(வெருளி நோய்கள் 106 – 110 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 111 -115
111.) 800 ஆம் எண் வெருளி – Octicentumphobia
800 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 800 ஆம் எண் வெருளி.
எண் 800இல் உள்ள 8 + 0 +0 எண்களின் இறுதிக் கூட்டுத்தொகை 8. எனவே, எண் 8 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 800 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00
112.) 87 ஆம் எண் வெருளி – Octokontaheptaphobia/Ogdokontaheptaphobia
87 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 87 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் ogdokonta என்றால் 80, hepta என்றால் 7 எனப் பொருள்.
87 பேய்களின் எண் எனவும் விளையாட்டிற்கு ஆகாத எண் எனவும் கருதி இந்த எண் மீது மிகையான பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
87 இல் எட்டு, ஏழு ஆகிய இரண்டு எண்கள் உள்ளமையால் எட்டாம் எண், ஏழாம் எண் ஆகியவை மீது அச்சம் கொள்வோர் 87 மீதும் தேவையற்ற அச்சம் கொள்கின்றனர். 87இன் கூட்டுத்தொகையின் ஒற்றை எண் 8+7=15 ? 1+5 = 6 என்பதால் எண் 6 மீது அச்சம் உள்ளவர்கள் 87 மீதும் தேவையற்ற பேரச்சம கொள்கின்றனர்.
00
113.) 9 ஆம் எண் வெருளி – Enneaphobia
9 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 9 ஆம் எண் வெருளி.
9 என்பதைத் திருநங்கையரைக் கேலியாகப் பேசக் குறிப்பிடுவதாலும் 9 குறித்துக் கவலைப்படுவோர் உள்ளனர்.
9 ஆம் எண்ணுக்குரியோர், நேர்ச்சி(விபத்து)களுக்கு உள்ளாகும் வாய்ப்பு, உடலில் காயங்கள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. யாவர்க்கும் உரியன இவை. இருப்பினும் தீய பயன்களை எண்ணி அஞ்சுவோர் உள்ளனர். 9 ஆம் எண் செவ்வாய்க் கோளுக்குரியது. இதன் நற்பயன்களாகக் கூறப்படுவனவற்றை விட்டுவிட்டுத் தீய பயன்களிலேயே கருத்து செலுத்துவதால் தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாகின்றனர்.
அலிகள் அல்லது திருநங்கைகளை ஒன்பது எனக் குறிப்பிட்டுக் கேலி செய்யும் பழக்கம் உள்ளது. திரைப்படத்தால் இவ்விழிவான பழக்கம் மிகுதியாகி விட்டது. எனவே, 9 என்றால் கேலி செய்யப்படுவோம் என அதற்கு அஞ்சுவோர் பலர் உள்ளனர். அறை எண் 9 என்றால் அதனை அறை எண் 8 ஆ என மாற்றிக் கொள்வர். வரிசை எண் 9 ஆக வந்தால் அதைச் சொல்ல வெட்கப்பட்டு அதனை மாற்ற முயல்வர். இதுபோன்ற காரணங்களாலும் எண் 9 மீது காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
114.) 90 ஆம் எண் வெருளி – Nonagintaphobia
90 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 90 ஆம் எண் வெருளி.
90 இன் கூட்டுத்தொகை 9 என வருவதால், ஒன்பதாம் எண் மீது தேவையற்ற பேரச்சம் கொள்வோர் 90 ஆம் எண் மீதும் வரம்புகடந்த பேரச்சம் கொள்கின்றனர்.
00
115.) 900 ஆம் எண் வெருளி – Nonicentumphobia
900 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்900 ஆம் எண் வெருளி.
900 இன் கூட்டுத்தொகை 9 என வருவதால், ஒன்பதாம் எண் மீது வரம்புகடந்த பேரச்சம் கொள்வோர் 900 ஆம் எண் மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment