Monday, June 26, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 740 – 750

ஃஃஃ        27 June 2023      அகரமுதல

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 733 – 739 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 740-750

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

740. Binoculars –              குழற் கண்ணாடி

741. Carbon        –              கரிச்சத்து

742. Elements   –              இயற்பொருள்கள்

743. Degree       –              சுழி

744. Indigo          –              அவிரி நிறம்

745. Orange       –              கிச்சிலி நிறம்

746. Parallel        –              நேருக்கு நேர்

747. Photo Graphic camera          –              புகைப்படப் பெட்டி

748. Milky Way –              பால் வழி

749. Solar System            –              சூரிய குடும்பம்

750. Spectro Scoe            –              ஒளி உடைக்கும் கருவி

நூல்        :               சூரியன் (1935)

நூலாசிரியை       :               இராசேசுவரியம்மையார், எம்.ஏ., எல்.டி.

(சென்னை மேரியரசி கலாசாலை விஞ்ஞான சாத்திர ஆசிரியர்)

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா
தமிழ்ச்சொல்லாக்கம்

Monday, June 19, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 733 – 739

      20 June 2023      அகரமுதல

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 – 732 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 733 – 739

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

733. Homeopathy – ஒப்புமுறை வைத்தியம்

பல நோய்கள் இயற்கைக்கு மாறான வாழ்க்கையினாலேயும் நல்லுணவு கொள்ளாமையினாலும் ஏற்படுகின்றன. ஒழுங்கான வாழ்க்கையும் சுகாதாரமான உணவும் நோயைத் தடுப்பன என்று ஒப்புமுறை (Homeopathy) வைத்தியத்தைக் கண்டு பிடித்த  ஃகைன்மன் (Hahenemann) என்னும் சருமானிய வைத்தியர் சொல்லுகின்றனர்.

நூல்        :               நூல் உடல்நூல் (1934), பக்கம் -35

நூலாசிரியர்         :               கா. சுப்பிரமணிய பிள்ளை, எம். ஏ., எம். எல்.

734. Record — குறிப்பேடு

(வேதப்புராதனம்) வேதங்கள் மனிதர்களின் பழங்காலத்துக் குறிப்பேடு (Record) ஆகும். இவ்வாறே ஆங்கிலேயர்களும் நம்புகின்றனர்.

நூல்        :               ஆரிய சித்தாந்தம் 1934), பக்கம் – 6

நூலாசிரியர்         :               பண்டிட் – கண்ணையா

735. Belt – அரைப்பட்டிகை

இருவரும் விமானத்தில் ஏறி உட்காந்து கொண்டனர். டிரைவர் ஒவ்வொருவருக்கும் ஓர் அரைப் பட்டிகை (Belt) போட்டு, ஏரோபிளேனிலுள்ள பீடத்திற்கும், அவர்கள் அரைக்கும் மார்புக்கும் தொடுத்துக் கட்டினர் ஏரோபிளேன் மெல்ல நகர்ந்தது, சிறிது விரைவாக ஓடிற்று. ஒடும்போதே அது மேலே எழுந்தது; பின்னும் மேலே எழுந்தது.

நூல்        :               ஆகாய விமானம் (1934), பக்கம் – 14

நூலாசிரியர்         :               கா. நமச்சிவாய முதலியார்

⁠(சென்னை இராசதானிக் கலாசாலை முன்னாள் தமிழாசிரியர்)

736. பர்தா – மறைப்பு அங்கி

வட இந்தியாவிலே இந்துக்களுக்குள் மறைப்பு அங்கி (பர்தா) அணியும் பழக்கம் இருந்து வருகின்றது. இப்பழக்கம் பழங்கால இந்தியாவில் இருக்கவில்லை. முகம்மதியர்களிடமிருந்தே இந்துக்கள் இப்பழக்கத்தைக் கைக்கொண்டனர்.

நூல்        :               ஆரிய சித்தாந்தம் (1934), பக்கம் : 29

நூலாசிரியர்         :               பண்டிட் – கண்ணையா

737.(உ) ரோமத் துவாரங்கள் – மயிர்க் கால்கள்

நமது உடலில் மேற்புரம் முழுவதையும் தோல் மூடிக் கொண்டு இருக்கிறது. அந்தத் தோல் சில இடங்களில் அரைக்கால் அங்குல கனமும், சில இடங்களில் கால் அங்குல கனமும் இருக்கிறது. நமது தோல் முழுவதிலும் மிகச் சிறிய துவாரங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றுக்கு மயிர்க் கால்கள் அல்லது (உ)ரோமத் துவாரங்கள் என்று பெயர்.

நூல்        :               மூன்றாம் பாடப் புத்தகம் (1934), பக்கம் , 91 (நான்காம் வகுப்பு)

நூலாசிரியர்         :               கா. நமச்சிவாய முதலியார்

(சென்னை, இராசதானி கலாசாலை முன்னாள் தமிழாசிரியர்)

738. Bus – பெருவண்டி

சென்னையுள்ளூரில் ஓடும் பெருவண்டி (Buses)களில், ஏறுகிறவர்களிடம் கூலி வாங்கினாலும் சீட்டு தருவதில்லை. அதனால் ஒருவரிடம் பலமுறை ஒரே பிராயணத்தில், கார் நடத்துவோன் காசு கேட்க நேரிடுகிறது.

கா. சுப்பிரமணிய பிள்ளை எம்.ஏ.எம்.எல்.,

உயர் பதிப்பாளர், ‘மணிமாலை’ 1935

பக்கம் – 448-49

739. Open Book – விரிசுவடி

பிராணிகளுக்கெல்லாம் மேம்பட்டவன் தானே யென்று மனிதன் பெருமை பாராட்டுகிறான். ஆயினும், ஒவ்வொரு விசயத்திலும் இயனிலை (Nature) மனிதனுக்கு முந்திக் கொண்டு, அவனுக்கு வழிகாட்டுகின்றது. இயனிலை (Nature) என்பது ஒரு விரிசுவடி (Open Book) அறிவுள்ள மாக்களெல்லாரும் இந்தச் சுவடியினின்றும் தங்கள் தங்கள் பாடங்களைப் படித்துப் பயின்று வருகிறார்கள். தோழர் தியாகு எழுதுகிறார்

நூல்        :               விவேக சந்திரிகை மூன்றாம் புத்தகம் (1935) நூலாசிரியர்         :               தி. அ. சாமிநாத ஐயர் (ஆரியா பத்திரிகை ஆசிரியர்

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, June 18, 2023

Sunday, June 11, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 727 – 732

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 722 – 726 தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 

727 – 732

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

727. Oxygen – உயிர்க்கால்

நெஞ்சத்தின் வலது கீழறையில் நின்று சுவாசப் பைக்குச் செல்லும் கருப்பு இரத்தமானது அங்குள்ள மயிரிழைக் குழல்களுக்குள் பாயும். அவற்றிற்கும் காற்றுத் துவாரங்களுக்கு மிடையே ஈரமான மெல்லிய தாள் மட்டுமே யிருப்பதால் அவற்றிலுள்ள இரத்தமானது காற்றிலிருந்து உயிர்க்காலை (Oxygen) வாங்கிக் கொள்ளவும் காற்றிற்குத் தன்கனுள்ள கரிப்புளிப்பை (Carbonic Acid)க் கொடுத்துவிடவும் இயலும்.

மேற்படி நூல்      :               உடல் நூல் (1934) பக்கங்கள் – 29, 30

728. Vitamins – உயிர்சத்து

உயிர்ச்சத்து : (Vitamins) வெடியுப்புச் சாரம் கலந்த உயிர்ச்சத்துக்கள் உணவுப் பொருள்களில் கலந்துள்ளன என்றும் அவை சீவாதாரமா யுள்ளவை யென்றும் அவற்றைச் சில நாட்களுக்கு முன் மேலைநாட்டு அறிஞர்கள் கண்டனர். பச்சைக் காய்கறியிலும் பழங்களிலும் பாலிலும் வெண்ணெயிலும் மூளை தவிடு போக்காத அரிசியிலும், நன்றாகப் புடைக்கப்படாத கோதுமை மாவிலும் அவை உள்ளன.

மேற்படி நூல் : உடல்நூல் (1934) பக்கம் – 38

729. Red corpuscles — செங்கூடுகள்

இரத்தத்திலுள்ள செங்கூடுகள் (Red corpuscles) தட்டையாயும் வட்டமாயும் பாதி வளைவுள்ள தாயுமிருப்பன. ஒரங்களைப் பார்க்கிலும் மத்தியில் மெல்லியதா யிருக்கும். அவற்றில் நடுப்புள்ளி (Nucleus)யொன்றுங் கிடையாது. இந்தச் செங்கூடுகள் நிலையான வாழ்க்கை யுடையனவல்ல.

மேற்படி நூல் : உடல்நூல் (1934) பக்கங்கள் – 22, 23

730. Side Curtain – நடைபடுதா

ஒரு முறை இவ்வண்ணம் நடந்தபொழுது வள்ளி வேடம் பூண்ட ஆக்டர் – அவர் கொஞ்சம் புத்திசாலி – கொஞ்ச நேரம் நின்று பார்த்துவிட்டுச் சரேலென்று நடைப்படுதாவுக்குள் நுழைந்து போய்விட்டார். அப்பொழுதும் வள்ளியின் வர்ணனையை நமது அயன் இராபார்ட்ஆக்டர் விட்டபாடில்லை. பாட்டின் பல்லவியில் சங்கதிகளையும், ஸ்வரங்களையும் போட்டுப் பாடித் தீர்த்துவிட்டார். பாட வேண்டிய பாட்டுகளை யெல்லாம் பாடியான பிறகு திரும்பிப் பார்த்தார். வள்ளியை மேடை மீது காணோம். அவர் விழித்தார். சபையோர் சிரித்தனர்.

இதழ்     :               விநோதன் (1934)

⁠மலர் – 2. இதழ் – 3

கட்டுரை              :               ஆட்டமும் பாட்டும், பக்கம் – 49

கட்டுரையாளர்  :               இராவ்பகதூர். ப. சம்பந்த முதலியார், (ரிடையர்ட் ஜட்ஜ்)

731இரேழி – இடங்கழி

அவ்வளவில் அவ்வீட்டின் இடங்கழி (இரேழி) யில் படுத்திருந்த அவரது அன்னை தன் மகனை விளித்து ‘குழந்தாய்! இத்தன்மையை பாபத்திற்கு ஒரு தரம் – ராம – வெனக் கூறினால் போதும் என்பதாய் உனது தந்தை சொல்லக் கேட்டிருக்கின்றேன்; அப்படிக்கிருக்க, நீ மும்முறை கூறுமாறு சொல்கின்றாயே!’ எனக் கேட்டனள்.

நூல்        :               சிரீ பகவன் நாம போதேந்திர சுவாமிகள்

⁠ திவ்விய சரிதம் (1934) பக்கம் – 27

நூலாசிரியர்         :               மாந்தை. சா. கிருஷ்ணய்யர்

732. Room – உள்ளில்

ஓர் வீட்டின் தாழ்வாரத்தில் ஓர் அடி கண்ணாடி சுவரில் இருக்க, இரண்டு சிறு பையன்கள் கண்ணாடியைப் பார்க்க அவர்கள் சாயல் நிழல் கண்ணாடியில் தெரிய, அந்நிழல் சுவருக்கு உள் கூடத்தில்

இரண்டு தப்படியில் கண்டார்கள். சிறுவர்கள் பார்த்துக் கையை ஓங்கினார். நிழலும் ஓங்கியது. காலைத் தூக்கினர்ர்கள். நிழலும் தூக்க அந்த ரூமில் (உள்ளில்) இரண்டு பயல்கள் நம் வீட்டில் இருந்து கொண்டு கையை ஓங்கி அடிக்க வருகிறான், ரூமைத் திறந்து இழுத்துப் போட்டு அடிப்போம் வாங்கடா – என்று கதவைத் திறக்க ஓடினான்.

நூல்        :               அநுபவ ஆத்மஞான விளக்கம் (1934) பக்கம் -12

நூலாசிரியர்         :               வைத்திலிங்க சுவாமிகள்

⁠ மேலணிக்குழி குடிக்காடு.

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்

Sunday, June 4, 2023

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 722 – 726

(தமிழ்ச்சொல்லாக்கம் 704-721தொடர்ச்சி)

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 722 – 726

(சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.)

722. Foramen Magnum – பெருந்துளை

கபால எலும்புகளுக்குக் கீழாகவுள்ள விசாலமான அறையில் மூளை இருக்கிறது. கபாலத்தினடியில் பெருந்துளை (Foramen magnum) என்னும் பெரிய வட்டவடிவமான துவாரமிருக்கிறது. அது முதுகுக் கால்வாயோடு

மேற்படி நூல்      :               நூல் உடல்நூல் (1934)

⁠எலும்புச் சட்டம், பக்கம் -9

723. Joints – பொருத்துக்கள்

உடம்பில் பலவகையான பொருத்துக்க ளுள்ளன. ஒன்றின் மேலொன்று நழுவுதற்கேற்றவாறும் கதவுக் கீல் போலப் பொருந்தி அசைதற்கேற்றவாறும் பந்தும் கிண்ணமும் போல் பொருந்துதற் கேற்றவாறும் சுழியாணிபோல் பொருந்துமாறும் பொருத்துக்கள் அமைந்துள்ளன.

மேற்படி நூல்      :               நூல் உடல்நூல் (1934)

⁠பொருத்துக்கள் – பக்கம், 15, 16

724. Connective Tissue – சேர்ப்பு இழை

உடம்பின் மெல்லிய பாகங்களும் தசைகளும் பிற கருவிகளும் மெல்லிய சேர்ப்பிழைப் பின்னல்களால் ஒன்று சேர்த்துக் கட்டப்பட்டிருக்கின்றன. சேர்ப்பிழையானது சிலம்பி வலையினும் மிக நுண்ணிய இழைகளாலாய வலைகள லாக்கப்பட்டுள்ளது. அவற்றில் சில வெள்ளையாயும் இறுக்கமாயுமுள்ளன. மற்றவை மஞ்சள் நிறமாயும் தொய்வாயு முள்ளன.

மேற்படி நூல்      :               உடல் நூல் (1934) சேர்ப்பு இழை – பக்கம், 17

725. Capillaries – மயிரிழைக் குழல்கள்

இரத்தத்திலுள்ள சிறு கூடுகள் சுவாசப்பை வழியாகச் செல்லுங்காலத்தில் அங்குள்ள காற்றிலுள்ள உயிர்க்காலினை ஏற்றுக் கொள்கின்றன. அவை கருவிகளிலும் ஊனிழைகளிலுமுள்ள மயிரிழைக் குழல்கள் (Capillaries) வழியாகச் செல்லும் போது உயிர்க்காலினை அவற்றில் விட்டு விடுகின்றன.

மேற்படி நூல்      :               உடல் நூல் (1934) இரத்தம் – பக்கம் – 22

726. Lungs – மூச்சுக் கருவிகள்

மூச்சுக் கருவிகளென்பன நெஞ்சிற்குமேல் மார்பகத்திலுள்ள இரண்டு தொய்வுள்ள பைகளாகும். அப்பைகள் கடற் பஞ்சு போன்ற அமைப்புள்ளன. அவற்றிலுள்ள துவாரங்கள் காற்று நிறைந்திருப்பன.

மேற்படி நூல்      :               உடல் நூல் (1934) பக்கம் – 29

(தொடரும்)

உவமைக்கவிஞர் சுரதா

தமிழ்ச்சொல்லாக்கம்