(வெருளி நோய்கள் 1181-1185 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 1186-1190
- தலை வெருளி-Kefaliphobia
தலை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தலை வெருளி.
தலையின் தோற்றம், வடிவம், அழகு, வரக்கூடிய நோய்கள் முதலானவைபற்றிக் கவலைப்பட்டுத் துன்புற்றுப் பேரச்சத்திற்கு ஆளாவது தலை வெருளி.
Kefali என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தலை.
00
- தலைகீழ் வெருளி – Tronicteliponitrianirikssiophobia/ Anapodaphobia
உடலில் தலைகீழ் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகப் பேரச்சம் கொள்வது தலைகீழ் வெருளி.
நோய் வெருளியைப் போன்றதுதான் இதுவும்.
Anapoda என்னும் கிரேக்கச் சொல்லிற்குத் தலைகீழ் எனப் பொருள்.
00
- தலைக்காப்பி வெருளி – Cranophobia/ Kranosophobia
தலைக்காப்பி (Helmet) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் தலைக்காப்பி வெருளி.
தலைக் கவிப்பு, தலைக்கவசம், தலை காப்பணி ,தலையணி எனப் பலவைகயாகக் குறிக்கப் பெறுவதைச் சுருக்கமாகத் தலைக்காப்பி எனக் கூறலாம்.
Kratos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் தலைக்காப்பி (தலைக்கவசம்)
00
- தவளை வெருளி – Ranidaphobia
தவளை குறித்த தேவையற்ற வெறுப்பும் அளவுகடந்த பேரச்சமும் தவளை வெருளி.
சிலர் தவளையைப் பார்க்க நேர்வதைத் தீய நிமித்தமாக எண்ணுவர். தீயது நிகழப்போவதாக அஞ்சுவர்.
rani என்னும் இலத்தீன் சொல்லிற்குத் தவளை எனப் பொருள்.
00
- தவறாண்மை வெருளி – Detrectophobia
தவறான மேலாண்மை குறித்த வரம்பற்ற பேரச்சம் தவறாண்மை வெருளி.
ஆண்மை என்றால் ஆளுமை எனப் பொருள்.
வினைக்கண் வினைகெடல் ஓம்பல் வினைக்குறை
தீர்ந்தாரின் தீர்ந்தன்று உலகு (குறள் 612)
என்கிறார் திருவள்ளுவர்.
அஃதாவது, ஒரு செயலை அது கெடுமாறு கையாளக்கூடாது என்கிறார். அப்படிப்பட்டவரை உலகம் கை விட்டு விடுமாம்.
இத்தகைய தவறான மேலாண்மையால் தொழிலாளர் நல்லுறவின்மை, வருாய் இழப்பு, தொழில் தேய்தல் போன்ற கேடுகள் நிகழும். எனவே, தவறாண்மை குறித்துப் பேரச்சம் வருவது இயற்கைதான். ஆனால், தேவையற்றுக் காரணமின்றிப் பேரச்சம் கொள்ளக் கூடாது. அவ்வாறு அஞ்சினால் தவறாண்மை வெருளிக்கு ஆளாவர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
வெருளி நோய்கள்,
No comments:
Post a Comment