(வெருளி நோய்கள் 41-43 தொடர்ச்சி)

44. ‘பு – டை’  சொல் வெருளி – Inmaophobia

‘மறைவுறுப்பு’ / ‘cunt’ சொல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும்

‘பு – டை’ / ‘cunt’ சொல் வெருளி.

பெண்களின் மறைவுறுப்பு குறித்த கீழ்த்தரமான சொல்மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம்  எனப்படும்.

செருமானியக் குடும்பமொழிகளில்  kunta என்றும் kunte என்றும் conte என்றும் அழைக்கப்பட்டது  ‘cunt’ என ஆனது.

பெண்ணுறுப்பு வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia உள்ளதால் வேறுபடுத்த வேண்டியுள்ளது. ‘cunt’ என்பது கீழ்த்தரமாக ஏசும் வகையில் சொல்லப்படுவது. எனவே, தமிழில் அவ்வாறு ஏசும் வகையில் சொல்லும் மூன்றெழுத்துச் சொல்லே பொருத்தமாக இருக்கும். எனவே, அதனையே இடையி் உள்ள ‘ண்’ எழுத்தைக் கோடிட்டுமறைத்து ‘பு–டை’ எனக் குறித்துள்ளேன். ஆக, மறைவுறுப்பில் நடுவெழுத்து மறைக்கப்பட்டுள்ளது.

காண்க: பெண்ணுறுப்பு வெருளி-Eurotophobia

00

45. ‘மலம்’ / ‘shit’ சொல் வெருளி – Skataphobia

‘மலம்’ / ‘shit’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மலம்’ / ‘shit’ சொல் வெருளி.

00

46. ‘பிறப்புறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia

‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் பிறப்புறுப்பு / ‘twat’ சொல் வெருளி.

பெண்ணுறுப்பு சொல்லைக் கேட்க நேர்ந்தாலோ படிக்க நேர்ந்தாலோ அளவுகடந்த பேரச்சம் கொள்வர். ‘அல்குல் என்பது பிறப்புறுப்பிற்கும் இடைக்கும் இடைப்பட்ட பகுதி. எனினும் இச்சொல்’ பிறப்புறுப்பைக் குறிப்பதாக எண்ணிக் காரணமற்ற வெறுப்பும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர்.

00