Monday, July 31, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 776 – 785

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  770- 775 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில்

தமிழ்ச்சொல்லாக்கம்  776 – 785

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

776. சப்தாலங்காரம்          –              சொல்லணி

777. அர்த்தாலங்காரம்      –              பொருளணி

778. உபமாலங்காரம்        –              உவமையணி

779. திருட்டாந்த அலங்காரம்         –              எடுத்துக்காட்டுவமையணி

780. அபூத உவமை             –              இல்பொருளுவமையணி

781. ரூபக அலங்காரம்      –              உருவக அணி

782. சந்தேக அலங்காரம்  –              ஐயவணி

783. வ்யதிரேக அலங்காரம்            –              வேற்றுமையணி

784. பிரதீப அலங்காரம்   –              எதிர்நிலையணி

785. பரிசுர அலங்காரம்    –              கருத்துடை அடைமொழியணி

சங்கர அலங்காரம்          –              கலவையணி

நூல்        :               சிற்றிலக்கண விளக்கம் (1936)

பக்கங்கள்            :               200, 201, 202, 203, 204, 205, 206

நூலாசிரியர்         :               கா. நமச்சிவாய முதலியார்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, July 24, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 770- 775

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -767 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  770- 775

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

770. பாசியம்       :               விருத்தியுரை

771. எமதர்மன்    :               அறக்கடவுள்

நூல்        :               வைணவ சமய வினாவிடை (1936), பக்கங்கள் 11, 13.

நூலாசிரியர்         :               காரைக்கால் நா. சிரீரீ காந்த ராமாநுசதாசர்

772. கருத்தா – இயற்றுவோன்

உபாதானத்தைக் கோசரிக்கும் அபரோட்சஞானம், செய்யும் இச்சை, முயற்சி இவற்றையுடைமை கருத்தா இயற்றுவோன்)த்தன்மையாம்.

நூல்        :               தருக்க சங்கிரகமும் தருக்க சங்கிரக தீபிகையும் (1936)

மொழி பெயர்ப்பு              :               சி. சுப்பையா சுவாமி

773. ஆதாரம் – பற்றுக்கோடு

அங்ஙனமாயினும் காலம் எல்லாவற்றிற்கும் பற்றுக்கோடு (ஆதாரம்) ஆகையால் எல்லா இலக்கணங்களுக்கும் ஆண்டு அதிவியாப்தி எனின், அற்றன்று, எல்லாவற்றிற்கும் ஆதாரத்தை யுண்டாக்கும் (காலீசு) சம்பந்தத்தினும் வேறான சம்பந்தத்தால் இலக்கணத்திற்கு ஒப்பியிருப்பதால்.

நூல் ; பக்கம் – 15

774. மூலகன்மம் – முதல் வினை

உயிர்கள் ஆணவத்தில் அழுந்திக் கிடக்குங்கால் பல பேதமான ஏற்றத் தாழ்வுள்ள ஆணவ சம்பந்தமுடையதாக இருந்திருத்தல் வேண்டும். அதனோடு இறைவன் அருள் சம்பந்தமும் உடையதாக இருந்திருக்கிறது. இவ்விருவகை சம்பந்தத்தால் உயிர்கள் அனாதியே பாவ புண்ணிய முடையதாயிருந்திருக்கின்றன. இதுவே மூலகன்மம் (மூலகன்மம் – முதல் வினை).

நூல்        :               சித்தாந்தம் பொன்மொழி (சிற்றுரை (1936) பக்கங்கள் -8, 9

நூலாசிரியர்         :               வித்வான் ம. பெரியசாமிப் பிள்ளை

775. பரிசம் – தொட்டால் அறிதல்

உயிர் என்பது யாது? நான் என்னும் சொல்லால் குறிக்கப்படுவது எதுவோ அதுவே உயிர். எனது உடல் என்பதனால் உடலினின்று வேறானது உயிர். ஓசை, ஒளி, மணம், சுவை, பரிசம் (தொட்டால் அறிதல்) ஆகிய ஐம்புலன்களையும் மனம் புத்தி இவற்றின் உதவியால் அறிகின்றது எதுவோ அதுவே உயிர்.

நூல் : பக்கம் 15

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Tuesday, July 18, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -767

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  756 – 763 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 764 -769

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

764. உசுணமானி – சூடளந்தான்

சூரிய உசுண ஆராய்ச்சிக் கருவியை உசுணமானி என்பர். இதனை உலக வழக்கின்படி சூடளந்தான் என வழங்கலாம்.

நூல்        :               சூரியன் (1935). பக்கம் : 64

நூலாசிரியர்         :               ஈ. த. இராசேசுவரியம்மையார், எம்.ஏ., எல்.டி.,

(சென்னை மேரியரசி கலாசாலை விஞ்ஞான சாத்திர ஆசிரியர்)

765. Lavatories – குளிப்புரை

வீட்டிலுள்ள சாக்கடைக் குழிகளையும், சாக்கடைகளையும், குளிப்புரைகளையும், கக்கூசுகளையும் ஒவ்வொரு நாளும் காலையில் தவறாமல் தண்ணீர் நிரம்ப வார்த்துக் கழுவ வேண்டும்.

நூல்        :               விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935) பக்கம் -91

நூலாசிரியர்         :               தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்)

766. பிளேக் – மகமாரி

பூபதி செந்தூரம் – இதை உட்கொண்டால் சுரம், சன்னி, வாந்திபேதி, வயிற்றுப்போக்கு, மகமாரி (பிளேக்), பித்தம், கிறுகிறுப்பு, சூலை, சூன்மம், கவாசகாசம், சுபம், வாதம், உடல் வலி, பொருமல், அண்ட வாய்வு, சூதக வாய்வு, பக்கவாதம் முதலிய நோய்கள் தீருவதோடு பிள்ளை பெற்ற பெண்களுக்குண்டாகும் எல்லா நோய்களும், குழந்தைகளுக்கு உண்டாகும் மாந்தங்கள், தோசங்கள், சுரம், சன்னி, இருமல் முதலிய சகல நோய்களும் குணமாகும்.

நூல்        :               சித்தன் (ஓர் மாதாந்தரப் பத்திரிகை) 1935 ஜூன்

⁠மாலை – 1. மணி – 6, பக்கம் – 208

கிடைக்குமிடம் :               சாமி, விருதை, சிவஞான யோகிகள்,

⁠சிவஞான சித்த பார்மசி, கோவிற்பட்டி

767. மந்திரம் – நிறைமொழி

பண்டைத் தமிழர் திருமண நிகழ்ச்சிகட்கும் இக்காலத் தமிழர் திருமண நிகழ்ச்சிகட்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடுகளைக் காணலாம்.

அக்காலத்தே இல்லாத புரோகித வேலை, வடமொழி மந்திரங்கள் (நிறைமொழி) தமிழ் மரபுக்கு மாறான பல செயல்கள் இன்ன பிறவும் இக்காலத் தமிழர் திருமணத்துள் இடம் பெற்றுத் தமிழ் மரபைக் கெடுத்துவிட்டன.

நூல்        :               தமிழர் திருமண நூல் (1939)

நூலாசிரியர்         :               வித்வான் மா. இராசமாணிக்கம் பிள்ளை, பி.ஓ.எல்,

⁠பகுதி அறிவிப்பு, பக்கம் 1

768. மறுமணம், மணமுறிவு

திருவாளர் வித்வான் இராச மாணிக்கம் அவர்கள் எழுதிய தமிழர் திருமணச் சீர்திருத்தக் குறிப்பினைப் படித்தேன். பண்டைத் தமிழர்களின் மணமுறைகளை எடுத்துக் காட்டுகளாலும், ஏதுக்களாலும் நன்கு விளக்கியிருக்கின்றனர்.

மணமுறையைத் திட்டம் செய்வதுடன், ஆடவர், பெண்டிர்களின் மறுமணம், மணமுறிவு முதலிய பொருள்கள் பற்றியும் மாநாடு முடிவு செய்யுமென நினைக்கின்றேன்.

நூல்        :               தமிழர் திருமண நூல் (1939) பக்கம் : 29, 30

பகுதி     :               தமிழ்ப் பெரியார் கருத்துக்கள்

த. வே. உமாமகேசுவரம் பிள்ளை, பி.ஏ., பி.எல்,

769. Typewriting machines – எழுத்தடிக்கும் பொறிகள்

எழுத்தடிக்கும் பொறிகளும் Typewriting Machines இந்திய பத்திரிகைத் தொழில் வளர்ச்சிக்கு அவ்வளவாக உதவுவதில்லை.

அக்கருவிகள் ஆங்கிலத்திற்கு இருப்பது போல இந்திய சுதேச மொழிகளுக்கு அவ்வளவு நல்ல அமைப்பிலே இல்லாமையால், நல்ல விளக்கமான அச்சுப் போன்ற எழுத்துக்களிலே செய்திகள் உடனுக்குடன் பதிப்பிக்கப்படுவதிலே அவ்வளவாகப் பயன்படுவதில்லை.

நூல்        :               இந்திய பத்திரிகைத் தொழிலியல் (1935), பக்கம் – 97

நூலாசிரியர்         :               வி. நா. மருதாசலம்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, July 10, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 756 – 763

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 751 – 755 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  756 – 763

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

756. Wireless Telegraph –              கம்பியிலாத் தந்தி

757. Aeroplane –              விண்ணூர் பொறி

758. Type writing Machine           –              எழுத்தடிக்கும் இயந்திரம்

759. Тypes       –              அச்செழுத்துக்கள்

760. Printing Blocks         –              உருவம் பதிக்கும் கருவிகள்

761. Compositors             –              எழுத்தடுக்குவோர்

762. Motor-Car –              தாமியங்கி

763. Telephone –              தொலைவிற் பேசுங் கருவி

நூல்        :               இந்திய பத்திரிகைத் தொழிலியல், (1935)

நூலாசிரியர்         :               வி. நா. மருதாசலம்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 751 – 755

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 740 – 750 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்

 751 – 755

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

751. Motor Cars, Buses – தற்செயலிகள்

இக்காலத்தில் தற்செல்லிகள் (Motor, Cars, Buses) பெரு வழக்காக ஓரிடமிருந்து மற்றோரிடம் போவதற்கு அமைந்துள்ளன. அவற்றில் ஆட்களை விதித்த எண்ணிற்கதிகமாக ஏற்றுவது ஒரு தீரா நோய் ஆய்விட்டது.

நூல்        :               மணிமாலை (1935) பக்கம் -148

நூலாசிரியர்         :               கா. சுப்பிரமணிய பிள்ளை, எம்.ஏ., எம்.எல்.,

752. Inventive Genius – கற்பனைத் திறல்

மனிதன் பெருமை பாராட்டிக் கொள்வதற்குக் காரணமாயுள்ள பல விஷயங்களுள் முக்கியமானது அவனுடைய கற்பனைத் திறல் (inventive Genius) அஃதாவது, யந்திர தத்துவங்களை (Mechanical Principles)க் கண்டுபிடித்துப் பிரயோகித்து, அவை தன் காரியங்களுக்குப் பயன்படுமாறு செய்யும் சக்தியாம்.

நூல்        :               விவேக சந்திரிகை மூன்றாம் புத்த்கம் (1935)

நூலாசிரியர்         :               தி. அ. சாமிநாத ஐயர்

(ஆரியா பத்திரிகை ஆசிரியர்)

753. Oriental – கீழ்ச்சீமை

ஒவ்வொரு தேசத்தில் ஒவ்வொரு விதமான வாஸ்து முறை ஏற்பட்டிருக்கின்றது. ஆதலால் கட்டிட முறைகளுள் கிரீக்கு, உரோமன், காதிக்கு, ஒரியென்டல் (கீழ்ச்சீமை) என்னும் பற்பல முறைகள் இருக்கின்றன.

நூல் : பக்கம் – 43

*

754.Playing Cards – ஆட்டக்கடுதாசிகள்

புகையிலை ஆங்கிலேயரால் நமது நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட சரக்காகும். அவ்வளவு நவீனமாக நமது நாட்டுக்கு வந்ததாயினும், அஃது எல்லா ஊர்களிலும், மூலை முடுக்குகளிலும் விலக்கின்றி ஆட்டக்கடுதாசிகளை (சீட்டுகளை)ப்போல் (Playing Cards), வியாபித்திருக்கின்றது.

நூல்        :               விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935)

நூலாசிரியர்         :               தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்)

755. Inner Meaning — உள்ளுறைப் பொருள்

திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த  சிரீரங்கத்திலுள்ள சிரீ ரங்கநாதர் திருக்கோயிலை இராத்திரி காலத்தில் தேவதைகள் வந்து கட்டினார்களென்றும், பொழுது விடியும் வரையில் எவ்வளவு வேலை செய்தார்களோ, அம்மட்டோடு நிறுத்திப் பொழுது விடிந்தவுடனே அவர்கள் மறைந்து போய்விட்டார்களென்லும் சொல்வார்கள். அந்தக் காரணத்தினால், கோயிலைச் சுற்றி இன்றைக்கும் நாம் காணும் பெரிய கற்றூண்களின் மீது கட்டட மமையாமல் அறை குறையாக நின்று விட்ட தென்றும் சொல்வார்கள். இதன் உள்ளுறைப் பொருளை மேலே விவரித்த இயற்கை வியாபாரங்களைக் கொண்டு ஊகித்துணர்ந்து தெளியலாமே.

நூல்        :               விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935)

நூலாசிரியர்         :               தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்