07 January 2026 அகரமுதல
(வெருளி நோய்கள் 931-935: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 936-940
- கொலை வெருளி – Killkillkillkillkillkillphobia
கொல்லுவது தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கொலை வெருளி.
காண்க: கொலைகாரன் வெருளி(Foniasophobia)
00
- கொல்லைப்புற வெருளி – Zhoyunphobia
கொல்லைப்புறம்பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் கொல்லைப்புற வெருளி.
zhoyun என்றால் கொல்லைப்புறம்.
00
- கொழுந்தனார் வெருளி – Yifuphobia
கொழுந்தனார் மீதான அளவுகடந்த காரணமற்ற பேரச்சம் கொழுந்தனார் வெருளி.
கொழுந்தனாரின் பதவி நிலை, செல்வ நிலை போன்றவற்றாலும் தன் கணவரைச் சார்ந்து நின்றாலும் உதவிகள் வேண்டினாலும் தன் உடன்பிறந்தாளைச் சரியாகப் பேணாவிட்டாலும் உதவ விரும்பாத பெண்களுக்கு வெருளி வருகிறது.
yifu என்னும் சீனச் சொல்லின் பொருள் கொழுந்தனார்.
00
- கொள்ளை வெருளி-latrophobia (3)
வீட்டில் அல்லது வெளியில் கொள்ளையடிக்கப்படுவது குறித்த அளவுகடந்த பேரச்சம் கொள்ளை வெருளி.
கொள்ளை அச்சத்தின் காரணமாக வீட்டைவிட்டு வளியேறும் போது வாயிற்கதவுகளிலும் பலகணிக் கதவுகளிலும் மிகுதியான பூட்டுகளைக் கொண்டு பூட்டுவார்கள். ஆணாயினும் பெண்ணாயினும் மேல்சட்டையின் உட்பகுதிக்குள் பணத்தை வைத்துக்கொண்டு வெளியே செல்வார்கள்.
Latro என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கொள்ளை.
‘iatros’ என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குணப்படுத்துநர். இதனடிப்படையில் என்பது மருத்துவர் வெருளியையும் குறிக்கிறது(1). வழிபடுதல் என்னும் பொருளைக் கொண்டு வழிபாட்டு வெருளி என்றும் பொருள்படும்(2).
00
- கோடி எண் வெருளி – Decemmegaphobia
கோடி எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் கோடி எண் வெருளி.
Decem என்னும் இலத்தீன் சொல்லானது எண் பத்தைக் குறிக்கிறது. mega என்றால் பெரிய எனப் பொருள். கோடி என்னும் எண் மதிப்பு உயர் அளவாக இருந்த பொழுது பத்தின் மடங்கான பேரெண் என்னும் பொருளில் கோடியை Decemmega எனக் குறிப்பிட்டனர்.
இன்றைக்குக் கோடியின் பல கோடி மடங்கு என்பதுகூட அரசியலாளர்களிடமும் பெரும் முதலாளிகளிடமும் இயல்பானதாகி விட்டது. எனினும் கோடித் தொகை அல்லது கோடி மதிப்பிலான பொருள் போன்றவற்றைக் கையாள்வதில் பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment