Sunday, November 30, 2025

வெருளி நோய்கள் 751-755: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 746-750: தொடர்ச்சி)

காலணி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காலணி வெருளி.
காலணி காலைக் கடித்துவிடும், கால்கள் புண்ணாகி நடக்க முடியாது என்பனபோன்ற கவலைகளும் அவற்றால் காரணமற்ற பேரச்சமும் கொள்கின்றனர்.
Papoutsi என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் காலணி எனப் பொருள்.
00

காலணிப் பெட்டி(shoebox) குறித்த வரம்பற்ற பேரச்சம் காலணிப் பெட்டி வெருளி.
காலணி வெருளி(Papoutsiphobia). அடைப்பிட வெருளி (Claustrophobia) உள்ளவர்களுக்குக் காலணிப் பெட்டி வெருளி வர வாய்ப்புள்ளது.
00

காலநிலைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காலநிலை வெருளி.
மிகுதியான மழை,மிகுதியான வெயில், மிகுதியான குளிர், காலநிலையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் முதலியவற்றால் ஏற்படும் அளவுகடந்த பேரச்சமே காலநிலை வெருளி.

இடி மின்னல் வெருளி(ceraunophobia). வானிலை வெருளி(Astrophobia/ Astraphobia/keraunophobia/tonitrophobia/Meteophobia)) முகில் வெருளி(Nephophobia) உள்ளவர்களுக்குக் காலநிலை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

காலந்தவறாமைபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காலந்தவறாமை வெருளி.
காலந்தவறாமை என்பது சரியான உரியநேரத்தில் வருவதும் உரிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்வதுமான நற் பழக்கமாகும். மேலும் இது மற்றவர்களின் நேரத்திற்கு மதிப்புளிப்பதாகும். வெற்றிக்கு அடிப்படையுான நற்பண்புமாகும், சிறப்பான நேர மேலாண்மைக்கு உதவுகிறது
ஒழுக்கத்தை வளர்க்கிறது. நேரந்தவறாமையைப் பின்பற்றுபவர்கள் பெரும்பாலும் பொறுப்பானவர்களாகவும் நம்பகமானவர்களாகவும் பார்க்கப்படுகிறார்கள். இது நம்பிக்கையையும் நல்ல நற்பெயரையும் வளர்க்க உதவுகிறது. நேரந்தவறாமையை வளர்ப்பது சிறந்த ஒழுங்கமைப்பிற்கும், மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், அமைதியான வாழ்க்கைக்கும் வழிவகுக்கிறது.

எனவே, காலந்தவறாமையைப் பின்பற்றாவிட்டால் அவப்பெயர் ஏற்படும், திட்டமிடுதலைச் சரியாக முடிக்க முடியாது, பிறரின் சினத்திற்கு ஆளாக நேரிடலாம் எனக் கவலைப்பட்டுக்காலந்தவறாமை வெருளிக்கு ஆளாகின்றனர்.
திருவள்ளுவர், உரிய காலத்தல் செயலாற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் காலமறிதல் ஏன்னும் ஓர் அதிகாரத்தையே(எண் 49 திருக்குறளில் வழங்கியுள்ளார். சோம்பலின்றிச் செயற்பட்டால்தான் காலந்தவறாமையைப் பின்பற்ற முடியும் என்பதற்காக மடியின்மை என ஓர் அதிகாரத்தையும்(எண் 61) அளித்துள்ளார். பிற இலக்கியங்களிலும் இவை வலியுறுத்தப்படுகின்றன.
00

  1. காலப் பயண வெருளி – Chronohodophobia

காலப் பயணம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காலப் பயண வெருளி.
காலப் பயணம் என்பது கடந்த காலத்திற்கு அல்லது எதிர்காலத்திற்கு பயணிக்கும் ஒரு கற்பனைச் செயற்பாடாகும். இது, மெய்ம்மையியல்(தத்துவம்)புனைகதைகள், குறிப்பாக அறிவியல் புனைகதைகள் ஆகியவற்றில் இடம் பெறும் ஒரு கருத்தாகும். புனைகதைகளில், காலப் பயணம் பொதுவாக கால இயந்திரம் எனப்படும் ஒரு கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் இலக்கை அடைகிறது. கால இயந்திரம் என்ற கருத்தை எச்.சி.வெல்சின் 1895 ஆம் அறிமுஆண்டு வந்ந புதினமான கால இயந்திரம் (H. G. Wells,1895,The Time Machine) ]அறிமுகப்படுத்திப் பரவலாக்கியது.
00

(தொடரும்) 

Saturday, November 29, 2025

வெருளி நோய்கள் 746-750: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 742-745 தொடர்ச்சி)

கார நறுமண உணவு(spices and spicy food) குறித்த வரம்பற்ற பேரச்சம் கார மண வெருளி.
Aroma என்னும் செருமானியச் சொல்லின் பொருள்கள் நறுமணம், நறுஞ்சுவை.
00

காரச்சோமாரி(hot dog) குறித்த வரம்பற்ற பேரச்சம் காரச்சோமாரி வெருளி.
Chotdonk என்றால் காரச்சோமாரி எனப் பொருள்.
00

புனைவுரு கார்ஃபீல்டு(Garfield) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கார்ஃபீல்டு வெருளி.
சிம் தேவிசு(Jim Davis) என்பவரால் உருவாக்கப்பட்ட கார்ஃபீல்டு என்னும் படத்தின் முதன்மைப் பாத்திரமாக வரும் கற்பனைப் பூனையே கார்ஃபீல்டு.
00

புனைவுரு கார்லோசு இரமான் (Carlos Ramon) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கார்லோசு வெருளி.
கார்லோசு வாக்கர்வில் தொடக்கப்பள்ளி(Walkerville Elementary School)யின் மாணவன்.
00

காலக் கடப்பு பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காலக் கடப்பு வெருளி.
Telo என்றால் முடிவு என்றும் chrono என்றால் காலம் என்றும் பொருள். இணைந்து காலம் முடிந்துவிடுமோ என்ற அச்சத்தைக் குறிக்கிறது.
00

(தொடரும்) 

Thursday, November 27, 2025

வெருளி நோய்கள் 741: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 739-740: தொடர்ச்சி)

741. காத்திருப்பு வெருளி-Macrophobia

நீண்ட காலக் காத்திருப்பின் மீதான இயல்பு மீறிய தேவையில்லாப் பேரச்சமே காத்திருப்பு வெருளி.

பால் வாங்குவதற்கு, உணவுப்பொருள் வாங்குவதற்கு, பணம் எடுப்பதற்கு, பணத்தை வங்கியில் செலுத்துவதற்கு, பேருந்திற்கு, தொடரிக்கு எனப் பல நேரங்கள் நாம் வாழ்வில் நம் முறை வருவதற்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது;  மருத்துவரை அல்லது வழக்குரைஞரை அல்லது பிறரைச் சந்திக்கச் செல்லும் பொழுது நம் வரிசை வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற காத்திருப்பு மனக்கவலையையும் பேரச்சத்தையும் உருவாக்குகிறது.

காக்க வேண்டிய நேரத்தை முன் கூட்டியே அறியும் நேர்வுகளில் நாம் அதனைப் பயனுள்ள வகையில் செலவழித்தால் வெருளி வராது. நான் சிறைத்துறை நன்னடத்தை அலுவராகப் பணியாற்றிய பொழுது கைப்பையில், தாள், மைபடி(carbon) தாள், முத்திரை, உறை, அஞ்சல் தலை, கோந்து முதலியன வைத்திருப்பேன். சில பேருந்துகளுக்காக மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டும். அந்த நேரத்தில் அதற்கு முந்தைய உசாவல்(விசாரணை) அறிக்கையை எழுதி முடித்து அஞ்சலில் சேர்த்து விடுவேன். நேரம் வீணாகாததுடன் உடனுக்குடன் பணிகளும் முடிந்து விடும். 

காத்திருப்பதும் பிறரைக் காக்க வைப்பதும் எனக்குப் பிடிக்காது. எனவே, யாரையும் காணச்சென்றால் கையில் புத்தகத்துடன் செல்வேன். காத்திருக்கும் நேரம் பயனுள்ள வழியில் கழியுமல்லவா? எனக்கு இதன் தொடர்பிலான கடும் எரிச்சல் 3 முறை நிகழ்ந்துள்ளது. அவற்றுள் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மதுரை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநராக இருந்த பொழுது விருதுநகர் முதலான அண்டை மாவட்டங்களின் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் பணிப் பொறுப்பையும் கூடுதலாகக் கவனித்து வந்தேன். ஒரு செவ்வாயன்று வெள்ளிக்கிழமையே விருதுநகரில் ஆட்சி மொழிக் கருத்தரங்கம் நடத்தவேண்டிய அவசர வேலை வந்தது. விருதுநகர் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்கச் சென்றேன். அவர், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள மாவட்ட வருவாய் அலுவலர் என்றாலும் தன் ஒப்புதல் பெற்றே உட்புக வேண்டும் என்று கண்டிப்பாகப் பின்பற்றி வருபவர். காலங்கடந்தும் சந்திக்க இயலாமல் அவரது தலைமை ஏவலர், “நீங்கள் உள்ளே செல்லுங்கள். ஒன்றும் சொல்ல மாட்டார்” என்றார். நான், அனுப்பியுள்ள துண்டுச்சீட்டைப் பார்த்து அவர் அழைக்காமல் செல்ல விரும்பவில்லை என்றேன். நேரம் இரவு 8.00 ஐக் கடந்து விட்டது. அவருக்கு அந்த வளாகத்திலேயே மாளிகை உள்ளது. வெளியே செல்ல வேண்டுமென்றாலும் ஊர்தி உள்ளது. நான் மதுரைக்குச் சென்று அழைப்பிதழ் அடித்தல் முதலான பணிகளைப் பார்க்க வேண்டும். என் செய்வது? உடனே ஒரு துண்டுத்தாளில் “காத்திருப்பது என் பணியல்ல. எனக்கும் பல பணிகள் காத்திருக்கின்றன” என எழுதித் தலைமை ஏவலரிடம் கொடுத்தேன். அதைப் படித்துப் பார்த்த அவர் ஒன்றும் சொல்லாமல் ஆட்சியரிடம் சென்று கொடுத்தார். உடன் அவர் என்னை அழைத்தார். வரும் வெள்ளி ஆட்சிமொழிக் கருத்தரங்கம் நடத்துவது குறித்துக் கலந்து பேசித் திரும்பினேன். உடன் அவர் என்னை அழைத்து “நீங்கள் என்னிடம் முன் ஒப்புதல் பெற்று வந்திருந்தால் காத்திருக்க வேண்டி நேர்ந்திருக்காதே! பிற அலுவலர்களையும் அழைத்துச் சிறப்பாகத் திட்டமிட்டிருக்கலாமே”  என்றார். 

நான், உடனே அவரிடம் உங்களுக்குத் தொலையச்சு அனுப்பி ஒப்புதல் பெற்ற பின்பே வந்தேன். (நாடு முழுவதும் எங்கள் துறையில் தொலையச்சை நான் ஒருவன்தான் பயன்படுத்தி வந்தேன்.) உடன் அவர் அவரின் அணுக்க உதவியாளரை அழைத்தார்.  அவரிடம் நான் ஒப்புதல் கேட்டிருந்தேனா என்றார். அவர், ஆமாம், “நீங்கள் தலைமையிடத்தில்தான் இருக்கிறீர்கள் என்பதால் வரச் சொன்னேன்” என்றார். “இனி அவர் வருவது குறித்துத் தெரிவித்தால் உடன் என் தனிப்பட்ட கவனத்திற்குக் கொண்டுவாருங்கள்” என்றார் ஆட்சியர்.

“நான் வேறு சில மாவட்டப்பணிகளையும் பார்க்கின்றேன். மதுரையில் இருந்து நிகழ்ச்சி தொடர்பான ஏற்பாடுகளைப் பார்க்க வேண்டி உள்ளது. காத்திருப்பதில் நேரம் வீணானால் பிற பணிகளைப் பாரக்க நேரமிருக்காது. எனவேதான் அவ்வாறு எழுதிக்கொடுத்தேன்” என்றேன். “நீங்கள் சொல்வது சரிதான். என் அலுவலகத்தில்தான் தவறு செய்துள்ளனர்” என்றார்.

நான் மதுரை சென்றதும் அச்சகத்திற்குச் சென்று அழைப்பிதழ் அடித்து முடித்துவிட்டுத்தான் வீடடிற்குச் சென்றேன். நான் எழுத்தச்சைப் பயன்படுத்தாமல் கணியச்சைப் பயன்படுத்துவதால் உடன் பணி எளிதில் முடிந்தது. மறுநாள் காலை 8.00 மணியளவில் ஆட்சியர் முகாம் அலுவலகம்(வீடு) சென்று அவருக்குரிய அழைப்பிதழைக் கொடுத்தேன். “நீங்கள் மதுரை செல்ல 10.00 மணியாவது ஆகியிருக்கும். எப்படி அச்சடித்துக் காலையிலேயே வந்து விட்டீர்கள். அப்படியானால் காத்திருப்பது உங்கள் பணியல்ல என நீங்கள் எழுதியது மிகவும் சரிதான்” என்று ஆட்சியர் உடனடிச் செயல்பாட்டிற்கு வெகுவாகப் பாராட்டினார்.

இதுபோன்ற காத்திருப்பு தொடரும்பொழுதும் தொடர் கவலை ஏற்படும் பொழுதும் அது வெருளியாக வளரந்து விடுகிறது.

macro என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கால நீட்டிப்பு / நெடுங்காலம் எனப் பொருள். கலைச்சொல்லாக அமையும் பொழுது நீண்ட நேரக் காத்திருப்பைக் குறிக்கிறது. 

00

(தொடரும்)

Wednesday, November 26, 2025

வெருளி நோய்கள் 739-740: இலக்குவனார் திருவள்ளுவன்

 



(வெருளி நோய்கள் 734-738: தொடர்ச்சி)

காதல் திரைப்படம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதல் திரைப்பட வெருளி.
காதல் வெருளி உள்ளவர்களுக்குக் காதல் திரைப்பட வெருளி வர வாய்ப்புள்ளது. காதல் காட்சிகள் பார்க்கக்கூடிய வகையில் இல்லை என்று காதல் திரைப்படங்கள் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

காதல் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சமே காதல் வெருளி.
காதல் என்பது வாழ்க்கையின் வெறுக்கத்தக்க செயல் என எண்ணுவோர், பழமை வாதிகள், சாதி ஆணவக் குடும்பத்தில் சிக்கியுள்ளவர்கள், காதல் ஏமாற்றமான வாழ்க்கையே தரும் என எண்ணுநர், காதல் காட்சிளைக் கண்டு வெறுப்பவர்கள் எனப் பல தரப்பட்டோரும் காதல் வெருளிக்கு ஆளாகின்றனர்.
பாத காணிக்கை’ படத்தில் ‘எட்டடுக்கு மாளிகையில்’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில்
காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி.

எனக் காதல் தோல்வியால் கதைத்தலைவி பாடுவதாக வரும். இதுபோல் நிகழ்வுகளால் காதல் மீது பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கொள்வர் சிலர்.
இதில் விந்தையான நேர்வுகளும் உள்ளன. பெண்ணின் மீது விருப்பம் கொண்டு தங்களுக்குள் காதலித்துக் கொள்வர். ஆனால் அந்தப் பெண்ணும் விரும்புவதாக அறிந்தால் விருப்பு வெறுப்பாக மாறி விடுகின்றது.
ஒருதலைக்காதலும் காதல் முறிவும் கொலை முதலான துன்பியல் முடிவுகளைச் சந்திப்பதால் காதலை வெறுப்பவர்களும் உள்ளனர்.
காதலாட்ட வெருளி(Malaxophobia / Sarmassophobia) போன்றதுவே இதுவும்.
Philo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காதல்.
காண்க : பால்வினை வெருளி – Erotophobia
00

(தொடரும்)

வெருளி நோய்கள் 739-740: இலக்குவனார் திருவள்ளுவன்

     27 November 2025      கரமுதல



(வெருளி நோய்கள் 734-738: தொடர்ச்சி)

காதல் திரைப்படம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதல் திரைப்பட வெருளி.
காதல் வெருளி உள்ளவர்களுக்குக் காதல் திரைப்பட வெருளி வர வாய்ப்புள்ளது. காதல் காட்சிகள் பார்க்கக்கூடிய வகையில் இல்லை என்று காதல் திரைப்படங்கள் மீது அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

காதல் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சமே காதல் வெருளி.
காதல் என்பது வாழ்க்கையின் வெறுக்கத்தக்க செயல் என எண்ணுவோர், பழமை வாதிகள், சாதி ஆணவக் குடும்பத்தில் சிக்கியுள்ளவர்கள், காதல் ஏமாற்றமான வாழ்க்கையே தரும் என எண்ணுநர், காதல் காட்சிளைக் கண்டு வெறுப்பவர்கள் எனப் பல தரப்பட்டோரும் காதல் வெருளிக்கு ஆளாகின்றனர்.
பாத காணிக்கை’ படத்தில் ‘எட்டடுக்கு மாளிகையில்’ எனத் தொடங்கும் கண்ணதாசன் பாடலில்
காலங்கள் உள்ளவரை
கன்னியர்கள் யார்க்கும் இந்த
காதல் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி – எந்தன்
கோலம் வர வேண்டாமடி.

எனக் காதல் தோல்வியால் கதைத்தலைவி பாடுவதாக வரும். இதுபோல் நிகழ்வுகளால் காதல் மீது பெருங்கவலையும் தேவையற்ற பேரச்சமும் கொள்வர் சிலர்.
இதில் விந்தையான நேர்வுகளும் உள்ளன. பெண்ணின் மீது விருப்பம் கொண்டு தங்களுக்குள் காதலித்துக் கொள்வர். ஆனால் அந்தப் பெண்ணும் விரும்புவதாக அறிந்தால் விருப்பு வெறுப்பாக மாறி விடுகின்றது.
ஒருதலைக்காதலும் காதல் முறிவும் கொலை முதலான துன்பியல் முடிவுகளைச் சந்திப்பதால் காதலை வெறுப்பவர்களும் உள்ளனர்.
காதலாட்ட வெருளி(Malaxophobia / Sarmassophobia) போன்றதுவே இதுவும்.
Philo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காதல்.
காண்க : பால்வினை வெருளி – Erotophobia
00

(தொடரும்)

Tuesday, November 25, 2025

வெருளி நோய்கள் 734-738: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய்கள் 729-733: தொடர்ச்சி)

காணாட்டம்(video game) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காணாட்டவெருளி
ludus electronicus என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து உருவான Ludectro என்பதற்குக் காணாட்டம் எனப் பொருள்.
00

  1. காணாட்டப்படங்கள் வெருளி- Pachnitilitphobia
    காணாட்டந்தழுவிய திரைப்படங்கள் மீதான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் காணாட்டப்படங்கள் வெருளி.
    ஆட்ட வெருளி(ludophobia) காணாட்ட வெருளி(ludectrophobia) உள்ளவர்களுக்குக் காணாட்டப் படங்கள் வெருளி வர வாய்ப்பு உள்ளது.
    00

காதல் களியாட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காதலாட்ட வெருளி.
காதலினால் தீண்டல், நெருங்கிப் பழகுதல் முதலியன உறவிற்கோ, கற்பழிப்பிற்கோ, கருவுண்டாலுக்கோ இழுத்துச் செல்லும் என்ற கவலையால் வரும் பேரச்சமே இது. காதல் வெருளி உள்ளவர்களுக்கும் காதலாட்ட வெருளி வரும்.
மென்மை என்னும் பொருளிலான malயssō என்னும் பழங்கிரேக்கச் சொல்லில் இருந்து இலத்தீன் சொல்லான malaxo உருவானது. திருவள்ளுவரும் காதலை மெல்லிய உணர்வாகத்தான் கூறுகிறார்.
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
 (௲௨௱௮௰௯ – 1289)
என்னும் திருக்குறள் மூலம் இதை அறியலாம்.
இந்த இடத்தில் இது மென்மையான காதல் உணர்வையும் தொடர்ச்சியாகக் காதலாட்டத்தையும் குறிக்கிறது.
sயrx என்னும் பழங்க கிரேக்கச் சொல்லிற்குத் தசை, உடல் எனப் பொருள்கள்.mயssō என்னும் பழங்கிரேக்கச் சொல்லிற்குத் தொடுதல், அழுத்துதல், ஊடாட்டம் எனப் பொருள்கள்.
முத்தமிடுதல்,தொடுதல் முதலான செயல்களால் வெருளி ஏற்படுகிறது.
கண்டுகேட்டு உண்டுயிர்த்து உற்றறியும் ஐம்புலனும்
ஒண்தொடி கண்ணே உள. 
(திருக்குறள், ௲௱௧ – 1101)
எனத் திருவள்ளுவரும் தொடுதல் முதலான புலனுணர்வைக் குறிப்பிடுகிறார்.
முத்தமிடுதல், தொடுதல் முதலான செயல்களால் இவ்வெருளி ஏற்படுகிறது.

(தொடரும்)

Monday, November 24, 2025

வெருளி நோய்கள் 729-733: இலக்குவனார் திருவள்ளுவன்

 




(வெருளி நோய் 724-728: தொடர்ச்சி)

காசாளர் (cashier) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசாளர் வெருளி.

கிரேக்க மொழியில் tamஅas என்றால் காசாளர் என்று பொருள்.

00

காசு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காசு வெருளி.

காசுகள் மாழையில் செய்யப்படுவதால் மாழை வெருளி(Metallophobia)க்கும் இவர்கள் ஆளாவர். காசுகள் பணமதிப்பின் ஒரு பகுதி என்பதால் பண வெருளி(Chrometophobia/Chrematophobia)க்கும் ஆளாவர்.

Cuprum என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் செம்பு( )

 lamina என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் மென் தகடு. இரண்டும் சேர்ந்து செம்பு மாழையில் மென்தகடாக ஆக்கப்படும் காசினைக் குறிக்கின்றன.

00

காற்சட்டைகளைக் காட்சிப்படுத்துவது தொடர்பான தேவையற்ற பேரச்சம் காட்சி வெருளி.

காட்சிப்படுத்து வெருளி என்பதையே சுருக்கமாகக் காட்சி வெருளி என்கிறோம்.

பொதுவாக ஆடவருக்கே மிகுதியாக வருகிறது.

osten என்னும் இலத்தீன் சொல்லிற்குக் காட்சிப்படுத்து எனப் பொருள்.

00

காட்டுத்தீபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் காட்டுத்தீ வெருளி.

கிரேக்கத்தில் agri  என்றால் புலம் என்றும் pyro என்றால் தீ என்றும் பொருள்.

00

காட்டு மனிதக் குரங்கு / காட்டுக் குரங்கன் (orangutans/orang-utan/orangutang/orang-utang) மீதான அளவுகடந்த பேரச்சம் காட்டுக் குரங்கன் வெருளி.

00

(தொடரும்)

Sunday, November 23, 2025

வெருளி நோய்கள் 724-728: இலக்குவனார் திருவள்ளுவன்



(வெருளி நோய்கள் 723: தொடர்ச்சி)

  1. கன்னபாகு வெருளி – Calamusphobia
    கன்னல்பாகு(caramel) குறித்த வரம்பற்ற பேரச்சம் கன்னல்பாகு வெருளி.
    கேரமல் என்னும் ஆங்கிலச்சொல் பிரஞ்சுச் சொல்லான கேரமலிலிருந்தும், பிரெஞ்சுச் சொல் இசுபானியச் சொல்லான caramelo (18 ஆம் நூற்றாண்டு)விலிருந்தும், இசுபானியச் சொல் போர்த்துகீசியச் சொல்லான “caramel-கரமலிலிருந்தும்” உருவாகியிருக்கலாம் என்கின்றனர். கரும்பைக் குறிக்கும் calamellus என்னும் பிற்கால இலத்தீன் சொல்லில் இருந்து இஃது உருவாகியிருக்கலாம். இடைக்கால இலத்தீனில் கன்ன என்றால் கரும்பு மெல்லா என்றால் தேன் எனப்பொருள். இரண்டும் இணைந்த கன்னமெல்லா வந்திருக்கலாம் என்கின்றனர். நிறமூட்டியாகவும் சுவைக்காகவும் உணவுப் பண்டத்தின்மீது ஊற்றிப் பயன்படுத்துகின்றனர். இதனைக் கன்னல் பாகு எனலாம்.
    00
  2. கன்னியர் வெருளி-Parthenophobia
    பெண்கள், குறிப்பாகக் கன்னிப்பெண்கள்பற்றிய தேவையற்ற வெறுப்பும் அச்சமும் கன்னியர் வெருளி.
    மண வாழ்க்கையில் நாட்டமில்லாதவர்களும் பெண்களை நல்வாழ்க்கைக்கு எதிரானவர்கள் எனத் தவறாக எண்ணுபவர்களும் இவ்வெருளிக்கு ஆட்படுகின்றனர். பெண்ணுறுப்பு தொடர்பான வெருளியர்க்கும் இவ்வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
    partheno என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கன்னிமை, இளம் பெண், கன்னி.
    00
  3. கன்னெய் வெருளி – Benziphobia

கன்னெய்(gasoline/ petrol) பற்றிய அளவு கடந்த பேரச்சம் கன்னெய் வெருளி.
கல்+நெய் = கன்னெய்.
கன்னெய்யில் எரிநறா(எத்தனால்) அல்லது வேறு எதுவும் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தாலும் கன்னெய்மீது பேரச்சம் வருவதுண்டு. வளி நிலைய வெருளி(Aerostatiophobia) உள்ளவர்களுக்கும் கன்னெய் வெருளி வர வாய்ப்பு உள்ளது.
00

  1. காணுகை வெருளி – Ocuviaphobia
    பிறரால் பார்க்கப்படுவது அல்லது காணப்படுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காணுகை வெருளி
    பணியிடத்தில் அல்லது பொதுவிடத்தில் பிறர் தன்னையே பார்ப்பதுபோன்ற எண்ணத்தால் ஏற்படும் அளவு கடந்த பேரச்சமாகும்.
    அழகாக இருப்பதால் பார்ப்பதாகவும் எண்ணலாம். அழகில்லை என்பதால் கேலியாகப் பார்க்கிறார்கள் எனவும் கருதலாம்.
    ocu என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கண். ocuvia கண்ணால் காண்பதைக் குறிக்கிறது.
    00

(தொடரும்)