(வெருளி நோய்கள் 47-50 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 51-54
51. ‘வி’ / V’ எழுத்து வெருளி – Victophobia
‘வி’ / V’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வி’ / V’ எழுத்து வெருளி.
00
52. ‘வேசி / ‘whore’ சொல் வெருளி – Huophobia
‘வேசி / whore’ என்னும் சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வேசி /whore’ சொல் வெருளி.
ஆண் மட்டுமல்ல, பெண்ணும் மற்றொரு பெண்ணை இழிவுபடுத்துவதற்காக, விலைமகள், வேசி, பரத்தை, வேசிமகள் எனப் பலவகைகளில் ஏசுகின்றனர். இதற்குப் பயன்படுத்தும் ‘வேசி/whore’ என்ற சொல்லைக் கேட்டதும் தாங்கள் இழிவுபடுத்தப்பட்டதாகப் பெருங்கவலையும் பேரச்சமும் கொள்வர்.
அதுபோல், ஆணையும் வேசி மகன், தகா உறவு கொண்டவன் என்பன போன்று ஏசுகின்றனர்.
00
53. 0.5 ஆம் எண் வெருளி Semiphobia
0.5 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 0.5 ஆம் எண் வெருளி.
பாதி அல்லது அரை என்பதைக் குறிக்கும் .5 எண் குறித்த பேரச்சம். சில நேரங்களில் மன நலம் சரியில்லாதவர்களை அரை(க்கிறுக்கு)(செமி) என்று சொல்வதாலும் பாதி எண் குறித்த பேரச்சம் எழுகிறது.
00
54. 1 ஆம் எண் வெருளி Henophobia / unophobia
1 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 1ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் hen என்றால் 1 ; இலத்தீனில் unus என்றால் 1.
இப்பேரச்சம் உள்ளவர்கள் எதையும் முதல் முறை செய்வதற்கு அஞ்சுவார்கள்.
எண் 1 சூரியனின் ஆட்சிக்குரியது. எனவே, பொதுவாக நற்பலன்கள் கூறப்படுகின்றன. எனினும் இவர்களுக்கு வெப்பத்தால் பாதிப்பு வரும், மலச்சிக்கல் உண்டாகும், பித்தநீர் ஓட்டம் மிகும், கண்பார்வைக் குறைபாடு வரும், இரத்தக் கொதிப்பு, சீரணக் கோளாறுகள், படபடப்பு, தலைவலி வரும் என்றெல்லாம் படித்து விட்டு அவை வந்துவிட்டதாகவே கவலைப்படுவோர் உள்ளனர்.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment