(வெருளி நோய்கள் 951-955: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 956-960
- சகடி வெருளி – Gouwuchephobia
கடைப்பொருள் தள்ளி / சகடி (shopping cart) குறித்த வரம்பற்ற பேரச்சம் சகடி வெருளி.
குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்லும் தள்ளுவண்டியுடன்(stroller) குழப்பம் வரக்கூடாது என்பதற்காக இங்கே தள்ளுவண்டி எனப் பயன்படுத்தவில்லை.
வண்டி, உருடை, ஒழுகை, சகடம், சகடி முதலானவை வண்டியைக் குறிக்கும் தமிழ்ச்சொற்கள். சகடி என்னும் சொல்லை நாம் இப்பொழுது பயன்படுத்துவதில்லை. எனவே கடைக்குள் பொருள்களை எடுத்து வருவதற்காகப் பயன்படுத்தப்படும சக்கரங்கள் உள்ள தள்ளுவண்டியைக் கடைச்சகடி என்றும் சுருக்கமாகச் சகடி என்றும் குறிக்கலாம்.
00
- சக்கர நாற்காலி வெருளி – Wheelchairphobia
சக்கர நாற்காலி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சக்கர நாற்காலி வெருளி.
சக்கர நாற்காலியில் செல்லும் பொழுது தடுமாற்றம் ஏற்பட்டு அடி படுமோ, கீழே விழுந்துவிடுவோமோ, ஏணறை(lift)யில் நுழையும் பொழுது அல்லது வெளியேறும் பொழுது கவிழ்ந்து பலத்த அடிபடுமோ, வானூர்தி நிலையத்தில் சிக்கல்கள் ஏற்பட்டுப் பயணம் தடைப்படுமோ, சக்கரத்தில் உடை சிக்கி நேர்ச்சிவிபத்து) ஏற்படுமோ என்றெல்லாம் பலவகைக் குழப்பங்களுக்கு ஆளாகி வெருளிக்கும் ஆளாகின்றனர்.
நடைவெருளி(ambulophobia) உள்ளவர்களுக்குச் சக்கர நாற்காலி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது-
00
- சக்கர வெருளி – Trokhophobia
சக்கரம் குறித்த வரம்பற்ற பேரச்சம் சக்கர வெருளி.
trokhளs என்னும் பண்டைய கிரேக்கச் சொல்லுக்கு இரும்பு வளையம், சக்கரம் எனப் பொருள்கள்.
00
- சக்கரக் கை வண்டி வெருளி – Dulunchephobia
சக்கரக் கைவண்டி(wheelbarrow) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் சக்கரக் கைவண்டி வெருளி.
Dulunche என்னும் பழஞ்சீனச் சொல்லின் பொருள் தள்ளுச்சக்கர வண்டி/சக்கரக் கை வண்டி.
00
- சங்கஎண் வெருளி – Petaphobia
சங்கஎண் குறித்த வரம்பற்ற பேரச்சம் சங்கஎண் வெருளி.
சங்கம் என்னும் தமிழ் எண்ணின் மதிப்பு 1,00,00,00,00,00,00,000 ஆகும்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
No comments:
Post a Comment