(வெருளி நோய்கள் 756-760: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 761-765
- கால் வருடி வெருளி – Fwautphobia
கால் வருடி(foot massager) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால் வருடி வெருளி.
கால் வருடியில் பாதங்கள் சிக்கிக் கொள்ளுமோ, மின் அதிர்ச்சிக்கு ஆளாகிப்பேரிடர் நேருமோ என்றெறல்லாம தேவையற்ற கவலைக்கு ஆளாகி வருடி வெருளிக்கு ஆளாகின்றனர்.
00
- கால் விரல் வெருளி- Digitusphobia
கால்விரல்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால்விரல் வெ
கால்விரல்களில் வலி ஏற்படும், சேற்றுப் புண் ஏற்படும், விரல் முட்டிகளில் வீக்கம் ஏற்படும் என்பன போன்ற தேவையற்ற பேரச்சம் கொண்டு கால் விரல் வெருளிக்கு ஆளாகின்றனர்.
“digitus” என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கால் விரல்.
காண்க : கால் வெருளி.
00
- கால் வெருளி –Podophobia
கால்கள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கால் வெருளி.
Podo என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கால் எனப் பொருள்.
காண்க : கால் விரல் வெருளி- Digitusphobia
00
- கால்நடை வெருளி – Bovinophobia
கால்நடைகள் மீதான அளவுகடந்த பேரச்சம் கால்நடை வெருளி.
கால் நடைகள் முட்டி விடும், குத்திவிடும், தள்ளி விடும் என்பன போன்ற அச்சங்களுக்கு ஆளாகின்றனர்.
காால்நடை மோதிய பயங்கர நிகழ\வைப் பார்க்கும் குழந்தை அதன் பின்னர் படத்திலோ தொலைக்காட்சியிலோ கால்நடையைப் பார்த்தாலே பகுத்தறிவற்ற தேவையற்ற பேரச்சத்திற்கு ஆளாவதுண்டு.
bovi என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் எருது அல்லது ஆடுமாடுகள்.
00
- காவல் ஊர்தி வெருளி – Jingchephobia
காவல் ஊர்தி(police car) தொடர்பான வரம்பற்ற பேரச்சம் காவல் ஊர்தி வெருளி.
குற்றவாளிகள் மட்டுமல்லாமல் பிற பொது மக்களும் ஒலி எழுப்பிக் கொண்டு வரும் காவல் ஊர்தியைக் கண்டு அல்லது அதன் ஒலிப்பான் எழுப்பும் ஒலி கேட்டுப் பெரு வெருளிக்கு ஆளாகின்றனர்.
மகிழுந்து வெருளி(cochephobia),ஊர்தி வெருளி(ochophobia) உள்ளவர்களுக்குக் காவல் ஊர்தி வெருளி வர வாய்ப்புள்ளது.
Jingche என்னும் சீனச்சொல்லின் பொருள் காவல் ஊர்தி.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment