(வெருளி நோய்கள் 91-95 தொடர்ச்சி)

96.) 58 ஆம் எண் வெருளி – Pentekontoctophobia
58 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 58 ஆம் எண் வெருளி.
pentekonta என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 50 என்றும் octo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 8 என்றும் பொருள். Pentekontoctophobia – fear of 58 (branch of numerophobia) = 58 குறித்த வெருளி. எண் வெருளி வகைப்பாட்டைச் சேர்ந்தது.
58 ஆம் எண்ணிற்குரிய சொல், வளமின்மை என்னும் பொருள் தரும் மற்றொரு சொல்லை ஒத்து இருப்பதால், இவ்வெண் கண்டு அஞ்சுவோர் உள்ளனர்.
மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்கா முதலான நாடுகளில் 58 ஆம் எண்ணைப் பாவத்துடன் தொடர்புபடுத்தி அஞ்சுகின்றனர்.
58 என்பதைத் தீயூழாகவும் தீப்பேறாகவும் சாபமாகவும் கருதும் மத்திய அமெரிக்காவிலும் தென் அமெரிக்காவிலும் 58 ஆம் எண் வெருளியால் வருந்துவோர் பலர் உள்ளனர். 58 ஆம் எண் அறையில் தங்காமை, 58 ஆவது தளத்தில் தங்காமை, 58 எண் உள்ள ஊர்தியைப் பயன்படுத்தாமை, 58 ஆம் எண் தடத்தில் பயணம் செய்யாமை போன்ற பேரச்சங்கள் கொள்கின்றனர்.
00
97.) 6 ஆம் எண் வெருளி – Hexaphobia / sexaphobia
6 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 6 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் hexa என்றால் 6. இலத்தீனில் sex என்றால் 6.
மாதத்தின் 6 ஆவது நாள், 6 ஆவது அகவை, 6 ஆம் எண் அறை, 6 ஆவது தளம் என 6 தொடர்பானவற்றின்மீதான அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
98.) 60 ஆம் எண் வெருளி – Sexagintaphobia
60 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 60 ஆம் எண் வெருளி.
60 என்பது மணிவிழா ஆண்டு. மணிவிழா குறித்து மகிழ்வடையாமல், செலவு, பொறுப்பு, நலிவு போன்றவற்றைப்பற்றித் தேவையற்ற கவலை கொண்டு பேரச்சம் கொள்வர் இத்தகையர்.
00
99.) 600 ஆம் எண் வெருளி – Sexticentumphobia
600 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 600 ஆம் எண் வெருளி.
விலை 600 பணம் என்றால் அதை வாங்குவதில்லை, 600 ஆவது எண்பற்றிக் கேள்விப்பட்டால் அல்லது படித்தால் கவலைகொண்டு அஞ்சுவது எனக் காரணமற்ற பேரச்சத்தில் இத்தகையோர் வருந்துவர்.
00
100.) 616 ஆம் எண் வெருளி Hexakosioihekkaidekaphobia
616 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 616 ஆம் எண் வெருளி.
hexakosioi = 600, hekkaideka = 16
எண் 666 மீது பேரச்சம் கொள்வோர் எண் 616 மீதும் பேரச்சம் கொள்கின்றனர்.
00

(தொடரும் )