Thursday, March 31, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1121 – 1141 – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல






(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1107-1120 இன் தொடர்ச்சி)

1121. பண்டைய தட்பியல்

காண்க : தட்பியல்-Climatology

Paleoclimatology

1122. பண்டைய மரவியல்

Paleodendrology

1123. பண்டைய இனவியல்

Paleethnology / Paleoethnology

1124. பண்டைய உயிரியல்

Palaeontology

1125. பண்டைய உயிர்ப் படிமவியல்

Phytopaleontology

1126. பண்டைய  நீர் வள இயல்

Paleolimnology தொல் ஏரியியல், தொல் நீர்நிலையியல் என இருவகையாகக் குறிக்கப் படுகின்றது. ஏரி என்று குறிப்பதைவிடப் பொதுவாக நீர்நிலை என்பது பொருத்தமாக இருக்கும். Pale   என்பதைத் தொல் என்பதை விடப் பண்டைய எனலாம். (pale என்றால் பழைய என்று பொருள்.) எனவே,  பண்டைய  நீர் வள இயல்  – Paleolimnology.

Paleolimnology

1127. பண்டைய காந்தவியல்

Paleomagnetics

1128. பண்டைய சிற்றுயிரிப் படிமவியல்

Micropaleontology

1129. பண்டைய  வளைசலியல்                       

Paleo Ecology

1130. பண்டைய தாவரவியல்

Paleobotany

1131. பண்டைய நீரியல் 

Paleohydrology

1132. பண்டைய நீரோட்டவியல்

Paleofluminology

1133. பண்டைய பறவையியல் 

Paleoornithology/ Paleornithology

1134. பண்டைய பாசியியல்

Paleoalgology

1135. பண்டைய புயலியல்

Paleotempestology

1136. பண்டைய புவி வடிவியல்

Paleogeomorphology

1137. பண்டைய புவியியல்

Paleogeology

1138. பண்டைய பூச்சியியல்

Paleoentomology

1139. பண்டைய பொருளியல்

Paleology

1140. பண்டைய மண்ணியல்

Paleopedology

1141. பண்டைய மனிதஇயல் 

 

Paleoanthropology

(தொடரும்) 

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Monday, March 14, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1107-1120 – இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1081-1106 இன் தொடர்ச்சி)

1107. படிகவியல் 

Crystallography / Crystallology / Crystallogy / Leptology(1)– படிக அமைப்பாய்வியல், படிக அமைப்பியல், படிக இயல், படிகவியல், படிகவுருவியல், பளிங்கியல், பளிங்குவரைபியல், படிக விளக்க ஆராய்ச்சித்துறை எனப் பலவாறாகக் கூறப் படுகின்றன. நாம் சுருக்கமாக உள்ள

படிகவியல் – Crystallography / Crystallology /Crystallogy/ Leptology(1)

என்பதையே பயன்படுத்துவோம்.

Crystallography, Crystallology / Leptology(1) )/ Promorphology

1108. படிமலர்ச்சி அறவியல்

Evolutionary ethics

1109. படிமலர்ச்சி ஒட்பவியல்

Evolutionary epistemology

1110 படிமையியல்

பண்பாட்டுப் படிமையியல் என்பதன் சுருக்கமாகப் படிமையியல் எனப்படுகிறது.

Imagology

1111. படியாக்கவியல்

clone என்றால் இணையான ஒன்றை ஆக்குதல். எனவே, இணையான படியை உருவாக்குவதால் படியாக்கம் என்கின்றனர்.

Clonology

1112. படைப் புவியியல்

Military geology

1113. படைப் பொறியியல்

Military Engineering

1114. பட்டறிவியல்

heuristic என்னும் சொல் உணர்ந்து அறிவதைக் குறிக்கிறது. அஃதாவது துன்பப் பட்டு, இன்னல்பட்டு, அல்லல் பட்டு  உணர்ந்து அறியும் பட்டறிவைக் குறிக்கிறது.

Heuristics

1115. பணிநெறி யியல்

இதுவே மனிதக் காரணிகள் இயல்(Human-factors engineering) என்றும் கூறப்படுகிறது.

பணிச்சூழியல், பணிச்சூழலியல், பணிச்சூழ் இயல், பணித் திறனியல், வினை செயலியல், வேலைச் சூழலியல், வேலைச் சூழியல் எனப் பலவாறாகக் குறிக்கின்றனர். ஓர் அகராதியில் பணி(ச் சூழலியல்) என்பது பண(ச் சூழலியல்)எனத் தவறாகத் தட்டச்சிடப்பட்டு அச் சொல், பிறரால் மேற்கொள்ளப் பட்டுள்ளது. அஃது எழுத்துப் பிழை என்பதறிக.

பணிச்சூழியல் என்பது பணி புரிபவர்களுக்கு ஏற்றவாறு வேலை, துணைக்கருவி, பணியிடம் போன்றவற்றை வடிவமைக்கும் அறிவியல் ஆகும்.

Ergo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் வேலை.

-nomics என்பது முறைமை, ஒழுங்கு, நெறி முதலியவற்றைக் குறிக்கும் பின்னொட்டுச்சொல்.

எனவே, மேற்குறித்த யாவும் சரிதான். என்றாலும் தரப்படுத்தினால்தான் குழப்பம் வராமல் இருக்கும்.  எனவே பணிநெறி தொடர்பான இயலைப் பணிநெறியியல் – Ergonomics எனலாம்.

Ergonomics

1116. பண்டுவ இயல்

Thereology

1117. பண்டுவ நீரியல்

Crenology

1118. பண்டுவக் காலவியல்

Chronooncology(2)

1119. பண்டைய

Palae- என்பதைத்  தொல், பழைய, பண்டைய என மூவகையாகப் பயன்படுத்து கின்றனர். Ancient, Old என்பனவற்றையும் தொல், பழைய, பண்டைய என்றெல்லாம் மாறி மாறிப் பயன்படுத்துகின்றனர்.

Ancient – தொல், Old – பழைய, Palae –  பண்டைய என வரையறுத்துக் கொள்ளலாம். எனவே,

பண்டைய – Palae எனலாம்.

Palae

 

1120. பண்டைய படிமவியல்

 

Paleontology / Palaeontology  தொல்லுயிரியல், பழவூற்றியல், தொல் உயிரியல், தொல்லுயி ராய்வியல், புதைபடிவ ஆய்வியல், புதைபடிவ ஆய்வு நூல், கற்சுவட்டியல், புதைப் படிமவியல், பழமை யிருப்பியல், தொல்லுயிர் ஆய்வியல், தொல் இனவியல், புதைப்படிவு. ஆய்வியல் எனப் பலவாறாகச் சொல்லப் படுகின்றன. Palaeபண்டைய என்னும் சொல்லேற்பு அடிப்படையில்

பண்டைய படிமவியல் – Paleontology / Palaeontology எனலாம்.

Pale என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்  பண்டைய; on என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உயிரி எனப் பொருள்.

பண்டைய உயிரியல் – Palaebiology

பண்டைய உயிரிகளைப் புதை படிவம் அல்லது படிமம் மூலமே பெரும்பாலும் ஆராய்வதால் பண்டைய படிமவியல் Paleontology / palaeontology என்பதுடன் இதை இணைத்துள்ளோம்.

Palaenotology / Paleontology / Palaebiology

(தொடரும்) 

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Sunday, March 13, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1081-1106 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1062 – 1080 இன் தொடர்ச்சி)

 

1081. நோய்மியற்ற விலங்கியல்

Gnotobiology

1082.நோய்வகை யியல்

nósos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் நோய். இங்கே நோய்வகைகைள ஆராய்வதைக் குறிக்கிறது.

Nosology

1083 நோவா கதையியல்

ஆபிரகாமிய சமயங்களின் (Abrahamic religions) நம்பிக்கையின்படி, நோவா (Noah) என்பவர் ஊழிவெள்ளம் வருவதற்கு முன் இருந்த பத்தாவதும் இறுதிப் பெருந் தந்தையரும் ஆவார். நோவா என்னும் பெயருக்கு எபிரேயத்தில் ‘ஆறுதல்’ என்பது பொருள். (விக்கிபீடியா)

நோவாவின் அறுநூறாம் அகவையில், இவ்வுலகம் சீர்கெட்டிருந்ததால் கடவுள் இவரைத்தவிர மற்றவர்களை ஊழி வெள்ளத்தால் அழிக்க முடிவு செய்து, நோவாவை ஒரு பேழை செய்யப் பணித்தார். அப்பேழையின் வழியாகக் கடவுள் நோவாவைக் காப்பாற்றினார். வெள்ளப் பெருக்குக்குப் பின்னர் நோவா முந்நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்தார் என்பது கதை. அஃதாவது,  நோவா மொத்தம் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் வாழ்ந்தபின் இறந்தார் என விவிலியம் கூறுகின்றது. இது கற்பனைக் கதை என்றால் சமயவாதிகள் சினம் கொள்வர். முதலில் பேழை வடிவிலான கப்பல் பற்றியது என்னும் பொருளில் பேழைக்கப்பலியல் எனக் குறித்திருந்தேன். எனினும் நோவாபற்றிய கதை ஆராய்ச்சி என்பதால் நோவா(வின்) கதையியல் என்று குறித்துள்ளேன்.

Arkeology

1084.நோவியல்

Algology (1)

1085.  பகவு இயற்பியல்

Quantum physics

1086. பகவு ஒலியியல்

Quantum acoustics

1087. பகவு ஒளியியல்

Quantum optics

1088. பகவு சாரா விசையியல்           

Nonquantum mechanic

1089. பகவு நிற இயங்கியல்

Quantum chromodynamics

1090. பகவு நீர்ம இயங்கியல்

Quantum hydrodynamics

1091. பகவு மின்னணுவியல்

Quantum electronics

1092. பகவு மின்னியங்கியல்

Quantum electrodynamics

1093. பகவு விசையியல்    

Quantum Mechanics

1094. பகவுக் கனிமவியல் 

Quantum Mineralogy

1095. பகவுப் புள்ளியியல்

Quantum Statistics

1096. பகுதிவாரி நேரியல் திணையியல்

Piecewise linear topology

1097. பகுப்பாய்வு உளவியல்

Analytic psychology

1098. பகுப்பாய்வு விசையியல்

Analytical mechanics

1099. பகுமுறைத் தொற்றியல்

Analytical epidemiology

1100. பங்கேற்பு ஆராய்ச்சி வயணஇயல்(ப.ஆ.வ.)

Participatory research methodology (PRM)

1101. பசுமை அரசியல்

Green Politics

1102. பசுமைப் பொருளியல்

Green Economics

1103. பஞ்சுயிரியியல்

Spongiology

1104. பட எழுத்தியல்

Hieroglyphology

1105. படிக இயங்கியல்

Crystal Dynamics

1106. படிக ஒளியியல்

Crystal Optics

(தொடரும்) 

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000

Saturday, March 12, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்: 1062 – 1080: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்  1044 – 1061  இன் தொடர்ச்சி)

1062. நேர்நிலை  ஒப்பமைவியல்

Simplical homology

1063. நேர்ம இனமேம்பாட்டியல்

Positive Eugenics

1064. நொதி நுட்பியல்

Enzyme technology /  Fermentation technology

1065. நொதிப் பொறியியல்

Enzyme Engineering

1066. நொதிவினையியல்

Enzyme kinetics

1067. நொதி யியல்

நொதித்தலியல், நொதிப்பியல், நொதிப்பியியல்; நொதியியல், நொதியச் சக்தியியல், நுரைக்கச்செய்தல் சாசுத்திரம், ஊக்கிப்புரதவியல் எனப் பலவாறாகக் கூறப்படுகின்றன. சுருக்கமான நொதியியல் – Zymology / Enzymology என்பது இங்கே ஏற்கப்பட்டுள்ளது. Fernent  என்றால் நொதிப்பு அல்லது புளிப்பம் எனப்பொருள். எனவே, Fermentology என்பதும் நொதியியல் எனப்படுகிறது.

Zymology / Enzymology /  Fermentology

1068. நோயறி புள்ளியியல்           

காண்க: நோயறிதலியல்- Diagnostics

Diagnostic statistics

1069. நோயறிதலியல்

diagnosis என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கும் பிரெஞ்சுச் சொல்லிற்கும் நோயியல்பு எனப் பொருள். நோயியல்பை அறியும் இயல் நோயறிதலியல்.

Diagnostics

1070. நோயியல் 

Pathology

1071. நோய்  உடம்பியியல்

Patho Physiology

1072. நோய்க்காரண இயல்

பழங்கிரேக்கத்தில் nosos = நோய், + aitia = காரணம்

Nosetiology

1073. நோய்க் குறியியல்

Symptomology/ Symptomatology

1074. நோய்சார் பொருளியல்

Economics of disease

1075. நோய்த் தொற்றியல்

Disease epidemiology /  Infectiology

1076. நோய்த் தீர்வியல்

ákos என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் தீர்வு/ மருந்து.

Acology

1077. நோய் நீக்கியல்

Aceology 

1078. நோய்மி எதிர்ப்பியல்

Opsonology

1079. நோய்ம மரபியல்

Bacterial genetics

1080. நோய்ம யியல்

பழங்கிரேக்கத்தில் bacteria என்றால் குச்சி எனப் பொருள். குச்சி வடிவத்தில் உள்ள இதனைக் குச்சியம் என்கின்றனர். நுண்ணிய அளவில் உள்ளதால் நுண்மி என்றும் நுண்ணிய உயிரி என்றும் சொல்வோர் உள்ளனர்.

இதற்கிணங்க நுண்மியியல் எனலாம். நோய்மிக்குக் காரணமான இதனை நோய்மம் எனக் குறிப்பிட்டு நோய்ம யியல் என்றும் சொல்லலாம்.

Bacteriology

(தொடரும்

இலக்குவனார்திருவள்ளுவன்,
அறிவியல் வகைமைச் சொற்கள் 3000