Monday, October 30, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 904-910 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 911-915

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Direct Cut – நேர் வெட்டு
    ஒரு சாட்டு மாறி அடுத்த சாட்டு வருவதற்கு இங்கிலிசில் (Direct Cut) என்கிறார்கள். இதற்கு நேர் வெட்டு முறை என்று சொல்லலாம். இந்த நேர் வெட்டு முறையினால் திரை(சினிமா)க் கதையில் வேகம் காட்ட முடியும்.
    சித்ரவாணி
    இதழ் : சினிமா உலகம் (16.11. 1941)
    ⁠படம் 7; காட்சி 32 பக்கம் 12
  2. Railway Station – நீராவிப் பொறித்தொடர் நிலையம்
    திருநாங்கூர் – இவ்வூர் தஞ்சாவூர் சில்லா சீகாழித் தாலுகாவில் உள்ளது. தென்னிந்திய இருப்புப் பாதையில் சீகாழி என்கிற நீராவிப் பொறித் தொடர் நிலையத்தில் இறங்கிச் சாலை மார்க்கமாய்த் தென்கிழக்கே ஏழெட்டுக் கற்கள் சென்றால் இத்தலத்தை அடையலாம். வைத்தீசுவரன் கோவில் எனும் நிலையத்தில் இறங்கிக் கிழக்கே ஐந்தாறு கற்கள் சென்றாலும், இதனை அடையலாகும். இவ்வூர் நாங்கை எனவும் மருவி வழங்கும்.
    இதழ் : செந்தமிழ் (1941), தொகுதி – 38, பகுதி – 3
    கட்டுரையாளர் : ச. சிரீநிவாசையங்கார்
  3. பிருகதீசுரர் – பெருவுடையார்
    பராந்தகனது கொட்பேரனான இராசகேசரி முதலாம் இராசராசன் என்பவன், சிறு விளக்கில் ஏற்றிய பெரும் பந்தம் போல விளங்கினான். இவனே, பாண்டிய சேர ஈழ நாடுகளை வென்று அவற்றைச் சோழ நாட்டின் பிரிவுகளாக்கிச் சோழ சாம்ராச்சியத்தை அமைத்தவன் இவன் சிவபக்தி மிக்கவன் திருவாபரணம் முதலியவற்றைப் பெருவாரியாகக் கோயில்களுக்கு வழங்கினவன். தஞ்சை மாநகர் இவன் காலத்தில் அரசர் இருப்பாகப் பொலிவு பெற்று விளங்கியது. அந்நகரில் இவன் எடுப்பித்த இராசராசேசுவரம் என்னும் பிருகதீசுரர் (பெருவுடையார்) கோயிலொன்றே இவன் பெருமையை இன்றுவரை உலகில் விளக்கியுள்ளது.
    நூல் : மூன்றாம் குலோத்துங்க சோழன்(1941), பக்கம் : 14
    நூலாசிரியர் : வி. இரா. இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஏ.
    ⁠(வரலாற்றுத் துறைப் பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கழகம்)
  4. புத்தனேரி இரா. சுப்பிரமணியன் – முருகு
    திருமணம்
    ஆசிரியப்பா
    மணத்தலென் சொல்லே கூடுதற் பொருளிலும்,
    நறுமணங் கமழ்தல் நற்பொருள் தனிலும்,
    மங்கல மொழியாய் வருவது காண்க.
    இதழ் : திருமண அழைப்பிதழ் (1942), பக்கம் 1
    ஆக்கியோன் : புத்தனேரி இரா. சுப்பிரமணியன்
    ⁠தமிழ் நற் பெருந் தொண்டன்
    ⁠(மணநாள் தொடர்பாய் மணமகன் முருகு ஆக்கியது)
  5. Lord – பெருந்தரத்தார்
    பதினெட்டாம் நூற்றாண்டில் ஒர் ஆங்கிலப் புலமையாளர் சீன நாட்டிற் சென்று அம்மாநாட்டு மக்களுடன் கூட்டுறவுற்று அவர் மொழிக்கண் சிறந்து விளங்கிய ஒர் அரும்பெரும் பொருணூலைத் தம்மொழியிற் பெயர்த்தமைத்துப் போற்றிய வரலாற்றை அவர் எழுத்தானே, ஈண்டு எடுத்துக்காட்டித் தமிழகத்தார் யாவரும் அறிந்து அப்பெரும் பொருணூற் பொருள்கள் நம் தமிழ் மொழிக் கண்ணும் பொதிந்து நிலையுறுதல் நன்றும் போற்றற் பாலதாமெனக் காட்டுதற்கு இக்கட்டுரையை வரைகின்றேன். அறிஞர்கள் ஏற்றுக் கொள்வார்களாக. அவ்வாங்கில வறிஞர் தம் பெயர் விரும்பாது தந்நாட்டகத்துக் கலை நலஞ் சாலச் சிறந்தோங்க உழைத்த பெருந்தரத்தார் (Lord) ஒருவர்க்கு எழுதிவிடுத்த முடங்கல் ஒன்று ஏறத்தாழ இருநூற்றாண்டுகளாக நிலவி வருகின்றது.
    நூல் : கோபாலகிருட்டிண மாச்சாரியார்
    ⁠அறுபதாண்டு நிறைவு விழா மாலை (1942)
    கட்டுரையாளர் : தி. பொ. பழனியப்ப பிள்ளை, பக்கம் : 381

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, October 23, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 904-910

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 904- 910


(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. ச(ஜ)லசந்தி – நீரிணை
    கொத்தரில் ஒருபாலார் பாசுபரசு நீரிணை வழியால் நுழைந்து கிரேக்க நாட்டிற் புகுந்து ஏதென்சு நகரைத் தாக்கினர். அவர்கள் நகரத்து நூல் நிலையத்திற்குத் தீயிடவெண்ணினராக, கொத்தர் தலைவன் கற்றிலனாயினும், நூல்களை எரிக்கப்படாதெனத் தடுத்தான்.
    இதழ் : செந்தமிழ் – சூன், சூலை 1940, தொகுதி : 37
    கட்டுரை : யவனர் வரலாறு – பக்கங்கள் -368, 369
    கட்டுரையாளர் : த. இராமநாதபிள்ளை, பி.ஏ., (இலண்டன்)
  2. விலாசம் – விளிநிலை
    எழுதுபவர் விளிநிலை (விலாசம்) கடிதத்தின் தலைப்பில் இடது புறத்தில் அமைதல் வேண்டும். முழு விளி நிலையையும் எழுதினால்தான் எழுதியவர் இன்னாரென்று எளிதில் அறிதற்கும், பதிலைக் கடிதம் எழுதியவர்க்கே தடையின்றிச் சேரச் செய்வதற்கும் இயலும்.
    நூல் : தமிழ்க் கற்பிக்கும் முறை (1940), பக்கம் – 42
    நூலாசிரியர் : சி. இலக்குவனார்
    ⁠(தமிழாசிரியர், கழக உயர்தரக் கல்விக்கூடம், நன்னிலம்)
  3. கும்பாபிசேகம் – குடமுழுக்கு
    தமிழ்நாட்டில் வட ஆர்க்காடு மாவட்டம் அரக்கோண (அரண் குன்ற)த்திற்கு அடுத்த மோசூர் என்னும் ஊரிலுள்ள தமிழராகிய அன்பர்கள், கருங்கல்லால் புதியதாக ஒரு கோயில் கட்டி முடித்துப் பிள்ளையார் படிவத்தினை அதில் அமைத்து வெகுதானிய ஆண்டு வைகாசித் திங்கள் 27ஆம் (1938 ஜூன் 9ஆம் நாளாகிய வியாழக்கிழமை குடமுழுக்கு (கும்பாபிசேகம்) நடாத்தி வைததனா்.
    நூல் : மோசூர் ஆலடிப் பிள்ளையர் புகழ்ப் பத்து, பக்கம் : 1
    மூலமும் உரையும் (1940)
    நூலாசிரியர் : மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர்.,
    ⁠(பச்சையப்பன் கல்லூரி)
  4. Conversation – சொல்லாடல்
    சொல்லாடல் (Conversation)முறையில் கட்டுரைகளை எழுதச் செய்யின், ஒரு பொருளைப் பற்றித் தாமே வினவி அதன் முழு வரலாற்றையும் அறியும் திறன் பெறுவதோடு ஆராய்ச்சியறிவும் நாடகம் எழுதும் வன்மையும் பெற்றவர்களாவார்கள்.
    நூல் : தமிழ்க் கற்பிக்கும் முறை (1940), பக்கம் : 41
    நூலாசிரியர் : வித்துவான் சி. இலக்குவனார்
    (தமிழாசிரியர், கழக உயர்தரக் கல்விக்கூடம், நன்னிலம்)
  5. Badge – அடையாளப் பதக்கம்
    ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு தலைவர் உண்டு. அத்தலைவர், அவ்வப் பிரிவினருக்கு உரிய பாகங்களைக் கற்பிப்பர்; அவற்றில் பரீட்சையும் வைப்பர். அதில் தேறுபவர்களுக்கு அப்பிரிவின் அடையாளப் பதக்கம் (Badge) கொடுப்பர்.
    நூல் : மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் – 81
    நூலாசிரியர் : வித்துவான் பாலூர் து. கண்ணப்ப முதலியார்
    ⁠(தமிழ் ஆசிரியர், முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை)
  6. ஒரு மாதப் பத்திரிக்கை – ஒரு மதிமுகத்தாள்
    தாய்மொழி தழைக!⁠ தாயகம் வாழ்க!!
    தமிழணங்கு – ஒரு மதிமுகத்தாள்
    அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
    எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே
    மலர் – 1 இதழ் – 9 (1941)
    ஆசிரியர் : ஆ.மா. சிவஞானம், தமிழரண், ஆம்பூர்
    ⁠(பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்)

  1. Fade – மறைந்து தெளிதல்
    (Fade) அல்லது மறைந்து தெளிதல் என்ற வழிகதைப் போக்கில் இன்னும் அதிக வித்தியாசத்தைக் குறிப்பதற்கு அனுசரிக்கப்படுகிறது.
    சித்திரவாணி
    இதழ் : சினிமா உலகம் (16 .11 .1941)
    ⁠படம் : 7; காட்சி ; 32; பக்கம் , 13

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Wednesday, October 18, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 881-891 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 892-903

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட  மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

892. Cricket        –            துடுப்பு ஆட்டம்

893. Hockey      –            வளைகழி ஆட்டம்

894. Rugby          –            பிடி பந்தாட்டம்

895. Basket Bal l-          கூடைப் பந்தாட்டம்

கேம்சு என்ற பகுதியில் துடுப்பு ஆட்டமும் (Cricket) வளைகழி ஆட்டமும் (Hockey), உதை பந்தாட்டமும் (Foot Ball), பிடி பந்தாட்டமும் (Rugby), சல்லடைப் பந்தாட்டமும் (Tennis), கூடைப் பந்தாட்டமும் (Basket Ball) இவை போல்வன பிறவும் அடங்கும்.

நூல்        :               மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் – 16

நூலாசிரியர்         :               வித்துவான், பாலூர், து. கண்ணப்ப முதலியார்

                :               (தமிழ் ஆசிரியர் முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை)

896. Suit case – தோல் பெட்டி

என் தந்தையாரும் யானும் துணிக்கடைக்குச் சென்று, எனக்கு வேண்டிய துணிகளை எடுத்துக் கொண்டோம்; தற்காலப் பேரறிஞர்கள் எழுதிய ஆங்கிலப் புத்தகங்களையும், தமிழ்ப் புத்தகங்களையும் வாங்கிக் கொண்டோம்; எனக்கு ஒரு தோல் பெட்டி (SuitCase) இல்லாதது ஒரு குறையாய் இருந்ததால், அதையும் வாங்கிக் கொண்டேன்.

நூல்        :               மாணவர் தமிழ்க் கட்டுரை (1940), பக்கம் – 160

நூலாசிரியர்         :               வித்துவான் பாலூர், து. கண்ணப்ப முதலியர்

                                ⁠(தமிழ் ஆசிரியர். முத்தியாலுப் பேட்டை உயர் கலாசாலை, சென்னை)

897.இன்தமிழ்

தமிழ்மொழி இனிமையானது என்று எல்லாரும் சொல்லுகிறார்கள். அதன் இனிமையை அறிந்தவர்கள் அதனை இன்தமிழ் என்று சொல்லக் கேட்கிறோம்.

நூல்        :               சங்கநூற் கட்டுரைகள் (1946), பக்கம் : 1

நூலாசிரியர்         :               தி. சு. பாலசுந்தரன் (இளவழகனார்)

                                ⁠ (மறைமலையடிகள் மாணவர்)

898. அபிவியக்தமாக        –              வெளிப்படையாக

899. தானம்           –              இடுதல்

900. விநயம்         –              அடக்கம்

901. இலக்ஷணம் –              குறி

902. இலக்ஷியம்  –              முறிக்கப்படுவது

903. விவகாரம்    –              உலக வழக்கு

நூல்        :               விவேக சிந்தாமணி வேதாந்த பரிச்சேதம் (1940)

                                ⁠(இரண்டாம் பதிப்பு)

விளக்கம்             :               தஞ்சை மாநகரம் வி. பிரம்மாநந்த சுவாமிகள்

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, October 9, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 881-891

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 865-880 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 881-891

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு.
கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட  மொழிமாற்றச் சொற்களைத் 

(தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார்.

238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

881.பாதம்             –              கால்

882. அக்னி கார்யம்            –              எரி ஓம்பல்

883. கங்கண விஸர்ஜன்    –              காப்பு களைதல்

884. ஸ்தம்ப ப்ரதிஷ்டை  –              பந்தல் கால்

885. ச(ஸ)ந்யாசம்     –              துறவு

886. த்ரிபதார்த்தம்              –              முப்பொருள்

887. விவாக(ஹ) மகோ(ஹோ)த்ச(ஸ)வம்        –              திருமணம்

888. ஸ்திரீ             –              மாது

889. கனகாம்பரண்            –              பொன்நகை

நூல்        :               மோசூர் ஆலடிப் பிள்ளையார் புகழ்ப் பத்து – (1940)

                                மூலமும் உரையும்

நூலாசிரியர்         :               மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர். ஏ.ஜெ.

                                பச்சையப்பன் கல்லூரி

890. Jury – மெய்விளம்பி

891. itinerant Judges – சுற்றிவரும் நீதிபதிகள்

நீதி பரிபாலனத்தில் இரண்டாம் என்றி இரண்டு முக்கியமான திட்டங்களைப் புகுத்தினார். 1. Jury எனப்படும் மெய்விளம்பிகளால் விசாரணை, 2. சுற்றிவரும் நீதிபதிகள். இவை அவரது பாட்டனாரான முதல் என்றியின் இரண்டு சீர்திருத்தங்களை அடிப்படைகளாகக் கொண்டவை.

நூல்        :               பிரிட்டன் வரலாறு (1066-1485) (1940) பக்கம் – 33

தமிழில் பெயர்ப்பு            :               ம. சண்முக சுந்தரம், எம்.ஏ.,எல்.டி.,

                                ⁠ (சென்னைப் பச்சையப்பன் கலாசாலைத்

தலைமையாசிரியர்)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, October 2, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம்: 865-880

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்: 851-864 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 865-880

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. 

கி.பி.  1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. வருசம் – மரம்
  2. பூரண சந்திரன் – நிறை நிலா
  3. பிரயத்தநம் – முயற்சி
  4. நட்சத்திரம் – விண்மீன்கள்
  5. சமுத்திரம் – கடல்
  6. பஞ்சேந்திரம் – ஐம்பொறி
  7. ஆனந்தபாசுயம் – உவகை நீர்
  8. சியேசுட்ட புத்திரன் – மூத்தமகன்
  9. பௌத்திரன் – பேரன் (பெயரன் – பாட்டன் பெயரை உடையவன்)
  10. தேகசுரம் – மெய் வருத்தம்
  11. அட்சரப்பியாசம் – சுவடி தூக்குதல்
  12. (இ)ரக்தம் – செந்நீர்
  13. நயனம் – கண்
  14. ஈசுர சங்கல்பம் – திருவருட் குறிப்பு
  15. சிரசு – தலை
  16. புத்திரபாக்கியம், புத்திரோற்பத்தி – மகப்பேறு

நூல்        :               மோசூர் ஆலடிப் பிள்ளையார் புகழ்ப் பத்து – (1940)

                                மூலமும் உரையும்

நூலாசிரியர்         :               மோசூர் கந்தசாமி முதலியார், பி.ஏ., எம்.ஆர். ஏ.செ..

                                பச்சையப்பன் கல்லூரி

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்