(வெருளி நோய்கள் 856-860:தொடர்ச்சி)

குளியலறை தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியலறை வெருளி.
Loutro என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குளியல். இந்த இடத்தில் குளிக்கும் இடத்தை – குளியல் அறையை-க் குறிக்கிறது.
00

குளியல் தொட்டி தொடர்பான அளவுகடந்த பேரச்சம் குளியல் தொட்டி வெருளி.
மனை வெருளி(oikophobia) உள்ளவர்களுக்குக் குளியல் தொட்டி வெருளி வரும் வாய்ப்பு உள்ளது.
00

குளிர் பானங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் குளிர் பானங்கள் வெருளி.
பற் சிதைவு, எலும்பு பலவீனம், சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு, இதய நோய்கள், செரிமானச் சிக்கல்கள் போன்றவை குளிர்பானங்களைக் குடிப்பதால் ஏற்படும் என்ற கவலைகளால் குளிர்பானங்கள்மீது பேரச்சம் ஏற்படுகின்றது.

anapsyktiko என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள் குளிர் பானம்.
00

குளிர்காலம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் குளிர்கால வெருளி.
frigori என்னும் இலத்தீன் சொல்லிற்குக் குளிர் காலநிலை எனப் பொருள்.
காண்க: குளிர் வெருளி-Cheimaphobia/Cheimatophobia/Psychrophobia / Frigophobia/ Cryophobia/ Pagophobia
00

குளிர்ச்சி மீதான அளவுகடந்த பேரச்சம் குளிர் வெருளி.
குளிர்ச்சி, குளிரும் பருவகாலம், ஆகியவற்றின் மீதும் குளிர்ச்சியால் சளி, நீர்க்கோவை, குளிர்க்காய்ச்சல் போன்ற நோய்கள் வரும் எனப் பேரச்சம் கொள்வதும் இந்நோய் வகைகளாகும்.
மிகு குளிர் வெருளி என முன்னர்க் குறித்திருந்தேன். குளிர் வெருளி என்று சொன்னாலே போதும் என இப்போது அவ்வாறு குறித்துள்ளேன். ஒத்த பொருளில் அழைக்கப்படுவனவற்றை இணைத்தும் தெரிவித்துள்ளேன்.
குளிர்காலம், குளிர்ச்சியான காலச்சூழல், குளிர்ச்சியான பானம், பனிக்கட்டி, குளிர்ச்சியான பொருள்கள் எனக் குளிர்ச்சியானவற்றின் மீது பேரச்சம் ஏற்படும்.
குளிர்ச்சியால் நலக்குறைவு ஏற்படலாம், உடல்கேடடைந்து மருத்துவச் செலவு ஏற்படலாம், மருந்துகளால் ஒவ்வாமை ஏற்படலாம் எனப் பலவகைகளிலும் இவர்கள் அஞ்சுவர்.
குளிர்ச்சியால் ஆணுறுப்பு எழாது என்ற அச்சம் வரும்.
சிலருக்கு உணவு வெருளி (cibophobia), மருந்து வெருளி ஆகியவையும் ஏற்படும்.
தணுப்புப்பொருள் மீதான வெருளி என்ற முறையில் முன்பு தணுப்பு வெருளி (Cryophobia/Pagophobia) எனக் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது குளிர்ச்சி வகை எல்லாம் ஒரே தன்மைத்து என்பதால் ஒன்றாகச் சேர்த்து விட்டேன்.
cheimo என்னும் கிரேக்கச் சொல்லின் பொருள்கள் குளிர்ச்சி, குளிரும் பனிக்காலம்.
frigo என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் குளிர்ச்சி.
kryos என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் கடுங்குளிர் என்று பொருள். kryos > Cryo
pago என்னும் கிரேக்கச் சொல்லிற்கு உறைபனி என்று பொருள்.
psychr என்னும் கிரேக்கச் சொல்லிற்குக் குளிர் என்று பொருள்.
காண்க: குளிர்கால வெருளி – Frigoriphobia / Kheimonphobia
00