(வெருளி நோய்கள் 81 – 85 தொடர்ச்சி)

86.) 40 ஆம் எண் வெருளி – Quadragintaphobia
40 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 40 ஆம் எண் வெருளி.
“நாற்பது வயதில் நாய்க் குணம்” என்பது பழமொழி. இதனை அடிப்படையாகக் கொண்டு ‘பாரத விலாசு’ என்னும் படத்தில் வாலி எழுதிய பாடல் இடம் பெற்றிருக்கும்.

“நாற்பது வயதில் நாய்க் குணம் – அதை
நாம் தான் தெரிந்து நடக்க வேண்டு
ம்” எனத் தொடங்கும் அப்பாடலில்

நேரத்துக்கு ஒரு புத்தி இருக்கும்
நிமிடத்துக்கு ஒரு பேச்சிருக்கும்
எடுத்ததற்கெல்லாம் கோபம் வரும்
கண்ணில் எள்ளும் கொள்ளும் வெடித்திருக்கும்

என இடையில் வரும்.
இவ்வாறு 40 அகவையில் ஏற்படும் மாற்றங்கள் குறித்துக் கவலைப்பட்டும் 40 குறித்து அஞ்சுவர்.
00

87.) 400 ஆம் எண் வெருளி – Quadricentumphobia
400 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 400 ஆம் எண் வெருளி.

எண் 400 இன் மீது பேரச்சம் கொள்வோர் எண்கள் நான்கு, நாற்பது மீதும் எண்கள் நான்கு, நாற்பது மீது பேரச்சம் கொள்வோர் எண் 400 மீதும் பேரச்சம் கொள்வர்.
00

88.) 42 ஆம் எண் வெருளி – Tessarakontadyophobia
42 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 42 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் tessarakonta = 40, dyo = 2.
4 ஆம் எண்மீதான பேரச்சம்போல் 42ஆம் எண் மீதான பேரச்சமும் – குறிப்பாக ஆசியர்களிடம் மிகுதியாக – எழுகிறது. சப்பானியத்தில் 42 என்பதைக் குறிக்கும் சொல் சி னி (shi ni) என்பதாகும். இதன் ஒத்தொலிப்புச் சொல்லின் பொருள் இறக்கும் வரை என்பதாகும். எனவே, இறப்பைக் கூறும் 42 ஆம் எண்மீது அளவுகடந்த பேரச்சம் வருகிறது. உலகம் அழியப்போவதாக அஞ்சும் இயல்பினர் இத்தகையோர்.
00
89.) 42,069 ஆம் எண் வெருளி – Tessarakontadyochilexintaphobia
42,069 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 42,069 ஆம் எண் வெருளி.
420 என்பது கஞ்சாப் பயன்பாட்டையும் 69 பாலுறவையும் குறிப்பது. இவற்றின் இணைப்பான 42069 மீதான பேரச்சம். 4/20/69 அமைதிப்பள்ளத்தாக்கு நீர்த்தேக்கத்தில் வெடிகுண்டு வெடித்த நாள். இவற்றின் காரணமாக ஏற்படும் பேரச்சமும் 42069.
கலிபோர்னியாவில் 1971இல் தீவு காப்பர்(Steve Capper), தேவு இரெட்டிசு (Dave Reddix), செபுரி நோயல்(Jeffrey Noel), இலாறி சுவாற்றசு (Larry Schwartz), மாரக்கு கிராவிச்சு (Mark Gravich) ஆகிய ஐந்து உயர்பள்ளி மாணாக்கர்கள் தங்களை வால்டோசு (Waldos) என அழைத்துக் கொண்டு கஞ்சாப்பயன்பாட்டில் குறிப்பிட்ட இடத்தில் ஈடுபட்டனர்.அதற்காக அவர்கள் கூடும் நேரம் மாலை 4.20. இதனால் 4.20 / 420 / 4/20 என்றாலே கஞ்சாப்பயன்பாடு என்ற முத்திரை விழுந்துஅந்த எண்கள் குறித்து அவ்வட்டார மக்கள் அஞ்சினர்.

00

90.) 420 ஆம் எண் வெருளி Tetrakosioeikosiphobia

420 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்420 ஆம் எண் வெருளி. 420 என்பது கஞ்சாப் பயன்பாட்டாளர்களைக் குறிக்கும் எண். எனவே இந்த எண் பற்றிய பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இந்தியத்தண்டனைச் சட்டப்பிரிவு 420, ஏமாற்றுகின்ற மோசடிக் குற்றவாளிகளுக்கான தண்டனை பற்றியது. எனவே, இந்தியாவில் 420 எனக் கேலி பேசப்பட்டால் கவலைப்படுவோரும் இந்த எண் மீதான பேரச்சம் கொள்வோரும் உள்ளனர்.