மெய்ம்மிகள் (திசுக்கள்) (Tissues)
- இலக்குவனார் திருவள்ளுவன்
ஆகத்து 29, 2012 12:03 இந்தியத் திட்ட நேரம்
உடல்
என்றும் கூறப்பெறும் மெய்அமைய ஏதுவாக ஓரே திறனும் ஒத்த பண்பும் கொண்ட
உயிர்மிகள்(cells) இணைவதற்கு மெய்ம்மிகள் என்று பெயர். திசு எனத் திஃச்யூ
(tissue) என்னும் சொல்லின் தமிழ் ஒலிவடிவமாகக் கூறப்படுவது இதுவே ஆகும்.
நெய்வு என்னும் பொருளுடைய இலத்தீன் சொல், பழைய பிரெஞ்சில் இடம் பெற்று, .
அதிலிருந்து இடைக்கால ஆங்கிலத்தில் உயர்வகைத் துணியைக்குறிக்கும் (tissu
என்னும்) சொல்லில் இருந்து பிறந்ததே திஃச்யூ(tissue) என்னும் சொல்.
இவ்வாறே நெய்வு அல்லது இழைமம் என நெசவுடன் தொடர்பு படுத்திக் கூறுவதைவிட
மெய்யுடன் தொடர்புபடுத்தி மெய்ம்மி என்னும் பொழுது மிகப் பொருத்தமாக
அமைகின்றது.
இவ்வாறு உயிர்மிகளின் இணைப்பால் உருவாகும் மெய்ம்மி பலவகைப்படும். இவற்றுள் முதன்மையானவை வருமாறு:-
1. பரப்பு மெய்ம்மி (Epithelial tissue)
2. இணைப்பு மெய்ம்மி (Connective tissue)
3. தசை மெய்ம்மி (Muscle tissue)
4. நரம்பு மெய்ம்மி (Nervous tissue)
உடலின் ஆழத்தில் உள்ள பகுதிகளைப் பாதுகாக்கும் மெய்ம்மி பரப்பு மெய்ம்மி ஆகும். இது பெரும்பான்மை உயிர்மிகளையும் மிகச்சிறுபான்மை உயிர்ம இடைப் பொருள்களையும் கொண்டது. சுரத்தல், உறிதல், நகர்த்தல். சேமித்தல் தன்மை உடையது.
எ.கா.:-
புறத்தோல் உணவுக்குழாய் மெய்ம்மி - காக்கும் தன்மை
இரைப்பையின் உட்பரப்பு மெய்ம்மி - சுரக்கும் தன்மை
குடலின் உட்பரப்பு மெய்ம்மி - உறிஞ்சும் தன்மை
மூச்சுக்குழாய் உட்பரப்பு மெய்ம்மி - நகர்த்தும் தன்மை
கல்லீரல் மெய்ம்மி - சேமிக்கும் தன்மை
2. இணைப்பு மெய்ம்மி (Connective tissue)
3. தசை மெய்ம்மி (Muscle tissue)
4. நரம்பு மெய்ம்மி (Nervous tissue)
உடலின் ஆழத்தில் உள்ள பகுதிகளைப் பாதுகாக்கும் மெய்ம்மி பரப்பு மெய்ம்மி ஆகும். இது பெரும்பான்மை உயிர்மிகளையும் மிகச்சிறுபான்மை உயிர்ம இடைப் பொருள்களையும் கொண்டது. சுரத்தல், உறிதல், நகர்த்தல். சேமித்தல் தன்மை உடையது.
எ.கா.:-
புறத்தோல் உணவுக்குழாய் மெய்ம்மி - காக்கும் தன்மை
இரைப்பையின் உட்பரப்பு மெய்ம்மி - சுரக்கும் தன்மை
குடலின் உட்பரப்பு மெய்ம்மி - உறிஞ்சும் தன்மை
மூச்சுக்குழாய் உட்பரப்பு மெய்ம்மி - நகர்த்தும் தன்மை
கல்லீரல் மெய்ம்மி - சேமிக்கும் தன்மை
உறுப்புகளுக்கு
உறுதியும் வலிமையும் அளிக்கும் மெய்ம்மி இணைப்பு மெய்ம்மி. இணைப்பு
மெய்ம்மியில் உயிர்மி எண்ணிக்கை குறைவு; இடைப்பொருள் மிகுதி.
சவ்வுமெய்ம்மி,கொழுப்புமெய்ம்மி, நார்மெய்ம்மி, குருத்தெலும்பு மெய்ம்மி,
எலும்பு மெய்ம்மி, குருதி மெய்ம்மி, ஊனீர் சவ்வு மெய்ம்மி என இது
பிரிக்கப்பட்டுள்ளது. குருதி மெய்ம்மியின் உயிர்ம இடைப்பொருள் குருதம்.
உடலின்
அசைவிற்கும் நடமாட்டத்திற்கும், உடலில்அமைந்துள்ள பல்வேறு பாதைகளில் உள்ள
பொருள்களை நகர்த்துவதற்கும் உதவுவது தசை மெய்ம்மி. தசை மெய்ம்மியில் உள்ள
உயிர்மிகள் சுருங்கும் தன்மை உடையன. ஆதலால் உடல் அசைவிற்கும்
நடமாட்டத்திற்கும் உடல் பாதைகளில் அமைந்துள்ள பொருள்களின்
நடமாட்டத்திற்கும் உதவுகின்றன.
நரம்புமெய்ம்மியால் ஆன மிகப் பெரிய உறுப்பு மூளை நரம்பு. மெய்ம்மியின் உயிர்மிகள் நரம்பன்கள் எனப் பெறும்.
மெய்ம்மிகளைப்
பற்றி ஆராயும் துறை மெய்ம்மியல் (histology) ஆகும். நோயறிதலுக்காக
மெய்ம்மிகளை ஆராயும் துறை மெய்ம்மிநோயியல் (histopathology)ஆகும்.
(பயிர்மெய்ம்மிகள்பற்றித் தனியே பார்க்கலாம்.)
நன்றி :
புத்தறிவியல் http://www.newscience.in/articles/article-19
மெய்ம்மி தொடர்பான வேறு சில சொற்களையும் காண்போம்.
அடர் மெய்ம்மிப் பாய்மம் | dense tissue fluid |
ஆக்கு மெய்ம்மி | meristematic tissue |
புரத மெய்ம்மி | aleurone tissue |
இடை மெய்ம்மி இணைப்பு | conjunctive tissue |
இணைப்பு மெய்ம்மி | stromal tissue |
இணைப்பு மெய்ம்மி நோய் | connective tissue disease |
இணைப்பு மெய்ம்மிக் கற்றை | fibrillar binding tissue |
இரண்டாம் நிலை மெய்ம்மி | secondary tissue |
இலையிடை மெய்ம்மி | mesophyll tissue |
இழைம நெகிழ்மெய்ம்மி | fibro elastic tissues |
இழைம மெய்ம்மி,(நார் மெய்ம்மி) | fibrous tissue |
இறந்த மெய்ம்மி | nectrotic tissue |
இனப்பெருக்க மெய்ம்மி | germplasm (reproductive tissue) |
உடல் மெய்ம்மி | body tissue |
உணக்கல் மெய்ம்மி | mummified tissue |
உறுதி மெய்ம்மி | mechanical tissue |
உறுப்பு மெய்ம்மி மாற்றிப் பொருத்தல் | transplantation of organs and tissues |
ஊட்டு மெய்ம்மி | transfusion tissue |
எலும்பு மெய்ம்மியின் நுண்ணமைப்பு | microstructure of bone tissue |
எலும்புச் சட்ட மெய்ம்மி | skeletal tissue |
எலும்பு முகை மெய்ம்மி | osteoid tissue |
காற்றக மெய்ம்மி | aerenchyma tissue |
ஒட்டு மெய்ம்மி | graft tissue |
கரவிட மெய்ம்மி | perineal tissue |
கரு மெய்ம்மி | nuclear tissue |
கருவுறு பின் மெய்ம்மி | post fertilization tissue |
குருணை மெய்ம்மி, (சிறுமணி மெய்ம்மி) | granulation tissue |
குருதியாக்க மெய்ம்மி | hemopoietic tissue |
குருத்தெலும்பு மெய்ம்மி | cartilaginous tissue |
குழிப்பை மெய்ம்மி | alveolar tissue |
கூட்டு மெய்ம்மி | complex tissue |
கொழுப்பு மெய்ம்மி | adipose tissue |
கொழுப்புமிகு மெய்ம்மி | fatty tissue |
மெலி மெய்ம்மி | lean tissue |
சிதையாளி மெய்ம்மி | caseous tissue |
சூல் மெய்ம்மி | nucellar tissue |
சூல்முகை மெய்ம்மி | trophoblast tissue |
சூழ் மெய்ம்மி | periarticular tissue |
தசை மெய்ம்மி | muscle tissue |
தள மெய்ம்மி | ground tissue (pith) |
தாய்சார் மெய்ம்மி | maternal tissue |
தாவர மெய்ம்மிகளின் தனிமச் சேர்மானம் | elemental composition of plant tissues |
தானிய மெய்ம்மி வளர்ப்பு | cereal tissue culture |
தொடர்நிலை மெய்ம்மித் தொகுப்பு, ஒருங்கிய மெய்ம்மித் தொகுப்பு | coherent tissue system |
தோலடிப் படல மெய்ம்மி | sub cutaneous tissue |
நலமிலாக் குறுணை மெய்ம்மி | unhealthy granulation tissue |
இழைம மெய்ம்மிக் கழலை | fibrous tissue tumour |
நிணநீர் மெய்ம்மி | lymphatic tissue |
நிலை மெய்ம்மி | permanent tissue |
நிறமி மெய்ம்மி | chromaffin tissue |
நீர்ச்சேமிப்பு மெய்ம்மி | water storage tissue |
கிடை மெய்ம்மி | horizontal tissue |
பயிர் மெய்ம்மி வளர்ப்பு | plant tissue culture |
பழுப்புநிறக் கொழுப்பு மெய்ம்மி | brown adipose tissue |
பற்புற மெய்ம்மி | periodontal tissue |
பிடிப்பு இணைப்பு மெய்ம்மி | catch connective tissue |
புற மெய்ம்மி | peripheral tissue |
புறத்தோல் மெய்ம்மி | epithelial tissue |
மர மெய்ம்மி | wood tissue |
மீள்திற மெய்ம்மி /(நெகிழ் மெய்ம்மி) | elastic tissue |
முகிழ் இணைப்பு மெய்ம்மி | primitive connective tissue |
முதல்நிலை மெய்ம்மி | primary tissue |
அடிப்படை மெய்ம்மி | fundamental tissue |
முளை மெய்ம்மி | germinal tissue |
முனைப்புறு மெய்ம்மி மறுதலிப்பு | acute tissue rejection |
மூட்டு மெய்ம்மி | articular tissue |
மெய்ம்மிக் குறடு | tissue forceps |
மெய்ம்மி அழுகல் | tissue necrosis |
மென் மெய்ம்மி | spongy tissue |
மெய்ம்மி உட்கவர் அளவு | tissue dose |
மெய்ம்மி ஊறு | tissue damage |
மெய்ம்மி நிலைப்படுத்துதல் | fixation of tissues |
மெய்ம்மி நீர்மம் | tissue fluid |
மெய்ம்மி பொடியாக்கம் | tissue friability |
மெய்ம்மி மறுதலிப்பு, | tissue rejection |
மெய்ம்மி வளர்ப்பறை | tissue culture room |
மெய்ம்மி வளர்ப்பியல் உத்திகள் | tissue culture techniques |
மெய்ம்மி வளர்ப்பு | tissue culture |
மெய்ம்மி வேறுபாடு | tissue differentation |
மெய்ம்மி | tissue |
மெய்ம்மிக்காரணி | tissue factor |
மெய்ம்மிச் சிதைமாற்றம் | tissue catabolism |
மெய்ம்மித் தோன்றல்கள் | tissue derivatives |
மெய்ம்மிப் படிவு | tissue deposits |
மெய்ம்மிப் பண்ணை | tissue farm |
மெய்ம்மிப் பரவல் | tissue distribution |
மெல்லிய இணைச் சவ்வு | long connective tissue |
மென் மெய்ம்மி | soft tissue |
மென் மெய்ம்மிப் புற்று | soft tissue sarcoma |
மென்படல நிணநீர் மெய்ம்மி | mucosa associated lymphoid tissue |
வலை மெய்ம்மி | reticular tissue |
வளர் மெய்ம்மி | growing tissue |
விரவு மெய்ம்மித் தொகுப்பு | disperse tissue system |
விலங்கு மெய்ம்மி வளர்ச்சி | animal tissue culture |
வில்லை துடைப்பி | lens tissue |
வெள்ளை, மாநிறக் கொழுமை மெய்ம்மி | white and brown adipose tissue |
வெள்ளைக் கொழுமை மெய்ம்மி | white adipose tissue |
வேலிக்கால் மெய்ம்மி | palisade tissue |
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment