்பாட்டிற்கு இவ்வகைப்பாடு உதவும்.
Aero
1698. வாயு இயங்கியல்Aero dynamics
1699. வாயு உயிரியல்         Aerobiology
1700. வாயுப் பூந்தாதியல்
வாயுமண்டலத்திலுள்ள பூந்துகள்/ பூந்தாது, வித்துகள் பற்றிய ஆய்வியல். எனவே,  அகராதிகளில் குறிப்பிட் டுள்ளவாறு, சூழ்ப் பூந்துகளியல்  என்று சொல்லாமல் வாயுப் பூந்தாதியல் எனலாம். Palynology என்பதைப் பூந்தாதியல் என வரையறுத்துள்ளதால் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
காண்க: பூந்தாதியல்    
Aeropalynology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Thursday, May 26, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 101- 105

 அகரமுதல

 

(தமிழ்ச்சொல்லாக்கம்  96-100 தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைதேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

101. Gas Light – காற்றெரி விளக்கு

நீராவியந்திரம் கண்டுபிடித்தவனைப் பைத்தியக்காரனென்று கல்லை விட்டெறியாத பேருண்டோ முதலில்? காற்றெரி விளக்கை (Gas Light) உண்டாக்கினவனை அவன் காலத்தோர் யார்தான் நகைத்துக் காறி உமிழவில்லை!

மேற்படி இதழ்      :           (1-10-1890) புத்தகம் -4 இல- 11, பக்கம் – 94

கட்டுரையாளர்    :           ஓர் இந்து

102. பென்சல் – எழுதுகோல் (1890)

விகுர்தி வருடத்திய பாக்கெட் பஞ்சாங்கம்

இப்பஞ்சாங்கம் ஒன்று ரிப்பன் அச்சுக் கூடத்துத் தலைவர் ம-ளள- சிரீ, சை. ரத்தின செட்டியர் அவர்கள் அனுப்ப வரப்பெற்றோம். இப்புத்தகத்திலடங்கிய விசயங்கள் அநந்தம். அவற்றை இவண் குறிப்பிடப் பெருகும். இப்புத்தக ரூபத்துள், தினசரிக் குறிப்புக்குரியவும், வரவு செலவுக்குரியவும், விசேடக் குறிப்புக்குரியவுமான விசயங்கள் எழுதிக்கொள்ள வெற்றுக் கடிதங்கள் விடப்பட்டுள்ளன. எழுதுவதற்குத் தகுந்த (பென்சல்) எழுதுகோலும் வைத்திருக்கின்றது. விலை 6 அணா. தபாற்கிரயம் – 1 – அணா. வேண்டுவோர் மேலைய செட்டியார் அவர்கட்கு எழுதிக்கொண்டால் கிடைக்கும் – பத்

இதழ் : சிரீலோகரஞ்சனி (1890) புத் – 4, இல – 3 பக். – 1

103. Headings — தலைப்பெயர்

ஞானாமிர்தம் என்னுந் திருநாமம் புனைந்து தமிழ்ச்சுவையும் சொன்னோக்கமும் பொருணோக்கமும் பொலிந்து நான்கு பக்கமுடையதாய் மாதம் இருமுறை பிரசுரஞ் செய்யப்படும் ஓர் பத்திரிகையை நமது பார்வைக்கனுப்பிய பத்திராதிபரவர்கட்கு விஞ்ஞாபன மோச்சுகின்றனம். இது சீர்வளர்சீர் யாழ்ப்பாணம் சபாபதி நாவலரவர்களை ஆசிரியராகப் பெற்றது. இதில் சாதாரணப் பிரகரணம், வைதிக சித்தாந்தப் பிரகரணம், பரமதப் பிரகரணம், தமிழ் இலக்கிய இலக்கணப் பிரகரணம், சமாசாரப் பிரகரணம் கடிதம் முதலிய தலைப்பெயர்கள் வாய்க்கப் பெற்றிருக்கிறது.

மேற்படி இதழ் , (1-6-1888) புத்தகம் – 2, இல, 11, பக். – 82

104. தலையங்கம் – தலைப்பெயர்

1889௵ ஆகட்டு – ௴ 24 உ பிரசுரமாகிய மகாவிகட தூதன் பத்திரிகையில் ‘அரக்கோணம் சான்றார் என்னுஞ் சொல் வழக்கின் முடிவு’ எனத் தலைப்பெயரிட்டெழுதிய ‘க-ஷ-கி என்பவரது தோழன்’ எனப் பெயர் பூண்டவர் பதினெண் புராணங்களின் கருத்தையும் நோக்காது, முன்னிருந்த அருந்தமிழ்ப் புலவர் கருத்தையும் நோக்காது, சான்றோராகிய சத்திரியர்களால் வெளியிடப்பட்ட நூற்களின் கருத்தையும் நோக்கது சாத்திர சம்மதமின்றி, ’சான்றார்’ என்னும் பெயர் சாதிப் பெயரல்லவென்றும், சில நூற்களிற் சான்றார் என்னும் பெயர் அரசருக்கு வழங்கிடினும் அதைப்பற்றி எனக்கு அவசியமில்லை என்றும், சேக்கிழார் அருளிச் செய்த பெரிய புராணத்தின்கண் வருகின்ற ’ஈழக்குலச் சான்றார்’ என்பதற்கு ’கள்வாணிபகுலவறிஞர்’ எனப் பொருளாகுமென்றும், சில நூற்களில் அரசருக்கு கிராமணி என்னும் பட்டப்பெயர் வழங்கிடினும் அது இராசகுல முற்றிலும் வழங்கவில்லை என்றும், சேக்கிழார் பெரிய புராணத்திற்கு நம்பியாண்டார் நம்பி தருவந்தாதிதான் முதனூலென்றும், வடநாட்டரசர் தென்னாட்டிற்கு வந்ததில்லை என்றும் இதுபோல இன்னுஞ் சில மொழிகளையும் தாறுமாறாகப் புரட்டி மூட தாற்பரியஞ் செய்து எழுதியிருக்கின்றார்.

நூல்   :           சான்றார் என்னுஞ்சொல் வழக்கின் முடிவைத் தகிக்குஞ் சண்டபானு (1891) பக்கம் – 1

நூலாசிரியர்         :           சண்முக கிராமணியார் (சத்திரிய வித்வான் நிவேதன சங்கத் தலைவர்)

105. எரிநக்ஷத்திரம் – விண்வீழ்க்கொள்ளி

சில சமயங்களில் விண்வீழ்க் கொள்ளிகள் இப்பூமியில் விழுகின்றன. அப்போது அவற்றைப் பரீட்சித்துப் பார்க்கையில் அவைகள் சாதாரணமான கற்களாகவே இருக்கின்றன. இவைகளைப் பல பொருட்காட்சிச் சாலையில் நாளைக்குங் காணலாம்.

இதழ் :           மகா விகட தூதன் 4-4-1891

புத்தகம்      :           6, இலக்கம் 13, பக்கம் : 3.

கட்டுரையாளர்    :          சான் டானியல் பண்டிதர்.

(தொடரும்)

வமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, May 25, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1691 – 1695 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல





(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1681-1690 இன் தொடர்ச்சி)

1691. வளைவரை
தட்பியல் காண்க : தட்பியல்-Climatology
Dendroclimatology
1692. வறுமையியல்
ptōkhós என்னும் பழங் கிரேக்கச்சொல்லின் பொருள் வறுமை.
Ptochology
1693. வனைமுறை  இயங்கியல்  
Process  செயல்முறை, நடைமுறை, செயலாக்க முறை, செயல் முறைக்குள்ளாக்கு, முறைப்படுத்து, படிமுறை, பதனம் செய், செலுத்தம்  எனப் பலவாறாகக் கூறுகின்றனர். படிப்படியாக நிகழ்விக்கும் செயல்பாட்டை மட்கலங்கள் செய்யப்படும் வனைதல் முறையுடன் ஒப்பிடலாம். மண்பானை செய்யத் துணை நிற்கும் சக்கரத்தை வனை கலத்திகிரி எனச் சீவக சிந்தாமணி குறிப்பிடுகிறது. வனைதல் என்றால் உரு அமையச்செய்தல் எனப் பிங்கல நிகண்டு கூறுகிறது. எனவே, Processing  என்றால் வனைதல் எனலாம். இடத்திற்கேற்றவாறு இச்சொல் வனைமம் என்றும் வனைவம் என்றும் வனைவி என்றும் மாறுகிறது. செருமனியில் நடைபெற்ற ஐந்தாவது இணையத் தமிழ் மாநாட்டில்(அட்டோபர் 2009) கணிணிச்சொற்கள் குறித்து நான் அளித்த கட்டுரையில் இவ்வாறு பல சொற்களை உருவாக்கிக் காட்டியுள்ளேன். எனவே, வனைதல்  எனலாம். இதனடிப்படையில் வனைமுறை  இயங்கியல் –  Process Dynamics எனலாம். எனினும் Fish processing technology என்னும் பொழுது மீன் பதன நுட்பியல் எனலாம். பதனம்  – processing(2) (மீனியல்)
Process Dynamics
1694. வனைமப்பொறியியல்  
காண்க: வனைம இயங்கியல்  குறிப்பை; process re-engineering என்னுமிடத்தில்பொறியியலைக்குறிக்கவில்லை. மறுசீரமைப்பைக்குறிக்கிறது.
Process Engineering
1695. வாட்டிகனியல்Vaticanology      

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000