(வெருளி நோய்கள் 61-65 தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 66-70
66.) 14 ஆம் எண் வெருளி – Quattuordecimphobia
14 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 14 ஆம் எண் வெருளி.
00
67.) 15 ஆம் எண் வெருளி Quindecimphobia
15 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 15 ஆம் எண் வெருளி.
00
68.) 16 ஆம் எண் வெருளி – Hekkaidekaphobia
16 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 16 ஆம் எண் வெருளி.
00
69.) 17 ஆம் எண் வெருளி Heptaidekaphobia / Septadecaphobia
17 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் 17 ஆம் எண் வெருளி.
பழங்கிரேக்கத்தில் hepta என்றால் ஏழு, deca என்றால் பத்து எனப் பொருள். /0010 = 17 எனக்குறிக்கிறது.
.
இத்தாலியில் 17 தீயூழ் எண்(இராசியில்லாத எண்) என நம்புகின்றனர். இதனால் உருவானதுதான் 17 ஆம் எண் வெருளி. இத்தாலியில் மொழியான உரோமன் எண் 17 என்பது XVII எனக்குறிக்கப் பெறும்.
கரந்துறைமொழி (anagram) என்பது ஒரு சொல்லின் எழுத்துகளை மாற்றியமைத்து ஆக்கப்படும் வேறொரு சொல் ஆகும். சொல்லின் எழுத்துமுறையை மாற்றிப்புதுச் சொல்லாக்குவது என்றும் சொல்லலாம். இந்தமுறையில் 17 / XVII என்பது VIXI எனக் கரந்துரை மொழியாகிறது. இதன் பொருள் நான் வாழ்ந்து முடித்து விட்டேன் / என் வாழ்க்கை முடிந்து விட்டது.
தொன்மக் கதைப்படி இறப்புக் கடவுளான ஓசிரிசு(Osiris) 17 ஆம் நாள் (தேதி) என்று இறந்தார் என்பதால் 17 என்பது இறப்பு எண்ணாக அவர்களால் கருதப்படுகிறது.
சனவரி 17, பிப்பிரவரி 17 எனப் பல மாதங்களில் 17 ஆம் நாள் துன்பநாளாக அமைந்ததும் பேரச்சத்திற்குக் காரணம். ஓசிரிசு இறந்தது 17 ஆம் நாள் முழுநிலவு நாளாகும். எனவே, எல்லா 17 ஆம் நாளுக்கும் அஞ்சாமல் முழுநிலவு நாளன்று வரும் 17 ஆம் நாளுக்கு மட்டும் பேரச்சம் கொள்வர்.
00
- 18 ஆம் எண் வெருளி – Octaidekaphobia
18 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்18 ஆம் எண் வெருளி.
கிரேக்கத்தில் octo என்றால் 8, deka என்றால் 10 எனப் பொருள்.
கிரேக்கத்தில் octo என்றால் 8 என்றால் deka 10 எனப் பொருள். இரண்டும் சேர்ந்த Octaideka என்பது கூட்டுப்பொருளான 18ஐக் குறிக்கிறது.
இளம்பருவம் முடியும் அகவை 18 என்பதைக் குறிப்பதால் சிலருக்கு 18 என்பது குறித்த பேரச்சம் வருகின்றது. வயதுக்கு வந்துவிட்டதால் இளமை ஆட்டங்களில் ஈடுபட முடியாது எனக் கவலைப்படுவர்.
சிலருக்கு 666 ஆம் எண் வெருளி / hexakosioihexekontahexaphobia க்குக் காரணமான 666 இன் கூட்டுத் தொகை (6006006=)18 என்பதாலும் அவ்வெருளி உள்ளவர்களுகு்கு 18 குறித்துப் பேரச்சம் வரும்.
00
(தொடரும் )
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment