(வெருளி நோய்கள் 796-800: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 801-805
- கிறுகிறுப்பு வெருளி- Illyngophobia / Dinophobia(1)
கிறுகிறுப்பு தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் கிறுகிறுப்பு வெருளி.
நீர்ச்சுழற்சி அல்லது தலை சுற்றல் தொடர்பான பேரச்சத்தையும் குறிக்கும்.
இரண்டிற்கும் பொதுவான சுழற்சி அடிப்படையில் முதலில் சுழற்சி வெருளி எனக் குறித்திருந்தேன். நீர்ச்சுழியாகிய நீர்ச்சுழற்சியைப்பார்க்கும் பொழுது தலை கிறு கிறு எனச் சுற்றுவதால் அல்லது தலை சுற்றும் என அஞ்சுவதால் வரும் பேரச்சத்தைத்தான் இது குறிக்கிறது. எனவே சுற்றல் வெருளி என்பதை விட கிறுகிறு வெருளி என்பது இன்னும் பொருத்தமாக இருக்கும் என்பதால் அதனைக் குறித்துள்ளேன்.
கிறுகிறுப்பு வரும் முன்னரே மேலே இருந்து கீழேபார்த்தால் கிறுகிறுப்பு வரும் என்று பேரச்சம் கொள்வர்.மாடிப்பகுதிகள், மொட்டைமாடிகள், உயர்ந்த கட்டடங்கள், உயர்ந்த பகுதிகள், மலைப்பகுதிகள், உயரத்தில் சுற்றும் சுழல் ஊஞ்சல் (இராட்டினம்) முதலியவற்றிற்குச் செல்லும் பொழுது மயங்கி விழப்போவதாகப் பேரச்சம் கொள்வர்.
illyngo என்றால் கிறுகிறுப்பு எனப் பொருள். பொதுவாகக் கீழே பார்க்கும் பொழுது ஏற்படும் மயக்கத்தைக் குறிக்கிறது.
00
- கீசா வெருளி – Keeshaphobia
புனைவுரு கீசா பிராங்கிளின்(Keesha Franklin) குறித்த அளவு கடந்த பேரச்சம் கீசா வெருளி.
கீசா பிராங்கிளின், திரு பிராங்கிளினின் இரண்டாவது மகளாவார்.
00 - கீழைப் போலந்து முதலீட்டு வெருளி – Investineasternpolandphobia
போதிய வளர்ச்சி இல்லா நாடான கிழக்குப்போலந்தில் முதலீடு செய்வது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கீழைப் போலந்து முதலீட்டு வெருளி.
கிழக்குப் போலந்தில் நீங்கள் ஏன் முதலீடு செய்யவில்லை? (Why didn’t you invest in Eastern Poland? / Dlaczego nie zainwestowałeś w Polsce Wschodniej?) எனக் கிழக்குப் போலந்தில் ஒரு பரப்புரை இயக்கமே மேற்கொள்ளப்படுகிறது. அந்த அளவிற்கு அங்கே முதலீடு செய்வது குறித்து வெருளி உள்ளது.
00
- கீறல் ஓட்டு வெருளி – R
crebphobia
கீறல் ஓடு தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கீறல் ஓட்டு வெருளி.
ஓட்டில் கீறல் விழுந்திருப்பின் மழை நீர் கசியும், அறைக்கு உள்ளே சொட்டும், சூறைக்காற்றால் உடைந்து கீழே விழும், காயம் ஏற்படுதல் போன்ற இடர் ஏற்படும் என்ற வெருளி வரும்.
00
- ilakkuvanar thiruvalluvanகுச்சிப் பண்ட வெருளி – Gleifitzouriphobia
குச்சிப் பண்டம்(lollipop)பற்றிய அளவுகடந்த பேரச்சம் குச்சிப் பண்ட வெருளி.
Gleifitzouri என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குச்சிப் பண்டம்(
Lollipop) எனப் பொருள்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment