(வெருளி நோய்கள் 411-415 : தொடர்ச்சி)

உண்ணுகை குறித்த வரம்பற்ற பேரச்சம் உண்கை வெருளி.
உண்ணும் பொழுது அருகில் அல்லது சுற்றுப்புறத்தில் யாரேனும் காற்றை வாய்வழியாகவோ பின்வழியாகவோ வெளியேற்றும் பொழுது உண்பதை வெறுத்துப் பேரச்சம் கொள்வதும் இவ்வகைதான். உண்ணும் பொழுது வாய்வழியாக மூச்சு விடுவதும் உண்கை வெருளிதான்.
00

உண்டியகம்(cafeteria) பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் உண்டியக வெருளி.
கஃபேட்டிரியா என்பது நமக்கு நாமே பரிமாறிக்கொள்ளும் தற்பரிமாற்றச் சிற்றுண்டியகம். சில இடங்களில் ஒரு பகுதித் தற்பரிமாற்றப் பகுதியாகவும் மறு பகுதி பரிமாறுபவர்கள் உள்ள உண்டியகமாகவும் இருக்கலாம். இதனாலும் உணவு வருவதில் காலத்தாழ்வு ஏற்படும் என அஞ்சலாம்.
நமக்கு நாமே பரிமாறிக் கொள்வதால், உணவுத் தட்டு தடுமாற்றத்தால் கீழே விழலாம், உணவு சிதறலாம், நேரம் ஆகலாம் என்பன போன்ற எண்ணங்களால் சிற்றுண்டியகம் – உண்டியகம் மீதான வெருளி.
00

உண்மையை ஒப்புக்கொள்வது குறித்த வரம்பு கடந்த பேரச்சம் உள்ளதுரைத்தல் வெருளி.
நாம் சில நேரங்களில் நாம் செய்த தவறுகளை ஒத்துக் கொள்வதில்லை. உண்மையை ஒப்புக் கொள்ளாமல், பிடிவாதமாக எதிர் வாதம் செய்வதுண்டு. இப்பிடிவாதப் போக்கு உள்ளதுரைத்தல் வெருளி ஆகாது.
கண்டறிதல், எதிர்பார்க்கும் துயரச்செய்தியைக் கேட்டல் முதலானவையும் உள்ளதுரைத்தல் வெருளிக்குக் காரணமாக அமைகின்றன.
இங்கே உள்ளதுரைத்தல் என்பது பொய் பேசாதிருத்தல் அல்ல. உள்ளதைக் கண்டறிதல், உள்ளதைக் கேட்டறிதல் என்பனவாகும்.
வாய்மை வெருளியில் (veritaphobia) இருந்து இது வேறுபட்டது.
உண்மை சொல்ல அஞ்சுவது வாய்மை வெருளி .
aletheia என்னும் பழங்கிரேக்கச் சொல்லின் பொருள் உள்ளது(ரைத்தல்).
00

உதட்டு அழகு குறித்துக் கவலைப்பட்டுப் பெருமளவில் பேரச்சம் கொள்வது உதட்டு வெருளி.
கரு நிற உதடுகளைச்சிவப்பாக மாற்ற வேண்டுமே என்று கவலைகொள்வோர் பலர் உள்ளனர். உதட்டு நிறம், உதட்டுச் சுருக்கங்கள் முதலியவற்றால் அழான உதடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கவலைப்படுவர். உதட்டு வண்ணம் பூசுவது குறித்தும் தேவையற்ற அச்சம வரும்.
cheilos என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் உதடுகள்.
00

(தொடரும்)