(வெருளி நோய்கள் 101-105 : தொடர்ச்சி)

106.) 700 ஆம் எண் வெருளி- Septicentumphobia
700 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 700 ஆம் எண் வெருளி.
எண் 700 இல் உள்ள 7 + 0 + 0 எண்களின் கூட்டுத்தொகை 7. எனவே, எண் 7 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 70 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00
107.) 71 ஆம் எண் வெருளி – Hebdomekontahenophobia
71 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 71 ஆம் எண் வெருளி.
எண் 71 இல் உள்ள 7+1 எண்களின் கூட்டுத்தொகை 8. எனவே, எண் 8 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 71 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
கிரேக்கத்தில் hebdomḗkonta என்றால் 70 hen என்றால் 1.
00
108.) 747 ஆம் எண் வெருளி – Heftakosioitessarakontaheptaphobia
747 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்747 ஆம் எண் வெருளி.
எண் 747 இல் உள்ள 7+4+7 > 18 > 1+8 எண்களின் இறுதிக் கூட்டுத்தொகை 9. எனவே, எண் 9 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 747 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர். எண் 7, எண் 4 ஆகியவற்றின் மீது பேரச்சம் கொள்வோரும் எண் 747 இன்மீது பேரச்சம் கொள்கின்றனர்.
கிரேக்கத்தில் heftakosioi – 700, tessarakonta – 40, hepta – 7 எனப் பொருள்களாகும்.
00

  1. ) 8 ஆம் எண் வெருளி – Octophobia
    8 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்8 ஆம் எண் வெருளி.
    இந்த எண்ணில் பிறந்தவர்கள் கடும் போராட்டத்தைச் சந்திக்க நேரும் என்றும் வெற்றியை எதிர்பார்த்தால் தோல்வியைச் சந்திக்க நேரும் என்றும் கூறப்படுவதால் இந்த எண் மீது அச்சம் கொள்கின்றனர்.
    எட்டு சனிக்கோளுக்குரியது. சனி தொல்லை தரும். எனவே எட்டு எழுத்தில் பெயர் வைக்கக்கூடாது என அஞ்சுவோர் பலர் உள்ளனர். திரைப்படங்களுக்குப் பெயர் வைக்கும் பொழுது எட்டு எழுத்துகள் வந்தால் இடையில் வரும் ஒற்றெழுத்தை நீக்கிப் பெயர் சூட்டுவோர் உள்ளனர். எட்டு அல்லது எட்டு சார்ந்த 26, 35, 44, 53, 62,71, 80 முதலான எண்களில் பெயர் எழுத்துகள் அமைந்திருந்தால் அதை மாற்றிக் கொள்வோர் உள்ளனர். தன்னம்பிக்கையின்றி எண்களை நம்புவதும் மனஊனமே.

திதி என்பது பிறைநாளைக் குறிக்கிறது. வளர்பிறையாயினும் தேய்பிறையாயினும் 8 ஆம் பிறையில் நல்ல செயல் எதையும் செய்யக்கூடாது என்ற தவறான நம்பிக்கை விதைக்கப்பட்டுள்ளது. இதனாலும் 8 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
வசுதேவர் – தேவகி இணையருக்கு 8 ஆம் மகனாகப் பிறந்த கிருட்டிணனால் அவனது தாய்மாமன் கம்சனுக்கு அழிவு நேர்ந்தது. திருமாலின் 8 ஆவது பிறப்பாகிய கிருட்டிணனால்தான் அவன் அழிந்தான். என்பன போன்றகதைகளால் 8 ஆம் எண் மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர். 8 ஆவது மகவு அல்லது 8 ஆம் நாள் பிறந்த மகவு தாய்மாமனுக்குத் தீங்கு இழைப்பான் என்றும் கருதி அஞ்சுகின்றனர்.
Octo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எட்டு.

00
110.) 80 ஆம் எண் வெருளி – Octogintaphobia
80 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 80 ஆம் எண் வெருளி.
எண் 80இல் உள்ள 8 + 0 எண்களின் இறுதிக் கூட்டுத்தொகை 8. எனவே, எண் 8 பற்றிய அளவுகடந்த பேரச்சம் கொள்வோர் எண் 80 மீதும் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
00

(தொடரும் )