(வெருளி நோய்கள் 936-940:  தொடர்ச்சி)

கோடை குறித்த பெருங்கவலையும் பேரச்சமும் கோடை வெருளி.
கோடைக்காலத்தில் வரும் உடலியல் சார்பான தொந்தரவு குறித்து ஏற்படும் பெருங்கவலைகளும் பேரச்சமும் கோடை வெருளியை உருவாக்குகிறது.
கோடையில் வரும் வெப்பத்தாலும் வியர்க்குரு, வேனல் கட்டி, பூஞ்சைத் தொற்று, நீர்க்கடுப்பு, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, வெஞ்சுரம், சீதபேதி முதலான வெப்பம் சார்ந்த நோய்களாலும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். கோடையில் வரும் விடுமுறைகளில் பிள்ளைகளைச் சமாளிக்க முடியாது என்று கவலைப்பட்டு அஞ்சுவோரும் உள்ளனர். ஏன்தான் கோடை விடுமுறை வருகிறதோ எனக் குறும்புப்பிள்ளைகளின் பெற்றோர் கவலைப்படுவர்.
வெய்யில் நடப்பாரை வேகடிக்கும் நேரமடி
ஐயோ நடுவழியில் அல்லல் மிகுந்ததடி

என வெயிலின் கொடுமையைக் கூறுவார் பாரதிதாசன்.
கோடையின் கொடுமை தாங்காமல் பாம்பொன்று படமெடுத்து நிற்கிறது. அந்த நிழலிலே (இயல்பாக அதனிடம் இருந்து தப்பி ஓட முயலும்) எலி வந்து இளைப்பாறுகிறது. இவ்வாறு நாட்டுப்புறப்பாடல் ஒன்றில் வரிகள் வருகின்றன.
பாம்பு படம் எடுக்க
அந்தப் படத்து நிழலிலே எலி ஒதுங்க

என்பது அப்பாடல் வரிகள்.
சங்க இலக்கியங்களில் பாலைப் பாடல்கள் பலவும் கோடையின் கொடுமையைக் கூறுவனவே! இத்தகைய கொடுங்கோடை குறித்து அச்சம் வருவது இயற்கைதானே!
பதநீர், நுங்கு, இளநீர், பானகம், மோர் முதலான இயற்கைப் பானங்களை / உணவுகளை உண்பதன் குடிப்பதன் மூலம் கோடைக் கொடுமைகளைத் தவிர்க்கலாம்.
Therophobia வெப்ப வெருளியைக் குறிப்பதன் மூலம் வெப்பம் மிகுதியாக உள்ள வெயில் காலத்தைக் – கோடைக் காலத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம்.
Aesta என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் வெப்பம். வெப்பம் நிலவும் கோடைக்காலத்தை இங்கே குறிக்கிறது.
காண்க: வெப்ப வெருளி(Thermopobia)
00

கோட்டை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கோட்டை வெருளி.
கோட்டையின் பேரளவுத் தோற்றம் குறித்து அச்சம் கொள்வோரும் உள்ளனர். கோட்டையைச் சுற்றியுள்ள அகழி முதலான கட்டமைப்பால் காரணமின்றி அஞ்சுவோரும் உள்ளனர்.
00

மரபுக்கோட்பாடு தொடர்பான தேவையற்ற பேரச்சம் கோட்பாட்டு வெருளி –
சமயம் சார்ந்த அல்லது மரபு வழியிலான கோட்பாட்டிலிருந்து பிறர் விலகுவது அல்லது தான் வில நேரிடும் என எண்ணுவது தொடர்பான வரம்பு கடந்த பேரச்சத்திற்கு இத்தகையோர் ஆளாகுவர். கோட்பாட்டு விலகல் வெருளி எனக் குறிப்பிட்டாலும் சுருக்கமாகக் கோட்பாட்டு வெருளி எனலாம்.
பக்குவப்படுத்தும் சமய நெறிபோல் இல்லாமல் மூட நம்பிக்கைகள் நிறைந்த மதக் கோட்பாடுகளால்தான் இராமலிங்க வள்ளலார்.
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் என்றார்.
heresy என்றால் மத எதிர் கொள்கை என்று பொருள்.
Heres என்றால் வழி வழி என்றும் பொருள்.
00

கோதுமை, கோதுமை உணவுகள் தொடர்பான காரணமற்ற அளவுகடந்த பேரச்சம் கோதுமை வெருளி.
sitari என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் கோதுமை.
00