உயிர்மி (உயிரணு)
Cell (Biology)
- இலக்குவனார் திருவள்ளுவன்
ஆகத்து 28, 2012 12:44 இந்தியத் திட்ட நேரம்
நம் உடலில் அமைந்துள்ள கோடிக்கணக்கான நுண்ணறை ஒவ்வொன்றும் உயிர்மி எனப்படும். ஒரே வகையான செயல்திறன் கொண்ட உயிர்மிகளின் இணைப்பானது மெய்ம்மி(திசு) எனப்படும். பலவகைத் மெய்ம்மிகள் வேறுபட்ட விகிதங்களில் இணைந்து உருவாவது உறுப்பு. உறுப்புகள் சேர்ந்து அமைந்தது உடல்.
செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்படுகிறது; அதே போல் உயிர்மியை அடிப்படையாகக் கொண்டு உடல் கட்டுமானம் அமைந்துள்ளது. குருதி உயிர்மி, நரம்புஉயிர்மி,தசைஇழை உயிர்மி என 200 வகைப்பட்ட உயிர்மிகள் உள்ளன. இவை வடிவிலும் அளவிலும் மாறுபட்டன; என்ற போதும் திறன் மிகுந்த நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கத் தக்கன. 10,000கோடிக்கு மேற்பட்ட உயிர்மிகள் உடலில் உள்ளன.
நுண்ணறை, உயிரணு, ‘செல்’ என்றெல்லாம் பலரால் அழைக்கப்படுவதும் இதுவே. ஆனால் இச் சொற்களுக்கு வேறு பொருள்களும் உள்ளமையால் உயிர்ப்பிற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்பது சாலப் பொருத்தமாக அமையும். எனவே வெள்ளணு, சிவப்பணு என்பனவற்றை நாம் வெள்ளுயிர்மி, செவ்வுயிர்மி என்று சொல்லலாம்.
பழந்தமிழில் செந்து என உயிரணு எனப்படும் உயிர்மியைக் குறித்துள்ளனர். இதனைப் பிங்கல நிகண்டு(பா 3561 ) மூலம்அறியலாம். ஆனால், இச்சொல் வழக்கொழிந்து விட்டது. இச்சொல்லை மீண்டும் பயன்படுத்தலாம்
உயிர்மியை இணைக்கும் இடைப்பட்ட உயிரற்ற பொருள் உயிர்ம இடைமை எனப்பெறும்.
உயிர்ம பிணைப்புப் பொருளின் நிலை:
1. பாகு,
2. நார்,
3. நீர்மம்,
4. மாவு,
5. பசைமம்
உயிர்மி பற்றி அறிய வேண்டிய அடிப்படைத் தகவல்கள் வருமாறு
1. நமது உடல் கோடிக்கணக்கான உயிர்மிகளால் (அணுக்களால்) உருவானது.
2. உயிர்மியின் நடுவில் உட்கருவும் அதனைச்சுற்றி ஊன்மமும் உள்ளன.
3. உயிர்மி மெல்லிய சவ்வினால் மூடப்பட்டிருக்கும்.
4. குருதத்தில் உள்ள உயிர்மிகள், செவ்வுயிர்மி (செவ்வணு), வௌ்ளுயிர்மி (வௌ்ளணு) ஆகியன.
5. உயிர்வளியைக் கொண்டு செல்லவும் கரி வளியை வெளியேற்றவும் உதவுவது செவ்வுயிர்மி.
நன்றி : புதிய அறிவியல் http://www.newscience.in/articles/article-17
Cell (Biology)
- இலக்குவனார் திருவள்ளுவன்
ஆகத்து 28, 2012 12:44 இந்தியத் திட்ட நேரம்
நம் உடலில் அமைந்துள்ள கோடிக்கணக்கான நுண்ணறை ஒவ்வொன்றும் உயிர்மி எனப்படும். ஒரே வகையான செயல்திறன் கொண்ட உயிர்மிகளின் இணைப்பானது மெய்ம்மி(திசு) எனப்படும். பலவகைத் மெய்ம்மிகள் வேறுபட்ட விகிதங்களில் இணைந்து உருவாவது உறுப்பு. உறுப்புகள் சேர்ந்து அமைந்தது உடல்.
செங்கற்களை அடிப்படையாகக் கொண்டு கட்டடம் எழுப்பப்படுகிறது; அதே போல் உயிர்மியை அடிப்படையாகக் கொண்டு உடல் கட்டுமானம் அமைந்துள்ளது. குருதி உயிர்மி, நரம்புஉயிர்மி,தசைஇழை உயிர்மி என 200 வகைப்பட்ட உயிர்மிகள் உள்ளன. இவை வடிவிலும் அளவிலும் மாறுபட்டன; என்ற போதும் திறன் மிகுந்த நுண்ணோக்கியால் மட்டுமே பார்க்கத் தக்கன. 10,000கோடிக்கு மேற்பட்ட உயிர்மிகள் உடலில் உள்ளன.
நுண்ணறை, உயிரணு, ‘செல்’ என்றெல்லாம் பலரால் அழைக்கப்படுவதும் இதுவே. ஆனால் இச் சொற்களுக்கு வேறு பொருள்களும் உள்ளமையால் உயிர்ப்பிற்கு அடிப்படையான இதனை உயிர்மி என்பது சாலப் பொருத்தமாக அமையும். எனவே வெள்ளணு, சிவப்பணு என்பனவற்றை நாம் வெள்ளுயிர்மி, செவ்வுயிர்மி என்று சொல்லலாம்.
பழந்தமிழில் செந்து என உயிரணு எனப்படும் உயிர்மியைக் குறித்துள்ளனர். இதனைப் பிங்கல நிகண்டு(பா 3561 ) மூலம்அறியலாம். ஆனால், இச்சொல் வழக்கொழிந்து விட்டது. இச்சொல்லை மீண்டும் பயன்படுத்தலாம்
உயிர்மியை இணைக்கும் இடைப்பட்ட உயிரற்ற பொருள் உயிர்ம இடைமை எனப்பெறும்.
உயிர்ம பிணைப்புப் பொருளின் நிலை:
1. பாகு,
2. நார்,
3. நீர்மம்,
4. மாவு,
5. பசைமம்
உயிர்மி பற்றி அறிய வேண்டிய அடிப்படைத் தகவல்கள் வருமாறு
1. நமது உடல் கோடிக்கணக்கான உயிர்மிகளால் (அணுக்களால்) உருவானது.
2. உயிர்மியின் நடுவில் உட்கருவும் அதனைச்சுற்றி ஊன்மமும் உள்ளன.
3. உயிர்மி மெல்லிய சவ்வினால் மூடப்பட்டிருக்கும்.
4. குருதத்தில் உள்ள உயிர்மிகள், செவ்வுயிர்மி (செவ்வணு), வௌ்ளுயிர்மி (வௌ்ளணு) ஆகியன.
5. உயிர்வளியைக் கொண்டு செல்லவும் கரி வளியை வெளியேற்றவும் உதவுவது செவ்வுயிர்மி.
நன்றி : புதிய அறிவியல் http://www.newscience.in/articles/article-17
இவற்றின் அடிப்படையில் உயிர்மி வகைகளைப் பார்ப்போம்.
‘ ம’ உயிர்மி | m cell |
‘ஆ’ வகை உயிர்மி | B-cells |
அடர் செவ்வுயிர்மி பருமனளவு | packed cell volume |
அடர் செவ்வுயிர்மி இரத்தம் | packed cell blood |
அடி உயிர்மிப்புற்று | basal cell carcinoma |
அடிப்படை உயிர்மி அடுக்கு | basal cell layer |
அடுக்கு உயிர்மி | columnar cell |
அண்டக உயிர்மி | granulosa cell |
அண்டக்குழாய் தோல் உயிர்மி வளர்ச்சி | oviduct epithelial cell culture |
அமிலப்பற்று உயிர்மி | acidophil cell |
ஆக்குயிர்மி (தோற்ற உயிர்மி என்றால் தோல்வியுற்ற என்றோ தோற்றம் தரும் என்றோ தவறான பொருள் கொள்ளப்படலாம். எனவே உருவாக்கம் என்னும் பொருளில் ஆக்க உயிர்மி > ஆக்குயிர்மி என்பது சுருக்கமாக இருக்கும்.) | formative cell |
இசைவுதரு உயிர்மி | permissive cell |
இடைநடுவிலக்க உயிர்மித்தண்டு | intermediolateral cell column |
இடையமைவு உயிர்மி | interstitial cell |
இடையமைவு உயிர்மி ஊக்கிகள் | interstitial cell stimulating |
இடையமைவு உயிர்மிச் சுரப்பி | interstitial cell stimulating hormone |
இடையமைவு உயிர்மிக் கட்டி | intertitial cell tumour |
இடையீட்டு உயிர்மித்திரள் | intermediate cell mass |
இணைந்த உயிர்மிப் பகுப்பு | coupled cell division |
இணைப்பு உயிர்மி | connector cell |
ஆதரவு உயிர்மி | glial cell |
இயற்கை கொல் உயிர்மி | natural killer cell |
இரண்டாம் உயிர்மி ஆரல் | secondary cell wall |
இரண்டாம் கருவிழி உயிர்மி | secondary iris cell |
இரத்த உயிர்மி | blood cell |
இரத்த வெள்ளுயிர்மி எண்ணிக்கை | white blood cells count |
இரத்தச் சிவப்பு உயிர்மி | red blood cell |
இருபொதி உயிர்மி | amphicell |
இருமுனை உயிர்மி | bipolar cell |
இலையிடை உயிர்மி | mesophyll cell |
இழைம முகை உயிர்மி | fibroblast cell |
இறவாத உயிர்மிப் பாதை | immortalised cell line |
இனப்பெருக்க உயிர்மி | cell reproductive |
இனப்பெருக்க உயிர்மி (ஆக்க உயிர்மி என்றால் formative cell எனத் தவறான பொருள் கிட்டும்.) | generative cell |
ஈருயிர்மி நிலை | two cell stage |
ஈருயிர்மிய | bicellular |
உடல உயிர்மி | body cell |
உடல உயிர்மிப் பொருண்மை | body cell mass |
உடல உயிர்மி கலப்பினவாக்கம் | somatic cell hybridization |
உடல உயிர்மி மரபணுப் பண்டுவம் | somatic cell gene therapy |
உடல உயிர்மி மரபியல் | somatic cell genetics |
உடல் உயிர்மி | body cell |
உடல்சார் உயிர்மி | somatic cell |
உடல்சார் மாற்ற உயிர்மி | mutation somatic cell |
உடனொளிர் தூண்டு உயிர்மிப்பிரிப்பு | fluorescence activated cell sorting |
உட்சுரப்பு உயிர்மி | internal secretory cells |
விரைவிந்து உயிர்மி (இத்தாலிய மருத்துவர் என்ரிசன் செருட்டோலியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.) | sertoli cell |
உமிழ்நீர்ச்சுரப்பி உயிர்மி | salivary gland cell |
உயிர்மி | cell |
உயிர்மி அடக்கம் | cell inclusion |
உயிர்மி அடர்த்தி | cellularity |
உயிர்மி அற்ற | acellular |
உயிர்மி இடைவினைகள் | cell-cell interactions |
உயிர்மி இணைப்பு | cell coupling |
உயிர்மி இயலுமை எண்ணிக்கை முறை | viable cell count method |
உயிர்மி உணர்மை | sensitivity of cell |
உயிர்மி உயிர்ப்பு | cellular respiration |
உயிர்மி உயிர்ப்புக்காரணிகள் | cell-revival factors |
உயிர்மி உய்தல் | survival of cell |
உயிர்மி உள்ளுறை | cell-endothelium |
உயிர்மி உறுப்புகள் | cell organelle |
உயிர்மி ஏமம் | cellular immunity |
உயிர்மி ஒட்டிணைவு | cell adhesion |
உயிர்மி தனிமைப்படுத்துதல் | isolation of cell |
உயிர்மி நீரிழப்பு வேட்கை | cellular dehydration thirst |
உயிர்மி முடக்கம் | cell immobilization |
உயிர்மி வெளிப்பாய்மப் பருமன் | extracellular fluid volume |
உயிர்மி வெளிப்பொருள் அணி | extracellular matrix |
உயிர்மி வேறுபாடுறல் | cellular differentiation |
உயிர்மி அகப்படுத்தல் | cell entrapment |
உயிர்மி அமைப்பு | cell system |
உயிர்மி ஆரல் (உயிர்மிச்சுவர் | cell wall |
உயிர்மி ஆரல் நுண்ணமைப்பு | microstructure of cell wall |
உயிர்மி இடை | intercellular |
உயிர்மி இடை வெளி | intercellular space |
உயிர்மி இடைப் பகுதி | intracellular space |
உயிர்மி இணைவு | cell fusion |
உயிர்மி இறப்பு | cell death |
உயிர்மி உடலம் | cell body |
உயிர்மி உயிரக இணைவு | cellular oxidation |
உயிர்மி உயிரியல் | cell biology |
உயிர்மி உயிர்ப்பு | cell respiration |
உயிர்மி உய்வு | cell survival |
உயிர்மி உருத்தோற்றம் | morphogenetic cell |
உயிர்மி உறை | cell envelope |
உயிர்மி ஏற்பி | intra – cellular receptor |
உயிர்மி ஏற்பு | cell recognition |
உயிர்மி ஒட்டிணைவு மூலக்கூறு | cell adhesion molecule |
உயிர்மி சாரா | non-cellular |
உயிர்மி சார் ஏமம் | cell mediated immunity |
உயிர்மி சார் நச்சுத்தன்மை | cell mediated cytotoxicity |
உயிர்மி சார் நிணநீர் வெள்ளை அழிவு | cell mediated lympholysis |
உயிர்மி சார் நோய்எதிர்ப்பு அமைப்பு | cell-mediated immune system |
உயிர்மி சுருக்குதல் | cell contractility |
உயிர்மிச் சிதைவு | cell necrosis |
உயிர்மி தனித்தெடுத்தல் | cell isolates |
உயிர்மி நகரும் தன்மை | cell motility |
உயிர்மி நிகழ்வு | cell phenomenon |
உயிர்மி நீக்கம் | cell elimination |
உயிர்மி நீரிழப்பு | cellular dehydration |
உயிர்மி நோய்க்குறியியல் | cell pathology |
உயிர்மி பருமனளவு | cell volume |
உயிர்மி மரபியல் | cell genetics |
உயிர்மி மிகைப் பெருக்கம் | hyperplasia of cell |
உயிர்மி மீட்பு | cell recovery |
உயிர்மி மீள்கட்டுமானம் | cellular reconstruction |
உயிர்மி யற்ற புரத உற்பத்தி | cell-free protein synthesis |
உயிர்மி யிடை ஏற்பு | intercellular recognition |
உயிர்மி யிடைப் பாய்மம் | intercellular fluid |
உயிர்மி யிணைவழி | cell-to-cell channel |
உயிர்மி வகை | cell type |
உயிர்மி வகைமை மாற்றம் | cellular differentiation |
உயிர்மி வரிசை | cell line |
உயிர்மி வளர்ச்சி | cell growth |
உயிர்மி வளர்ப்பு | cell culture |
உயிர்மி வாழ்வுச் சுழற்சி | life cycle of cell |
உயிர்மி விரிவடைதல் | cell enlargement |
உயிர்மி வேறுபடுதல் | cell differentiation |
உயிர்மி அழற்சி | celluliltis |
உயிர்மியிடை இணைவு | intercellular adhesion |
உயிர்மிக் கட்டமைப்பு | cell structure |
உயிர்மிக் கழிவுகள் | cell debris |
உயிர்மிக் காரை | cellular cementum |
உயிர்மிக் கூட்டமாதல் | cell aggregation |
உயிர்மிக் கோட்பாடு | cell theory |
உயிர்மிக் கூறுகள் | cell components |
உயிர்மிச் சந்தி | cell-cell junction |
உயிர்மிச் சாரம் | cell sap |
உயிர்மிச் சிதைவு | cell lysis |
உயிர்மிச் சுழற்சி | cell cycle |
உயிர்மிச் சூழலமைப்பு | cellular ecology |
உயிர்மித் தகடு | cell sheet |
உயிர்மித் தட்டம் | cell plate |
உயிர்மித் தளம் | cell plane |
உயிர்மித் தற்காப்பு | cellular defence |
உயிர்மித் தொங்கல் | cell suspension |
உயிர்மிப் புற்றுநோய் | cellular oncogene |
உயிர்மிப் பகுப்பு | cell division |
உயிர்மிப் படலம் | cell membrane |
உயிர்மிப் படியாக்கம் | cell clone |
உயிர்மிப் பண்டுவம் | cell therapy |
உயிர்மிப் பிளவுநிலை | cell fragility |
உயிர்மிப் புற | extra cellular |
உயிர்மிப் புற நாடி | extra cellular artery |
உயிர்மிப் புறச்செரிப்பு | extra cellular digestion |
உயிர்மிப் புறநீர்மம் | extra cellular fluid |
உயிர்மிப் பூச்சு | cell plating |
உயிர்மிப் பெருக்கம் | cell proliferation |
உயிர்மிப் பொசிவு | cell permeability |
உயிர்மிப் பிளவு | cellular division |
உயிர்மிப் புற | extracellular |
உயிர்மியக உறுப்புகள் | intracellular bodies |
உயிர்மியக ஒட்டுண்ணிகள் | intracellular parasites |
உயிர்மியக நீர் | intracellular water |
உயிர்மியகச் சுரப்பு | intra cellular-secretium |
உயிர்மியகத் தடையம் | intracellular resistance |
உயிர்மியகப் பிரிவு | intracellular compartment |
உயிர்மி யிடை | intracellular |
உருமாறு உயிர்மி | amoeboid cell |
உருளை வடிவ உயிர்மி | cylindrical cell |
உள் உயிர்மித் திரள் | inner cell mass |
உள்தோல் உயிர்மி | endodermal cell |
உள்படல உயிர்மி | endothelial cell |
உறிஞ்சு உயிர்மி | absorptive cell |
ஊட்ட உயிர்மி | nutritive cell |
ஊட்ட அளிப்பு உயிர்மி | trophocyte cell |
ஊனீர் உயிர்மி | serous cell |
எதிரடி உயிர்மிகள் | antipodal cells |
எலும்பணு | bonecell |
எலும்பு உருவாக்க உயிர்மி | bone forming cell |
எலும்பைக் கரைக்கும் உயிர்மி | bone resorbing cells |
என்பாக்க உயிர்மிகள் | osteogenic cells |
ஏற்பி உயிர்மி | recipient cell |
ஒத்தக்கருநிலை உயிர்மி வரிசை | homozygous cell line |
ஒழுங்குபடுத்தும் உயிர்மி | regulatory cell |
உயிர்மி யற்ற | acellular |
ஒற்றை உயிர்மி | unicell |
தனி உயிர்மி அமைவம் | simple cellular organism |
ஒற்றை உயிர்மி அமைவம் | unicellular organism |
ஒற்றை உயிர்மி உடைய | unicelluar |
தனி உயிர்மிப் புரதம் | single cell protein |
ஒற்றை உயிர்மி நிலை | one cell stage |
ஒற்றை உயிர்மிச் சுரப்பி | unicellular gland |
ஒற்றைமய உயிர்மி | haploid cell |
ஒற்றைமய உயிர்மி வரிசை | haploid cell line |
ஒற்றைமய உயிர்மி வளர்ப்பு | haploid cell culture |
ஒற்றைமய முழுத்திறன் உயிர்மி | haploid totipotent cell |
ஓம்பு உயிர்மி | host cell |
கணைய உயிர்மி | pancreas cell |
கணையத் திட்டு உயிர்மி | islet cell of pancreas |
கரு உயிர்மி | germ cell |
கருநிலை உயிர்மி | germinal cell |
கருமுளை உயிர்மி வளர்ப்பு | embryonic cell culture |
கருமுளை குருத்துயிர்மி | embryonic stem cell |
கலப்பின உயிர்மி ஆக்கம் | hybrid cell formation |
கல் உயிர்மி | stone cell |
கல்லீரல் உயிர்மி | livercell |
கல்லீரல் உயிர்மி இணைப்புப் புற்றுக்கட்டி | sarcomatoid hepato cellular carcinoma |
கல்லீரல் உயிர்மி அமிலப் புற்று | hepato cellular adenoma |
கல்லீரல் உயிர்மிப் புற்றுநோய் | hepatocellular carcinoma |
கழுத்துப் பாதை உயிர்மி | neck canal cell |
கழுத்துப்பகுதி உயிர்மி | jacket cells |
காப்பு உயிர்மி | guard cell |
காம்பு உயிர்மி | stalk cell |
காலடி உயிர்மி | foot cell |
கிடைமட்ட உயிர்மி | horizontal cell |
கிண்ண உயிர்மி | goblet cell |
கீழ்விழி வெண்திரை உயிர்மி | hypodermal cornegean cell |
குச்சி, கூம்பு உயிர்மி | rods and cone cells |
குருதி வெள்ளுயிர்மி | white blood cell |
குருதிநீர உயிர்மி | cell, plasma |
குருத்து முகை உயிர்மி | chondroblast cell |
குருத்துயிர்மி | stem cell |
குருத்தெலும்பு உயிர்மி | cartilage cell |
குழாய் உயிர்மி | tube cell |
குறுகுப் பாதை உயிர்மி | ventral canal cell |
குற்றிழைப் புறணி உயிர்மி | celiary epithelial cell |
கூடை உயிர்மி | basket cell |
கூம்பு உயிர்மி | cone cell |
கூறணு | prickle cell |
கொடல் உயிர்மி | donor cell |
கேடயச் சுரப்பி உயிர்மிகள் | follicular cells |
கொம்புரு உயிர்மி | horny cell |
கொம்புரு உயிர்மி அடுக்கு | horny cell layer |
கொல்லும் உயிர்மி | killer cell |
கொழுமை உயிர்மி | adipose cell |
கொழுப்பு உயிர்மி | fat cell |
சல்லடை உயிர்மி | sieve cell |
சல்லடைக்குழாய் துணை உயிர்மிக் கூட்டு | sieve-element- companion-cell complex |
சிதல் தாய் உயிர்மி | spore mother cell |
பிளவு உயிர்மி | disintegrating cell |
சிதை உயிர்மி | lysogenic cell |
சிறு உயிர்மி | mini cell |
சிறுசிதல் தாய் உயிர்மி | microspore mother cell |
சிறுநீர்க்குழல் நிலை மாற்ற உயிர்மிப் புற்று | transitional cell tumour of the ureter |
சிற்றுயிரிப் புற்று | small cell tumour |
சீழ் உயிர்மி | pus cell |
சுடர் உயிர்மி | flame cells |
ஊறு(ம்) உயிர்மி | secretory cell |
சுரப்புயிர்மி | gland cell |
சூழ் உயிர்மி | envelope cell |
செதில் உயிர்மி அடுக்கு | squamous cell layer |
செதிள் உயிர்மி | cell, squamous |
உயிர்மிச் சந்திப்பு | cell junction |
உயிர்மி மரபுத் தொடர் | cell lineage |
உயிர்மியகச் செரிப்பு | intracellular digestion |
தசை உயிர்மி | muscle cell |
தசையினுள் ஊடுருவிய நிலைமாற்ற உயிர்மிப் புற்று | muscle invasion transitional cell-carcinoma |
தடுப்பு உயிர்மி | septal cell |
தட்டக உயிர்மி | discoidal cell |
தட்டை யுயிர்மிப் படலம் | squamous cell epithelium |
தட்டை யுயிர்மிப் புற்று | squmous cell carcinoma |
தண்டு உயிர்மி | rod cell |
தனி உயிர்மி ஆக்கம் | free-cell formation |
தாங்கு உயிர்மி | supporting cell |
தாய் உயிர்மி | mother cell |
தாய் விந்துயிர்மி | sperm mother cell |
தாய்ப் பாலின உயிர்மி | sex mother cell |
தாவர உயிர்மி | plant cell |
தாவர உயிர்மி வெளிச்சவ்வு | plant cell wall |
திட்டு உயிர்மி | islet cells |
உதவி உயிர்மி | accessory cell |
துணை உயிர்மி | auxiliary cell |
தோழமை உயிர்மி | companion cell |
துணைமை உயிர்மி | subsidiary cell |
தூணுரு உயிர்மி, | cell, columnar |
தொடக்க உயிர்மி | initial cell |
நஞ்சுக்கொடி உயிர்மி | placental cell |
நடு உறை உயிர்மி | mesodermal cell |
நரம்பு உயிர்மி | nerve cell |
நரம்பு உயிர்மிக் கட்டமைப்பு | nerve cell structure |
நரம்பு சுரப்புயிர்மி | neurosecretary cell |
நரம்புக்கணு உயிர்மி | ganglion cell |
நார் – உயிர்மி மேம்பாடு | fibre-cell development |
நாள உயிர்மி ஒட்டும் மூலக் கூறுகள் | vascular cell adhesion molecule |
நிணநீர் ‘ஆ’ உயிர்மி | lymphocytes B – cell |
நிணநீர் உயிர்மி | lymph cell |
நிலைமாற்ற உயிர்மிக் கழலை | transitional cell carcinoma |
நினை ‘ஆ’ உயிர்மி | memory B cell |
நினை உயிர்மி | memory cell |
நுண்ணி உயிர்மி ஆரல் | bacterial cell wall |
நுண்ணுயிர்மி | cell, bacteria |
நுண்பொதி உயிர்மி வளர்ப்பு | micro carrier cell culture |
நுரையீரல் கண்ணறை உயிர்மி | alveolar cell |
நுனி உயிர்மி | apical cell |
நொதிம உயிர்மிப் படலம் | yeast cell membrane |
நேர் உயிர்மி | upright cell |
பரிமாற்று உயிர்மி | transfer cell |
பல உட்கரு பேருயிர்மி | multinucleated giant cell |
பல உயிர்மி அமைவம் | multicellular organism |
பல் உயிர்மி சார் | multi cellular |
பல்திறன் மஞ்சை உயிர்மி | multipotent marrow cell |
பாதை உயிர்மி / வழியிணை உயிர்மி | canal cell |
பாலின உயிர்மி | sex cell |
பாலின உயிர்மி மேடு | sex cell ridge |
பாலூட்டி உயிர்மி | mammalian cell |
பாற்கூறு தாயுயிர்மி | gamete mother cell |
பிரி மெய்ம்மி உயிர்மி | meristematic cell |
பிறழுயிர்மி | gaucher’s cell |
பின் கொம்பு உயிர்மி | posterior horn cell |
புலன் உணர்ச்சி நரம்பு உயிர்மி | nerve sensory cell |
புலன் உயிர்மி | sense cell |
புறஉயிர்மிச் செயல்பாடு | extracellular activity |
புறணி உயிர்மி | cortical cell |
புறத்தோல் உயிர்மி | epithelial cell |
புற்றுநோய் உயிர்மி | cancer cell |
பெருஞ்சிதல் தாயுயிர்மி | megaspsore mother cell |
பேணுயுர்மி | nurse cell |
மகரந்தத் தாய்உயிர்மி | pollen mother cell |
மகள் உயிர்மி | daughter cell |
மண்டை உச்சிப் பக்க உயிர்மி | parietal cell |
மலட்டணு | sterile cell |
மாறா நிலை உயிர்மி | stationary phase cell |
மிதமிஞ்சிய உயிர்மி மறுதலிப்பு | hyperacute cellular rejection |
மீப் பேருயிர்மி | giant cell |
மீப் பேருயிர்மி நாடி அழற்சி. | giant cell arteritis |
மீப் பேருயிர்மிக் கட்டி | giant cell tumour |
முகட்டுயிர்மி | cap cell |
முட்டை மூல உயிர்மி / முட்டை தோற்றுவாய் உயிர்மி | egg mother cell |
முதல்நிலை விந்து வளர் உயிர்மி | primary germ cells |
முதன்மை உயிர்மி | principal cell |
முதன்மை உயிர்மி ஆரல் | primary cell wall |
முதிரா உயிர்மி | immature cell |
முழுத்திறன் உயிர்மி | totipotent cell |
முளை உயிர்மி | cell, germinal |
முள்தண்டுவட முன் கொம்பணுக்கள் | spinal anterior horn cell |
முன் கொம்பு உயிர்மி | anterior horn cell |
மூச்சுக்குழல் முனை உயிர்மி | tracheal end cell |
மூல உயிர்மி | parenchymal cells |
மூளை உயிர்மி | brain cell |
மூளையின் நரம்பு ஆட்சி உயிர்மிகள் | neuro territory cells of the brain |
மைப் புள்ளி உயிர்மி | ink dot cells |
மைய உயிர்மி | central cell |
மைய விலகு உயிர்மி | distal cell |
வலியற்ற உயிர்மி | unsound cells |
வழிஉயிர்மி கடத்து உயிர்மி | passage cell |
வளர் உயிர்மி | propagatory cell |
வளர்நிலை உயிர்மி | vegetative cell |
வளை உயிர்மி இரத்தச்சோகை | sickle cell anaemia |
வளை உயிர்மி நோய் | sickle-cell disease |
வளை உயிர்மி (அரிவாள் போன்ற வளைவு என்பதால் அரிவாள் பெயரால் ஆங்கிலத்தில் குறிப்பிட்டுள்ளனர். பிறைச் செவ்வுயிர்மி என்றும் சொல்வர்.) | sickle cell |
விரைப்பை நீர்மக்கட்டி உயிர்மி | testicular cyst cells |
விலங்கு உயிர்மி | animal cell |
விலங்கு உயிர்மி வளர்ப்பு | animal cell culture |
விழுங்கி உயிர்மி | phagocytic cells |
விளைம உயிர்மி | antigenic cell |
வீங்கிய உயிர்மி | bulliform cell |
வெள்ளுயிர்மி எண்ணிக்கை | white cell count |
வேர்த்தூவி உயிர்மி | root hair cell |
வேறுபாடடையும் உயிர்மி | differentiating cell |
வேற்றுவகை உயிர்மி உறை | adventitious sheath of cell |
No comments:
Post a Comment