22 December 2025 அகரமுதல
(வெருளி நோய்கள் 851-855: தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 856-860
- குழி யாட்ட ஊர்தி வெருளி – Golfkarrophobia
குழிப்பந்தாட்ட ஊர்தி(golf cart) மீதான அளவுகடந்த பேரச்சம் குழி யாட்ட ஊர்தி வெருளி.
ஆட்ட ஊர்தி வெருளி(Gelandelimophobia) உள்ளவர்களுக்குக் குழியாட்ட ஊர்தி வெருளி வர வாய்ப்புள்ளது.
00
-857. குழிப்பந்தாட்ட வெருளி – Golfphobia
குழிப்பந்தாட்டம் குறித்த வரம்பற்ற பேரச்சம் குழிப்பந்தாட்ட வெருளி.
வளைகோலாட்ட வெருளி(hockey phobia) உள்ளவர்களுக்குக் குழிப்பந்தாட்ட வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00
- குழிப்பேரி நிற வெருளி – Persicophobia
குழிப்பேரி(peach) என்னும் பழத்தின் நிறம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குழிப்பேரி நிற வெருளி.
Persi என்பது குழிப்பேரிப் பழமாகும். Persico என்றால் குழிப்பேரி நிறமாகும்.
00
- குளவி வெருளி-Spheksophobia
குளவி தொடர்பான வரம்புகடந்த பேரச்சம் குளவி வெருளி.
sphḗx என்னும் பழங்க கிரேக்கச் சொல்லின் பொருள் குளவி. இச்சொல்லில் இருந்து உருவானதே Sphekso.
00
- குளியலறை குழிசி வெருளி – Yushixishophobia
குளியலறை வடிகுழி/ குழிசி (bathroom sink) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியலறை குழிசி வெருளி.
காண்க: அலம்புக் குழிசி வெருளி(Chufxishophobia/Shuicaophobia)
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்
வெருளி அறிவியல் 2/5
No comments:
Post a Comment