Saturday, April 30, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1531-1550: இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1521-1530 இன் தொடர்ச்சி)
1531. மீயொலி யியல்Hypersonics
1532. மீளாமை வெப்ப இயங்கியல்Irreversible thermodynamics
1533. மீளிணை இ.கீ.அ. நுட்பியல்Recombinant DNA technology
1534. மீள்மை இயங்கியல்Elastodynamics
1535. மீனியல்Ichthyology
1536. மீன் நோயியல்Fish pathology
1537. மீன் பதன நுட்பியல்Fish processing technology
1538. மீன் பிடியியல்Piscatology
1539. மீன்வளப் பொறியியல்Fisheries engineering
1540. மீன்வளர்ப்புப் பொருளியல்Aquaculture economics
1541. முக அழகியல்Kalology
1542. முகமுடிப் பண்டுவம்Hypertrichology
1543. முகிலியல்Nephology
1544. முகில் இயற்பியல்Cloud physics
1545. முகிழுயிரியியல்Protistology
1546. முக்கூற்றுடலியியல்Trilobitology
1547. முட நீக்கியல்Orthopaedics
1548. முடவியல்Rheumatology
1549. முடி நீக்கியல்Electrology (2)
1550. முடி யியல் மயிரியல், மயிர்முடிநூல், முடியியல் எனப்படுகின்றது. Trich என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்கு முடி எனப்பொருள். மயிர் என்பது நல்ல தமிழ்ச்சொல்தான். மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின் (திருக்குறள் 969) எனத் திருவள்ளுவரும் பயன்படுத்தி யுள்ளார். இருப்பினும் இச்சொல்லை வசைச்சொல்போல் இப்பொழுது பயன்படுத்தி வருவதாலும் எண்ணிக்கையில் ஓர் எழுத்து குறைவதாலும் சுருக்கமான முடியியல் –  trichology என்பது குறிக்கப்பட்டுள்ளது.Trichology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000

Friday, April 29, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1521-1530 : இலக்குவனார் திருவள்ளுவன்

 

அகரமுதல







(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1501 – 1520 இன் தொடர்ச்சி)
1521. மின்னணுப் பொறியியல்Electronics Engineering
1522. மின்னணுவியல்Electronics
1523. மின்னியங்கியல்Electrophysiology
1524. மின்னியல்Electrology (1)
1525. மின்னொளி யியல் Electrooptics
1526. மீ கணக்கியல் Meta – மாறு, மிதப்பு, மீ, உயர் என்னும் பொருள்களில் பயன் படுத்தப்படுகிறது. Meta என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் நடுவில், மேல், அப்பால் ஆகும். எனவே, இடத்திற்கேற்ற பொருள் தரும் இணைப்புச் சொல்லாக Meta உள்ளது. மீ என்றால் மேலிடம், உயரம், உயர், வானம், மேன்மை எனப் பொருள்கள்.  ஆதலின், உயர், மேல், எனப் பயன்படுத்தப்படும் இடங்களிலும் மீ என்றே பயன்படுத்தலாம். Metamathematics உயர் ஏரணக் கணக்கியல், கணிதக் கோட்பாட்டியல் எனப் படுகின்றன. கணக்கியலின் உயர் கோட்பாட்டை விளக்கும் துறை. எனவே, மீ கணக்கியல் எனலாம். மீ கணக்கியல் – MetamathematicsMetamathematics
1527. மீ மொழியியல் Metalinguistics – குறிநிலை மொழியியல் எனப்படுகிறது. குறிநிலை என்றால் குறிக்கோள் நிலையா, குறியீட்டு நிலையா என்ற குழப்பம் வருகிறது. முபீன் சாதிகா(Mubeen Sadhika) என்பவர் தன் வலைப்பூவில் குறிநிலை குறித்த தேனியல் சாண்டிலரின் விரிவான கருத்துகளின் மொழி பெயர்ப்பைத் தந்துள்ளார். மீ என்பது பல்பொருள் ஒரு சொல்.  இந்த இடத்தில் மீ மொழியியல் எனக் குறித்து விளக்கத்தில் குறிநிலை குறித்துத் தெரிவிக் கலாம். மீ மொழியியல் – MetalinguisticsMetalinguistics
1528. மீகாந்தத் தூண்டல் இயற்பியல்Megagauss physics
1529. மீட்பு வளைசலியல்RestorationEcology
1530. மீ நிகழ்வு உளவியல்   Parapsychology(1) என்பதை ஆன்மிக உளவியல் (ஆன்மீக உளவியல்), இயல்பு கடந்த உள (ஆன்மீக) இயல் நிகழ்வுகள்  என விளக்குகின்றனர். இதையே மீநிகழ்வு உளவியல் எனக் குறித்துள்ளோம். Parapsychology(3) என்றால் சித்த மருத்துவம் என்றும் கூறுகிறார்கள். காரணம் தெரியவில்லை.      Parapsychology(1)

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000

Thursday, April 28, 2022

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1501 – 1520 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1488 – 1500 இன் தொடர்ச்சி)

1501. மிகு ஒலியியல்

Hyperacoustics

1502. மிடறு–மூக்கியல்

Laryngorhinology

1503. மிடற்றியல்

larynx என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் தொண்டை.

தொண்டையியல் என்றும் குரல் வளையியல் என்றும் சொல்லப்படுகின்றது. உடலின் இப்பகுதிக்கு மிடறு எனப் பெயர். எனவே, மிடற்றியல் எனக் குறித்துள்ளோம்.

Laryngology

1504. மிதவை யுயிரியியல்

Planktology

1505. மிதிவண்டிப் போக்குவரத்துப்  பொறியியல்

Bicycle Transportation Engineering

1506. மின்இயங்கியல்

Galvanology / Electrodynamics

1507. மின் உருவாரவியல் 

Electroceramics

1508. மின் ஒலியியல்

Electroacoustics

1509. மின் பொறியியல்

Electrical Engineering

1510. மின்காப்புப் பொருளியல்

Dielectrics

1511. மின்கோவுசுகிமின் இயங்கியல்

Minkowski electrodynamics

1512. மின்சுற்று  இணைப்பியல்

Topology 3of circuits

1513. மின்சுற்று மேலமை நுட்பியல்

Surface Mount Technology

1514. மின்ம இயற்பியல்

Plasma physics

1515. மின்முனை இயல்

Electrodics

1516. மின்வளிம இயங்கியல்

Electrogas Dynamics

1517. மின்விசை யியல்

Electro Mechanics

1518. மின்வேதி யியல்

Electrochemistry

1519. மின்வேதிவெப்ப இயங்கியல்

Electrochemical thermodynamics

1520. மின்னணு ஒளியியல்

Electron optics

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000

Wednesday, April 27, 2022

தமிழ்ச்சொல்லாக்கம் – உவமைக் கவிஞர் சுரதா: 1-7

 அகரமுதல




(சொற்களஞ்சியம் சுரதா! – தொடர்ச்சி)

(சொல் மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங்காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது.மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

தமிழ்ச்சொல்லாக்கம் : 1-7

1.            Geometry – அளவு நூல்

கண்டிதமான அளவு நூலில் குத்துக்கு யாதொரு பெருமையும் இல்லை. (அதாவது) நீட்சியும் இல்லை, அகலமும் இல்லை, கனமும் இல்லை. கோட்டுக்கு நீட்சி மாத்திரம் உண்டேயன்றி, அகலமும் இல்லை, கனமும் இல்லை. ஆகையால், வழக்கத்தில் குத்துக்களையும், கோடுகளையும், இந்த வரையறுப்பு வாக்கியங்களின் கருத்துக்கு எவ்வளவோ சமீபமாய்ப் பொருந்தும்படி நாம் எடுக்கிறோமோ, அவ்வளவு, அவற்றின் மீது சார்வாய் இருக்கும் வேலைகள் திருத்தமாய் இருக்கும்.

நூல்        : அளவு நூல் (1857), இரண்டாம் புத்தகம், பக்கம் – 4

நூலாசிரியர்         : தாமசு (உ)லுண்டு, B.D.

விசுவகன்மியம் : சிற்ப நூல்

2. செவித்துவாரம்    – ஓசைப்புழை

3. சுக்கிலம்    – வீரியம்

4. சாதாரணம்  – பொது

நூல்        : சிவதருமோத்தரம் மூலமும் உரையும்

(மறைஞான சம்பந்த நாயனார்)

உரையாசிரியர் குறிப்புரை              : திருநெல்வேலி சாலிவாடீசுர ஓதுவாமூர்த்திகள்

5. புநர் விவாகம் – மறுமணம்

மேல் விவரித்த வேத வசனங்களாலும் சுமிருதி வசனங்களாலும் புருட சங்க நேர்ந்திராத கைமைகளுக்குப் புநர்விவாகஞ் செய்வது வேத சாத்திர சம்மதமென்றும், சில பிராம்மண சாதியில் இப்போதும் மறுமணம் நடந்தேறி வருகிறதாக சகநாததர்க்க பஞ்சானன வியாக்கியானத்தினால் தெரிய வருகிறபடியாலும், மேற்குறித்த வசனங்களின் ஆதாரத்தின் பேரில் மறுமணஞ் செய்து கொள்வதாய் தமயந்தி சுயவரம் சாட்டினதாக நளசரித்திரத்தினால் தெரிய வருகிறபடியாலும், பல்லாரி சில்லாவில் (இ)லிங்க பலசளூ என்கிற மிகவும் மேன்மை பெற்ற குலத்தாளில் சீரையுடுக்கி என்கிற மறுமணம் இப்போதுஞ் செய்யப்பட்டு வருவதாலும், இன்னம் சில இந்து சாதிகளில் மறுமணம் நடந்தேறி வருவதாலும், இத்தேசத்தில் பூர்வ காலத்தில் அது நடந்தேறி வந்து சிலகாலமாய் ஏதோ ஒருவிதத்தில் நின்று போயிருப்பதாகவும், மேற்சொல்லிய துரைத்தன சட்டங்களால் இராசநீதிக்கும்,சன சவரட்சணைக்கும், சவுக்கியத்திற்கும், விர்த்திக்கும் ஒத்திருப்பதாகவும் பிரகாசப்படுகின்றது.

நூல்        : இந்து கைமை புநர்விவாக தீபிகை (பக்கம் 13)

நூலாசிரியர்         : சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்.

6. Translation – மொழி பெயர்ப்பு

ஐந்தாம் வேதமென்னப்பட்ட சிரீ மகாபாரத இதிகாசமானது அநாதியான சம்சுகிருத பாடையில் சிரீ வேதவியாசரால் ஆதியில், சயாத இலட்சுமன்கின்ற நூற்றிருபத்தையாயிரங் கிரந்தமாக உலகோர்க்கு இசுபர சுகிர்தப் பிரயோசனகரமாய் நின்று உதவும்படி பிரசாதிக்கப்பட்டது. இதனை, அக்காலத் தொடங்கி இந்த பரதக் கண்டத்தில் வழங்கும் வடதேசத்துப் பாடைகளிலும் தென்தேசத்துப் பாடைகளிலும் அவ்வப் பெரியோர் தங்கள் தங்கள் தமிழ் தெலுங்கு முதலிய நடைகளில், தொகுத்தல் வரித்தல் தொகைவிரி மொழி பெயர்ப்பென்கின்ற நூல் யாப்பின் விதிப்படி காவியம் பத்தியம் வசனம் ஆகிய பல உரூபங்களாக ஏற்படுத்தியிருக்கின்றனர். அவற்றுள் வெண்பாப் பாரதமென்பது மதுரைப் பாண்டியராசன் சங்கத்தார் செய்தது. இது இக்காலத்தில் இறந்த நூலாகி பொருளிலக்கண் நூல்களில் மேற்கோளாக மாத்திரம் காணப்படுகின்றது.

நூல்        : மகாபாரதமென்னும் இதிகாசத்தில் முதலாவது ஆதிபர்வம் (1870)

மகாபாரத சரித்திர பாயிரம்            : பக்கம் 1

நூலாசிரியர்         : தரங்கை மாநகரம் ந.வ. சுப்பராயலு நாயகர்.

7. தொகை விளம்பி – இது ஒரு யந்திரத்தின் பெயர்.

இருப்புப்பாதை வண்டிகளில் ஏறிச் செல்லும் பிரயாணிகளின் தொகையைத் தவறாமல் குறிப்பிக்கும். இந்த யந்திரங்கள் சில சென்னை வீதி இரும்புப் பாதை வண்டிகளில் வைக்கும்படி சீமையினின்று வந்து சேர்ந்தனவாம். வனவிலங்கதிசயம் பார்க்கப்போகும் பெயர் இத்தனை பெயரென்று திட்டமாய்க் கண்டு சேர்ந்த கட்டளைகளுக்கு அறியும்படி ஒரு யந்திரம் உத்தியானத்திலும் வைக்கப்படுமாம்.

இதழ்     : சனவிநோதினி, ஆகத்து – 1874

சொல்லாக்கம்    : இதழாசிரியர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்      

ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1488 – 1500 : இலக்குவனார் திருவள்ளுவன்

 அகரமுதல




(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1477 – 1487 இன் தொடர்ச்சி)

1488. மாதவிடாயியல்         

மாதந்தோறும் என்னும் பொருளுடைய Emmenosஎன்னும் சொல்லில் இருந்து Emmeno உருவானது. பெண்களுக்கு மாதந்தோறும் வரும் விலக்கு குறித்த இயல்.

Emmenology

1489. மாந்தக் குமுகவியல்

Anthroposociology

1490. மாந்தர்விலங்கு தொடர்பியல்

மாந்தருக்கும் விலங்கினத் திற்கும் உள்ள தொடர்பு குறித்து ஆராயும் துறை. எனவே, Anthrozoology என்பதன் நேர் பொருளைக் குறிக்கக் கூடாது. இதன் மற்றொரு பெயர் மாந்தர்-அல்மாந்தர்-விலங்குகள் ஆய்வு/human–nonhuman-animal studies என்பதாகும். ஆதலின் மாந்தர் விலங்குகள் தொடர் பியல் எனலாம். 

Anthrozoology

1491. மார்சியக் குமுகவியல்

Marxist sociology

1492. மார்பகவியல்

mastós என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் மார்பு.

Seno என்னும் இலத்தீன் சொல்லின் பொருளும் மார்பு.

Mastology / Senology

1493. மாழை ஆய்வியல்

மாழை  ஆய்வு என்னும் பொருள் கொண்ட பழங் கிரேக்கச் சொல்லில் இருந்து Docim உருவானது.

Docimology

1494. மாழைப் பொறியியல்

Metallurgical Engineering

1495. மாறுகண்பண்டுவம்

Orthroptics

1496. தொல்தோற்ற இனவியல்

தொல்தோற்ற இனவியல், மானிட–குரங்கின இயல் என இருவகையாகவும் கூறு கின்றனர். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தவன் என்னும் கருத்தின் அடிப்படையிலான இயல். தொல்தோற்றம் என்பதும் மனிதத் தோற்றத்தைத்தான் குறிக்கிறது. எனவே, தொல் தோற்ற இனவியல் என்றே குறிக்கலாம்.

Anthropobiology

1497. மானிட ஆக்கப் புவி வடிவியல்

Anthropo geomorphology

1498. மானிட மெய்யியல்

Philosophical Anthropology

1499. மானிட மொழியியல்           

Anthropological linguistics

1500. மானிடவியல்

Anthropology

(தொடரும்) 

இலக்குவனார் திருவள்ளுவன்,
அறிவியல்வகைமைச்சொற்கள் 3000