Wednesday, August 24, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 396 – 402

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 384-395  தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 396 – 402 

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

396. வித்தியாரம்பம் செய்தல் – பள்ளிக்கூடத்தில் வைத்தல்

கிராமத்தில் தம் குழந்தைகளுக்கு வித்தியாரம்பம் செய்ய விரும்புவோர் பெரும்பாலும் விசயதசமியன்று அவர்களைப் பாடசாலைக்கு அனுப்புவது வழக்கம். வித்தியாரம்பம் செய்தல் என்பதற்குப் பள்ளிக்கூடத்தில் வைத்தல் என்று சொல்வது வழக்கம்.

இதழ்   :           நல்லாசிரியன். செப்டம்பர், 1919 வயது – 15, மாதம் – 4, பக், 98

ஆசிரியர்          :           கா. நமச்சிவாய முதலியார் (1919)

397. EVOLUTION THEORY – இயற்கைத் திரிபு

உலகின்கணுள்ள தோற்ற பேதங்களெல்லாம் ஒன்றின் ஒன்றாகக் காலந்தோறும் பரிணமித் தமையுமென வாதிப்பார் பரிணாம வாதிகள். இந்தப் பரிணாமவாதமே இக்காலத்திலே மேலைத் தேசங்களிலே (Evolution Theory) இயற்கைத் திரிபு என்னும் பெயர் கொண்டு பெரிது பாராட்டப்படுவது.

நூல்      :           பிரபஞ்ச விசாரம் (1919) 4- பரிணாம வாதம், பக்கம் – 31

நூலாசிரியர்      :           யாழ்ப்பாணம் – குகதாசர் – ச. சபாரத்தின முதலியார்

398. விபூதி      —        வெண்பொடி

399. அகததுவசம்        —        மாடக் கொடிகள்

400. திவசம்    —        நாள்

401. குரோசம் —        கூப்பிடுதூரம்

402. சங்கிலி    —        தொடர்

நூல்      :           திருக்கருவைத் தலபுராணம் (1919)

ஆசிரியர்          :           எட்டிசேரி ச. திருமலைவேற் பிள்ளை

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Saturday, August 20, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 384-395

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 371-383 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 384-395

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

384. ஈமம்       —        சுடுகாடு

385. சந்தோசம்          —        உவப்பு

386. குங்குமம் —        செந்தூள்

387. கிருபை   —        தண்ணளி

388. காவி வசுதீரம்    —        துவராடை

389. மந்திரி     —        தேர்ச்சித் துணைவன்

390. இமயமலை         —        பனிவரை

391. இயந்திரம்           —        பொறி

392. விவாகச்சடங்கு   —        மணவினை

393.மந்திரம்   —        மறையுரை

394. வேத்தியல்           —        அரசியல்

395. யாகம்      —        வேள்வி

நூல்      :           சித்தார்தன் (1918)

நூலாசிரியர்      :           அ. மாதவையர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Thursday, August 18, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 371-383

 அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம்: 368-370 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 371-383

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

371. Legal Advice – புத்திமதி

நியாயாதிபதி : பாரிசுடரே, நல்லது நீர் கைதியிருந்த கூட்டிற்குள் போவீர்.

பாரிசுடர் : ஐயா, எனக்குக் கைதியைத் தப்பித்து விடப் புத்திமதி சொல்ல அதிகாரம் கிடையாதா என்று சொல்லிக் கொண்டே கூட்டிற்குள் சென்றார்.

நூல்      :           சிறுமணிச்சுடர் (1920) பக்கங்கள் : 14, 15

நூலாசிரியர்      :           மதுரை எசு.ஏ. சோமசுந்தரம்

372. திலகம் – பொட்டு

திலகம் என்பது திலதம் எனவும் வழங்கும். இது வடசொல். இதனைத் தமிழர் பொட்டு என்பர். இது, ‘பொட்டணியா னுதல் போயினு மென்று பொய்போலிடை’ என மணிவாசகர் கூறலானு மினிது விளங்கும்.

நூல்      :           சீகாளத்திப்புராணம் மூலமும் உரையும் (1920) பாயிரம், பக். – 3

உரையாசிரியர்  :           மகாவித்துவான் காஞ்சிபுரம் இராமாநந்தயோகிகள்

373. கண்யம்   —        மேம்பாடு

374. குதவருத்தம்        —        மூலநோய்

375. அந்தரியாமி         —        உள்ளீடா யிருப்பவன்

376. பாவம்     —        அறன்கடை

377. சம்பத்து   —        செல்வம்

378. தோசம்  —        பீடை

379. சகா          —        துணை

380. தந்திரம்   —        சூழ்ச்சி

381. உபாசனை           —        வழிபாடு

382. கிரகப்பிரவேசம்  —        குடிபுகல்

383. விசித்திரம்           —        கற்பனை

நூல்      :           கலங்காத கண்ட விநாயகர் விண்ணப்பமாலை (1920)

நூலாசிரியர்      :           தேவி கோட்டை சிதம்பரச் செட்டியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, August 16, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 368-370

 அகரமுதல





(தமிழ்ச்சொல்லாக்கம்: 362-367 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 368-370

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

368. Conductor – நடத்திக்கொண்டு போகிறவன்

மின்சாரம் சாதாரண உலர்ந்த காற்றின் வழி சுலபமாகச் செல்வதில்லை, சலத்தின் வழியும் ஈரமான வசுத்துகளின் வழியேயும் இரும்பு முதலான உலோகங்களின் மூலமாயும் சீக்கிரம் செல்லும்.

 வந்துக்களின்’ உடம்பின் வழி அதி சுலபமாய் மின்சாரம் பாயும். கண்ணாடியின் வழியும் உலர்ந்த தரையின் வழியும் செல்லாது. முன் சொன்ன வகை வசுத்துக்களுக்குக் கண்டக்டர்கள் என்று பெயர், (கண்டக்டர் – நடத்திக் கொண்டு போகிறவன்).

+++

 வந்துக்களின்’ – பொருள் தெரியவில்லை.

+++

ஆதலால் மழை பெய்து இடி இடிக்கும் காலத்தில், மரங்கள் மேலும் உன்னதமான வீடுகளின் மேலும், இடி விழுகின்றது.

இதழ்   :           தமிழ்நேசன் (1919) தொகுதி – 2, பகுதி – 2,

கட்டுரை          :           மின்சாரமும் மின்னலும்

கட்டுரையாளர் :           எம்.சி.ஏ. அநந்த பத்மநாபராவ், எம்.ஏ.,எல்.டி.,(சென்னை பிரசிடென்சி கலாசாலை பெளதிக சாத்திர போதகர்)

369. சிலேடை – பல்பொருட் சொற்றொடரணி

சிலேடையென்பது ஃச்லேசா வென்னும் ஆரியமொழியின்றிரிபு இங்ஙணம் வரல் தற்பவம்.

இதனைத் தமிழணி மரபுணர்ந்தார் பல்பொருட் சொற்றொடரணியென்றும் வடநூலார் ஃச்லேசாலங்கார மென்றுங் கூறுவர். சிலேடையென்பதன் பொருள் தழுவுதலுடைய தென்பது.

அஃதாவது உச்சரிப்பில் ஒரு தன்மைத்தா நின்ற சொற்றொடர் ஒன்றற்கு மேற்பட்ட பொருளைத் தழுவுதல்.

நூல்      :           கலைசைச் சிலேடை வெண்பா மூலமும் உரையும் (1920) பக்கம்.1

உரையாசிரியர்  :           சதாவதானம் தெ. கிருட்டிணசாமி பாவலர்

370. Scarlet Fever – செம்பொட்டுச் சுரம்

1870வது வருடம், ஆலிசு இராசகுமாரியார் சரித்திரத்திலும், ஐரோப்பாவின் சரித்திரத்திலும் அதிக முக்கியமானது. இவ்வருச முதலில் (உ)லூயிசு இராசகுமாரரும் அதற்கு மேல் விக்குடோரியா இராசகுமாரியும் சிறு இராசகுமாரனும் செம்பொட்டுச்சுரம் (Scariet Fever என்னும் வியாதியால் வருந்தினார்கள்.

நூல்      :           பன்னிரண்டு உத்தமிகள் கதை (1920) பக்கம். 147

தமிழாக்கம்      :        திவான் பகதூர் வி. கிருட்டிணமாச்சாரியார்.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, August 14, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 362-367

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 355-361 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 362-367

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

362. பரிணாமம்          —        திரிபு

363. கிரியா      —        தொழில்

364. பரிமாணம்          —        அளவு

365. அனுக்கிரகம்        —        அருளுதல்

நூல்      :           நாநா சீவவாதக் கட்டளை (1917)

நூலாசிரியர்      :           சிரீ சேசாத்திரி சிவனார்

குறிப்புரை       :           கோ. வடிவேலு செட்டியார்

((உ)லோகோபகாரி பத்திராசிரியர்)

366. Ticket – பயணச் சீட்டு

பூலோக நரகம் என்பதைப் பலர் பலவாறு கொள்வர். பூலோகத்திலும் நரகம் உண்டோ? என்று சிலர் கருதுவர். அந்நகரம் யாது? அஃது இருப்புப் பாதை ((இ)ரெயில்வே) மூன்றாம் வகுப்பு வண்டித் தொடர். மூன்றாம் வகுப்பு வண்டிகளில் சிறப்பாகத் தென்னிந்திய (இ)ரெயில்வே மூன்றாம் வகுப்பு வண்டிகளில் ஏழைச் சகோதரர்கள் படும் துன்பத்துக்கு அளவு உண்டோ? மூன்றாம் வகுப்புப் பயணச் சீட்டு (டிக்கட்) பெறுவது பெருங் கடினம்.

இதழ்   :           தேச பக்தன் – நாளிதழ், சென்னை 2, 1. 1918

ஆசிரியர்          :           திரு.வி.க.

367. நிர்க்கந்தரூபம் – திருவுருவம்

மேருமந்தர புராணம் மூலமும் உரையும் (1918)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Friday, August 12, 2022

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 355-361

 அகரமுதல







(தமிழ்ச்சொல்லாக்கம்: 346-354 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 355-361

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

355. காவி வசுத்திரம்    —        துவராடை

356. தவசிகளின் ஆசிரமம்      —        நோன்புப்பள்ளி

357. இயந்திரம்           —        பொறி

358. முத்திரை மோதிரம்         —        பொறியாழி

359. விவாகச் சடங்கு  —        மணவினை

360. நட்சத்திரம்           —        விண்மீன்

நூல்      :           சித்தார்த்தன் (1918)

நூலாசிரியர்      :           அ. மாதவையர்

அருஞ் சொல் உரை      :           அ. மாதவையர்

361. சுவதேச கீதங்கள் – நாட்டுப்பாட்டு

1907 – ஏப்பிரல் – தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இந்தியா என்ற வார ஏடு உதயம். அதன் ஆசிரியரானார் பாரதியார். ‘பாலபாரதம்’ என்ற ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தினார்.

1908 – தாம் பாடிய ‘சுவதேச கீதங்கள்’ என்ற பாடல் தொகுதியை வெளியிட்டார்.

1918 – பரலி சு. நெல்லியப்பர் சுதேச கீதங்களை நாட்டுப் பாட்டு என்ற பெயரால் பிரசுரம் செய்தார்.

நூல்      :           பாரதியார் கவிதைகள். செப்டம்பர் – 1993

தொகுப்பாளர்  :           சுரதா கல்லாடன்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்


Wednesday, August 10, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 346-354

 அகரமுதல




(தமிழ்ச்சொல்லாக்கம்: 345 தொடர்ச்சி)

தமிழ்ச்சொல்லாக்கம் 346-354

(சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

346. Tamil Cyclopedia – தமிழ்க் களஞ்சியம்

தமிழ்க்களஞ்சியம் (Tamil cyclopedia) இப்பெயர் கொண்ட நூலொன்று மாத சஞ்சிகையாக வெளிவருகிறது. பகுதி ஒன்று வெளி வந்தது. இதில் தமிழின் உற்பத்தி, தமிழின் தொன்மை, தமிழின் பதப்பொருள், தமிழ்ச்சிறப்பு (தமிழ் உயர்தனிச் செம்மொழி, தமிழ்த் தெய்வ பாஷை, தமிழ் மூலபாஷை) தமிழ்ச் சங்கம், தலைசங்கம் முதலிய விசயங்க ளடங்கியிருக்கின்றன. சஞ்சிகையொன்றுக்கு விலை அணா 8. வேண்டியவர்கள் சென்னை பிரம்பூர் தமிழ் சைக்ளோபீடியா ஆபீசுக்கு எழுதிப் பெற்றுக் கொள்ளலாம்.

இதழ்   :           சித்தாந்தம் (1918 சனவரி) தொகுதி 7, பகுதி-1 பக்கம், 16.

சொல்லாக்கம்  :           பூவை கலியாண சுந்தர முதலியார்

347. Double Pneumonia – அள்ளு மாந்தம்

என் குழந்தைகளில் 4 பிராயமுள்ள குழந்தை ஒன்றுக்கு அள்ளு மாந்தம் (Double Pneumonia) என்னும் கொடிய வியாதியால் வருந்தும் போது அவரது தேவி சித்த பூரணச் சந்திரோதயத்தின் பெருமையையும், அது அக்கொடிய வியாதியைக் குணப்படுத்தினதையும் முக்கியமாய்த் தெரிவிக்கப் பிரியப்படுகிறேன். இவரது சித்தவைத்தியத்தின் திறமையை என்னால் சொல்லத் திறமல்ல.

சி. ஆர். ஆதிகேசவலு (நாயுடு),

Shrodtriathar, Monicipal Commissioner

348. Weaver’s Loom – தறிமரம்

தறிமரம் : தறியின் மரம் (தறி = A weaver’s Loom)

நூல்      :           ரிப்பன் ஐந்தாம் வாசகப் புத்தகம் (1918) பக்கம் – 56

நூலாசிரியர்      :           தி. செல்வக் கேசவராய (முதலியா)ர். எம்.ஏ., (சென்னை பச்சையப்பன் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர்)

349. Company – கூட்டம்

இங்க்லண்டிலிருந்து சில இங்க்லிசுகாரர் வருத்தகம் செய்யும்படி ஒரு கூட்டமாக (கம்பெனியாக) இந்தியாவுக்கு முதலில் வந்தனர். தங்கள் வருத்தகச் சரக்குகளைப் பத்திரப்படுத்தி வைக்கும் பொருட்டு அவர்கள் பொம்பாய், கள்ளிக்கோட்டை, சென்னை, கல்கத்தா முதலான பட்டினங்களில் கொஞ்சங் கொஞ்சம் இடம் சொந்தமாகச் சம்பாதித்து, அங்கங்கே சரக்கறைகளைக் கொஞ்சம் இடம் சொந்தமாகச் சம்பாதித்து, அங்கங்கே சரக்கறைகளைக் கட்டிக் கொண்டார்கள்,

மேற்படி நூல் : ரிப்பன் ஐந்தாம் வாசகப் புத்தகம் (1918) பக்கம் -2

350. அனுசரன் —        ஏவற்காரன்

351. சந்திரசாலை        —        நிலா முற்றம்

352. சாரம்       —        பொருள், உள்ளீடு

353. பிரதாபம் —        மேன்மை

354. விமானம் —        ஏழடுக்கு வீடு

                        நூல்      :           மேகதூதக் காரிகை (1918) (காளிதாச மகாகவி)

மொழி பெயர்த்தியற்றியவர்     :           சுன்னாகம் அ. குமாரசுவாமி(ப் பிள்ளை)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்