வெருளி நோய்கள் 831-835
- குப்பைத் தொட்டி வெருளி – Dumpsterphobia
குப்பைத் தொட்டி(dumpster) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குப்பைத் தொட்டி வெருளி.
குப்பைத்தொட்டியில் உள்ள குப்பை, கூளம், செத்தை, அழுகல் பொருள், கழிவு போன்றவற்றால் எற்படும் தீ நாற்றம் குறித்து அ்ருவருப்பு அடைந்து வெருளிக்கு ஆளாகின்றனர். குப்பைத் தொட்டி காலியாக இருந்தாலும் இவை குறித்த எண்ணத்தால் வெருளி கொள்வர்.
காண்க: குப்பை வெருளி-Purgamentophobia
00
- குப்பை வண்டி வெருளி – Lajichephobia குப்பை வண்டி(garbage truck) மீதான அளவுகடந்த பேரச்சம் குப்பை வண்டிவெருளி.
குப்பை வண்டியில் எடுத்துச் செல்லப்படும் குப்பை, கூளம், செத்தை, அழுகல் பொருள், கழிவு போன்றவற்றால் எற்படும் தீ நாற்றம் குறித்து அ்ருவருப்பு அடைந்து வெருளிக்கு ஆளாகின்றனர். குப்பை வண்டி காலியாக இருந்தாலும் இவை குறித்த எண்ணத்தால் வெருளி கொள்வர்.
Lajiche என்னும் சீனச் சொல்லின் பொருள் குப்பை வண்டி.
காண்க: குப்பை வெருளி-Purgamentophobia
.00 - குப்பை வாளி வெருளி – Purinsumphobia
குப்பை வாளி(trash can) குறித்த வரம்பற்ற பேரச்சம் குப்பை வாளி வெருளி.
குப்பைத் தொட்டி வெருளி போன்றதுதான் குப்பை வாளி வெருளி. குப்பை வாளியில் உள்ள குப்பை, கூளம், செத்தை, அழுகல் பொருள், கழிவு போன்றவற்றால் எற்படும் தீ நாற்றம் குறித்து அ்ருவருப்பு அடைந்து வெருளிக்கு ஆளாகின்றனர். குப்பை வாளி காலியாக இருந்தாலும் இவை குறித்த எண்ணத்தால் வெருளி கொள்வர்.
காண்க: குப்பை வெருளி; குப்பைத் தொட்டி வெருளி – Dumpsterphobia
00
- குப்பை அகற்றி வெருளி – Voedsephobia / Voodsephobia
குப்பை அகற்றி(garbage disposal) குறித்த வரம்பற்ற பேரச்சம் குப்பை அகற்றி வெருளி.
என்பது குப்பையை அகற்றப் பயன்படும் பொருள்மீது ஏற்படும் வெருளி.
குப்பை முற வெருளி போன்றதுதான் இதுவும்.
Voedse என்னும் சொல் voedsel என்னும் ஆலந்து(Dutch( மொழிச் சொல்லின் சுருங்கிய வடிவம்.
00
- குமட்டல் வெருளி-Aeronausiphobia
குமட்டல் தொடர்பான இயல்பு கடந்த பேரச்சம் குமட்டல் வெருளி.
வானூர்தியில் செல்கையில் வாந்தி வருவது குறித்த தேவையற்ற பேரச்சம் குமட்டல் வெருளி.
வானூர்தியில் பறப்பதால் இத்தகைய நிலை வருவதால் பறத்தல் வெருளி(aviatophobia or aviophobia) என்றும் இதைச் சொல்வர். வாந்தி வெருளி(Emtephobia) என்றும் சொல்லப்படுகிறது. என்றாலும் வானூர்தியில் நிகழ்வதைக் குமட்டல் வெருளி என்றும் நிலத்தில் நிகழ்வதை வாந்தி வெருளி என்றும் பிரித்துச் சொல்லலாம்.
aero என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் காற்றுமண்டலம் / வான்மண்டலம்என்பதாகும்.
nausear (nausi) என்னும் இலத்தீன் சொல் நோய்ப்படுதல், வாந்தி எடுத்தல் என்னும் பொருள்களைத் தரும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment