- ஃபிரிசில் வெருளி – Frizzlephobia
புனைவுரு ஆசிரியை ஃபிரிசில்(Frizzle) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஃபிரிசில் வெருளி
சாலப்பள்ளிப்பேருந்து (The Magic School Bus) என்பது அமெரிக்கப் பொழுதுபோக்கு ஊடக உரிமையகம் (American edutainment media franchise)ஆகும். சாலம் என்றால் மாயாசாலம், சால வித்தை, மாய வித்தை எனப் பொருள். இதில் புத்தக வரிசைகள், தொலைக்காட்சித் தொடர்கள், காணாட்டங்கள் அடங்கும். திருவாட்டி ஃபிரிசில் என்னும் கற்பனைத் தொடக்கப்பள்ளி ஆசிரியையும் அவரது வகுப்பினரும் பேருந்திலும் செல்லுமிடங்களிலும் நிகழ்த்தும் கேலிக் கூத்துக்கதைகளை இவற்றில் காணலாம். கதைகளால் வெறுப்பும் பேரச்சமும் விளைபவர்களுக்கு இவற்றிற்கு அடிப்படையான புனைவுப் பாத்திரமான ஆசிரியை ஃபிரிசில் மீதும் அளவுகடந்த பேரச்சம் ஏற்படுகிறது. இதுவே ஆசிரியை ஃபிரிசில்சு வெருளி.
00
122.) ஃபிரெடி கெரூகெர் வெருளி – Nightmare ElmStreetphobia
கற்பனைப்பாத்திரமான ஃபிரெடி கெரூகெர்(Freddy Krueger) குறித்த அளவு கடந்த பேரச்சம் ஃபிரெடி கெரூகெர் வெருளி.
எல்லம் தெருவில் அமுக்கிப் பிசாசு(A Nightmare on Elm Street) என்னும் படத் தொடரில் வரும் கற்பனைப்பாத்திர கொலைகாரனே ஃபிரெடி கெரூகெர்.
00
123.) ஃபெரன் வாற்றர் வெருளி – Fernwaltersphobia
புனைவுரு ஃபெரன் வாற்றர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஃபெரன் வாற்றர் வெருளி.
ஆர்தர் படக்கதைகளிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் வரும் ஒரு பாத்திரமே ஃபெரன் வாற்றர். இது மனித உருவேற்றப்பட்ட (anthropomorphic dog) நாய்; ஆர்தர் இரீடு(Arthur Read), பிற வகுப்புத் தோழர்களுடன் தொடக்கப்பள்ளியில் பயில்கிறது.
00
124.) ஃபோர்டு வண்டிகள் வெருளி – Fordophobia
ஃபோர்டு வண்டிகள் குறித்த அளவு கடந்த பேரச்சம் ஃபோர்டு வண்டிகள் வெருளி.
00
125.) அகப்பேசி வெருளி – Intercomphobia
அகப்பேசி(Intercom) குறித்த வரம்பற்ற பேரச்சம் அகப்பேசி வெருளி.
ஒரு கட்டடத்திற்குள் அல்லது அலுவலகத்திற்குள் வெவ்வேறு இடத்திலிருந்து இருவர் பேசுவதற்குஉதவும் தொலைபேசிக் கருவியே அகப்பேசி(Intercom). அகப்பேசி மணி ஒலித்தாலே மேல் அலுவலர் கண்டிப்பதற்காகப் பேசுகிறாரோ அலுவலகம் முடிந்த பின்னரும் வேலை பார்க்குமாறு வேலைச் சுமையை ஏற்றுவாரோ, அதற்காகத்தான் அழைக்கிறாரோ என்று அஞ்சுவது. பிறர் பேசினால் வேலை தொடர்பாகத் தொல்லை கொடுப்பார்களோ அதற்கான அழைப்புதான் இதுவா என அஞ்சுவது.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment