Friday, June 28, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், பேச்சாளனின் எழுத்துரை



(அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், அணிந்துரையும் பதிப்புரையும்-தாெடர்ச்சி)

வணங்கி மகிழ்கின்றேன்.

உலகம் அறிவியலின் உறைவிடம்;
அறிவியல் உலகத்தின் உயிர்மூச்சு;
“உலகம் தழீஇயது ஒட்பம்” 1

என்னும் திருவள்ளுவர் வாய் மொழி இவை இரண்டின் புதையல். இவ்வாறு எழுதுவதை மிகைபட எழுதுவதாகவோ ஆர்வத்தை மட்டும் வெளிப்படுத்துவதாகவோ கருதுவோர் நூலினுள் புகுந்து வெளிவரின் புதையல்தான்’ என்று ஒப்புவர்.

அறிவியல் திருவள்ளுவம், அறிவியல் திருமகனாரின் அணிந்துரையால் அழகில் திகழ்கிறது. –

சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மாண்பமை முனைவர் க. ப. பொன்னுசாமி அவர்கள் இவ்வறிவுப் பொலிவை வழங்கிச் சிறப்பித்துள்ளார்கள்.

துணைவேந்தரவர்கள்.
அறிவியல் நெறித்துலாக்கோல்;
தமிழுணர்வின் தனிப்பேழை;
தூய உள்ளத்தின் துணிபொருள்;

நேர்மைப் பாங்கின் நிலைப் பொன். என் பால் பேரன்பும், பெருந்தகவும் நிறைந்த இனியவரின் நெஞ்ச வைரத்தை என் நன்றிப் பொன்னால் தாங்குகின்றேன்.

திருவள்ளுவர் நம்முன் தம்மை நிறுத்திப் பேசும், பட்டறிவுக் குறட்பாக்கள் மூன்று. ஒன்றில் அமைந்த “அறிவறிந்த“ என்னும் சொல் அறிவியலின் அறிமுகச் சொல்லாக அமைந்துள்ளமை தெளிவாக்கப்பெற்றுள்ளது.

முதற்சான்றாக ஒரு குறளில் ‘வான அறிவியல்’ புலனாக்கப்பெற்றுள்ளது.

“பிணியின்மை’ என்று துவங்கும் குறளில் நாட்டிற்கு அணியாம் ஐந்துகொண்டு பதினான்கு அறிவியற் கருத்துகள் புலனாக்கப் பெற்றுள்ளன. இதற்கு 85 குறட்பாக்கள் முழுமையாகவும் தொடராகவும் எடுத்தாளப் பெற்றுள்ளன.

இந்நூல் ஒரு பொழிவின் எழுத்துருவம். சுருக்கமான பொழிவை விளக்கி நூலாக்கியுள்ளேன்.

1980-இல் இரத்தினகிரியில் நிகழ்ந்த திருக்குறள் பேரவை மாநாட்டிலும், 1993இல் திருத்துறைப்பூண்டியில் நிகழ்ந்த தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்ற மாநாட்டிலும் ‘திருக்குறளில் அறிவியல்’ என்னும் தலைப்பில் உரை யாற்ற நேர்ந்தது. தமிழ்நாடு திருவள்ளுவர் திருமன்றத்தை நிறுவி இயக்கி வரும் திரு ப. முருகையன் அவர்கள் தன்னைத் திருவள்ளுவரடிமை ஆக்கிக் கொண்டவர். ‘திருக்குறளில் அறிவியல்’ உரையை எழுத்துருவாக்கித்தர வேண்டினார். எழுத்துருவ அமைப்பிற்கேற்ப ஆக்கினேன். ஆர்வமுடன் வெளியிடும் திரு முருகு அவர்களைப் பாராட்டி வாழ்த்தி நன்றி கூறுகின்றேன். அவர்தம் திருவள்ளுவப் பணிமாலையில் இந்நூல் ஒரு முத்து; திருவள்ளுவ முத்து: அறிவியல் முத்து.

என் நூல் மாலையில் ஒரு பொன்மணி.
அறிவியல் ஆக்கந் தரும்;
திருவள்ளுவப் பசியினர் பருகிச் சுவைக்கலாம்;
 புத்தகக் காதலர் புகுந்து பார்க்கலாம்;
அறிவியலார் அசைபோடலாம்.

வணங்கி அமைகின்றேன்.

கலைக்குடி
தஞ்சாவூர்-7

  1. ஒட்பம்-அறிவொளி.

Monday, June 24, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கிய இதழ்களும் ஆசிரியர்களும் – க

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒள – தொடர்ச்சி)

  1. சனவிநோதினி ஆகட்டு, 1874
  2. தேசோபகாரி மார்ச்சு, 1883
  3. சிரீலோக ரஞ்சனி சி. கோ. அப்புமுதலியார் 15.8.1888
    கட்டுரை : கிறித்துமதம் முளைத்ததேன்? 1.5.1890
    பீமநகர் சங்காபிமானி 1.5.1890
    கட்டுரை : தி. மா. பழனியாண்டிபிள்ளை 1.5.1890
    கட்டுரை : ஓர் இந்து 15.9.1890
  4. மகா விகட தூதன் ஓர் இந்து 1.10.1988/90
    கட்டுரையாளர் : சான் டானியல் பண்டிதர் 4.4.1891
  5. பிரம்ம வித்தியா கட்டுரையாளர் சான்டானியல் பண்டிதர் 1.12.1891
  6. சநாநந்தினி ஆசிரியர் அன்பில் எசு. வெங்கடாசாரியார் மார்ச்சு 1891
  7. சீவரத்நம் – டி. ஆர். சந்திரஐயர், சென்னை 1902
    (வகை 1, மணி 1)
  8. யதார்த்த பாசுகரன் (சம்புடம்1 இலக்கம் 5) பக். 136 1902
    • வி. முத்துக் கமாரசாமி முதலியார் பி.ஏ, சென்னை
  9. விவகார போதினி – எ. நடேசபிள்ளை (திருவாரூர் பிளீடர் 1904
  10. விவகாரி – ஏ. நடேசபிள்ளை, வக்கீல், மாயவரம் 1906
  11. செந்தமிழ் – கட்டுரை வீராசாமி ஐயங்கார் (செளமிய, மார்கழி)
    கட்டுரை : செபன்னிசா – முத்தமிடலின் வரலாறு
    எழுதியவர் வீ. சுப்பிரமணிய ஐயர் 1910
  12. விவேகபோதினி – சொல்லாக்கம் : சி. வி. சாமிநாதையர் 1911
  13. சித்தாந்தம் – பத்திராதிபர் : சித்தாந்த சரபம் அட்டாவதானம்
    சிவசிரீ – கலியாணசுந்தர யதீந்திரர் (சொல்லாக்கம் : பூவை கலியாண சுந்தர முதலியார்)
  14. தேசபக்தன் – திரு. வி. க. 2. 1. 1918
  15. தமிழ்நேசன் – கட்டுரை : எம்.சி.ஏ., அனந்தபத்மநாபராவ் 1919
  16. நல்லாசிரியன் – கா. நமச்சிவாய முதலியார் 1919
  17. நல்லாசிரியன் – (வயது 15, மாதம் 1)
    கட்டுரை : சி. வே. சண்முகமுதலியார் 1919
  18. செந்தமிழ்ச் செல்வி (பரல் 9, செப்டம்) 1925
    சொல்லாக்கம் – பிறாஞ்சீசுகு சூ. அந்தோனி
  19. ஒற்றுமை தொகுதி – 4. இதழாசிரியர் மு.ஏ. வீரபாகுபிள்ளை 1925
  20. பாலவிநோதினி கட்டுரையாசிரியர் கே. எசு. மணியன் திசம்பர், 1925
    கட்டுரை : திருவனந்தபுரம் தி. இலக்குமணபிள்ளை 1926

(தொடரும்)

Friday, June 21, 2024

அறிவியல் திருவள்ளுவம், கோவை இளஞ்சேரன், அணிந்துரையும் பதிப்புரையும்

 




காலத்தை வென்று வாழ்வன நல்ல இலக்கியங்கள். அந்தச் சிறப்பிற்கு ஓர் இலக்கியம் தகுதிபெற வேண்டுமானால் அஃது உண்மையைப் பேச வேண்டும். வளரும் அறிவியல் அந்த உண்மையைப் பகுதிகளாக அறிந்து நமக்குத் தெளிவுபடுத்தும். அப்படி அறிவியலால் அடையாளம் காணப்படும் உண்மையின் பகுதிகள், ஏற்கெனவே உருவாக்கப் பட்டுள்ள இலக்கியங்களுள் பொதிந்துள்ளன என்பதை உணர்ந்து, அந்தவாழும் இலக்கியங்களை ஆய்ந்தும், போற்றியும், பின்பற்றியும் மனித இன நன்மை பெறுகின்றது. அப்படிப் பெருமைபெறு இலக்கியங்களில், திருக்குறள் முதன்மையானது.

நல்லறிஞர்கள் பலரால், திருக்குறள் – திருவள்ளுவம் – நயம், சுவை, பொருள், இலக்கப்கோப்பு உள்ளிட்ட – பலவித ஆய்வுகளுக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகின்றது. இருப்பினும், இலக்கியத்தின் இலக்கும் “உண்மை” என்பதாலும், அவ்வுண்மை அறிவியல் பகுதிகளாக அவ்வப்போது வெளிக்கொணரப் பட்டுக் கொண்டிருப்பதாலும், வாழும் இலக்கியத்தையும் வளரும் அறிவியலையும் இணைந்து ஆராய்வதும், ஆராய்ந்து இணைப்பதும் தேவையாகின்றது.

அந்தத் தேவையை உணர்ந்து, கவிஞர்கோ கோவை, இளஞ்சேரனார் நூல்கள் படைக்க முனைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கின்றது. அவருடைய முனைப்பில் இப்போது உருபெற்றிருக்கும் ‘அறிவியல் திருவள்ளுவம்‘ என்கிற ஆய்வு நூலைப் படித்து மிக மகிழ்ந்தேன். அரசாண்மையிaல், வானவியல், மருத்துவம், உளப்பகுப் பாய்வியல், பொருளாதாரம், வேளாண்மையியல் உள்ளிட்ட பல்வேறுதுறைச் செயற்பாடுகளில் இன்றைய மனித இனம் கண்டறிந்துள்ளனவற்றைக் திருக்குறள் குறிப்புகளுடன் தக்கவாறு பொருத்தி ஆய்ந்திருப்பதைக் கண்டு வியக்கிறேன்.

தமிழர்தம் வளர்ச்சியின் தேவையறிந்து இந்நூலின் வாயிலாக, கவிஞர் இளஞ்சேரனார் திருக்குறளை ஒர் அறிவியல் நூலாக அடையாளம் காட்டியுள்ளார். இந்தப் புதிய பார்வையின் அடிப்படையில் அவருடைல் ஆய்வுப்பணியும், எழுத்துப்பணியும் தொடர பயில்பவர் உலகம் அவருக்கு ஊக்கமளிக்க வேண்டும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

சென்னை-600005

திசம்பர்-23, 1994

அன்பன்,

0000

திருவள்ளுவம் மாந்த வாழ்வு சிறப்புறத் தேவையான அனைத்து அறிவையும் தெளிவுபடுத்தும் ஒப்பற்ற நூல்.

அறிவியல் (விஞ்ஞான) கருத்துகளின் மூலக்கூறுகளைத் தெரியப்படுத்தும் அறிவியல் நூல்.

இந்த நூல் மூலம் ஆசிரியர், திருவள்ளுவம் அறிவியல் அடிப்படையில் அமைந்துள்ளதை அக்குவேறு ஆணிவேறாகச் சான்றுகளுடன் விளக்கியுள்ளார்.

இந்நூலாசிரியர் திருமிகு. கவிஞர்கோ. கோவை. இளஞ்சேரனார் தமிழுலகுக்கு நன்கு அறிமுகமானவர். தமிழ்ப் பல்கலைக்கழகப் பதிப்புத்துறை இயக்குநராகப் பல்லாண்டுகள் பணிபுரிந்தவர். சிறந்த எழுத்தாளர்; பேச்சாளர்; தமிழ்ப்பற்றாளர்; திருவள்ளுவம் பரவ உழைப்பவர்.

பேரறிஞர் அண்ணா வழி நடப்பவர்; கலைஞரின் அன்புக்குரியவர். பகுத்தறிவு பாதை மாறாதவர்.

அன்னாரின் இந்த நூலை வெளியிடுவதில் நாங்கள் மெத்தவும் மகிழ்கின்றோம்.

தமிழுலகம் எமக்கு அரவணைப்பு நல்கி எம்மை ஊக்குவிக்க வேண்டுகிறோம்.

நூலாசிரியர் அவர்களுக்கு எம் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இராசாபுரம் 614806

தி.ன. 2025 கார்த்திகை 10
(1994)

(பதிப்புத்துறை)

Monday, June 17, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒள

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ – தொடர்ச்சி)

216.       வாயு சங்கிதை – குலசேகர வரகுணராம பாண்டியர்  

217.       தமிழ்நூல் வரலாறு – பாலூர் கண்ணப்ப முதலியார்   1962

218.       தமிழ்நாடு பயணக் கட்டுரைகள் – அரு. சோமசுந்தரம்  1968

– தொகுப்பு ஏ.கே. செட்டியார்  

219.       சுரதா பொங்கல் மலர் – கட்டுரை – இராம. அரங்கண்ணல்  1970

220.       தமிழ்க்காவலர் முருகு சுப்பிரமணியன் பொன்விழா மலர்    1976 : பரிதா மணாளன்

221.       தமிழ் இதழியல் வரலாறு – மா.சு. சம்பந்தன்    1977

222.       அமரர் கலைமாமணி கவிஞர் வானம்பாடி வாழ்க்கைக் குறிப்பு     1987

223.       முதன்முதலாக உலகில் நடந்த நிகழ்ச்சிகள்     1992

224.       பாரதியார் கவிதைகள் ⁠- தொகுப்பு : சுரதா கல்லாடன்

225.       திரிகடுகவுரை – திருக்கோட்டியூர் இராமாநுசாசாரியார்      

226.       செந்தமிழ் நூன்மாலை ⁠- கோ. வடிவேலு செட்டியார், ஆ. நா. கன்னையா

227.       சிரீ ராமநாத மான்மியம் – ச. பொன்னம்பல பிள்ளை  

228.       ஆத்ம சோதனை – சுத்தானந்த பாரதியார்

229.       விசுவகர் மோபதேச வீரகண்டாமணி    

⁠- பதிப்பித்தவர் . பி. கல்யாணசுந்தராசாரி

(தொடரும்)

Monday, June 10, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஓ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ – தொடர்ச்சி)

201.       திருச்சிறு புலியூர் உலா 1951

குறிப்புரை : கி. இராமாநுசையங்கார்     

202.       மறைமலையடிகள் – புலவர் அரசு  1951

203.       கூட்டுறவு அல்லது ஐக்கிய வாழ்வு – அ. அருளம்பலம்      1952

204.       சீனத்துச் செம்மல் – புலிகேசி 1952

205.       பணம் – ரெ. சேசாசலம்     1953

206.       நான்கண்ட சப்பான் – சு. இராமசுவாமி நாயுடு  1953

207.       பழந்தமிழரும் முருகன், முக்கண்ணன் வணக்கமும்    1954

– டாக்டர் தி. இரா. அண்ணாமலைப்பிள்ளை     

208.       தென்னிந்திய இசை உலகம் – எசு. மாணிக்கம் 1944

209.       புதுமைப்பித்தன் கட்டுரைகள்  1954

210.       தமிழில் தந்தி – அ. சிவலிங்கம்     1955

211.       சினிமா நட்சத்திரங்களின் இரகசியங்கள்    1955

⁠- சு. அ. இராமசாமிப் புலவர்

212.       தமிழ்ப் புலவர் வரிசை (12ஆம் புத்தகம்)   1955

– சு. அ. இராமசாமிப் புலவர்  

213.       பயிற்சித் தமிழ் – தென்புலோலியூர் மு. கணபதிப்பிள்ளை   1956

214.       எழிலன் கவிதைகள் – வலம்புரி எழிலன்  1957

215.       கட்டுரைப் பொழில் – அ. மு. சரவண முதலியார்     1958

(தொடரும்)

Monday, June 3, 2024

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஒ

 




(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச் சொல்லாக்கம் : சொற்கள் வழங்கியநூல்களும் ஆசிரியர்களும் – ஐ – தொடர்ச்சி)

181.       சிறுவர் தமிழிலக்கணம் 1945

– வே. வேங்கடராசுலு ரெட்டியார் 

182.       தமிழ் இசைக் கருவிகள் 1945

– பி. கோதண்டராமன்   

183.       பஞ்சாக்கர தேசிகர் அந்தாதி   1945

– வி. சிதம்பர இராமலிங்க பிள்ளை   

184.       சைவ சமய விளக்கம் – அ. சோமசுந்தர செட்டியார்   1946

185.       பெரியாழ்வார் பெண்கொடி    1947

– பண்டிதை எசு. கிருட்டிணவேணி அம்மையார் 

186.       சம்சார நெளகா அல்லது வாழ்க்கைப் படகு      1940

(பாட்டுப் புத்தகம், தமிழாக்கம் : பி. ஆர். பந்துலு

187.       மக்களின் கடமை – செம்மலை அண்ணலாரடிகள்     1948

188.       திராவிட நாடு (முதல் பாகம்)- அ. கு. பாலசுந்தரனார் 1949

189.       களஞ்சியம் – இரா. நெடுஞ்செழியன் 1949

190.       கவிஞன் உள்ளம் – ந. சுப்பு ரெட்டியார்    1949

191.       சொல்லாராய்ச்சிக் கட்டுரைகள் – ஞா. தேவநாயனார்  1949

192.       தமிழ்ப் பெருமக்கள் – எசு. எசு. அருணகிரிநாதர்     1949

193.       மனித இயல்பு – திருத்தேவர் பழநியப்பக் கவுண்டர்   1949

195.       அறிவியல் கட்டுரைகள் – பேரா. பி. இராமநாதன்      1949

195.       கட்டுரை விளக்கம் – ஆர். கன்னியப்ப நாயகர்  

196.       இராசா. விக்கிரமா (திரைப் பாடல் புத்தகம்) 1950

– பாடலாசிரியர் : சிதம்பரம் ஏ. எம். நடராசகவி (சொல்லாக்கம்)   

197.       தமிழ் உள்ளம் சி. சுப்பிரமணியபிள்ளை   1950

198.       தமிழ்ப்பணி 1950

199.       நாளியல் விளக்கம் பஞ்சாங்கம்     1951

– சோ. அருணாசல தேசிகர்   

200.       குட்டிக் கட்டுரைகள் – வித்துவான் ந. சுப்பிரமணியன்   1951

(தொடரும்)