காளான்பற்றிய அளவுகடந்த பேரச்சம் காளான் வெருளி.
காளாம்பி என்றும் காளானைக் குறிப்பர். எனவே, முதலில் காளாம்பி வெருளி என்றும் குறித்திருந்தேன். எனினும் இரு வகை வேண்டா என்பதால் இப்பொழுது காளான் வெருளி என்று மட்டும் குறித்துள்ளேன்.
myco என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் காளான்.
00

காற்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் காற்பந்தாட்ட வெருளி.

அமெரிக்கா, கனடா, ஆத்தரேலிய நாடுகளில் காற்பந்தை(foot ball) உதைபந்து(soccer ball) என்பதால் உதைபந்தாட்ட வெருளி என்றும் சொல்லப் பெறும்.
காற்பந்தாட்டத்தினால் உடலுக்கோ உயிருக்கோ சேதமோ இழப்போ நேரிடலாம் என்று அஞ்சி காற்பந்தாட்ட வெருளிக்கு ஆளாவர். காற்பந்தாட்டம் ஆடுபவர்களுக்கு மட்டுமல்லாமல் பார்க்க வரும் பார்வையாளர்களுக்கும் காற்பந்தாட்ட வெருளி வருவதுண்டு.
00

காற்புள்ளிக் குறி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காற்புள்ளிக் குறி வெருளி.
ஒரு செய்தி அல்லது விவரம் முற்றாகும் எனக்கருதும்பொழுது அது தொடர்வதன் அடையாளமாகக் காற்புள்ளி வருவதால் தேவையற்ற கவலையும் அச்சமும் கொண்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
முற்றுப்புள்ளி, வினாக்குறி, இடைக்கோடு முதலான நிறுத்தக் குறியீடுகள் வெருளி உள்ளவர்களுக்குக் காற்புள்ளி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
.00

காற்று ஒலி்ப்பான்(air horn) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் காற்று ஒலி்ப்பான் வெருளி.
காற்று ஒலிப்பான்களின் உரத்த ஒலியும் அச்சந் தரும் இரைச்சலும் உண்டாக்கும் காற்று மாசுபாடும் அச்சத்தையும் கவலையையும் உண்டாக்கி காற்று ஒலிப்பான் வெருளியை ஏற்படுத்துகிறது.
காற்று ஒலிப்பானைப் பயன்படுத்த மத்திய இயந்திர வாகன விதிகளின்(CMV Rules) கீழ்த் தடை விதிக்கப்பட்டுள்ளது.
00

(தொடரும்)