(வெருளி நோய்கள் 106-110 தொடர்ச்சி)

116.) 911 ஆம் எண் வெருளி – Enniakosioihendecaphobia
911 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 911 ஆம் எண் வெருளி.
911 என்பதன் இறுதிக் கூட்டுத்தொகை 9+1+1= 11; 1+1= 2 என்பதால் எண் இரண்டின் மீது பேரச்சம் கொள்வோரும் எண் 9, எண் 1 ஆகிய இரண்டு எண்கள் வருவதால் இவ்விரண்டு எண்கள் மீது பேரச்சம் கொள்வோரும் 911 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
117.) 99 ஆம் எண் வெருளி – Enenekontenneaphobia
99 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 99 ஆம் எண் வெருளி.
ஒன்பதாம் எண் மீது வரம்புகடந்த பேரச்சம் கொள்வோர் 99 ஆம் எண் மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00
118.) 999 ஆம் எண் வெருளி – Enniakosioenenekontenneaphobia
999 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 999 ஆம் எண் வெருளி
ஒன்பதாம் எண் மீது வரம்புகடந்த பேரச்சம் கொள்வோர் 999 ஆம் எண் மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00
119.) ஃபிரான்கென்சுடைன் வெருளி – Frankensteinphobia
ஃபிரான்கென்சுடைன் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஃபிரான்கென்சுடைன் வெருளி.
ஃபிரான்கென்சுடைன் அல்லது நவீன பிரொமீதியசு (Frankenstein or The Modern Prometheus) என்பது மேரி செல்லி எழுதிய புதினம். இப்புதின அடிப்படையிலான அசைவூட்டப்படக் கதை நாயகன் பெயர். நடைமுறையில் மக்கள் அசுரன் என்பதையே Frankenstein சொல் குறிக்கிறது. எனவே, இச்சொல்லைக் கேட்டால் பேரச்சமும் பெருங்கவலையும் கொள்வோர் உள்ளனர்.
00
120.) ஃபிரான்சின் வெருளி – Francinephobia
அசைவூட்டப் பாத்திரமான ஃபிரான்சின் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஃபிரான்சின் வெருளி.
00

(தொடரும் )