ருளி நோய்கள் 86-90 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 91-95
91.) 47 ஆம் எண் வெருளி – Tessarakontaheptaphobia
47 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 47 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் tessarakonta = 40, hepta = 7
47 என்பது கூட்டுச் சதியுடன் தொடர்புடையது என்றும் எண் 47 குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
47 மட்டுமல்லாமல், 247, 14723, என்பனபோல் 47 எண் இடையில் வரும்எண்கள் குறித்தும் பேரச்சம் கொள்வர். எண் 47 தீயூழ் தருவது, சாபமிடப்பட்ட எண் என்றெல்லாம் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.
00
92.) 5 ஆம் எண் வெருளி – Pentaphobia / Quintaphobia
5 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 5 ஆம் எண் வெருளி
penta என்னும் கிரேக்கச் சொல்லிற்கும் quinta என்னும் இலத்தீன் சொல்லிற்கும் 5 எனப் பொருள்.
எண் 4, எண் 13 முதலானவை போல் பலரின் வெறுப்பிற்கு உள்ளான எண் அல்ல 5. எனினும் இதன்மீது, காரணமற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். எண் 5 அல்லது 5 பொருள்கள் அல்லது 5 ஊர்கள், நாடுகள் பெயர்கள் ஆகியவற்றைக் கேட்டாலோ பார்த்தாலோ பேரச்சம் கொள்பவர்களாக இத்தகையோர் உள்ளனர்.
00
93.) 50 ஆம் எண் வெருளி – Quinquagintaphobia
50 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 50 ஆம் எண் வெருளி.
50 என்பது பொன்விழா ஆண்டு. பெரும்பான்மையர் போற்றி வரவேற்கும் ஆண்டு. எனினும் 50 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அகவை முதிர்ச்சி, பொன்விழா காணும் அமைப்பின் செயல்பாடு போன்றவை குறித்துக் கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
94.) 500 ஆம் எண் வெருளி – Quincentumphobia
500 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 500 ஆம் எண் வெருளி.
பிற எண்களைக் கண்டு அஞ்சுவோர் உள்ளமைபோல் 500 ஆம் எண் குறித்துப் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
quinta/quinque ஆகிய இலத்தீன் சொற்கள் ஐந்தைக் குறிக்கும். இலத்தீன் சொல்லான centum 100ஐக் குறிக்கும். இரண்டும் இணைகையில் 5X100= ஐந்நூறு ஆகிறது.
00
95.) 53 ஆம் எண் வெருளி – Fear of number 53
53 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 53 ஆம் எண் வெருளி.
53 ஆம் எண்ணிற்குரிய மூலச்சொல் (hagnos) உயிர் விடுதலை என்னும் பொருளுடையதால் இவ்வெண் கண்டு அஞ்சுவர்.
53 என்பதை 5 ஆகவும் 3 ஆகவும் பார்த்து இவ்வெண்களின் மீது அச்சம் கொள்வோர் இந்த எண் மீதும் பேரச்சம் கொள்கின்றனர். 53 என்பது தேவதையின் எண் என மகிழ்வோரும் உள்ளனர். ஆனால் எண் கணிப்பின்படி 53 எதிர்பாரா மாற்றங்களைக் கொண்டு வரக்கூடியது. அந்த மாற்றங்கள் தீயனவாக இருக்கும் என்று ஒருதலையான எதிர்பார்ப்பில் தேவையற்ற பேரச்சம் கொள்கின்றனர்.
5, 3 ஆகியவற்றின் கூட்டுத்தொகை 8 என்பதால் எண் 8 மீது பேரச்சம் கொள்வோர் எண் 53 மீதும் பேரச்சம் கொள்கின்றனர்.
முதல் உலகப்போர் 53 மாதங்கள் நடைபெற்றது(28.07.1914-11.11.1918). இதனாலும் எண் 53 மீது பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment