தமிழில் எண்ணற்ற அறிவியல் செய்திகள் உள்ளன. இன்றைக்குக் காணப்படும் அறிவியல் உண்மைகள் அன்றே கண்டறியப்பட்டுள்ளன. அறிவியல் தமிழின் அன்றைய வளத்தையும் இன்றைய உண்மையையும் உணர்த்த அனைவருக்குமான அறிவியல் தமிழ் என்னும் நூல் கணியச்சில் உருவாக்கப்பட்டது. 10 ஆண்டுகளாக உறங்கிக் கிடக்கும் உண்மைகளை இணையத்தில் ஏற்றலாம் என இவ்வலைப்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. புதிய பதிவுகளும் மேற்கொள்ளப்படும்.
அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி.
சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும்.
பள்ளிக்கூடம் செல்ல பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர்.
gnos / epistemo ஆகிய கிரேக்கச்சொற்களின் பொருள் அறிவு.
எனினும் தற்போது அனைத்து என்பதே அனைத்தும் என்னும் பொருள் மாற்றத்தைப் பெற்றுள்ளதால் அனைத்து என்பதையே இங்கே பயன்படுத்தலாம். அதற்கிணங்க
அனைத்து வெருளி
pan என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் அனைத்து.
Omni என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எல்லாம்.
00
29. ஆங்கிலேயவெருளி-Anglophobia
ஆங்கிலேயர் தொடர்பான அளவுகடந்த வெறுப்பும் பேரச்சமும் ஆங்கிலேய வெருளி.
இங்கிலாந்து, இங்கிலாந்து மக்கள், அவர்கள் மொழியான ஆங்கிலம் மீதான வெறுப்பு, அச்சம் ஆகியனவற்றை இது குறிப்பிடும். முதலில் அயர்லாந்து, வேல்சு, காட்லாந்து, பிரான்சு, சீனா, ஆத்திரேலியா,ஈரான் மக்களிடையே ஆங்கில வெருளி ஏற்பட்டது. பின்னர்ப் பிற நாட்டு மக்களிடமும் பரவியுள்ளது.
Anglo என்பது இங்கிலீசு என்பதைக் குறிக்கும் இலத்தீன் முன் னொட்டு.
இங்கிலாந்தைக் குறிக்கும் இலத்தீன் பெயரான ஆங்கிலியா என்பதிலிருந்து இது வந்தது.
தமிழில் நாம் மூலச் சொல் அடிப்படையில் சரியாக ஆங்கிலம், ஆங்கில, ஆங்கிலேயர் என்று குறிக்கின்றோம்.
00
30. ஆடி வெருளி-Eisoptrophobia
கண்ணாடியைப் பார்த்தால் அல்லது கண்ணாடியில் காணும் தன் உருவத்தைப் பார்த்தால் ஒருவருக்கு ஏற்படும் தேவையற்ற அச்சம் ஆடி வெருளி (ஆடிப்பார்வைவெருளி).
தொடக்கத்தில் கண்ணாடி போல் எதிரொளிக்கும் நீர்நிலைகளில் தன் உருவத்தைப் பார்த்து ஏற்படும் அச்சமே ஆடி வெருளியாக அல்லது ஆடிப்பார்வை வெருளியாக உருவானது.
பொன்னின்ஆடியிற்பொருந்துபுநிற்போர்
(மணிமேகலை 19.91) எனச் சாத்தனார் பொன் வளையத்தினுள் பதிக்கப்பட்ட கண்ணாடியில் தம் உருவம் காண்பதைக் குறிப்பிடுகிறார்.
அப்பொழுதெல்லாம் ஆடி வெருளி இல்லை போலும்.
கண்ணாடி உடைந்தால் தீயூழ் நேரும் என்னும் மூடநம்பிக்கை உள்ளவர்கள், கண்ணாடி உடைந்துவிடும் என்ற அச்சத்தால் அதைப் பயன்படுத்தாமல் கண்ணாடி வெருளிக்கு ஆளாவர்.
‘Eisoptro’ என்றால் கிரேக்க மொழியில் கண்ணாடி என்று பொருள். eis(உள்ளே), optikos(பார்வை) என்பதன் இணைப்பிலிருந்து இச்சொல் உருவானது.
ஆடி வெருளி (Eisoptrophobia) என்பதைக் கரையான் வெருளியான ஐசோப்பிடிரோபோபியா Isopterophobia உடன் தொடர்பு படுத்திக் குழப்பிக் கொள்ளக் கூடாது.
No comments:
Post a Comment