(வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள் தொடர்ச்சி)
101.) 62 ஆம் எண் வெருளி- Hexekontadyophobia
62 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 62 ஆம் எண் வெருளி.
எண் 62 என்பது வணிகம், பணம் தொடர்பான எண்ணாகக் கருதப்படுகிறது. எனவே, எதிர்மறை எண்ணத்தில் வணிகத்தில் தோல்வி, பண இழப்பு வரும் என்று தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
கிரேக்கத்தில் hexḗkonta என்றால் 60, dyo என்றால் 2.
00
102.) 666 ஆம் எண் வெருளி – Hexakosioihexekontahexaphobia
666 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்666 ஆம் எண் வெருளி.
இளம்பருவம் முடியும் அகவை 18 என்பதைக் குறிப்பதால் சிலருக்கு 18 என்பது குறித்த பேரச்சம் வருகின்றது. வயதுக்கு வந்துவிட்டதால் இளமை ஆட்டங்களில் ஈடுபட முடியாது எனக் கவலைப்படுவர். சிலருக்கு 666 ஆம் எண் வெருளி / hexakosioihexekontahexaphobia க்குக்காரணமான 666 இன் கூட்டுத் தொகை (6006006=)18 என்பதாலும் அவ்வெருளி உள்ளவர்களுக்கு 18 குறித்துப் பேரச்சம் வரும்.
பலருக்கு இவ்வெருளி சமயநம்பிக்கை அடிப்படையிலும் மூட நம்பிக்கையினாலும் உருவாவது. கிறித்தவ விவிலியத்தின் இரண்டாம் பகுதியாகிய புதிய ஏற்பாட்டில் இருபத்து ஏழாவது நூலாகத் திருவெளிப்பாடு (Book of Revelation) என்னும் நூல் அமைந்துள்ளது.இதில் 13:17-18 அதிகாரத்தில் 666எண் குறிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அச்சம் தொன்மைக்காலத்திலிருந்தே உள்ளது எனலாம்.
கிரேக்கத்தில் hexakosioi என்றால் 600 hekkaideka என்றால் 16.
00
103.) 69 ஆம் எண் வெருளி – Hexekontenneaphobia
69 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 69 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் hexḗkonta என்றால் 60, ennea என்றால் 9.
எண் 69 என்பதன் இறுதி ஒற்றைஎண் கூட்டுத்தொகை 9. எனவே, எண்9 மீது பேரச்சம் கொள்வோர் எண் 69 மீதும் பேரச்சம் கொள்கின்றர்.
எண 69 உணர்த்தும் கூறுகளில் ஒன்று நலவாழ்வு. எதிர்மறை எண்ணத்தில் நலக் கேடு வருமோ எனக் கவலைப்பட்டுப்பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
104.) 7 ஆம் எண் வெருளி – Heptaphobia/Septaphobia
7 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 7 ஆம் எண் வெருளி.
எண் 7 உள்ளார்ந்த அறிவையும் மதி நுட்பத்தையும் குறிப்பது. எனினும் 7 ஆம் எண்ணுக்குரிய கேது குறித்துக் “கேதுவைப் போல்கெடுப்பானில்லை! இராகுவைப் போல் கொடுப்பானில்லை” என்னும் பழமொழி உள்ளதால் பேரச்சம் கொள்கின்றனர். 7ஆம் எண் உள்ளர்வளுக்குக் காலந்தாழ்ந்து திருமணம் நடக்கும் எனக் கூறப்படுதவாலும் இது குறித்துக் கவலைப்படுவோர் உள்ளனர். 7 ஆம் எண் காரர்கள் முன்கோபிகளாக இருப்பார்கள் என்று இந்த எண்ணுக்குஉரியவர்கள்மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.பொருள் தட்டுப்பாடு நலக்கேடு முதலானவை வரும என்று எண்ணியும் எண் 7 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
கிரேக்கத்தில் hepta என்றால் 7.
septem என்னும் இலத்தீன்சொல் ஏழாம் எண்ணைக் குறிக்கிறது.
00
- ) 70 ஆம் எண் வெருளி – Septuagintaphobia
70 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்70 ஆம் எண் வெருளி.
எண் 70 இல் உள்ள / + 0 எண்களின் கூட்டுத்தொகை 7. எனவே, எண் 7 மீது பேரச்சம் கொள்வோர் எண் 70 மீதும் பேரச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment