Sunday, April 30, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 695-698

 




(தமிழ்ச்சொல்லாக்கம் 688-694  தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 695-698

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 
கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச்சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

695. அப்பாசாமி – அண்ணல் தங்கோ (1932)

692. நவம்              –              புதுமை

693. சின்மயம்      –              ஞானவடிவு

694. பூரணம்         –              நிறைவு

695. பஞ்சவர்ணம்              –              ஐந்நிறம்

696. மங்கல சூத்திரம்         –              தாலிக்கயிறு

697.மாணிக்கம்    –              செம்மைமணி

698. மோட்ச மார்க்கம்       –              முத்திநெறி

நூல்        :               திருவருட்பா மூலமும் உரையும் நெஞ்சறிவுறுத்தல் (1932)

உரையாசிரியர்    :               மகாவித்துவான் – சித்தாந்த ரத்நாகரம், அரன்வாயல் வேங்கட சுப்பிப்பிள்ளை.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, April 23, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 - 694



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 688 - 694

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

688. பரசுபரம் – ஒருவர்க்கொருவர்

மதங்களின் ஏற்றத் தாழ்வை யுன்னி யானை கண்ட குருடர்போல் பரசுபரம் (ஒருவருக்கொருவர்) கலகம் விளைவித்துக் கொள்ளா நிற்கும் மதசுதர்களென்பான், துயதிது தீயதிது வென்னு மாக்கள்’ என்றும், இவ்வாறு மதசுதர்கள் தத்தம் சித்தாந்தத்திற் கேற்ற தத்துவத்தைக் கொள்ளினும் அவர்கள் யாவருக்கும், விரோதமின்றி அவ்வத் தத் வமாயிலங்குபவன் இறைவன் என்பான் ‘அது வதுவா யிறை யிருக்கும்’ என்றும், அதுபோல் யாமும் மதசுதர்க ளெல்லாரோடும் விரோதமின்றி யொழுகுவோமாக வென்பான், ‘இறை இருக்கும் படியேயா யிருக்க என்றும் கூறினார்.

நூல்        :               சசிவன்ன போதம் (1930) பக்கம் – 9

நூலாசிரியர்         :               காஞ்சி நகர் ஆ. செங்கல்வராய முதலியார்

:               ⁠ (தருக்க வேதாந்த போதகாசிரியர்)

689. பீதாம்பரம் – மின்நூல் ஆடை

நூல்        :               நூல் புள்ளிருக்கும் வேளுர் தேவாரம் (1929)

பதிப்பித்தவர்     :               ச. சோமசுந்தர தேசிகர்

:               ⁠ (வைத்தீசுவரன் கோயில்)

690. ஈசானம்         –              ஆளுதல்

691. தற்புருடம்   –              காத்தல்

692. அகோரம்     –              அழித்தல்

693. வாமதேவம் –              விளக்கல்

694. சத்தியோசாதம்          –              தோற்றுவித்தல்

திருமறைக் காட்டிலே பகவன் என்று ஒருவனிருந்தான். சீரிய ஒழுக்கம் பெற்றவன். சோமன், சூரியன், அக்கினி என்ற மூன்று விழிகளையுடையவராயும், ஈசானம் (ஆளுதல்), தற்புருடம் (காத்தல்), அகோரம் (அழித்தல்), வாம தேவம் (விளக்கல்), சத்தியோ சாதம், (தோற்றுவித்தல்) என்கின்ற ஐந்து முகங்களையுடையவராயும், இராசத வடிவத்திற்றோன்றிய பிரமன், தாமத வடிவிற் றோன்றிய விட்ணு, சாத்துவீக வடிவிற்றோன்றிய உருத்திரன் முதலியவர்களுக்கு முதல்வராக வீற்றிருக்கின்ற சிவபெருமானை, நாடோறும் அன்போடு போற்றும் தன்மையை யுடையவன்.

நூல்        :               திருக்குடந்தைப் புராண வசனம் (1932) பக்கம் – 78

நூலாசிரியர்         :               பு, து, இரத்தினசாமி பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, April 16, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687

 



(தமிழ்ச்சொல்லாக்கம் 677-682  தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 683-687

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

683. Carbonic Acid gas — நச்சுக் காற்று

நாமும் ஏனைச் சிற்றுயிர்களும் உட்கொள்ளும் உயிர்க்காற்று உள்ளே சென்றவுடன் அழுக்காகிப் பின் வெளிப்பட்டு விடுகின்றது. அப்போது அது நச்சுக் காற்றாய் (Carbonic Acid gas) மாறி விடும். இந்நச்சுக் காற்றையே திரும்பவும் நாம் உட்கொள்வமாயின் உடனே இறக்க வேண்டுவதுதான்.

நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் – 53

நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை

684. Criminal Code – குற்றச் சட்டம்

மெக்காலே ‘சட்டம் இயற்றும் குழு’வின் தலைவராக இருந்து, இந்தியாவில் குற்றச் சட்டம் (Criminal Code) இயற்றினார். அச்சட்டம் இன்றும் இந்திய அறிஞர் அனைவராலும் பாராட்டப்படுகின்றது.

நூல்        :               மெக்காலே பிரபு (1930) பக்கம் :55

நூலாசிரியர்         :               பி. எசு. இராசன்

685. Advocate General – தலைமை வழக்கறிஞர்

மெககாலே, இந்தியாவின் நிலை, சீதோசுண அளவு, மக்கள் குணம், வாழ்க்கை முறை ஆகியவற்றைப் பற்றி எல்லாம் அறிந்து கொள்ள முயன்றார். வங்காளத்தில் தலைமை வழக்கறிஞராய் (Advocate General) இருந்து இந்தியாவைப் பற்றிய அனுபவம் மிக்காராய் இலண்டனில் வந்திருந்த போபசு சுமித் என்பவரிடம் சென்று பலவாறு விசாரித்தார்.

நூல்        :               மெக்காலே பிரபு (1930) பக்கம் : 45, 46

நூலாசிரியர்         :               பி. எசு. இராசன்

686.Fellow ship – உறுப்பினர் உரிமை

மெக்காலே, கேம்பிரிட்சு சருவ கலாசாலையால் நன்கு கெளரவிக்கப்பட்டது. அவருக்கு இருமுறை அத்தியட்சகரின் பொற்பதக்கம் அளிக்கப்பட்டார். இந்த இரு முறைகளிலும் அவர் அழகிய கவிதைகள் புனைந்ததற்காகவே பொற் பதக்கங்கள் பெற்றார். அவருக்கு, இவற்றுடன் கிரேவன் சருவகலாசாலை உபகாரச் சம்பளமும் கிடைத்தது. இவை அனைத்தும் அவருக்குப் பெருஞ் சிறப்பை அளித்தன. சில ஆண்டுகள் கழிந்த பின்னர் அவருக்குச் சருவ கலாசாலையின் உறுப்பினர் உரிமை (Fellowship) கிடைத்தது.

மேற்படி நூல் : பக்கம் 13, 14

687. Honey Moon – தேன்மதி

தேன்மதி என்பது ஆங்கிலத்தில் ஃகனிமூன் என்னும் வார்த்தையின் நேர் தமிழ் மொழி பெயர்ப்பாகும். ஆங்கிலத்தில் இவ்வார்த்தையின் அருத்தம் யாதாயினும் ஆகுக. அதனுடைய தமிழ்மொழி பெயர்ப்பு மிக்க அழகாகவும் ஆழ்ந்த கருத்தைக் கொடுக்கக் கூடியதாகவும் இருக்கிறது. தேன்மதி என்றால் கன்னி யென்னும் பதத்திற்கு இசைய, அப்பருவத்தில் நடந்து கொள்ள வேண்டிய நெறிக்குச் சிறிதும் பங்கமின்றி யொழுகிய ஒரு பெண்ணும், உண்மைப் பிரமசாரியாக விளங்கும் ஓர் ஆணும், பெற்றோர் மற்றோரால் விவாகம் எனப்படும் சடங்கின் வழியதாக இன்ப சுகத்தை அனுபவித்தலே யாகும்.

இதழ்     :               விவேக போதினி, சூலை 1930

தொகுதி               :               22 பகுதி – 7

கட்டுரையாசிரியர்            :               ச. தா. மூர்த்தி முதலியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, April 9, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 677- 682

 





(தமிழ்ச்சொல்லாக்கம் 671-676  தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 677- 682

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

677. Food Machine – உணவுப் பொறி

உற்று நோக்கினால் மக்கட்கும் ஏனைச் சிற்றுயிர்கட்கும் அவ்வப் போதும் உணவுப் பொருள்கள் உண்டாக்கிக் கொடுத்தலில் மரஞ் செடி கொடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோர் உணவுப் பொறியாகவோ (Food Machine) விளங்கா நிற்கும்.

நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930) பக்கம் – 55

நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை

678. தயிலசத்து – பசையுடைப் பொருள்கள்

அழலுண் பொருள்கள் தயில சத்து (பசையு)டைப் பொருள்கள். உண்பவை – எண்ணெய், நெய் முதலியவை.

நூல்        :               சசிவன்ன போத மூலம் (1930) பக்கம் 88

நூலாசிரியர்         :               காஞ்சிநகர் ஆ. செங்கல்வராய முதலியார் (தருக்க வேதாந்த பேராசிரியர்)

679. பிராணாயாமம்          –              வளிநிலை

680. பிரத்யாகாரம்              –              தொகை நிலை

681. தாரணை      –              பொறை நிலை

682. தியானம்      –              நினைதல்

இங்கு புலன்வினை மாறி என்றமையான், இயமம், நியமம், ஆசனம் (இருப்பு), பிராணாயாமம் (வனிநிலை), பிரத்யாகாரம் (தொகை நிலை) தாரணை (பொறை நிலை), தியானம் (நினைதல்), சமாதியென்னும் எண்வகை யோகவுறுப்புக்களுள் பிரத்யாகாரம், தாரணை என்ற இரண்டையுமே யுணர்த்தினார்; இவை நனவிற் சுமுத்திக்கு முக்கிய சாதனமாதலின்.

நூல்        :               சசிவன்ன போதம் (1930) பக்கம் – 141

உரையாசிரியர்   :               காஞ்சி நகர் ஆ. செங்கல்வராய முதலியார் (தருக்க வேதாந்த போதகாசிரியர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, April 2, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 671- 676

 








( தமிழ்ச்சொல்லாக்கம் 663- 670 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 671 – 676

(சொல்மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழி மாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

671.  பூவராகம் (பிள்ளை) – நிலப்பன்றி (1930)

1929-ஆம் ஆண்டில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருப்பெற்றது. அக்கழகத்தின் புலவர் பயிற்சிக் கல்லூரியும் புகுமுக வகுப்பும் தில்லையில் இருந்தன. 1930ஆம் ஆண்டில் பூவராகனார், இக்கல்லூரிகளின் ஆசிரியராக அமர்ந்து திறமையாகப் போதனை புரிந்தார். பிறகு 1938ஆம் ஆண்டில் புலவர் வகுப்புகட்கு ஆசிரியரானார்.

பூவராகனார் சிறந்த அறிவாளியாக விளங்கினாலும் பெருமிதத்தை மேற்கொண்டவரல்லர். அடக்கத்தையும் அமைதியையும் அணிகலனாகக் கொண்டிருந்தார். எப்பொழுதும் நூல்களைப் படிப்பதே இவருக்கு இனிமையான பொழுதுபோக்கு. மாணவர்கள் பலவகையாக இருப்பர். சிலர் ஆசிரியர்களைக் கேலி செய்பவர்களாகி விளங்குதலும் உண்டு. பூவரானாருடைய மாணவர்கள் அவருடைய பெயரைத் தமிழில் மொழி பெயர்த்து நிலப்பன்றி என்று கூறுதலும் உண்டு.

நூல்        :               தமிழ்ப் புலவர் வரிசை (1955)

(பன்னிரண்டாம் புத்தகம்) பக்கங்கள் : 92, 93

நூலாசிரியர்         :               சு. அ. இராமசாமிப் புலவர்

672. Protein       –              முதலுணா

673. Fat                –              கொழுப்புணா

674. Carbo Hydrates      –              இனிப்புணா

675. Salts            –              உப்புணா

676. Water         –              நீருணா

விளக்கத்தில்  முதலுணா (Protien), கொழுப்புணா (Fats), இனிப்புணா (Carbo hydrates), உப்புணா  (Salts), நீருணா (Water) எனக் குறிக்கப்பட்டுள்ளன. உணவைக்குறிக்கும் உரை என்ற சொல் எங்கும் பயன்படுத்தப்படவில்ல. எனவே இவை  அச்சுப்பிழைகளே.

இவற்றில் தொடர்ந்து முதலுலைப் பொருள், கொழுப்புரை, இனிப்புரை,  நீருணாரவோ என அச்சுப்பிழைகளும் உள்ளன. இவை திருத்தப்பட்டு இங்கே குறிக்கப்பட்டுள்ளன.

மக்கள் ஊனுண்ணுதற்குரிய உணவுப் பொருட் கூறுகள் ஐந்து வகைப்படும். அவை முதலுணா (Protien), கொழுப்புணா (Fats), இனிப்புணா (Carbo hydrates), உப்புணா  (Salts), நீருணா (Water) என்பன.

இவற்றில் முதலுணாப் பொருள் நரம்பையும் தசை நாரையும் மூளையையும் நன்கு வலுவேற்றி வளர்க்கும்.

கொழுப்புணா உடம்பின் கொழுப்பு, கொழுப்பின் றொடர் என்பவற்றை வளர்ப்பது மன்றி உடம்பிற்குச் சூட்டினையும் தரும்.

இனிப்புணா யென்பது கொழுப்புணாவை யொப்ப உடம்பின் கொழுப்பை நன்கு வளர்க்குமாயினும், அதனினும் அஃது உடம்புக்கு வேண்டுஞ் சூட்டினைப் போதுமான வளவு தருவதில் மிகவும் பயன்படா நிற்கின்றது.

உடம்பு நிலை பெறுவதற்கு முதன்மையான கருவிகளாயுள்ள செந்நீரையும் எலும்புகளையும் நன்கு வளர்த்து வலுவேற்றுவது உப்புனாவின் இயல்பு; மேலும் அவ்வுணா உடம்பின் வளர்ச்சிக்கு ஏதுவான சுண்ணம், காந்தமண், உவர்க்காரம், சாம்பருப்பு முதலான மட்பொருட் கூறுகளையும் விளைத்திடுகின்றது.

இனி நீருணாவோவெனின் உடம்பின் செந்நீர்க்கு மிகவும் பயன்பட்டு ஏனை எல்லாப் பண்டங்களிலும் பொருந்தி அவை உடம்பின் கண் செல்லுதற்குப் பெரிதுந் துணை புரிவதாகும்.

நூல்        :               ஏன் புலால் மறுத்தல் வேண்டும்? (1930)

நூலாசிரியர்         :               பண்டிதர் பாலசுந்தரம் பிள்ளை பக்கங்கள் : 16, 17

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்