(வெருளி நோய்கள் 941-945: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 946-950
- கோவேறு கழுதை வெருளி – Moulariphobia
கோவேறு கழுதை குறித்த அளவுகடந்த பேரச்சம் கோவேறு கழுதை வெருளி.
ஆண் கழுதைக்கும் பெண் குதிரைக்கும் பிறந்த இனமே கோவேறு கழுதை
கழுதை வெருளி, பரி வெருளி(குதிரை வெருளி) உள்ளவர்களுக்குக் கோவேறு கழுதை வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
மியூலசு(mūlus) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து கோவேறுகழுதையைக் குறிக்கும் மியூல்(mule) வந்தது.
- கோழி வெருளி – Alektorophobia
கோழியை பார்ததால் ஏற்படும் தேவையற்ற பேரச்சம் கோழி வெருளி.
கோழி இறைச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சமும் கோழி வெருளியுள் அடங்கும். இதனைத் தனியே கோழி இறைச்சி வெருளி எனச் சொல்ல வேண்டா.
alektor என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் சேவல்.
00
- கோபுர வெருளி – Turriphobia
கோபுரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கோபுர வெருளி.
கோபுரத்தின் தோற்றம் உயரம் குறித்துக் காரணமின்றி அளவு கடந்த பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00
- கோப்பறை வெருளி – Archeiothikiphobia
கோப்பு தடுப்பறை அல்லது இழுவைப் பெட்டி(file cabinet) குறித்த வரம்பற்ற பேரச்சம் கோப்பறை வெருளி.
இவ்வெருளி உள்ளோர், கோப்பறைகளில் முறையாகக் கோப்புகள் வைக்கப்பட்டுள்ளனவா? கோப்பு வைப்பி பாதுகாப்பாகப் பேணப்படுகிறதா போன்ற அளவு கடந்த பேரச்சத்திற்கு உள்ளாவர்.
00
- கோர உரு வெருளி – Scaredofuglypeoplephobia
கோர உருவம் கொண்ட மக்கள் மீதான வரம்பு கடந்த பேரச்சம் கோர உரு வெருளி.
Scared of ugly people phobia என்பதையே இடைவெளியில்லாமல் குறிக்கின்றனர்.
காண்க : சிதைவுரு வெருளி(Teratophobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment