(வெருளி நோய்கள் 466-470 : தொடர்ச்சி)
வெருளி நோய்கள் 471-475
- ஊர்தி விற்பனையாளர் வெருளி – Autopolitiphobia
ஊர்தி விற்பவர் தொடர்பாக (வாங்குநருக்கு) ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் ஊர்தி விற்பனையாளர் வெருளி.
ஊர்தி விற்பவர் ஊர்தி விற்பவர் தவறான அல்லது பொய்யான அல்லது மிகையான தகவல்களைக் கூறி ஏமாற்றுவார், அவரை நம்பி எங்ஙனம் ஊர்தியை வாங்குவது எனப் பேரச்சம் கொள்கின்றனர்.
00
- ஊர்தி வெருளி – Ochophobia / Amaxophobia / Motorphobia / Hamaxophobia
ஊர்திகள் தொடர்பான தேவையற்ற அளவுகடந்த பேரச்சம் ஊர்தி வெருளி.
amaxa or hamaxa, ஆகிய கிரேக்கச் சொற்களுக்கு வண்டி எனப் பொருள்.
00
- ஊர்திக் குழிசி வெருளி – Chekuxishophobia
ஊர்திக் கொட்டில் கழுவிடம் (garage sink ) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊர்திக் குழிசி வெருளி.
00
- ஊர்திக் கொட்டில் வெருளி – Karazphobia
ஊர்திக் கொட்டில் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊர்திக் கொட்டில் வெருளி.
00
- ஊர்திச் சங்கு வெருளி – Seirinaphobia
ஊர்திச் சங்கு(siren) குறித்த வரம்பற்ற பேரச்சம் ஊர்திச் சங்கு வெருளி.
ஊர்திச் சங்கு(siren) எழுப்பும் பேரொலி கேட்டுப் பெரிதும் இடரோ இன்னலோ வருவதாக வெருளி கொள்கின்றனர்.
00
(தொடரும்)
இலக்குவனார் திருவள்ளுவன்,
வெருளி அறிவியல் தொகுதி 1/5
No comments:
Post a Comment