(வெருளி நோய்கள் 811-815: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 816-820
- குடும்ப மர வெருளி – Oikogeneiaphobia
குடும்ப மர வலைத்தளங்கள் குறித்தும் உருவாக்கநர் குறித்தும் அளவுகடந்த தேவையற்ற பேரச்சம் கொள்வது குடும்ப மர வெருளி.
தடத்தள வெருளி(Oikoechophobia) என்பது குடும்பர மர உருவாக்கல் தொடர்பான குறிப்பிட்ட -குடும்பத்தடம் – வலைத்தளம் பற்றியது. இது பொதுவாகக் குடும்ப மரம்(Family Tree) குறித்த எல்லா வலைத்தளங்கள் பற்றியது.
00
- குடுவைப்பயிர் வெருளி – Terrarophobia
கண்ணாடிக் கொள்கலனில் வளர்க்கப்படும் பயிர்கள் குறித்த தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் குடுவைப்பயிர் வெருளி.
கண்ணாடிக் குடுவைப் பயிர் என்னும் பொருள் கொண்ட terrarium என்ற சொல்லில் இருந்து Terraro உருவானது.
தாழி மரம்(bonsai) போன்றதே குடுவைப் பயிரும். பயிர் என்பது சிறு தோட்டச் செடிவகைகளைக் குறிக்கிறது.
00
- குடுவை வெருளி – Kypellophobia
குடுவை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடுவை வெருளி.
Kypello என்றால் குடுவை, குவளை, கிண்ணம் எனப் பொருள்கள்.
00
- குடை வெருளி – Umbrellaphobia
குடை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குடை வெருளி.
குடையைப் பிடித்து இருத்தல், குடைக்குள் அல்லது குடைக்கருகில் இருத்தல் அல்லது குடையைப் பார்த்தல் போன்ற சூழல்களிலேயே குடையைக் கண்டு காரணமற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
சிறு குடை என்னும் பொருள் உடைய pellebant என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து Pelleba என்னும் சொல் உருவானது.
00
- குட்டிச்சாத்தான் வெருளி – Fayophobia
குட்டிச்சாத்தான்(elve))பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் குட்டிச்சாத்தான் வெருளி.
குட்டிச் சாத்தான்பற்றிய கதைகள், திரைப்படங்கள் முதலானவற்றின் மூலம் குட்டிச்சாத்தானால் தீங்கு நேரும் எனப் பேரளவு அச்சம் கொள்கின்றனர். சிறு அகவையில் குட்டிச்சாத்தான் நேரில் வந்து தொல்லை கொடுக்கும் என அஞ்சியோர் அதிலிருந்து மீளாமல் அச்சத்திலேயே வளர்ந்து விடுகின்றனர். குட்டிச்சாத்தான் படத்தைப் பார்த்தாலோ பிறர் சொல்லக் கேட்டாலோ அளவு கடந்த அச்சத்திற்கு ஆட்பட்டு விடுகின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5