(வெருளி நோய்கள் 361-365 – தொடர்ச்சி)

இறால் மீன்(shrimp) தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறால் வெருளி.
இறால் மீனைப் பார்த்தால் அல்லது சமைத்த இறாலைப் பார்த்தால் அல்லது இறால் மீனை உண்டால் பேரச்சம் வரும்.
விலங்கு வெருளி(Zoophobia) உள்ளவர்களுக்கும் இப்பி வெருளி (Ostraconophobia) வருபவர்களுக்கும் இறால் வெருளி வர வாய்ப்புண்டு. 00

இறுதிச்சடங்கு குறித்த வரம்பற்ற பேரச்சம் இறுதிச்சடங்கு வெருளி.
பிறரது இறுதிச்சடங்கைப்பார்க்கும் பொழுது அல்லது பிறரின் இறுதிச்சடங்கில் பங்கேற்கும் பொழுது துயரம் வருவதாலும் தனக்கோ தன் வீட்டிலுள்ள மூத்த உறுப்பினர்களுக்கோ பிறருக்கோ இறுதிச்சடங்கு செய்யும் சூழல் வரலாம் எனப்பேரச்சம் வருவதுண்டு.
சாவு வெருளி(Necro Phobia/Thanato Phobia/ Thantophobia) வருபவர்களுக்கும் இறுதிச்சடங்கு வெருளி வருவதுண்டு.
00

இறை நம்பிக்கையர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறை நம்பிக்கையர் வெருளி.
இறை நம்பிக்கை யுடையவர்களில் ஒரு பகுதியினர் மூட நம்பிக்கை உடையவர்களாகவும் உள்ளனர். இன்னின்ன செய்தால் அல்லது இன்னின்ன செய்யாவிட்டால் இன்னின்ன தீ வினை நிகழும் என்பதுபோல் சொல்லப்படும் அச்சுறுத்தல்களை நம்பும் பேரச்சம் கொள்வோர் உள்ளனர். இதே போல் இறைநம்பிக்கையர், அதனையே பிறருக்கும் தெரிவித்து மற்றவர்களையும் அச்சுறுத்துவர். இதன்காரணமாக இறைநம்பிக்கையருடன் பழகுவதற்கே பேரச்சம் கொள்வோர் உள்ளனர்.
00

இறை மறுப்பர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறை மறுப்பர் வெருளி.
இறை நம்பிக்கையரின் மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துகளை இறை மறுப்பர் விரும்புவதில்லை. ஆனால் அவ்வாறு மறுப்பதை இறை நம்பிக்கையர் தெய்வ நம்பிக்கைக்கு எதிரானதாகக் கருதுகின்றனர். ஆதலின் இறை மறுப்பர் மீது இறை நம்பிக்கயருக்குத் தேவையற்ற பேரச்சம் ஏற்பட்டு வெருளிக்கு ஆளாகின்றனர்.
.
00

இறைச்சி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் இறைச்சி வெருளி.
இறைச்சி உண்டபின் நோய்க்கு ஆளாவது, இறைச்சிக்கூடத்திற்கு அல்லது இறைச்சி வெட்டும் இடத்திற்குச் சென்று அதிர்ச்சிக்கு ஆளாவது, இறைச்சி தொடர்பான எதிர்வினைகள் பற்றி அறிய வருவது, மரக்கறி உண்போர்(சைவம்) என்ற நிலையில் இறைச்சி உணவை வெறுப்பது போன்ற காரணங்களால் இறைச்சிமீதான பேரச்சம் வருகிறது.
karno என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் இறைச்சி.
00