Monday, January 29, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040 : தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1041 – 1047

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. பாததீர்த்தம் – அடிபெய்புயல்
    நூல் : வாயுசங்கிதை (விரோதி வரு.ஆவணி)
    நூலாசிரியர் : குலசேகர வரகுணராம பாண்டியர்
    ஆய்வாளர் : பொம்மபுரம் சிரீ சிவஞான பாலைய தேசிகராதீனத்துச்
    சிதம்பரம் இராமலிங்க சுவாமிகள்
  2. பாங்கு * – Bank
    பேங்க் என்பதற்கு வங்கி என்பது பொருள் கொடா வகையில் இருப்பதால் (பணத்தையும் வரவு செலவையும் பாங்கு செய்யும் அமைப்பு என்று) பொருள் படும் நிலையில், எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாங்கு எனவே கொள்ளலாம். தனியார் ஏற்பாடுகளுக்கு, வட்டிக்கடை, காசுக்கடை என்ற பழஞ்சொல்களே இருக்கலாம்.
    வெங்கடாசலம் வாழ்வியல் (திங்களிருமுறை ஆசிரியர்)
    இதழ் : வாழ்வியல் 2வது ஏடு, 15-9-1960, பக்கம் : 18
  3. Fountain – இலவந்திகை
    இக்காலத்தில் நீரைக் குறைத்தும் பெருக்கியும், அலங்காரமாக வெளியிடும் நீர் ஊற்றினை Fountain என்கிறோம். இது பெரிதும் சோலைகளில் இருப்பதையும் அறிகிறோம். இவ்வமைப்புக்குத் தமிழர்கள் அக்காலத்தில் இட்ட பெயர் இலவந்திகை என்பது.
    நூல் : தமிழ் நூல் வரலாறு (1962) பக். 23
    நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர்
    கண்ணப்ப முதலியார், எம்.ஏ.பி.ஓ.எல். தமிழ்த்துறைத் தலைவர், புதுக்கல்லூரி சென்னை.
  4. Under Ground Drainage – கரந்து படை
    இக்காலத்தில் Under Ground Drainage எனப்படும் கழிநீர் செல்லக் கட்டப்படும் அமைப்பு, பழங்காலத்தில் கரந்து படை எனப்பட்டது. இது தெரு நடுவில் அமைந்தது. கருங்கல்லால் மூடப்பட்டது. இக்காலத்தில் இரும்பு வட்டக் கருவியால் மூடப்பட்டுள்ளது.

நூல் : தமிழ் நூல் வரலாறு (1952) பக்கம் : 23
நூலாசிரியர் : பேராசிரியர், வித்துவான் பாலூர் கண்ணப்ப முதலியார் எம்.ஏ., பி.ஓ.எல்.,

  1. ரீடர் – நூல் ஆய்வர்
    வெள்ளை வாரணனார் இவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ரீடராக (நூல் ஆய்வர்) இருக்கிறார். நல்ல பேச்சாளர். வித்துவான் பட்டம் பெற்றவர். தொல்காப்பியம், சங்க காலத் தமிழ் மக்கள், குறிஞ்சிப் பாட்டராய்ச்சி நூல்கள் இவரால் எழுதப்பட்டுள்ளன. சித்தாந்தச் செம்மல், திருமுறைத் தமிழ் மணி என்னும் பட்டமுடையவர்.
    மேற்படி நூல் : தமிழ் நூல் வரலாறு (1962) பக்கம் : 448
  2. தாமரைக்கண்ணி
    என் இயற்பெயர் சலசாட்சி(ஜலஜாட்சி) என்பது. 1938இல் நடந்த இந்தி எதிர்ப்பு இயக்கத்தின்போது புலவர் அன்பு கணபதி அவர்களும் யான் தந்தையெனப் போற்றும் அருணகிரி அடிகளாரவர்களும் என் பெயரைத் தாமரைகண்ணி என மாற்றிவிட்டார்கள். யான் அதனை விருப்புடன் ஏற்றுக்கொண்டேன்.
    தாமரைக் கண்ணி 15. 10. 1961
    இதழ் : முக்கனி மரம் – 1 கனி – 5
  3. Paper – காயிதம்
    Paper என்பதற்கு தாள் என்பதைவிட, கா + இதம் (எழுதிய நூலை இனிது காத்தற்குரிய என்ற பொருள்பட) காயிதம் என்றே கொள்ளலாம்.
  • பி.எம். வேங்கடாசலம்
    ஆசிரியர் : வாழ்வியல் (திங்களிருமுறை)
    2வது ஏடு, தி.வ. ஆண்டு 1991 புரட்டாசி – 1, பக்கம் : 18
    16.9.1960

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, January 22, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1030- 1040

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029 : தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் :

1030- 1040

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Thermometer – அனற்கோல்
    அனலின் அளவை நமது உறுப்புகளின் உணர்ச்சியால் பிழையின்றி அறிய முடியுமா? முடியாது. மிகவும் சூடாகவுள்ள நீரிலும், குளிர்ந்த நீரிலும் நமது கைவிரல் வைத்து உணர்வோமானால், ஒன்று ஒன்றைவிட சூடாக உள்ளதா, தன்மையாக உள்ளதா என்று உணர முடியுமே ஒழிய, எந்த அளவுக்கு அவை அனலைப் பெற்றுள்ளன. அவைகளின் அனல் நிலை (Temperature) என்ன என்பவற்றைச் சரியான முறையில் தெரிந்து கொள்ள முடியாது. இம்மாதிரியான சிக்கல்கள் மனிதனை மேலும் எண்ணத் தூண்டியது.
  2. சிரீலசிரீ – உயர்சீர்த்தி (1956)
    நல்லவராய் வாழ்க!
    உயர் சீர்த்தி குன்றக்குடி அடிகளாருக்கு
    குறிப்பு : உயர்சீர்த்தி – இச்சொல் சிரீலசிரீ என்பதைச் சுட்டும் பழந்தமிழ்ச் சொல்.
    கா. சம்பத்து
    மதுக்கூர் (1956)
  3. வாக்கியம் – சொற்கூட்டம்
    சொற்கள் தொடர்ந்து நின்று, முடிவு பெற்ற கருத்து ஒன்றினைத் தெரிவித்தால், அச்சொற் கூட்டம் வாக்கியம் ஆகும். அதனை, வசனம் என்றும் சொல்வதுண்டு.
    நூல் : பயிற்சித் தமிழ் (1956) (இரண்டாம் பாகம்), பக்கம் : 1
    நூலாசிரியர் : தென் புலோலியூர், மு. கணபதிப்பிள்ளை
  4. பஞ்சாட்சரம் – அஞ்செழுத்து
    அஞ்செழுத்து என்பவர் சிறந்த கவிஞர். இவருக்குப் பஞ்சாட்சரம் என்று பெற்றோர் பெயரிட்டனர். அப்பெயரை மாற்றி அஞ்செழுத்து என்று 1957ஆம் ஆண்டில் இவர் வைத்துக் கொண்டார்.
    வளனரசு (1957)
  5. அபேட்சகர் – வேட்பாளர் (1957)
    நூல்களைத் தேடிவாங்கிப் படிக்கும் ஆர்வலர், நூலகத்தும்பி, அறிவுத் தேனி
    ஊ. செயராமன்
  6. லிப்சுடிக்(கு) – செந்நிறக்குச்சி
  7. கொவ்வை – உதடுகளைக் குறிக்கும்
    செந்நிறக் குச்சி ஒன்றால்
    சிவப்பேற்றி மெருகிட்டு
    எச்சிலோ, நாக்கோ
    இடறிப் படாவண்ணம்
    மிக்க கருத்துடனே
    அதைக் காப்பர்
    இதழ் : எழிலன் கவிதைகள் (1957) பக்கங்கள் 19, 20
    நூலாசிரியர் : வலம்புரி எழிலன்
  8. ஆர்வகர் சங்கம்
    சினிமா இரசிகர்கள் சங்கத்தை, “விசிறிகள் சங்கம்’ என்றோர், ரசிகர் சங்கம் என்றோ அழைப்பதை விட ஆர்வகர் சங்கம் என்று அழைக்கலாம்.
    முனைவர் ஏ.சி. செட்டியார் (19. 6. 1960)
  9. காளி – கருநிறமுடையவள்
  10. துருவன் – அழிவில்லாதவன்
  11. வேதனம் – அறிவு

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, January 15, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 -1020- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1021-1029

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. செயராமன் – வெற்றி வில்லாளன் (1955)
    கவிஞர் வெற்றி வில்லாளன்,
    தாத்தையங்கார் பேட்டை, திருச்சி மாவட்டம்.
  2. Dearness Allowance – அருமைப்பாட்டுப் படி
    போர்க் காலத்தில் தோன்றிய புதுச் சொற்களில் ’பறக்குங்குண்டு’ என்பது ஒன்று. இதனையே ஆளில்லா விமானம் என்பாரும் உண்டு. ’பஞ்சப்படி’ என்பது பெருவழக்காக வழங்குகிறது. (Dearness Allowance) என்பதை எப்படியோ இப்படி மொழி பெயர்த்துவிட்டனர். ஆயினும் அதனை இனி அருமைப்பாட்டுப் படி என மாற்றப் போவதில்லை.
    நூல் : தமிழோசை (1955), பக்கம் , 89
    நூலாசிரியர் : செந்தமிழ்க் காவலர்
    முனைவர் அ. சிதம்பரநாதன், எம்.ஏ., பிஎச்.டி., (தமிழ்த்துறைத் தலைவர், அண்ணாமலைப் பல்கலைக் கழகம்)
  3. Light Signal – ஒளி அஞ்சல்
    தந்தி என்பது ஒலிமுறையில் உள்ள பேச்சு மொழியல்ல. மொழியிலுள்ள எழுத்துகளுக்குத் தனி ஒலிக்குறிப்பு வைத்து அவ்வொலிக் குறிப்புகளினால் மொழியை அனுப்பவும் வாங்கவும் உள்ள சாதனமே தந்தி. இதே முறை ஒளி அஞ்சலிலும் (Light Signal) பயன்படுத்தப்படுகிறது.
    நூல் : தமிழில் தந்தி (1955), பக்கம் : 21
    நூலாசிரியர் : அ. சிவலிங்கம்
  4. காபியாசுபிரின் – தலைவலி மாத்திரை
    தலை வலிக்கொரு மாத்திரை, தடுமனுக்கு ஒரு மாத்திரை, தவறுதலா தின்னுப்பூட்டா தருமலோக யாத்திரை என்று மிஃச் மாலினி படத்தில் பாடியுள்ள சுந்தரி பாய், முதன் முதலில் தோன்றியது. காபியாசுபிரின் (தலைவலி மாத்திரை) விளம்பரப் படத்தில்தான்.
    நூல் : சினிமா நட்சத்திரங்களின் இரகசியங்கள் (1955) பக்கம்
    நூலாசிரியர் : சுந்தர்
  5. மகாமகோபாத்தியாயர் – பெரும்பேராசான்
    பண்டிதமணியின் தொண்டுகளை அரசியலார் அறிந்தனர். பட்டம் அளித்துச் சிறப்பிக்க வேண்டும் என்று முடிவு செய்தனர். 1941 ஆம் ஆண்டு, மன்னர் பிறந்த நாட்கொண்டாட்டம் நிகழ்ந்த போது ‘மகாமகோபாத்தியாயர்’ (பெரும்பேராசான்) என்னுஞ் சிறப்புப் பெயரை வழங்கிப் போற்றினர்.
    நூல் : தமிழ்ப் புலவர் வரிசை (1955), (எட்டாம் புத்தகம்)
    ⁠பக்கம் : 82
    நூலாசிரியர் : சு. அ. இராமசாமிப் புலவர்
  6. மா. மார்க்கபந்து – மா. வழித் துணைவன்
    மா. வழித்துணைவன்
    நாடக ஆசிரியர், கவிஞர், ஆய்வாளர்,
    எழுத்தாளர், திருவள்ளுவர் நாடகம்,
    தென் குமரி தெய்வம் நாவல்
    திருக்குறள் நெறித் தோன்றல்,
    குறள் படைப்புச் செம்மல்
    மார்க்கபந்து என்னும் பெயரை 1955 ஆம் ஆண்டில் மா. வழித்துணைவன் என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார் இவர்.
  7. தொலைக்காட்சி
    நாட்டிய நடிகை செளதாமினி ‘சுவருக்கசீமா’வில் தொலைக்காட்சிகளில் பானுமதிக்குப் பதிலாக ஆடியிருக்கிறார்.
    நூல் : சினிமா நட்சத்திரங்களின் இரகசியங்கள் (1955), பக்கம் . 8
    நூலாசிரியர் : சுந்தர்
  8. நவநீத கிருட்டிணன் – பொன்னி வளவன் (1956)
    ஆசிரியர், சிறந்தகவிஞர்
    1029 Botany – பயிரியல்
    ஆங்கிலச் சொற்களையும் பிறமொழிகளிலுள்ள சொற்களையும் தேவையான போது எடுத்தாளலாம் என்பர் சிலர். இப்போது அங்ஙனம் எடுத்தாள்வதிலே பாரதூரான குறை வராவிட்டாலும் – இனி வருங்காலத்தில் ஆங்கிலத்துடன் இணைந்த பிறமொழிகளும் நது நாட்டிலே செல்வாக்குக் காட்டாத காலத்தில் – அப்படிப்பட்ட சொற்களின் வரலாறு இன்னதென்று கூடத் தெரியாமல், உயிரற்ற வெறுஞ் சடலங்களாகவே அவை உலவுவனவாம். எனவே, இவற்றையெல்லாம் நாங்கள் சிறிது கவனிக்க வேண்டும். Botany எனப்படும் ‘பயிரியல்’ நூலில் எத்தனையெத்தனை பிறமொழிச் சொற்களை மனனஞ் செய்து அறிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.
    நூல் : பயிற்சித் தமிழ் (1956), இரண்டாம் பாகம்) பக்கம் : 97
    நூலாசிரியர் தென்புலோலியூர் மு. கணபதிப் பிள்ளை

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, January 8, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020



(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003-1009- தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1010 – 1020

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. Encyclopedia – பேரகராதி
    பல ஆயிரமாண்டுகட்கு முன்பே சீனர்கள் நாகரீகத்தில் முதிர்ச்சி பெற்று விளங்கினார்கள். இவர்கள் தொன்று தொட்டே பட்டு, காகிதம், வெடி மருந்து, அச்சுப் பொறி, திசைக்கருவிகள், கண்ணாடி முதலிய பலவகைத் தொழில்களில் முன்னேறி இருந்தார்கள். இவர்கள் சிற்பம், சித்திரம் இவற்றில் பெயர்போனவர்கள். உலகத்திலேயே மிகப்பெரிய பேரகராதி (Encyclopedia) முதன் முதலில் சீனாவில் தான் எழுதப்பட்டது.
    நூல் : சீனத்துச் செம்மல் (1952), பக்கம் – 6
    நூலாசிரியர் : புலிகேசி
  2. (உ)ரூபா – மாடு
    பெகுஸ் (pecus) என்ற லத்தீன் வார்த்தைக்கும், பெய்கு என்ற செருமன் வார்த்தைக்கும், (உ)ரூபா என்ற வடமொழி வார்த்தைக்கும், மாடு என்றே பொருள். (உ)ரூபா என்ற சொல்லே திரிந்து (உ)ரூபாய் எனத் தமிழில் வழங்குகிறது. (உ)ரூபா என்ற வடசொல்லுக்கு நேரான தமிழ்ச் சொல்லாகத் தமிழில் மாடு என்ற சொல் வழங்கப் பெறுகிறது.
    நூல் : பணம் (1953) பக்கம் – 14
    நூலாசிரியர் : ரெ. சேஷாசலம், எம்.ஏ.,
    ⁠(ம. தி. தா. இந்துக் கல்லூரி பொருளாதார ஆசிரியர்)
  3. Refrigerator – குளிரச் செய்யும் பொறி
  4. Microscope – அணு நோக்கி
    விஞ்ஞானிகளுக்குத் தேவைப்படும் அணு நோக்கி பரிசோதனைப் பொறி (Testing Machine) மின்சாரச் சூளை அடுப்பு. ஆய்வுத் துலை (Analytical Balance) எக்சுரே பொறி, அல்ட்டுரா வயலெட்டு (ஊதா) ஒளிக் கதிர்கள் வீசும் பொறி, வெப்ப ஒளிக்கதிர் வீசும் பொறி (Heat – Ray), கண்ணாடி உருக்கும் பொறி, குளிரச் செய்யும் பொறி (Refrigerator),மற்றைய வீட்டியல் சிறு பொருள்கள், தண்ணீரை வெந்நீராக்கும் மின்சாரக் கருவி, மின்சார வீட்டடுப்பு, பல்புகள், பாதரச பல்புகள் முதலிய எல்லாப் பொருள்களும் சப்பானில் உற்பத்தியாகின்றன.
    நூல் : நான் கண்ட சப்பான் (1953), இரண்டாம் பதிப்பு
    ⁠பக்கம் : 65, 66
    நூலாசிரியர் : க. இராமசுவாமி நாயுடு, முன்னாள் மேயர், சென்னை.

  1. இரணியப் பிண்டம் – பொற்கட்டி
    இந்தியாவில் (இ)ரிக்குவேத காலத்திலேயே (சுமார் கி.மு. 2000) பொற்கட்டி, பணமாக உபயோகிக்கப்பட்டதாக அறிகிறோம் அது. இரணியப் பிண்டம் என்றழைக்கப்பட்டது. தமிழில் அதன் நேர் பொருள் பொற்கட்டி கந்த புராண ஆசிரியர் கச்சியப்ப சிவாசாரியார் இரணியனைப் பொன்னன் என்றே கூறுவர். ஆடகப் பெயரின் அவுணர் மார்பினன் என வரூஉம் குமர குருபரர் வாக்கும் (திருவாரூர் நான்மணிமாலை) ஈண்டு நினைவு கூறற்பாலது.
    நூல் : பணம் (1953), பக்கம் – 15
    நூலாசிரியர் : (இ)ரெ. சேசாசலம், எம்.ஏ.,
    ⁠(ம. தி. தா. இந்துக் கல்லூரி பொருளாதார ஆசிரியர்)

    1015.Under wear – உள் அங்கி
    ஃகிரோ ஃகிடோ – சப்பானிய சக்கிரவர்த்தி ஓர் உடையை ஒரு முறைக்கு மேல் மறுமுறை உபயோகப்படுத்துவதில்லை. உள் அங்கி கூட (Under Wear) மறுமுறை அணிவதில்லை.
    நூல் : தம்மி, 10.10.1953, பக்கம் :12, மலர் : இதழ் 2
    சொல்லாக்கம் : தில்லை வில்லாளன், பி.ஏ. (ஆனர்சு)
  2. புலவர் தி. நா. ஞானப்பிரகாசம் – அறிவு ஒளி
    முகவரி : 2 / 25 இணைவு – 2,
    பூங்குன்றனர் தெரு, மறைமலை நகர் – 603 209
  3. Axis – அச்செலும்பு
    இந்த 33 எலும்புகளில் ஒன்று அச்செலும்பு என்னும் பெயரும், இன்னொன்று உலகம் என்னும் பெயரும் பெற்றுள்ளனவே.
    நூல் : பழந்தமிழரும் முருகன், முக்கண்ணன் வணக்கமும் (1954)
    ⁠பக்கம் – 46
    நூலாசிரியர் : முனைவர் தி. இரா. அண்ணமலைப் பிள்ளை
  4. கமகங்கள் – அசைவுகள்
    நம் நாட்டவர்கள் சங்கீத விசயங்களுக்கு முதலிடம் கொடுத்தார்களே தவிர பாவனைகளைப் பற்றியோ, பாடல்களின் உச்சரிப்பைப் பற்றியோ சிந்தித்தார்களில்லை, அதனாலேயே நம் நாட்டுப் பாடல்களின் மெட்டில் பொதுமக்கள் கவர்ச்சி கொள்ளாமல் பிறநாட்டு மெட்டுகளையே அமைத்துக் கொண்டு பாடுவதும், ஆடுவதும் இரசிப்பதும் வழக்கத்தில் அதிகமாகி விட்டது. இதற்குக் காரணங்கள் நம் நாட்டுப் பாடல்களில், பதங்களைச் சரியாக உச்சரிக்காமையும், பதங்களைக் கேட்பவர்கள் புரிந்து கொள்ளதவாறு அதிகமான சங்கீதத்தின் அசைவுகளை (கமகங்களை) அளவுமீறி உபயோகப்படுத்துதலும் ஆகும்.
    நூல் : தென்னிந்திய இசை உலகம் (1954)
    ⁠பக்கங்கள் : 27, 28
    நூலாசிரியர் : எசு. மாணிக்கம் (தென் ஆப்பிரிக்கா)
  5. Lyric – தனிப்பாடல்
    நூல் : புதுமைப்பித்தன் கட்டுரைகள் (1954) பக்கம் 56,
    நூலாசிரியர் : புதுமைப்பித்தன்
  6. மயிலை சண்முக சுந்தரன் – மயிலை முத்தெழிலன்
    குழந்தைகளுக்காகவே வாழ்ந்த மயிலை சிவமுத்து அவர்கள் அன்புச் செல்வனே கவிஞர் மயிலை முத்தெழிலன் அவர்கள். சண்முக சுந்தரம் என்ற பெயரை மயிலை முத்தெழிலன் என்று 1954ஆம் ஆண்டில் இவர் மாற்றி வைத்துக்கொண்டார்.

    (தொடரும்)
    உவமைக்கவிஞர் சுரதா
    தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, January 1, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003 – 1009

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 991- 1002 – தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : 1003 – 1009

(கி.பி.1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்)தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

  1. இலட்சுமி – மலர்மகள் (1951)
    திருச்சி – டவுன்ஃகால் அரசினர் மகளிர் உயர் நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரியும் திருமதி இலட்சுமி நித்தியானந்தம் எம்.ஏ.பி.டி., அவர்கள் 1951ஆம் ஆண்டு முதல் மலர்மகள் என்னும் பெயரில் கவிதைகள், கட்டுரைகள் எழுதி வந்தவர். இப்போது இவர் உலகத் தமிழ்க் கவிஞர் பேரவை உறுப்பினர்களுள் ஒருவராகவும் இருக்கிறார்.
  2. எம்பிராய்டரி – பூந்துகிற் கலை
    மனிதனுடைய தேகத்திற்கும் மனத்திற்கும் இன்ப மளிப்பவையெல்லாம். தெய்வத்திற்குப் பொறுக்காது என்பது தலைகால் தெரியாத நம்பிக்கைகளில் ஒன்று. இதையொட்டித்தான், சிறு பெண்கள் புத்தகம் படிப்பதும், பாட்டு, நாட்டியம், சிற்பம், ஒவியம், பூந்துகிற்கலை (எம்பிராய்டரி) இவற்றைக் கற்பது எல்லாம் வீட்டைக் கெடுத்துக் குட்டிச்சுவராக்கிவிடும் என்று பலர் நினைப்பதும், நாடகம் பார்த்தாலும் சினிமா பார்த்தாலும் மனிதன் கெட்டுப் போவான் என்று நினைப்பதும் இதே மாதிரிதான்.
    நூல் : குட்டிக் கட்டுரைகள் (1951), பக்கம் : 61, 62
    நூலாசிரியர் : வித்துவான் ந. சுப்ரமணியன் எம். ஏ.
  3. Book Post – அவிழ்மடல்
    1952இல் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் நாவலர் நா. மு. வேங்கடசாமி நாட்டார் உருவப்படத்திறப்புவிழா அழைப்பிதழில் Book-post என்ற சொல்லுக்கு ‘அவிழ்மடல்’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது. அச்சொல்லை முதன் முதலில் உருவாக்கித் தமிழுலகிற்கு உலவவிட்டவர் க. அரசுமணி, இவர் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் புலவர் இவர், பேராசிரியர் முனைவர் அ. சிதம்பரநாதன், பேராசிரியர் (இ)லெப. கரு. இராமநாதஞ் செட்டியாரின் மாணவர்.
    அவிழ்மடல் :சொல்லாக்கம் – புலவர் க. அரசுமணி (1952)
  4. Press – அழுத்தகம்
  5. Capitalism – முதலாண்மை
  6. Brains Trust – புத்தி மண்டலம்
  7. Pension – இளைப்பாறும் சம்பளம்
    நூல் : கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு (1952)
    நூலாசிரியர் : அ. அருளம்பலம் (வழக்கறிஞர்,
    ⁠ஐக்கியதீப ஆசிரியர், யாழ்ப்பாணம்)

(தொடரும்)
உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்