Monday, August 28, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 808 – 813

(சொல்மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழிமாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

808. புட்பாவதி – மலர் முகத்தம்மையார் (1938)

பேராசிரியர் மயிலை. சிவமுத்து அவர்களுக்கு முன் பிறந்த குழந்தையின் பெயர் புட்பாவதி என்பது. இந்த அம்மையார் இன்று மலர் முகத்தம்மையார் என்று அழைக்கப்படுகிறார். இவர் 1938 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தமிழ் மொழிக்காகச் சிறை சென்றவர்.

தமிழ்நெறிக் காவலர் பேராசிரியர் மயிலை சிவமுத்து நினைவு மலர்

மாணவர் மன்ற வெளியீடு, சென்னை.

809. சலசாட்சி – தாமரைக்கண்ணி (1938)

சலசாட்சி என்பவர் தமிழறிஞர் வல்லை பாலசுப்பிரமணியம் அவர்களின் துணைவியாராவார். சலசாட்சி என்னும் வடமொழிப் பெயரை நீக்கி, தூய தமிழில் தாமரைக் கண்ணி என்று பாற்றியமைத்தவர் பேராசிரியர் மயிலை சிவமுத்து அவர்களாவார். திருமதி. தாமரைக் கண்ணி அம்மையார் 1938 ஆம் ஆண்டில் சென்னையில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு அறப்போரில் ஈடுபட்டுத் தமிழ்மொழிக்காகச் சிறைசென்றவரின் தெரியவராவார்.

810. உருத்திரம் – பெருஞ்சினம்

பொருள் என்பது யாதோ எனின், அகத்திற்கும் புறத்திற்கும் பொது என்பது. அகத்தைச் சார்ந்துவரும் பொருளெல்லாம் அகப்பொருள் எனப்படும். புறத்தைச் சார்ந்து வரும் பொருளெல்லாம் புறப்பொருள் எனப்படும். இச்சுவை வீரம், அச்சம், இழிவு, வியப்பு, காமம், அவலம், உருத்திரம் (பெருஞ்சினம்), நகை, சாந்தம் என ஒன்பதாகும்.

நூல்      :           அகப்பொருளும் அருளிச்செயலும் (1938), பக்கம் : 5

நூலாசிரியர்       :           பிரபந்த வித்துவான்,

                        திருப்புறம்பயம் இராமசுவாமி நாயுடு

811. காந்தர்வ மணம்- களவொழுக்கம்

உலகின்கண் எல்லாச் சமயத்தாராலும், உலகத்தாராலும் வெறுக்கப்பட்ட களவொழுக்கத்தை எதற்காகக் கற்றல் வேண்டும். இங்குக் கூறும் களவொழுக்கம் (காந்தர்வமணம்) தீமை செய்யாது வீடு பயப்பது ஒன்றாகும்.

நூல் : பக்கம் : 19

812. வெள்ளை வாரணன் – வெண் கோழி (1938)

813. கிருட்டிணசுவாமி – வல்லிக்கண்ணன் (1535)

1930களிலும், 40களின் ஆரம்ப வருடங்களிலும், தேசீய உணர்ச்சியோடு விடுதலை முழக்கம் செய்யும் வேகமான எழுத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் பல தோன்றி, நடந்து, மறைந்து கொண்டிருந்தன. (உ)லோகசக்தி, பாரதசக்தி, என்ற பத்திரிகைகள் அப்படிப்பட்டவை.

அவற்றில் நான் கதைகளும், உணர்ச்சிகரமான கட்டுரைகளும் பாடல்களும் நிறையவே எழுதினேன், பலரது கவனத்தையும் அவை ஈர்த்தன.

அந்தச் சந்தர்ப்பத்தில் தான் எனக்கு ஒரு புனைபெயர் தேவை என உணர்ந்தேன். அதுவரை ரா. சு. கிருட்டிணசுவாமி என்றும், ராசுகி, என்றும்தான் எழுதிக் கொண்டிருந்தேன்.

கவிபாரதியார் தன் நண்பர் குவளையூர் கிருட்டிணமாச்சாரி என்ற பெயரைக் குவளைக் கண்ணன் என மாற்றியிருந்தது என் மனத்தில் பதிந்திருந்தது. அதே போல என் சொந்த ஊரான இராசவல்லிபுரத்தில் உள்ள வல்லியையும் கிருட்டிணசுவாமி என்பதைக் கண்ணன் என மாற்றி அதையும் இணைத்து, வல்லிக்கண்ணன் என்று எனக்கு நானே சூட்டிக் கொண்டேன்.

நூல்      :           வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்

எடுத்து எழுதியவர்        :           ஏந்தல் இளங்கோ

இதழ்    :           தாய் – 22. 6. 1986

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, August 21, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807

 








(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807

(சொல்மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழிமாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

797. ஆசுகவி,

798. மதுரகவி,

799. சித்திரகவி,

800. வித்தாரகவி

ஆசுகவி –           கடும்பாச் செய்யுள்

மதுரகவி           –           இன்பாச் செய்யுள்

சித்திரகவி         –           அரும்பாச் செய்யுள்

வித்தாரகவி       –           பெரும்பாச் செய்யுள்

801. (இ)லாவணியம் – கட்டழகு

நூல் : பக்கம் : 116

802. முன்சப்தம் – எதிரொலி

நெடுந்தூரம் உயர்ந்த மலையில் பெரிய மூங்கில்கள் ஓங்கி வளர்ந்துள்ள சோலையில், தங்களிடம் பொருந்திய தெய்வத் தன்மையால் காண்பார்க்கு அச்சத்தையுண்டு பண்ணும் தெய்வப் பெண்கள் பலர் ஒன்று கூடி, சிறப்புற்று விளங்குகின்ற மலையிடமெல்லாம் எதிரொலி (முன் சப்தம்) உண்டாகும்படியாகப் பாடி ஆடுவர்.

மேற்படி நூல் : பக்கம் : 11

803. இலக்குமி –           திருமகள்

804. இரத்தினங்கள்       –           மணிகள்

805. சடாட்சரம் –           ஆறெழுத்து

806. திலகம்      –           பொட்டு

807. முத்திரை   –           அடையாளம்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, August 14, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  787 – 790 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் 

தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796

(சொல்மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்புகி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளனமொழிமாற்றச் சொல்லும்சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

791.Crane – ஓந்தி

 Crane –           ஓந்தி

792. Share speculators – பங்கு எதிர்பார்போர்

 Share Speculators –          பங்கு எதிர்பார்ப்போர்★

793.Attraction – ஒட்டுநிலை

794.Repulsion – ஒட்டாநிலை

‘நட்பெழுத்து’, ‘பகை எழுத்து’ என வரும் பெயர்கள், சிவஞான யோகிகள் கண்ட குறியீடுகளாகும். இந்நட்பும் பகையும், எழுத்துகளின் ஒட்டு நிலையும் (Attraction) ஒட்டா நிலையும் (Repulsion)மாம் இயல்பேயாதலின், இவ்வியல்பை, ஆசிரியர் தொல்காப்பியனார், எழுத்துகளை எடுத்துக்கூறும் நூன்மரபிலேயே அடக்கிக் கூறியுள்ளார்.

நூல்   :           பொருள் மலர் (1937)

                        (திரு. பண்டிதர் கா. நமச்சிவாய முதலியார் அவர்களது அறுபதாம் ஆண்டு நிறைவிழா வெளியீடு)

கட்டுரை     :           பழைய சூத்திரத்திற்குப் புதிய உரை

கட்டுரையாசிரியர்        :           இ. டி. இராசேசுவரி, எம்.ஏ., எல்.டி.,

795. Potassium – மரஉப்பு

மரஉப்பு : அரிசியில் குறைவாக இருப்பதால் அது பஞ்சு(பஞ்ச்) என்பவர் சொல்லுவது போல் தசைகளை உசுணப்படுத்தாமலும் உறுத்தாமலும் இருக்கிறது. மேலும் மூத்திரப்பை வேலை செய்து தள்ளும் மலபாகம் குறைவாக இருக்கிறது.

நூல்      :           ஆரோக்கியமும் தீர்க்காயுளும் (1937), பக்கம் :32,

நூலாசிரியர்       :           சுவாமி எ. கே. பாண்டுரங்கம்

796.இராமன் – அழகன்

அழகன் – இராமன் என்னும் வடசொல்லின் தனித்தமிழ் மொழி பெயர்ப்பு.

நூல்      :           கதிர்காமப் பிள்ளைத்தமிழ் (1937), பக்கம் – 101

நூலாசிரியர்       :           சிவங். கருணாலய பாண்டியப் புலவர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, August 7, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 787 – 790

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  776 – 786 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 787- 790

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

787. Loudspeaker – ஒலிபெருக்குங் கருவி

திரு. பெ. இராம. இராம. சித. சிதம்பரம் செட்டியாரவர்கள் திருப்பணியாளர்கள் சார்பாகவும் சமாசக் காரியதரிசி சமாசத்தின் சார்பாகவும் தலைவர், சொற்பொழிவாளர் முதலிய அனைவருக்கும் நன்றி கூறினார்கள். தலைவர் அனைவர்க்கும் நன்றியும் வாழ்த்தும் கூறி முடிப்புரை பகர்ந்தார். இம் மகாநாட்டில் ஒலி பெருக்குங் கருவி (Loudspeaker) சொற்பொழிவுகளை அனைவரும் அமைதியாக நெடுந் தூரத்திலிருந்தே கேட்கும்படிச் செய்தது.

இதழ் :           சித்தாந்தம் (1937) மலர் 10, இதழ் 7

சொல்லாக்கம்      :           இதழாசிரியர்

788. அங்கி – மெய்யுறை

மெய்யுறை – சட்டை. அங்கி யென்னும் வடமொழி வழக்குச் சொல்லினுறுப்புப் பொருளுமிது.

நூல் : கதிரகாமப் பிள்ளைத்தமிழ் (1937) பக்கம் – 90

789. Block – நிழற்கிழி

நூல்   :           கதிரகாமப் பிள்ளைத்தமிழ் (1937), பக்கம் : 25

நூலாசிரியர்         :           சிவங். கருணாலய பாண்டியப் புலவர்

790. Lorry – பாரத்தமியங்கி

முன்னைப் பழம்பொருட் முன்னைப் பழம் பொருளை இப்பழைய முறைகளில் பழுதின்றிப் பணியாற்றியதன்றி அவனே பின்னைப் புதுமைக்குப் பேர்த்துமப் பெற்றியனாகத் திகழ்வதை உணர்ந்தே நூதன் வழிகளைப் பின்பற்றி யிருப்பதும் போற்றத் தகுந்ததே. பாரத்தமியங்கி (Lory) கொண்டு வெகு விரைவில் பாரப் பொருள் பெயர்த்தும், ஓந்தி கொண்டு பாரம் உயர்த்தியும், சாந்தாலை கொண்டு சாந்தரைத்து நற்சாந்துப் பட்டியார் எனவன்றி எளிய சாந்துபட்டியாராகியும் நீண்ட நாட்களில் நடைபெறும் வேலைகளைச் சின்னாளில் வெகு எளிதில் நயம்பட முடித்திருக்கும் நன்மை நயக்கத் தகுந்ததே.

நூல்   :           திருக்கொள்ளபூதூர்

                        திருப்பணிச் செல்வர் வாழ்த்து மஞ்சரி (1937), பக். :3

திரட்டியவர்           :           சாமி. வேலாயுதம்பிள்ளை, பி.ஏ., எல்.டி.,

                        (கவிஞர் சுரதா அவர்ளின் தலைமை ஆசிரியர்) உரத்த நாடு கழக உயர்நிலைப்பள்ளி(Board High School)  தலைமையாசிரியர்.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்