Wednesday, August 27, 2025

வெருளி நோய்கள் 326 – 330 : இலக்குவனார் திருவள்ளுவன்

     28 August 2025      கரமுதல



(வெருளி நோய்கள் 321 – 325 : தொடர்ச்சி)

புனைவுரு இராட்டென்(Rotten) குறித்த வரம்பற்ற பேரச்சம் இராட்டென் வெருளி.
இரக்கமற்ற, பேராசை கொண்ட, சோம்பேறித்தனமான, முட்டாள்தனமான, கிறுக்குத் தனமான வஞ்சகனான அசைவூட்டப் பாத்திரம்.
இத்தகைய இயல்பு உள்ளவர்கள் மீது எரிச்சலும் சினமும் வெறுப்பும் கொள்பவர்களுக்கு இராட்டென் மீது வெருளி வருவது இயற்கைதானே.
00

புனைவுரு இரால்பி தென்னெலி (Ralphie Tennelli) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரால்பி வெருளி.
இவர் முழுப் பெயர் இரால்பு அலெக்குசாண்டிரோ கியூசெப்பு தென்னெலி(Ralph Alessandro Giuseppe Tennelli) என்பதாகும். தென்னெலி என்பது முன்பு தின்னெலி(Tinelli) என அழைக்கப்பட்டது.
வாக்கர்வில் (Walkerville) தொடக்கப்பள்ளியில் திருமதி ஃபியோனா ஃபிரிசிலின்(Fiona Frizzle) வகுப்பில் படிக்கும் மாணவி.
இரால்ஃபிக்கு விளையாட்டு, பகற்கனவு காண்பது, தூக்கத்தில் உரத்துக் குறட்டை விடுவது பிடிக்கும். இவையெல்லாம் பிடிக்காதவர்களுக்க இரால்ஃபி மீது வெருளி ஏற்படுகிறது.

00

பருமைப்பல்லியின் தோற்றம் கொண்ட புனைவுரு இரிஃபி(Riff) மீதான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் இரிஃபு வெருளி.
இரிஃபு என்பது பருமைப் பல்லியைக் குறிக்கும்.(Hadrosaurid – hadrளs என்னும் கிரேக்கச்சொல்லின் பொருள் பருமனான, தடித்த saணra – பல்லி)
மொராக்கோ நாட்டிலுள்ள இரிஃபு மாவட்டத்திலுள்ள தொல்பழங்குடியினர் பெயரும் இஃரிபுதான்.இரிஃபு என ஓர் இசைவகையும் உள்ளது. ஆனால் இவற்றிற்கும் இதற்கும் தொடர்பு இல்லை.

00

இரு நாழி குப்பி குறித்த வரம்பற்ற பேரச்சம் இரு நாழி குப்பி வெருளி.
அளவைக்கலனான நாழி(இலிட்டர்) இரண்டு கொண்ட கொள்ளளவு உடைய குப்பி மீது ஏற்படும் பேரச்சம்.
படி என்பதன் மறு வழக்காகப் படி என்றும் சொல்லப்படுகின்றது. நாழி என்பதைச் சிலர் காற்படி என்றும் சிலர் அரைப்படி என்றம் குறிப்பர். சாமபசிவம் மருத்துவ அகராதி 5 ஆழாக்கு கொண்டது நாழி; 8 ஆழாக்கு கொண்டது 1 படி எனக் குறித்துள்ளது. இங்கு 2 ‘இலிட்டர்’ அளவு கொண்ட குப்பியைக் குறிப்பதால் மருத்துவ அகராதியின் படி நாழி என்பதைக் குறிச் சொல்லாகக் கொண்டு இருநாழி எனக் குறிக்கப்பட்டது.
00

இரட்டை நோக்கி குறித்த வரம்பற்ற பேரச்சம் இரு நோக்கி வெருளி.
இரு நோக்கி என்றால் இரு நோக்கிகள் எனப் பொருள் அல்ல. இரட்டை நோக்கி எனப் பொருள் கொள்ள வேண்டும்.
இரட்டை என்னும் பொருள் கொண்ட பைனசு(bīnus) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவானதே பைனா
00

Tuesday, August 26, 2025

வெருளி நோய்கள் 321 – 325 : இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 316 – 320 : தொடர்ச்சி)

இரத்தக்காட்டேரி குறித்த அளவுகடந்த பேரச்சம் இரத்தக் காட்டேரி வெருளி.
இரத்தக்காட்டேரிகள் குறித்துத் திகில் படங்களில் பார்ப்பவர்கள், இரத்தக்காட்டேரி குறித்த படம், காட்சி, செய்தி முதலியவைபற்றிப் பேரளவு அச்சம் கொள்கின்றனர்.

தமிழ் நாட்டவர் அணங்கு வெருளி என்றும் சொல்லலாம். அணங்கு தெய்வப் பெண்ணாகவும் கொலை செய்பவளாகவும் இரு வகைகளில் குறிக்கப் படுகின்றது. எனவே, அணங்கு குறித்தும் காரணமற்ற பேரச்சம் உள்ளது.
00

புனைவுரு இரத்துபரன்(Ratburn) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரத்துபரன் வெருளி.
ஆர்தர் அசைவூடடப் படத்தில் உள்ள பாத்திரம்.
00

இரவு மேசை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இரவு மேசை வெருளி.

இரவுமேசை என்பதை இடக்கரடக்கல் சொல்லாகக் கருதலாம். இரவு நேரத்தில் அறைக்குள்ளேயே சிறுநீர் கழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் கழிகலனையே குறிக்கிறது. இதனை அறை மிடா, சிறுநீர் மிடா chamber pot/chamberpot, piss pot என்றும் குறிப்பர். பெரும்பாலும் கட்டிலுக்கடியிலும் சிறுபான்மை அறையின் மூலையிலும் இதனை வைத்திருப்பர். சிறுநீர் நாற்றத்தால் பெருவெறுப்பும் பேரச்சமும் கொள்கின்றனர்.

நேர் பொருளாக இல்லாமல் உரிய பொருளாக இரவுக் கழிகலன் வெருளி என்று சொல்லலாம். ஆனால் தவறாகக் குறித்துள்ளதாகக் கருதுவர். எனவேதான் இடக்கரடக்கடலாக இரவு மேசை என்றே குறித்துள்ளேன்.

சிறைச்சாலைகளிலும் சீர்திருத்தப்பள்ளிகளிலும் இரவுக் கழிகலன் பயன்பாடு உள்ளது. ஆனால், சிறுநீர் கழிப்பதற்காக மட்டுமல்லாமல் மலம் கழிக்கவும் பயன்படுத்துகின்றனர். இதனால் நாற்றம் பொறுக்க முடியாமல் வெருளி கொள்கின்றனர்.

Naitosutando” (ナイトスタンド) என்பது பெரும்பாலோர் பயன்படுத்தும் “nightstand” என்பதன் சப்பானிய ஒலிபெயர்ப்புச் சொல். ஆனால் உண்மையான சப்பானியச்சொல் “naito teburu” (ナイトテーブル). என்பதாகும்.

அகராதிகளில் பொதுவாக இரவு மேசை எனக் குறித்திருப்பதாலும் மேசைக்கான படமே வெளியிட்டுள்ளமையாலும் நான் முதற்பதிப்பில் மேசை படத்தையே வெளியிட்டிருந்தேன். இருப்பினும் இக்கருத்திற்கு உடன்படாமையால் மேலும் ஆராய்ந்து பார்தது உரிய படங்களை இப்பதிப்பில் வெளியிட்டுள்ளேன். உரிய விளக்கத்தையும் அளித்துள்ளேன்.

00

இரவு விளக்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் இரவு விளக்கு வெருளி.

yèdēng” (夜灯) என்பது ஒரு சீனச்சொல். இதன் பொருள் இரவு விளக்கு, இரவு ஒளி என்பன வாகும். பொதுவாகச் சுற்றுப்புற ஒளிக்காக அல்லது அறை ஒளிக்காகப் பயன்படுத்தப்படுவது.

இரவு வெருளி, இருட்டு வெருளி முதலியவற்றிற்கு எதிர்நிலையானது இது.

00

இரவு குறித்த அளவுகடந்த பேரச்சம் இரவு வெருளி.

இருட்டு குறித்து அஞ்சுபவர்களுக்கு – இருட்டு வெருளி உள்ளவர்களுக்கு – இரவு வெளி வருவதுண்டு.
பொதுவாக இரவு நேரங்களில் திருட்டு, கொள்ளை, கொலை, கற்பழிப்பு முதலிய பல குற்றங்கள் நடப்பதால், இரவு கண்டு அச்சம் கொள்வோர் உள்ளனர்.

nocti என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இரவு

00

(தொடரும்)

Monday, August 25, 2025

வெருளி நோய்கள் 316 – 320 : இலக்குவனார் திருவள்ளுவன்

 ஃஃஃ         26 August 2025      அகரமுதல



(வெருளி நோய்கள் 311 – 315 : தொடர்ச்சி)

புனைவுரு இயேன் இரீடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயேன் இரீடு வெருளி.
ஆர்தர் என்பது மார்க்கு பிரவுன்(Marc Brown), கேத்தி வா(Kathy Waugh) ஆகியோரால் உருவாக்கப்பட்ட தொலைக்காட்சித் தொடர்.
இதில் வரும் இயேன் இரீடு மீதான பேரச்சத்தையும் அதனால் வரும் வெருளியையுமே குறிப்பது இது.
00

புனைவுரு இரஃபேல்(Raphael) குறித்த வரம்பற்ற பேரச்சம் இரஃபேல் வெருளி.
பதினகவை சடுதிமாற்ற நிஞ்சா கடலாமைகள்(Teenage Mutant Ninja Turtles) உலகில், இரபேல் பெரும்பாலும் பூச்சிகள் மீது கடுமையான வெறுப்பைக் கொண்டவராகச் சித்தரிக்கப்படுகிறார். சில சமயங்களில் தீவிர அருவருப்பும் வெறுப்பும் கொண்டவராகக் காட்டப்படுகிறார். இவரால் எதிர்க்ப்படும் பூச்சிகளைக் கண்டு அச்சம் கொண்டும் பூச்சி மீதான வெறுப்பைப் பார்த்தும் வெருளி கொள்கின்றனர்.
00

இரட்டைப்படை எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் இரட்டைப்படை எண் வெருளி.

இரட்டைப்படை எண் வரும் நாளில் முதன்மைப் பணியை ஆற்றாதிருத்தல், இரட்டைப்படை எண் வீட்டிற்குக் குடிபோகாமல் இருத்தல் என எல்லா நேர்வுகளிலும் இரட்டைப்படை எண்களை இவர்கள் தவிர்ப்பர்.

omalos + numerus ஆகிய கிரேக்கம் + இலத்தீன் சொற்களுக்கு இரட்டைப்படை எண் எனப்பொருள்.

00

எண் இரண்டு குறித்த காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் இரண்டாம எண் வெருளி.
இரண்டு இரண்டாக உள்ள இணை, இரு கூறாக உள்ள பகுப்பு, இருமை வாதம் முதலியன மீதும் இத்தகையோருக்குப் பேரச்சம் வரும்.
00

இரண்டாம் நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் இரண்டாம் நிலை வெருளி.
Deftero என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இரண்டாவது.
00

(தொடரும்)

Sunday, August 24, 2025

வெருளி நோய்கள் 311 – 315 : இலக்குவனார் திருவள்ளுவன்




(வெருளி நோய்கள் 306 – 310 :  தொடர்ச்சி)

வலிப்பு நோய் குறித்த அளவு கடந்த பேரச்சம் வலிப்பு வெருளி.
இயற்பொருள்வாதம் தொடர்பான தேவையற்ற பேரச்சம் இயற்பொருள் வாத வெருளி

hyle என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காடு. எனவே, காடுகளின் வெருளி என்கின்றனர். Hylophobia என்பதுதான் அடவிவெருளி / காடு வெருளி/ கானக வெருளி. அவ்வாறே நாம் வரையறுத்துக் கொள்வதுதான் குழப்பமின்றி இருக்கும்.

தத்துவத்துறையில் hyle என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் இயற்பொருள் வாதம் என்ற அடிப்படையில் இயற்பொருள் வாத வெருளி என்கின்றனர். மருத்துவத் துறையில் வலிப்பு வெருளி என்கின்றனர்.
00

    புனைவுரு கதைப்பாத்திரமான இயெலுடா(Zelda) குறித்த அளவுகடந்த பேரச்சம் இயெலுடா வெருளி.
    புதின எழுத்தாளர் பிரான்சிசு சுகாத்தர் ஃபிட்டுசெராலுடு(Francis Scott Fitzgerald) என்பாரின் மனைவி, புதின ஆசிரியரும் நாட்டிய நங்கையுமான இயெலுடா ஃபிட்டுசெராலுடு(Zelda Fitzgerald) ஆவார். இவரது பண்புநலன்களால் ஈர்க்கப்பட்டு இக்கதைப்பாத்திரத்திற்கு இவர் பெயரைச் சூட்டிஉள்ளனர்.
    00

    புனைவுரு இயென்னா மோர்கன்((Jenna Morgan) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயென்னா மோர்கன் வெருளி.
    இயென்னா மோர்கன் (Jenna Morgan) ஆர்தர் படப்புத்தகங்கள், அசைவூட்டப்படங்கள் ஆகியவற்றில் இடம் பெறும் புனைவுருப் பெண் பாத்திரம்.
    00

    இயேசுநாதர் மீதான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் இயேசு வெருளி.
    கிறித்துவச் சமயத்திற்கும் கிறித்துவருக்கும் எதிரான பேரச்சமும் பெருங்கவலையும் இதனைச் சார்ந்ததே. கிறித்துவெருளி (Christophobia), கிறித்துவர் வெருளி (Christianophobia) ஆகியவற்றுடன் தொடர்புடையதே.
    00

    புனைவுரு இயேனட்டு பெரிலிசுடைன் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயேனட்டு பெரிலிசுடைன் வெருளி.
    இயேனட்டு பெரிலிசுடைன், ஆர்தரின் அசைவூட்டப் படத்தில் வரும் புனைவுரு. அருனாலுடின் அனைத்தையும் அறிந்த, ஒரே உறவினர் இவர்தான். இவர் நிறைய தற்பெருமை பேசுபவராகவும் உள்ளார். இதனால் இவர்மீது எரிச்சலுற்று வெருளியாக மாறுகிறது.
    00

    (தொடரும்)

    Saturday, August 23, 2025

    வெருளி நோய்கள் 306 – 310 : இலக்குவனார் திருவள்ளுவன்



    (வெருளி நோய்கள் 301 – 305 :  தொடர்ச்சி)

    1. இயந்திரன் வெருளி – Robophobia
      இயந்திரன்(robot) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயந்திரன் வெருளி.
      இயந்திரங்கள் மனிதர்கள்போல் செயற்படுவதால் அதுகண்டு அச்சம் கொள்கின்றனர். எந்திரன் மனிதர்களின் வேலைகளைப் பறிப்பதாக எண்ணி அதனாலும் கவலையும் பேரச்சமும் கொள்கின்றனர்.
      செக்கு, சுலோவியா சொல்லான (Czech and Slovak) robota என்பதிலிருந்து Robo சொல் உருவானது.

    00

    1. இயல் வானிலை வெருளி – Serenophobia
      இயல் வானிலை(Fair Weather) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இயல் வானிலை வெருளி.
      சூரியனுக்கும் காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உள்ளதால், இது சூரிய வெருளியுடன் (heliophobia) தொடர்புடையது.
      Sereno என்னும் இலத்தீன் சொல்லிற்கு இயல் வானிலை எனப் பொருள். மப்பும் மந்தாரமும் அற்ற நிலையைக் குறிக்கும்.
      00
    2. இயல்பு வெருளி – Nomiedophobia
      இயல்பு நிலை குறித்த வரம்பற்ற பேரச்சம் இயல்பு வெருளி.
      மக்களிடம் இயல்பாக உள்ள ஆர்வம், சுவை, நம்பிக்கை, பழக்க வழக்கம் உள்ள இயல்பான மனிதன் மீதான அளவுகடந்த பேரச்சத்தை இது குறிக்கின்றது. இயல்பான நிலையில் உள்ளவர்கள் சலிப்பிற்கு உரியவர்கள் என இவர்களைக் கண்டு வெறுப்போரும் அஞ்சுவோரும் உள்ளனர்.
      இதனைச் சிலர் அறிவுத் துறைகள் வெருளி என விளக்கியுள்ளனர். Ologypediaphobia என்பதுதான் அறிவியல் துறைகள் வெருளி.

    Normie என்றால் இயல்பான நிலை எனப் பொருள். இச்சொல்லில் இருந்து உருவானதே Nomiedo(phobia).
    00

    1. இயற்பாட்டு வெருளி – Naturophobia
      இயற்கையாக அமையும் வானிலை, மூடுபனி, இடி, சுழற்காற்று, அலை ஓட்டம், நில அரிப்பு, நில நடுக்கம், எரிமலைச் சீற்றம், நில நடுக்கம், கடல்கோள் முதலான நிகழ்வுகள் அல்லது பேரழிவுகள் தொடர்பான அளவு கடந்த பேரச்சம் இயற்பாட்டு வெருளி.
      இயற்கைச் சீற்றங்கள், இயற்கையால் ஏற்படும் சீர்குலைவுகள் வரும் என முன் எச்சரிக்கை தெரிவிக்கும் பொழுதே மக்களுக்குப் பெருங்கவலையும் பேரச்சமும் ஏற்பட்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.

    00

    1. இயற் பொருள் வெருளி – Physophobia
      இயற் பொருள் குறித்த வரம்பற்ற பேரச்சம் இயற் பொருள் வெருளி.

    00

    (தொடரும்)

    Friday, August 22, 2025

    வெருளி நோய்கள் 301 – 305 : இலக்குவனார் திருவள்ளுவன்



    (வெருளி நோய்கள் 296 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன் – தொடர்ச்சி)

    1. இதயச் சீர் நோக்கி வெருளி – X!mzophobia
      இதயச் சீர் நோக்கி(heart monitor)பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் இதயச் சீர் நோக்கி வெருளி.
      இதயத்தின் மின் செயல்பாட்டை அளவிடும் ஆய்வுக்கருவியாகிய இதய மின்வரைவியே ECG அல்லது EKG என அழைக்கப்படுகிறது. C என்பதற்கு மாற்றாகச் செருமானிய மொழியில் K பயன்படுத்தப்படுகிறது.
      ஒழுங்கற்ற இதயத் துடிப்புகள், மாரடைப்பு, பிற இயல்பற்ற நிலைகள் முதலான பல்வேறு இதய நிலைகளைக் கண்டறிய உதவும் கருவி சரியாகச் செயற்படாமல் தவறாகக் காட்டுகிறதோ என்ற பேரச்சம் கொள்கின்றனர்.
      .
      00
    2. இதள் வெருளி – Hydrargyophobia
      இதள்(பாதரச) மருந்துகளின் மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் இதள் வெருளி.
      இதள் நச்சினால் தசை தளர்வு, கை, கால்களில் அரிப்புத்தன்மை, தோல் தடிப்புகள், மயக்கம், பேசுவதில் இடர்ப்பாடு, கேட்பதில் சிக்கல், பார்வைக் கோளாறு போன்றவை ஏற்படுகின்றன. எனவே, இதள்மருந்து மீது அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
      இதளை(பாதரசத்தை) விரைவு வெருளி(quick silver) என்றும் அழைக்கின்றனர்.
      “hydrargyros,” என்னும் கிரேக்கச் சொல்லின் இலத்தீன் வடிவமே “hydrargyrum” என்பது. இதன் பொருள் நீர்மவெள்ளி/திரவ வெருளி. திரளுதன் என்பதன் அடிப்படையிலான திரவம் தமிழ்ச்சொல்லே.

    00

    1. இந்தியன் வெருளி – Indophobia
      இந்தியர்கள் அல்லது தெற்கு ஆரியர்கள் மீதான அளவுகடந்த பேரச்சம் இந்தியர் வெருளி.
      வெளிநாடுகள் பலவற்றில் இந்தியர்களுக்கு எதிராகப் பேரச்சம் உள்ளது. எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டுமானால் 2010இல் ஆத்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக 152 தாக்குதல்கள் பதிவாகியுள்ளன. இவற்றுள் 23 இனவெறி அடிப்படையிலானவை.
      இந்தியர்களின் திறமை, குறைந்த ஊதியத்தில் வேலை பார்த்தல் போன்றவற்றால் பொறாமை கொண்டும் தங்களின் பணிப்பாதுகாப்பு கேள்விக்குறியாவதாகக் கவலை கொண்டும் பேரச்சம் கொள்கினறனர். சில இடங்களில் இந்தியர்கள் சிலரின் அடாவடிச் செயல்களும் இதற்குக் காரணமாக அமைகின்றன.
      00
    2. இப்பி வெருளி – Ostraconophobia
      இப்பி(சிப்பி) மீதான அளவுகடந்த பேரச்சம் இப்பி வெருளி.
      கிரேக்கச் சொல்லான ளstrakon என்பது இப்பி/சிப்பி முதலிய வல்லோட்டு உயிரியைக் குறிக்கிறது. இதனை மட்டி மீன் என்றும் சொல்கின்றனர்.

    (தொடரும்)

    Thursday, August 21, 2025

    வெருளி நோய்கள் 296 – 300 : இலக்குவனார் திருவள்ளுவன்



    (வெருளி நோய்கள் 291 – 295 தொடர்ச்சி)

    296. இடை ஓய்வு வெருளி –  Relaxationphobia

    இடை ஓய்வு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இடை ஓய்வு வெருளி.

    Relaxation என்றால் பணிக்களைப்பால் பணிக்கு இடையே சற்று எடுக்கும் ஓய்வு. இதனை இளைப்பாறுதல் என்பதே சரி.ஆனால், இறைப்பாறுதல் என்பதைத் தூக்கம் என்னும் பொருளிலும் அதன் அடிப்படையில் மீளாத் தூக்கம் அடைதல் என்னும் பொருளிலும் பயன்படுத்துகின்றனர். எ.கா. மேரியம்மாள் கருத்தருடைய இளைப்பாறுதலுக்குள் நுழைந்தாள்.

    எனவேதான் இடை ஓய்வு எனக் குறித்துள்ளேன்.

    00

    297. இடைக்கோட்டு வெருளி – Bindaphobia

    இடைக்கோடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இடைக்கோட்டு வெருளி.

    நீளமான வரிகளை மடக்கி எழுதும்போது உடைபடும் சொல்லைக் குறிப்பதற்கோ  இரு சொற்களை இணைத்துக் காட்டுவதற்கோ கையாளப்படும் முறையை இடைக்கோடு இடல் அல்லது பிணைக்கோடு இடல் (Hyphenation) என்பர். நிறுத்தற்குறிகளில் ஒன்றான இதை    ‘   ‘  எனக் குறிக்கின்றனர்.

    அந்தந்தமொழி மரபுகளுக்கேற்ப இடைக்கோடு இடுவது பின்பற்றப்படுகிறது.

    00

    298. இடைவிலகல் வெருளி – exterviaphobia

    இடைவழியிலிருந்து விலகுவது குறித்த அளவுகடந்த பேரச்சம் இடைவிலகல் வெருளி.

    ஒரு திட்டம் அலலது ஒரு பணி அல்லது ஒரு செயற்பாட்டிலிருந்து இடையில் விலக நேரிடுவது குறித்த வெருளியுமாகும்.

    பள்ளியிலிருந்து மாணாக்கர்கள் கல்வியாண்டு இடையில் நிற்பது அவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் ஏற்படும் பெருங்கவலையைவிடக் கல்வியாளர்களுக்கும் அரசிற்கும் பெருங்கவலையறிப்பதாக உள்ளது.

    exter என்றால் கிரேக்கத்தில் வெளிப்புறம் என்றும் via வழி என்றும் பொருள்.

    exter என்றால் இலத்தீனில் தன்னியல்பான எனப் பொருள். இலத்தீனிலும் via என்றால் வழி என்றுதான் பொருள்.

    00

    299. இணைய அமைப்பு வெருளி – Forumphobia

    இணைய அமைப்பு குறித்த வரம்பற்ற பேரச்சம் இணைய அமைப்பு வெருளி.

    ஒரு பொது நோக்கத்திற்காக அமைக்கப்படும் மன்றம்,அவை,பேரவை என எந்த ஒரு குழுவும் அமைப்புதான். எனினும் இங்கே இணையப்பயன்பாடு தொடர்பான இணைய அமைப்பே குறிக்கப் பெறுகிறது.

    இணைய அமைப்பில் இணைந்திருப்பதால், தேவைய்ற் சிக்கல் அல்லது அவப்பெயயர் அல்லது மானக்கேடு அல்லது இழுக்கு ஏற்படுமோ எனச் சிலர் வெருளிக்கு ஆளாகின்றனர். இது தேவையான எச்சரிக்கை உணர்வைத் தருவதே. எனினும் அளவுகடந்து போகும் பொழுது வெருளியாகிறது.

    00

    300. இணைய வணிக வெருளி – EBayphobia

    இணைய வணிகம்(Ebay) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இணைய வணிக வெருளி.

    இபே அல்லது ஈபே என்பது வலைவழி வணிக நிறுமம். உலகிலே பலவகைப் பொருட்களுக்கான மிகப்பெரிய இணையச் சந்தை இதுவே. யாரும் இபேயில் பெருட்களை விற்கவும் வாங்கவும் முடியும். பிறர் ஏமாற்றப்பட்ட  செய்திகளைக் கேள்விப்பட்டுப் பொருளின் தரம், மாற்றுப்பொருளை அனுப்பல், தரங்குறைந்த பொருட்களை அனுப்பல் முதலான கவலைகளால் பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.

    இணைய வணிகத்தில் ஈடுபடும்போது மோசடிப் பேர்வழிகள் குறித்த எச்சரிக்கையும் தேவை. பகுத்தறிவிற்கு ஒவ்வாத கவலைகளும் கூடா.

    00

    (தொடரும்)