Tuesday, November 29, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 537-541

 அகரமுதல

     30 November 2022      No Comment



( தமிழ்ச்சொல்லாக்கம் 532-536 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 537-541

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

537. Watch   –          மணிக்கூடு

538. Latrine  –          மலசலக்கூடம்

539. dash      –          கீறல்

540. Jfen       –          இணைமொழிக்குறி

நூல்   :           தற்கால தமிழ்ச் சொல்லகராதி (1925)

நூலாசிரியர்         :           திவான்பfதூர் ச. பவானந்தம் பிள்ளை ஐ.எஒ. எப்.ஆர்.சுச். எசு. (இலண்டன), எம்.ஆர்.ஏ.எசு. (இலண்டன்)

541. சுயராச்சியம் : உரிமை அரசாட்சி

1917ம் ஆண்டிற்கு முன்னரே பல ஆண்டுகளாக இந்தியாவிலுள்ள அரசியல் நிபுணர் அனைவரும் சுயராச்சியம் அல்லது உரிமை அரசாட்சிக்காக மன்றாடி நின்றனர்.

நூல்   :           தேசபந்து விசயம் (1925) பக்கம் – 29

நூலாசிரியர்         :           ம. க. சயராம் நாயுடு

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, November 27, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 532-536

 அகரமுதல







( தமிழ்ச்சொல்லாக்கம் 527-531 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 532-536

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

532. ICE – நீர்கட்டி

சூன்மீ2. சத்தியநேசனில் பிரசுரிக்கப்பட்ட வைத்திய சாத்திரக் குறிப்புக்களைப் படித்துப் பார்த்தேன். அவற்றில் இலங்கையில் பல்வலியைக் குறித்துப் பேசப்பட்டிருக்கிறது. இந்த விசனத்துக்குரிய நோய் நம்மூரில் புதிதாக உற்பத்தியாகி விட்டது. இதற்குக் காரணம் (ice) நீர்கட்டி பாவித்தலே. கொழும்பிலும் கண்டியிலும் தெருக்களிலும் வீடுவீடாகவும் ஒரு சதத்துக்கு வாங்கக்கூடிய (ice Cream) வியாபாரிகள் திரிகிறார்கள். இந்தக் குளிர்ந்த தித்திப்பு குழந்தைகளுடைய பற்களை முதலாய் கெடுத்துப் போடுகிறது.

நூல்   :           சத்தியநேசன் (1926-ஜூலை)

தொகுதி – 1 பகுதி – 7, பக்கம் – 280;

சொல்லாக்கம்      :           பிறாஞ்சீசுகு – சூ. அந்தோனி

533. உபந்யாசம் – சொற்பொழிவு

சிவனடியார் திருக்கூட்டம்

இஃது

திருக் கற்குடிச் சிவனடியார் திருக்கூட்டத்தின் 5, 6, 7-வது ஆண்டுகளின் நிறைவு விழாவில் (இருக்தாட்சி ௵ ஆவணி ௴ 9உ) தலைமை வகித்த பஞ்சாட்சரபுரம் உயர்திரு. வாலையானந்த சுவாமிகள் முன்னுரையாகச் செய்த சொற்பொழிவு.

சென்னை திருவல்லிக்கேணி சோல்டன் கம்பெனியாரால் அச்சிட்டு வெளியிடப் பெற்றது.

நூல் : சிவனடியார் திருக்கூட்டம் (1925) பக்கம் – 1

534. பார்லிமெண்ட் – பாராளுமன்றம்

பாரதமாதாவின் திருத்தொண்டர்களுள் முதன்மையானவரும், தேச பக்தர்களுக்கெல்லாம் பெருங்குருவானவரும், நம் நாட்டுத் தலைவர்களுள் சிரோமணியென விளங்குபவருமாகிய சீரீமான் தாதாபாய் நெளரோசி பாராளுமன்றத்தி (பார்லியமெண்டி)ற்கு ஒர் அபேட்சகராக நின்றார்.

நூல்   :           தேசபந்து விசயம் (1925) பக்கம் – 11

நூலாசிரியர்         :           ம. க. சயராம் நாயுடு

535. Cartoon – விநோதப்படம்

இதழ் :           ஒற்றுமை (1925) தொகுதி TV, சஞ்சிகை 2, பக்கம் : மேலட்டை

இதழாசிரியர்       :           மு.ஏ. வீரபாகு பிள்ளை, பி.ஏ., எல்.டி.,

536. சத்து – உள்பொருள் (1925)

சத்திலிருந்து ஒரு பொருள் தோன்றியதென்றால் அஃது அதனிடத்திருந்தே வந்ததென்றுதானே கொள்ள வேண்டும். இப்படி யொத்துக் கொண்டால் திரிபு என்பது பொய்யென்றுதான் ஏற்படும். அஃதாவது, ஒரு பொருள் மற்றொன்றாய் மாறுவதில்லை. உள்பொருள் (சத்து) எப்போதும் உள்பொருளே. ஆகவே நிலையானதும், ஒன்றின் பற்றுக்கோடற்றதும், திரிபற்றதுமாய பொருளொன்றே மெய்ப்பொருள்.

நூல்   :           ஞானபோதினி அல்லது சிவப்பிரகாசம் (1925) பக். 15, 16

நூலாசிரியர்         :           சோழ. கந்த சச்சிதானந்தனார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, November 22, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 527-531

 அகரமுதல




தமிழ்ச்சொல்லாக்கம் 522-526 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 527-531

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

527. கசுபா – அகநகர்

இவர் திருநெல்வேலி அக நகரிலே (கசுபா) கீழப் புதுத் தெருவிலே குடியிருப்புடையார். ‘குப்ப குறிச்சிச் செல்லம்பிள்ளை’ என்று இவர் பெயர் மிகச் சிறப்பாய் வழங்கிவரலாயிற்று.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924) பக்கம்-2

நூலாசிரியர்         :           மு. பொ. ஈசுர மூர்த்தியா பிள்ளை

528. மார்க்க சகாயர் – வழித்துணைவர்

தனபாலன் என்னும் வணிகற்குக் குதிரைச் சேவகனாய் வழித்துணை சென்றமையாற் றிருவிரிஞ்சைப் பெருமாற்கு ‘மார்க்க சகாயர்’ என்னுந் திருப்பெயர் வழங்குதலின் அது நோக்கி ஈண்டு வழித்துணையாகியுள்ளார் என்றிடத்திற்கேற்பக் கூறினா ரென்பாருமுளர்.

நூல் : பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் : 84

529. நியாயவாதி – வழக்கறிஞர்

முன் மேற்படிப்பு’யென்னும் 7-ஆவது பிரிவில் கூறியபடி (பக்கம் 14) நமது நண்பர் சட்டப்பரீட்சையில் தேறி வழக்கறிஞர் (நியாய வாதி) ஆன காலத்தில் சமீனைவிட்டுப் பிரிய நேரிடும் போலிருந்த சமயத்தில் ஆசிரியருக்கும் மாணவருக்குமுள்ள அன்பின் தகைமைக்கேற்ப இருவரும் பிரிந்தும் பிரியாதிருப்பதற்கு வேண்டியதற்குரிய ஏதுக்கள் திருவருளால் அமைந்துள்ளன என்பது இங்கு இப்பொழுது வெளியிடப்போகும் செய்திகளால் இனிது விளங்கும்.

நூல்   :           வக்கீல் பண்டாரம் பிள்ளை என்னும் திருவாளர் தி. செ. சுப்பிரமணிய பிள்ளையவர்களின் சரித்திரச் சுருக்கம் (1924 பக்கம்-78)

530. இராச சம்பிரதாயம் – அரசர் வழக்கு

‘நிலைபெற்ற உலகின்க ணுண்டாக மந்திரிகள் வழக்கு மொழிந்தீர்களென்றான்’ என்றும், நிலைபெற்ற உலகின்க ணுண்டாக மொழிந்தீர்கள், இங்ஙனம் மொழிவது மந்திரிகளுக்கு வழக்கமென்றான் என்றும் பொருள் கூறி மந்திரிகள் வழக்கு, என்றதனால் இஃது அரசர் வழக்கு அஃதாவது இராச சம்பிரதாயம் ஆகாதென்னுங் குறிப்புப் பொருளுங் கூறுப.

நூல்   :           பெரிய புராண வாராய்ச்சி (1924 பக்கம் : 94

நூலாசிரியர்         :           வா. மகாதேவ முதலியார்

531. Novel /நாவல் – புதுக்கதை (1925)

தமிழிலே ஆங்கில நுண்ணூல்களை மொழிபெயர்க்கவும், வடமொழியிலும் பிறமொழியிலுமுள்ள அரிய நூல்களை மொழி பெயர்க்கவும், தமிழ்நாட்டில் பல இடங்களிலுமுள்ள பல்வகைக் கலைத்துறைகளுக்குரிய ஏடுகளி யாவற்றையுஞ் சேர்த்து அவற்றை ஒத்துப் பார்த்து அச்சியற்றவும், தமிழிலே புதுக்கதை (நாவல்)களாகப் பிழையோடு எழுதப்படுகின்ற புத்தகங்களைத் திருத்தஞ் செய்யவும், பிழை மிக்கனவற்றைக் கண்டித்து ஒதுக்கவும், தமிழில் இலக்கணம், சங்கநூல், நீதிநூல், பெருங்காப்பியங்கள், சிறுகாப்பியங்கள், சமயநூல், சோதிட நூல் நீதிநூல், மருத்துவநூல், யோகநூல், இசைநூல், கணக்கு நூல், ஓவியம், சிற்பம், முதலியவற்றைத் தனித்தனி செம்மையாக ஆராய்ச்சி செய்யவும், ஆங்கிலத்திலே யுள்ளபடி பலவகைப் பேரகராதிகள் அமைக்கவும் வேண்டிய நிலையங்கள் ஏற்படுகின்றவரை தமிழ் வளர்ச்சி செம்மையாக நடைபெற முடியாது.

வி. சங்கரலிங்கம்பிள்ளை

நூல்   :           செந்தமிழ்ச் செல்வி

சிலம்பு 3     :           பரல், 9, 1925 செப்டம்பர். பக்கம் – 493, 494

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, November 18, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 522-526

 அகரமுதல







( தமிழ்ச்சொல்லாக்கம் 516 -521 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 522-526

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

522. Director – தலைமையோர்

தூத்துக்குடியில் சுதேசிக் கப்பற் கழகம் ஏற்பட்டிருந்த காலத்தில் நமது நண்பர் அதைத் தொடங்கினோர்க்கு வேண்டும் உதவிகளை நெல்லையிலிருந்து புரிந்து வந்தபடியாலும், பொதுவாக உலக நடையில் சிறந்த அநுபவமுடையவரா யிருந்தபடியானும், மேற்படி காரியங்களை நிகழ்த்தும் தலைமையோர் (டைரக்டர்)களில் இவரும் ஒருவராய்த் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

மேற்படி நூல் : பக்கம் – 60

523. அரித்துவாரம் – சிங்கத்துளை

நூல்   :           பிரமானந்த நான்மணி மாலை (1924 பக்கம் 13

நூலாசிரியர்         :           பி.பி.நாராயணசாமி நாயுடு (திருநெல்வேலி சிந்துபூந்துறை பென்சன் போலீசு இன்சுபெக்டர்)

524. வசன நடை – ஒழுக்கம்

பத்மினி பெயர்க்கிணங்க நல்லொழுக்கம் நன்கமைந்தது; (ஒழுக்கம்-வசனநடை என்பதும் ஒருபொருள்) எவர்க்கும் எளிதில் பொருள் விளக்கும் எழிலது, செந்தமிழணங்கின் கீர்த்தியைத் தெரிவிப்பது நடந்தே நவில்வது.

நூல்   :           பத்மினி (1924 பக்கம் : 6)

தலைப்பு     :           சில தமிழ் அபிப்பிராயங்கள்.

சொல் விளக்கம்  :           திருப்பாதிரிப்புலியூர் சிரீமத்து ஞானியார் மடாலயத்து சுவாமிகள்

525. பிரசவம் – பிள்ளைப்பேறு

பூர்ணமான பிண்டாண்டத்தில் (1) குழந்தை அல்லது பிண்டம், 2) குழந்தை மிதந்து கிடக்கும் பனிநீர், 3) பனிநீரையடக்கஞ் செய்து கொண்டிருக்கும் சவ்வுகள், 4) மாயை, கொப்பூழ் கொடி, இவைகளடங்கி யிருக்கின்றன. சனன வாய்க்காலின் வழியாய்ப் பிண்டாண்டமானது வெளியில் தள்ளும் சக்திகளால் வெளியாகும் விதானத்திற்குப் ‘பிரசவம்’ அல்லது ‘பிள்ளைப்பேறு’ என்று சொல்லப்படும்.

நூல்   :           மருத்துவ மாணாக்கியர்களுக்கு உபயோகமான கைப்புத்தகம் (1924) பக்கம், 15.

நூலாசிரியர்         :           கோ. கி. மதுசூதனராவு

526. Typewriting – கையச்சு

கும்பகோணத்தில் முனிசிபாலிடியார் ஒரு சித்திர பாடசாலை வைத்திருக்கிறார்கள். அதில் சுமார் 100 பிள்ளைகள் உயர்ந்த சித்திர வேலை செய்யக் கற்றுக் கொள்ளுகிறார்கள். டைப்ரைட்டிங் என்ற கையச்சு வேலையில் பயில பல பாடசாலைகள் எங்குப் பார்த்தாலும் இருக்கின்றன.

நூல்   :           தஞ்சாவூர் சில்லாவின் வரலாறு (1924 பக்கம் : 87)

நூலாசிரியர்         :           ஆர். விசுவநாத ஐயர் (Assistant, Govt., Model High School, Saidapet)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்